(Reading time: 32 - 63 minutes)

" ங்க மனசுல மித்ரா இருக்கான்னு தெரிஞ்சதும் அதை எதிர்கொள்ள பிடிக்காமல் நீங்க போயிட்டிங்க ஷக்தி ..ஆனா மித்ரா எவ்வளவு கஷ்டபட்டா தெரியுமா ? எனக்கு மட்டும்தான் அவ தினம் தினம் அழுறது தெரியும் ..எனக்கு மட்டும்தான் அவ  உங்களை பைத்தியாகாரி மாதிரி விரும்புறது தெரியும் ! " என்றான் ஆவேசமாய் ..

" அது எனக்கும் தெரியும் அன்பு .. என் பொண்ணை  எனக்கு தெரியாதா ? என் ரெண்டு பொண்ணுங்க மனசுலயும் என்ன இருக்குன்னு எனக்கு நல்லாவே தெரியும் "

" ஆனா வைஷ்ணவி மனசுல இப்போ என்ன இருக்குன்னு எனக்கு தெரியல " என்றான் ஷக்தி இறுகிய குரலில் ..

" சொல்லுறேன் அத்தான் என் மனசுல என்ன இருக்குன்னு நானே சொல்லுறேன் .. உங்களுக்கு இப்போ என்ன தெரியனும் ?" .. கேட்டன் ஷக்தி ! சங்கமித்ராவின் குழப்பத்திற்கு காரணமான அனைத்து கேள்விகளையும் கேட்டான். அவளும் பதில் உரைத்தாள் .. இருவரின் உரையாடலையும் கேட்டு எழிலும் தேவசிவமும் அமைதியாய் சிந்தித்தனர் ..

" இப்போ அடுத்து என்ன செய்யறது அங்கிள் ?"- எழில்

" ஆமா மாமா ..நீங்க சொல்லுங்க " என்றான் ஷக்தி. அவர்கள் மூவரின் மனநிலையையும் புரிந்து கொண்டார் தேவசிவம் .. இந்த முக்கோண பிரச்சனையை எப்படி சமாளிப்பது என்றும் புரிந்தே வைத்திருந்தார் .. மனதில் சட்டென தோன்றிய எண்ணத்தை  கூறினார். ஷக்தி வைஷ்ணவி இருவருமே அமைதியாய் இருந்தனர் ..

" வேற வழி இல்லையா அப்பா ?"

" இல்லை வைஷ்ணவி ...எனக்கு நீயும் முக்கியம் தான்!"

" மாமா ஆனா மித்ரா ?"

" என் பொண்ணு என் பேச்சை கேட்பா மாப்பிளை ." என்றவர் அன்பெழிலன் பக்கம் திரும்பினார் ..

" அன்பு "

" சொல்லுங்கப்பா "

" இது எல்லாத்தையும் நடத்த நீதான் எனக்கு உதவும் .. அப்போ நான் இப்போவே மத்த எல்லாருகிட்டயும் கல்யாண வேலையை  ஆரம்பிக்க சொல்லுறேன் "

" மாமா மிது ??"

" அவகிட்ட நான் பேசிக்கிறேன் .. நான் சொன்னா அவ புரிஞ்சுப்பா " என்றார் அவர்.. இங்கு நடக்கும் ஏற்பாடு தெரியாமல் அங்கு  மருத்துவமனையில் இருந்தாள்  சங்கமித்ரா. 

தன் தந்தையிடம் பேச வேண்டும் என்று நினைத்தவள் மதியிடம் கூறிவிட்டு அவரை அழைத்தாள் ..

" அப்பா "

" சொல்லுமா "

" எப்படி இருக்கீங்க பா "

" ம்ம் நல்ல இருக்கேன் மா "

" வீடுள்ள எதுவும் பிரச்சனையா அப்பா ?"

" இல்லையே டா"

" என்மேல கோபமா அப்பா ?"

" இல்ல கண்ணம்மா "

" அப்பா நான் வீட்டுக்கு வந்திடவா அப்பா " என்றாள்  சங்கமித்ரா தவிப்புடன் .. அதை உணர்ந்தவரோ உணராதவரை போல

" என்ன அவசரம் டா ? நான் சொல்லும்போது வா .. நீ இப்போதைக்கு உன்னை பத்திரமா பார்த்துக்கோ ..அதுதான் அப்பாவுக்கு வேணும் ..சரியாடா ? வெச்சிடுறேன் " என்றபடி போனை வைத்தார். செல்போனையே வெறித்துக் கொண்டு நின்றாள்  சங்கமித்ரா .. விழிகளில் இருந்து கண்ணீர் துளிகள் விழவா வேண்டாமா ? என்று அவளது கட்டளைக்கு காத்திருந்தது. அதற்கு சில நிமிடங்கள் முன்பே, ஷோபாவிற்கு  ஆண் குழந்தை பிறந்த மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்ள வெளியில் வந்தாள்  தேன்நிலா .. ஆனந்த கண்ணீருடன் வந்தவளை சட்டென தழுவிக் கொண்டான் மதியழகன் ..

" மதி என்ன இது ? " என்று அவள் திமிரும் முன்னவே "

" குட்டிமா உன்கிட்ட ஒன்னு சொல்லணும் ..அந்த பொண்ணு ஷோபாவுடைய நிஜ தங்கச்சி இல்லை .. நீ அவ மேல கோபப்படாதே " என்று கூறி அவளை விடுவித்தான்.. விழிகள் அகல விரிய அவன் உரைப்பது உண்மைதானா? என்று கேள்வியாய்  பார்த்தவளிடம் ஆமாம் என்று தலை அசைத்தான் மதியழகன். மன்னிப்பு கேட்பதற்கு தயங்குபவள் இல்லை தேன்நிலா .. மித்ரா விஷயத்தில் தான் அவசரப்பட்டதை உணர்ந்தவள் முதுகு காட்டி நின்றுக் கொண்டிருந்தவளின் தோள்  தொட, சட்டென திரும்பினாள்  சங்கமித்ரா..

" சாரி மித்ரா " என்று அவள் முடிக்குமுன்னே, தேன்நிலாவை  கட்டிக் கொண்ட மித்ராவின் கண்களில் கண்ணீர் மழை.. என்ன ஆயிற்று என்று புரியவில்லை என்றாலும் கூட அவளது கண்ணீரை பார்க்க நிலாவிற்கு கஷ்டமாக இருந்தது ..

" ஷ்ஷ்ஷ்ஷ் ...ஒன்னும் இல்லம்மா .. ஒன்னும் ஆகல .. யூ ஆர் பைன் .. இங்க பாரு .. இங்க பாரேன் " என்று அவளை சமாதனம் செய்ய முயன்றாள் .. அப்போதும் நிமிர்ந்து பார்க்காமல் அவள் தோள்  சாய்ந்து அழுதாள் .. அழட்டும் விடு என்று மதி செய்கை காட்ட அமைதியாய் இருந்தாள்  தேன்நிலா .. சிறிது நேரத்தில் தன்னியல்பிற்கு வந்தவள்

" சாரி, தேங்க்ஸ் " என்று இரண்டையும் கூறினாள் .. " ஷோபா அக்கா எப்படி இருக்காங்க ?" என்றாள்  பதட்டமாய்  ..

" அவங்களுக்கு என்ன ? அவங்க மகன்  அவங்களை பக்கத்தில் இருந்து பார்த்துட்டு இருக்கான் " என்றாள்  நிலா துள்ளலுடன். முதலில் கொஞ்சம் புரியாதவள் பிறகு அதே உற்சாகத்தில்

" நிஜம்மாகவா நிலா ? உனக்குத்தான் தேங்க்ஸ் சொல்லணும் " என்று மீண்டும் நிலாவை அணைத்து  கொண்டாள் .. இருவருமே அப்போதுதான் அவள் ஒருமையில் விளித்ததை உணர்ந்தனர். மித்ரா அதற்கும் மன்னிப்பு கேட்கும் முன்னவே

" என்னை உன் ப்ரண்டா ஏற்றுக்கோ  சங்கமித்ரா, மன்னிப்பு கேட்டு டிஸ்டன்ஸ் கொண்டு வராதே " என்றாள் .. அதன்பிறகு இருவரும் ஷோபாவை பார்த்துவிட்டு வந்தனர். அதன்பிறகு நிலாவின் ஏற்பாட்டின்படி அம்மு பாட்டியும் பாக்கியம் அம்மாவும் ஷோபாவிற்கு  துணையாய் இருக்க, தேன்நிலாவுடன் அவள் வீட்டில் தங்கினாள்  சங்கமித்ரா. " டீ " போட்டு பழகும் அளவிற்கு தோழியர் இருவரிடையே நட்பு மலர்ந்தது. மேலும் மிகவும் பொறுப்பாய் அன்புடன் இருக்கும் மதியழகன் சங்கமித்ராவிற்கு அண்ணனாகி போனான்..

இரண்டு நாட்கள் கடந்திருந்தது..

" சங்கு .... அடியே சங்கு "

" ம்ம்ம் சொல்லு தேனு "

" இனியா கால் பண்ணாங்க "

" ம்ம்ம்ம்"

" நான் பேசிகிட்டு இருக்கேன் நீ பாட்டுக்கு தூங்குற ? அடியே எழுந்திருடி " என்றபடி மித்ராவின் முகத்தில் நீரை தெளித்தாள்   நிலா..

" ஹே பிசாசு தூங்க விடுடி .,. விடிய விடிய உன் மொக்கை காதல் கதையை தூங்காமல் கேட்டேன்ல அதுக்காகவாவது என்னை தூங்க விடு "

" அடிங்க .. உன் அண்ணா கதை உனக்கு மொக்கையா ? இரு மதுவுக்கு போன் போடுறேன் " என்றாள் ..

" ஹே சகுனி, உனக்கு கதை சொல்ல வரல சோ மொக்கையா இருந்துச்சு ..மத்தபடி நான் என் அண்ணாவை எதுவும் சொல்லல நீ பாட்டுக்கு  வம்பு பண்ணாதே " என்றாள் .. நிலாவிடம் பதிலுக்கு பதில் பேசும் ஆர்வத்தில் எழுந்து அமர்ந்தாள்  சங்கமித்ரா .. பேச்சின் ஆர்வத்தில் தன் செல்போன் சிணுங்குவதை அவள் கவனிக்கவில்லை .. நிலா மித்ராவின் போன் திரையில் " அப்பா " என்று தெரியவும் புருவமுடிச்சுடன் ஏதோ யோசித்தாள் .. பிறகு அவளுடன் போனை கொடுத்துவிட்டு அவளுக்கு முதுகாட்டி நின்று எதையோ தேடுவது போல பாவனை செய்தாள். கண்ணாடி வழியே மித்ராவின் முகபாவனையை கண்டுகொண்டாள்  நிலா ..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.