(Reading time: 21 - 42 minutes)

மே ஐ கம் இன் சார்?...

யெஸ்… கன் இன்… என்றபடி சுழல் நாற்காலியில் சுழன்று திரும்பினான் அந்த நிறுவனத்தின் எம்.டி… வ்ருதுணன்… (Vruthunan)

குட் மார்னிங்க் சார் என்றாள் உள்ளே வந்த வள்ளி…

வெரி குட் மார்னிங்க் வள்ளி… நான் கேட்ட டீடெயில்ஸ் எல்லாம் ரெடியா?...

யெஸ்… சார்… எல்லாம் ரெடி…

ஹைய்யோ… வள்ளி… எத்தனை தடவை சொல்லியிருக்கேன்… உனக்கு???…  இந்த ஃபார்மாலிட்டீஸ் எல்லாம் நமக்குள்ள வேண்டாம்னு…

இல்ல வந்து இது ஆபீஸ்… சோ… என்று அவள் இழுக்க…

சோ… வாட்?... என்று எதிர் கேள்வி கேட்டவன், இங்க பாரு வள்ளி… எனக்கு உன்னை எந்த அளவு பிடிக்கும்னு உனக்கே தெரியும்… தெரிஞ்சும் நீ இப்படி சார் மோருன்னு கூப்பிடுறது எனக்கு கொஞ்சமும் பிடிக்கலை… அப்புறம் உன் இஷ்டம்… என்றவன் அவள் அமைதியாக இருக்கவும்,

உங்கிட்ட எனக்குப் பிடிச்சதுல இந்த அமைதியும் ஒன்னு… எவ்வளவு தான் பேசினாலும் சில நேரங்களில் நீ இப்படி அமைதியா இருக்குறது ரொம்பவே பிடிக்கும் எனக்கு… என அவன் நிறுத்தி நிதானமாக சொல்லவும்,

அவள் மென்மையாக சிரித்தாள்…

குட்… குட்… இதுவும் எனக்கு பிடிக்குமே… என்றான் அவனும் சிரித்துக்கொண்டே…

சரி… சார் என்று சொல்ல வந்தவள், அவனைப் பார்த்துவிட்டு, சரி, அப்போ நான் கிளம்புறேன்… என்றவள் நியூ டீமுக்கு லீடரா ஒருத்தரைப் போடணும்னு சொன்னேனே… யாரை போடுறதா முடிவு பண்ணியிருக்கீங்க?... என கேட்டாள்…

ஆள் ரெடி வள்ளி…. இப்போ வந்திடுவான்… என அவன் சொல்லவும்…

அப்போ சரி… என்றபடி அவள் வாசல் பக்கம் செல்லுகையில், நினைவு வந்தவனாக, வள்ளி உங்கிட்ட சொல்ல மறந்துட்டேன்… அம்மா உன்னைப் பார்க்கணும்னு சொன்னாங்க… என்று சொல்லி முடிக்கவும்,

என்னையா?... எப்போ?... என்று அவள் கேட்க…

எப்போவா?... அதுசரி… மாமியாரும் மருமகளும் எங்கிட்ட சொல்லிட்டு தான் எல்லாம் செய்யுறீங்களாக்கும்…. அதுதான் எனக்கு தெரியாமலே நீங்க தான் பேசி கொஞ்சிப்பீங்களே… அப்புறம் என்ன?...

ஹ்ம்… என்றவள் சிரிக்க…

சிரிக்காதே… என்றான் அவன் கோபமாக….

யாரோ இப்பதான் என் சிரிப்பும் பிடிக்கும்னு சொன்னாங்க… ஹ்ம்ம்… அவங்களை எங்க?... காணோமே… உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுவீங்களா எங்கிட்ட??? என சிறு பிள்ளையாய்  வினவியவளிடம்,

வள்ளி… வள்ளி…. ஹ்ம்ம்… மீட்டிங்க் ஸ்பாட் எங்கே?... வழக்கமான அதே இடம் தானே… என்று கேட்டான் அவன்…

இதோடா… நாங்க மீட் பண்ணுற இடம் தெரியாதாக்கும் உங்களுக்கு… ரொம்ப தான்… நாங்க போறதுக்கு முன்னாடியே அங்க போய் உட்கார்ந்திட்டு என்ன கேள்வி வேண்டி இருக்கு?...

இப்போதானே சொன்னேன்… உன் அமைதி பிடிக்கும்னு… இப்போ அதுக்குள்ள உன் கோபமும் பிடிக்கும்னு சொல்ல வைக்கிறியே வள்ளி… இது நியாயமா?... என்று அவன் கேட்க,

அவள் முறைத்தாள்…

சரி சரி…. நோ கோபம்…… நீ போய்… வேலையைப் பாரு… நான் கொஞ்ச நேரத்துல நியூ டீம் லீடரைக் கூட்டுட்டு வரேன்… நீ போ…

சரி… என்றவள் போகாமல் அங்கேயே நிற்க…

அவன் பார்வை கூர்மையாகியது…

என்னமா?... எதும் பேசணுமா?...

ஹ்ம்ம்…

சொல்லுமா…

வந்து… உங்களுக்கு… கோபமே வரலையா?...

எதுக்கு வரணும்?... யார் மேல வரணும்?...

என்மேலதான்… என்னால தான எல்லாமே நடந்துச்சு.…

அவன் பதில் சொல்லாமல் அமைதியாக இருக்க, அவள் தொடர்ந்தாள்…

மன்னிச்சிடுங்க…. என்னால தான என்று அவள் மறுபடியும் ஆரம்பிக்கவும், அவன் வெடித்தான்…

லூசா நீ?... உனக்கு எத்தனை தடவை சொல்லியிருக்கேன்… இப்படி சாரி கேட்காதன்னு… நீ எந்த தப்பும் பண்ணலை… அது உனக்கு எப்பதான் புரிய போகுதோ தெரியலை…

இல்ல… நான்… என்ன சொல்ல வந்தேன்னா?...

நீ ஒன்னும் சொல்ல வேண்டாம்… அதுதான் சொன்னல்ல இப்போ சாரி பூரின்னு… ஏன்ம்மா நீ இப்படி பண்ணுற?... எனக்கு உன் மேல துளி கூட கோபம் இல்லை… என் மேல தான் கோபம்… விருப்பமில்லாதவளை வந்து… சரி விடு… அது எல்லாம் என் தப்பு… எனவும், அவள் அவனை பார்க்க முடியாது தலை கவிழ்ந்தாள்…

நீ ஏன் தலை குனியிற இப்போ?... லூசாட்டம் பண்ணாத வள்ளிம்மா…

இல்ல… நான் மட்டும்… என அவள் இழுக்கவும்,

விருப்பமில்லாத உன்னையும் கட்டாயப்படுத்த எனக்கு மனசில்லை வள்ளிம்மா… புரிஞ்சுக்கோ… எனக்கு உன் சந்தோஷம் முக்கியம்… நீ முக்கியம்… உன் சிரிப்பு ரொம்ப ரொம்ப முக்கியம்… என்று அவன் சொல்ல

அவள் உதடுகளை கடித்து தன் உணர்வுகளை அடக்கினாள்…

உன் மனசு மாறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு வள்ளிம்மா… எனவும், அவள் விரக்தி புன்னகை சிந்த,

நான் காத்துட்டிருப்பேன் அதுவரை… என்றான் அவனும் அமைதியாக அதே நேரம் உறுதியாக…

வேண்டாம்… ப்ளீஸ்… எனக்காக உங்க வாழ்க்கையை ஏன் அழிச்சிக்கிறீங்க… விட்டிருங்க… ப்ளீஸ்… என்று அவள் சொல்லி முடிக்கும் முன்,

அன்னைக்கு நீயும் விட்டிருக்க வேண்டியதுதானே… ஏன் விடலை நீ அன்னைக்கு???... என்றான் அவன் வேகமாக…

ப்ச்… அது நடந்து முடிந்து போன விஷயம்…

இது நடக்கப் போற விஷயம்…

ப்ளீஸ்… என் மனம் மாறாது…

மாறும்… நிச்சயம்…

ப்ச்.... எனக்கு நம்பிக்கை இல்லை...

எனக்கு இருக்கு நிறையவே…. அது போதும்…

நீங்க வீணாக்குறீங்க உங்க வாழ்க்கையை… அதற்கு மேல் சொல்வதற்கு எதுவும் இல்லை…

நான் காத்துட்டிருப்பேன்… எனக்கும் சொல்வதற்கு இதற்கு மேல் ஒன்றும் இல்லை என அவனும் சொல்ல,

உங்க காத்திருப்புக்கு பலன் என்றுமே கிட்டப் போவதில்லை… என மனதினுள் நினைத்துக்கொண்டே அவனிடம் ஒரு சிறு புன்னகையை சிந்திவிட்டு அங்கிருந்து விருட்டென்று வெளியே சென்றுவிட்டாள் அவள்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.