(Reading time: 10 - 19 minutes)

கனை தூக்கி நெஞ்சோடு அணைத்தபடி திரும்பி நடக்க தொடங்கினாள் நல்லிசை.

இடிந்து விழுந்து கொண்டிருந்த உள்ளத்திற்கு நேர் எதிராய் அமைதியாய் வடிந்து கொண்டிருந்தது கண்ணீர்.

வழக்கமாக தூக்க அனுமதிக்காமல் ‘ஐம் எ பிக் பாய்...’என அடம் பிடிக்கும் அவிவ் இன்று அமைதியாய் அவளை கட்டிக் கொண்டு வந்தான்.

வீட்டிற்கு போய் விடலாமா என தோன்றுகிறது.

புது எம்டி சர்வன் ஞாபகம் வந்தான்.

சமீப காலமாக எம்டி அலுவலகத்தை மட்டும் தன் வீடிருந்த 5 மாடி கட்டிடத்தின் தரை தளத்திற்கு மாற்றியிருந்தான் சர்வன். அவன் மனைவி திருமணமாகி 3 வருடம் கழித்து கர்ப்பம் தரித்து இருந்தாள்...அவளருகில் இவன்  இருக்க வேண்டுமாம்...

சர்வனும் அவனது உதவியாளராக இவளும் மட்டும் அந்த அலுவலகத்தில்.

மற்றபடி எல்லாம் முந்தி அலுவலகம் இருந்த இடத்தில்தான்.

சர்வனைப் பற்றி ப்ரச்சனை இல்லை. கண்ணியமானவன். ஆனால் சர்வன் வீட்டிற்கு வரும் அவனது நண்பன்...

 நிக்கி என்று பெயர் அந்த குரங்கிற்கு. அவன் அடிக்கடி சர்வன் அலுவலகத்தில் வந்து அமர்ந்து கொள்வதும்....

விழுங்குவது போல் இவளை பார்ப்பதும்...எதற்கெடுத்தாலும் இவளை விழுந்து விழுந்து கவனிப்பதும்...

எல்லை தாண்டி அந்த நிக்கி எதாவது செய்தால் சர்வனிடம் கம்ளெய்ண்ட் செய்யலாம்...ஆனால் இதை....

இதை உலகம் கண்ணியமான காதல் என்று கூட சொல்லும்....

இவனுக்கு காதலிக்க வேறு ஆளா கிடைக்கவில்லை....???

இன்று இவள் வேலைக்கு செல்லாவிட்டால்....நாளை மறுநாள் சர்வனை சமாளித்துவிடலாம்...ஆனால் இந்த இவன் காரணம் கேட்டு உயிரெடுப்பான்.

ஆட்டோ எடுத்து அருகிலிருந்த க்ரீச்சில் வழக்கம் போல் மகனை விட்டுவிட்டு அலுவலகம்  சென்றாள்.

இவள் இடத்தில் இவள் உட்கார்ந்து வேலை செய்ய ஆயத்தமாக...இவளிடமாக வந்து நின்றான் அந்த நிக்கி...

“என்னாச்சு இசை...? ரொம்ப லேட்...? உடம்புக்கு ஏதும் முடியலையா?..ஏதாச்சும் ஹெல்ப் வேணும்னா சொல்லுங்க...”

அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

ஏற்கனவே கசந்து கொதித்துக் கொண்டிருந்த மனநிலை, சம்பந்தம் இல்லாத இவனுக்காக பயந்து அலுவலகம் வர வேண்டிய சூழல், ஆண்கள் மீது குடி வந்திருந்த குரோதம்...

தன்னை கட்டுபடுத்த முடியாமல் வெடித்தாள்.

“ஏன்....ஏன் இப்டி உயிரெடுக்குறீங்க...? உங்களுக்கு நாசமாக்க வேறு பொண்ணு யாரும் கிடைக்கலையா...? என் உயிரை வாங்குறீங்க....எவ்ளவு விலகி விலகி போறேன்...வேலைய விட வழி இல்லாம தான வாரேன்...இப்டி பாடா படுத்றீங்க.....எனக்கு 7 வயசில குழந்தை இருக்குது...அப்றமும்...சே...”

 “நான் அந்த குழந்தையோட அப்பா...”  அவளது அலைக்கும் எரிமலைக்கும் மேலாக ஒருவித அமைதியோடு தொடங்கினான் நிக்கி...

அவ்வளவுதான்......தரை தாங்கா எரிமலையாய் எழுந்தாள் பெண்.

 எவ்வளவு தைரியம் இருந்தால் இதை இவளிடமே வந்து சொல்வான்...? நீதானா அந்த வெறிநாய்....வேட்டைக்கார ஓநாய்..

இரண்டாவது முறையாக இன்று ஒரு ஆணை தாக்க முயன்றுகொண்டிருந்தாள் நல்லிசை.

மதுரனைப் போல்  அசையாமல் இவளிடம் காலரை கொடுத்துக் கொண்டு நிற்கவில்லை இவன்.

இவள் கைகளை பிடித்து தடுத்திருந்தான்.

இல்லையெனில் இவள் இவனை என்ன செய்திருப்பாள் என்று சொல்வதற்கு இல்லை.

அப்பொழுதுதான் உள்ளே நுழைந்த சர்வன்தான் இவர்களை பிறித்துவிட்டான்.

“ஏன்டா...? “ தன் நண்பனை கேட்டான்.

“ம்...அவளையே கேளு....”

“என்னமா நீ...?”

பதிலே சொல்லாமல் கிளம்பி வெளியே வந்தாள். இதுதான் இங்கு வருவது கடைசி முறை என அவளுக்கு தெரியும்.

உடல் பதற உயிர் நடுங்க என்ன யோசிக்கிறோம்...எங்கு செல்கிறோம் என புரியமல் சென்றவள் சுய நினைவுக்கு வந்த போது க்ரீச்சில் மகன் முன்பாக நின்றிருந்தாள்.

“மம்மா....சி டி ம்மா...”

சிந்தனையின்றி மரத்திருந்த மனதுடன் அடுத்த ஷாப்பிற்குள் நுழைந்தவள் கண்களில் பட்டது அந்த பெரிய போஸ்டர்... “நிக்கேல் ஆன் கால்...” அந்த நிக்கியின் படத்திற்கு நடுவில் இப்படி எழுத பட்டிருக்க

“மம்மா இந்த சி டி தான்மா....நிக்கேல் அங்கிள் சைன் பண்ணது....” மகன் சென்று அந்த போஸ்டர்க்கு அடியிலிருந்த சிடிகளில் ஒன்றை தூக்கிக் கொண்டு வர...காலடி நிலம் நழுவியது.

சத்தமில்லா இடியுண்டு என்பதாக நெஞ்சில் விழுந்தது அதில் ஒன்று.

அந்த நிக்கிதான் மகனோட பேவரைட் ஸ்டார் நிக்கேல்லா...????

எப்படி வீடு வந்து சேர்ந்தாள் என்றெல்லாம் நல்லிசைக்கு தெரியாது.

வீட்டிலும் மடியைவிட்டு மகனை இறக்க மனம் வரவில்லை.

அவிவை இறுக்கி அணைத்தபடி இரவை கழித்தாள்.

மனதில் ஒரே பயம்.  மகனை தன்னிடமிருந்து பிடுங்கி விடுவானோ நிக்கி ...? சட்டபடி அதை செய்ய அவனுக்கு உரிமை இருக்கிறதா?

மகன் வந்த கதையை அவன் வெளியே சொன்னால் கற்பழிப்பு குற்றத்தில் முதலில் சிறை செல்ல வேண்டி இருக்குமே...ஆக சொல்ல மாட்டான்....ஆனால் வெளியே சொல்லாமல் பிடுங்கிக் கொண்டு ஓடிவிட்டால்....இவளுக்கு அவனை எதிர்க்க உடல் பலமும் பண பலமும் இல்லையே...

 தெய்வமே சிறகை வெட்டினாய்...மதுரனை இழந்தேன்....இறகின்றி வாழ பழகிக் கொண்டேன்...வேரை வெட்டுகிறாயே....அவிவ் இன்றி எப்படி வாழ்வேன்..?

ஞாயிறு சர்ச்சுக்கு சென்று வந்த பின்பு ஒரு தைரியம் வந்திருந்தது.

நிச்சயமாக முடிவு உண்டு, உண் நம்பிக்கை வீண்போகாது....என்ற வசனம் தந்த தைரியம். எந்த துன்பத்திற்கும் முடிவென்று ஒன்று நிச்சயமாக உண்டு...

நிலவிற்கு அழகு சேர்க்க இரவுகள் அவசியம்.

உள்ளான மனிதன் பலப்பட உபத்திரவங்கள் அவசியம்.

ஆனால் அதற்கு முடிவென்று ஒன்று உண்டு.

இவள் இரவில் இனி உதிக்கும் தேன் நிலா.

கையிலிருக்கும் சேமிப்பு காலியாகும் முன் வேறு வேலை தேடி கொள்ள வேண்டும்.

மகன் விஷயத்தில் வருவதை எதிர் கொள்ள வேண்டியதுதான்.

திங்கள் காலை மகனை பள்ளியில் விட்டுவிட்டு ஸ்கூட்டியை கிளப்பி பள்ளி கேட்டை நோக்கி இவள் வந்த நேரம்...பள்ளிக்குள் இவளுக்கு எதிராக நுழைந்தது அந்த சில்லி ரெட் கார்.....கண்கள் தானாக ஓட்டுநர் இருக்கையை நோக்க... மதுரன்.

செக்யூரிட்டியிடம் ஏதோ கேட்டு கொண்டிருந்தவன் இவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு காரை பள்ளி வளாகத்திற்குள் செலுத்தினான். அவன் அருகில் இருந்த அந்த பெண் இவளை எட்டிப் பார்த்தாள்.

சில் சில்லாய் சிதறி விழுந்தாள் நல்லிசை.

முன்பு இந்த சில்லி ரெட் ஸ்கோடா ரேபிட் இவளிடமும் ஒன்று இருந்தது. 18 வயது பிறந்த நாளுக்கென்று அப்பா வாங்கி பரிசளித்தது. அதில் அவள் ஊரான குல்பர்காவில் சுற்றாத இடமில்லை. பேங்களூர் கல்லூரிக்கும் அதை கொண்டு சென்றிருந்தாள்.

அங்குதான் மதுரன் அவளுக்கு அறிமுகம்.

தொடரும்

Episode # 02

{kunena_discuss:878}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.