(Reading time: 13 - 26 minutes)

"பிரிண்ட்  கல்யாணம். திருவண்ணாமலை போகிறோம்" என்றான் நவீன்.

"ஒ. ஹாசி அங்கதான் போகிறாள்" என்றாள் அஞ்.

"உங்க ஊர் திருவண்ணாமலையா?" என்றான் அத்வைத் ஹர்ஷாவிற்கு உதவியாக.

"இல்லை. என் ஊர் பூனே. சித்தி வீடு திருவண்ணாமலை" என்றாள் ஹாசி.

"உங்க பாமிலி?" என்றான் சர்வேஷ்.

"அப்பா, அம்மா இரண்டு பேரும் பேங்க்ல வொர்க் பண்றாங்க. அண்ணா ஆடிடர்" என்றாள் ஹாசி.

"நீங்க எல்லோரும் சென்னையா?" என்றாள் அஞ்சனா. "அவங்க மட்டும் பிரிண்ட்க்கு ஹெல்ப் பண்றாங்க. நாமும்  பண்ணலாம் " இது அஞ்சனா மனதில் நினைத்தது.

"ஹர்ஷா, நவீன்  சென்னைதான். என் சொந்த ஊர் சேலம். அத்வைத்துக்கு திருநெல்வேலி. நானும் அத்வைதும் ரூம் எடுத்து தங்கியிருகோம்" என்றான் சர்வேஷ்.

"உங்க ஊர்?" என்றான் அத்வைத்.

"என் ஊர் கோயம்பத்தூர். நிஷா பொள்ளாச்சி. சாதனா கடலூர்" என்றாள் அஞ்சனா.

"உங்க பாமிலி" என்றான் ஹர்ஷா.

"அப்பா வியாபாரி. அம்மா இல்லத்தரசி. அக்கா கல்யாணம் முடிஞ்சு மும்பையில் இருகாங்க. சாதனா ஒரே பொண்ணு. அப்பா, அம்மா டீச்சர். நிஷாவுடையது கூட்டுகுடும்பம். தாத்தா,பாட்டி,பெரியப்பா,பெரியம்மா, அப்பா, அம்மா, இரண்டு அண்ணா. பிசினஸ் பண்றாங்க" என்றாள் அஞ்சனா.

நவீனுக்கு மொபைலில் கால் வர அவன்  கொஞ்சம் தள்ளி  நின்று பேசினான்.

"உங்க பாமிலி?" என்றாள் சாதனா ஆர்வத்தை அடக்கும் வழிதெரியாமல். (ஹர்ஷாவை கேட்டால் நம்ம சர்வேஷை பத்தியும் தெரிஞ்சிக்கலாமே)

"அப்பா ரயில்வேல, அம்மா EBல வொர்க் பண்றாங்க, தங்கை B.com படிக்கிறாள். சர்வேஷ் அப்பா வக்கில், அம்மா பேங்க்ல வொர்க் பண்றாங்க. தங்கை BE படிக்கிறாள். அத்வைத் அப்பா டீச்சர், அம்மா இல்லத்தரசி தம்பி MBBS படிக்கிறான். நவீன் " என்று ஹர்ஷா ஆரம்பித்த  நேரம் நவீன் வர அவன் அதை தொடரவில்லை. சர்வேஷ், அத்வைத், ஹர்ஷா மூவரும் தோழியரை கெஞ்சுதலுடன் பார்க்க அவர்கள் அதை விடுத்து காலேஜ் பற்றி பேசினர்.

"நாலுபேரும் ஒரே காலேஜா இல்லை ஸ்கூலா?" என்றாள் ஹாசி.

"BE சேர்ந்து படிச்சோம்." என்றான் சர்வேஷ்.

இவர்கள் பேசிகொண்டிருக்கும் போது  சாதுவிற்கு பஸ் வந்தது.

"அங்கிளை பார்த்ததும் கால் செய்யுடி." என்றாள் நிஷ்.

"ஓகே டி. நீங்களும் கால் செய்யுங்க. நான் தூங்கமாட்டேன்" என்றாள் சாது.

"பை டி. பை"  என்று அனைவருக்கும் பொதுவாக சொல்லிவிட்டு சர்வேஷ்ஷை பார்த்துவிட்டு சென்றாள். சர்வேஷின் நினைவில் டின்னெரை மறந்தாள். அவள் பஸ்ஸில் ஏறிவிட  நிஷ்  அவளின் பின்னால் சென்று அதை கொடுத்தாள்.

நிஷா சாதனா அப்பாவிற்கு கால் செய்தாள்.

"அங்கிள். அவ கிளம்பிட்டாள். அஞ்சனா உங்களக்கு பஸ் நம்பர் அனுப்பிட்டாள்."

"சரி டா. நான் பார்த்துகிறேன். ஹாசி கிளம்பிட்டளா?"

"இல்லை அங்கிள்."

"சரி மா. நீங்க பார்த்து போங்க"

"சரி அங்கிள்"

"முன்எச்சரிக்கையா? பஸ் நம்பர் அனுப்பறீங்க" என்றான் ஹர்ஷா.

"ஆமாம்." என்றாள் அஞ்.

"நல்ல விஷயம்" என்றான் அத்வைத்.

"ஹ்ம்ம். நல்ல விஷயம் தான் சாதனாவிற்கு" என்றாள் நிஷா. ஆனால் அவள் பேச்சில் கிண்டல் இருக்கவே

"என்ன சொல்றீங்க" என்றான் நவீன்.

"ஒரு குட்டி பிளாஷ்பேக். காலேஜ் ஜாயின் செய்த பிறகு முதல் முறை நாங்க வீட்டிற்கு போனோம். இப்ப மாதிரி அவளை பஸில் ஏற்றி விட்டோம்.அவள் மொபைல் சுவிட்ச்ஆப்  ஆகிடுச்சு. அவளை அங்கிள் தொடர்புகொள்ள முடியாது அதனால் அங்கிள்க்கு அவள் கிளம்பிட்டாள்ன்னு சொல்லிட்டு பஸ் நம்பரையும் சொன்னோம். அவள் கிளம்பின பஸ் கடலூர் வழியாக வேற ஊருக்கு போகின்ற  பஸ்." எனறாள் நிஷா.

"நெக்ஸ்ட் டே அவள் ரீச் ஆகிட்டாலான்னு கேட்க கால் செய்தோம். அங்கிள்தான் பேசினார். இந்த மேடம் பஸ்ல தூங்கிட்டாங்க. எந்த அளவுக்கு என்றால் கடலூர் வந்ததே தெரியாத அளவுக்கு.  நாங்க இங்க கிளம்பிட்டாள்ன்னு சொன்ன டைம் வைத்து  அங்கிள் பஸ்ஸ்டாண்ட் வந்துட்டார். நாங்க சொன்ன பஸ் வந்தும் பொண்ணு இறங்கலைன்னு பயந்து என்னமோ ஏதோன்னு பதறி பஸ்ல செக் பண்ணி  நல்ல ஆழ்ந்த உறக்கத்தில்  இருந்த  மேடமை எழுப்பி இருக்கிறார். அவள் 2மினிட்ஸ் என்று சொல்ல அங்கிள் டென்ஷன் ஆக  நல்லா திட்டி  முடிவில் வீட்டிற்கு சென்றார்கள்" என்றாள் அஞ்.

"சோ இப்பவும் நாங்க பஸ் நம்பர் சொல்லிடுவோம். கடலூர் பஸ்லமட்டும் அவளை ஏற்றுவோம்" என்றாள் ஹாசி.

"மச்சி. நோட் பண்ணிக்கோ" என்றான் ஹர்ஷா சர்வேஷ்க்கு மட்டும் கேட்கும் குரலில். மற்ற இருவரும் அவனை பார்வையால் கிண்டல் செய்தனர்.

"நீங்க இரண்டு பேரும் எப்படி போறீங்க. உங்களை அனுப்பிட்டு நாங்க கிளம்பறோம்" என்றான் நவீன்.

"இல்லை. அப்பா கார் அனுப்பியிருக்கார்." என்றாள் அஞ்.

"ஓகே அஞ்சனா" என்றான் நவீன்.

அனைவரும் திருவண்ணாமலை பஸ் இருக்கும் இடத்திற்கு சென்றனர்.

"அங்க எந்த மஹால கல்யாணம்?" என்றாள் ஹாசி.

"xx கல்யாண மண்டபம்." என்றான் அத்வைத்.

"எங்க ஸ்டே பண்றீங்க? புக் பண்ணிடீங்களா?" என்றாள் நிஷ்.

"பிரிண்ட் பண்ணிட்டான். yy ஹோட்டல்" என்றான் ஹர்ஷா.

நிஷா ஹாசியை பார்க்க "நான் போகும்போது ட்ரோப் பண்ணிடறேன். சித்தப்பாக்கு சொல்லிடறேன்" என்றாள் ஹாசி.

"நாங்க பார்த்துப்போம் ஹாசி. ப்ரோப்ளம்  இல்லை" என்றான் நவீன்.

"இதில் என்ன இருக்கு. பிரிண்ட்ஸ்கு இதுகூட செய்யவில்லையென்றால் எப்படி" என்றாள் அஞ்.

"ஓகே" என்றான் சர்வேஷ்.

பஸ் கிளம்ப தயாராக இருக்க அப்பொழுதுதான் அவர்களின் உணவு பற்றி நிஷாவிற்கு தோன்றியது.

"டின்னெர் வாங்கிடீங்களா?" என்றாள் நிஷ்.

"இல்லை நிஷா. பஸ் டின்னெர்க்கு நிற்கும்னு சொன்னாங்க" என்றான் ஹர்ஷா.

"நிற்கும்தான். பட் அது எப்படி இருக்கும்னு தெரியலை." என்றாள் ஹாசி.

"ஹாசி. இந்த பார்சலையும் வாங்கிக்கோ." என்றாள் அஞ்.

"வேண்டாம். நாங்க அட்ஜஸ்ட் பண்ணிக்கறோம்" என்றான் அத்வைத்.

"இருக்கும் போது எதுக்கு அட்ஜஸ்ட் பண்ணனும்." என்றாள் ஹாசி.

"எங்க இரண்டு பேர் புட் உங்க நாலு பேருக்கு எப்படி பத்தும்னுதானே  யோசிக்கறீங்க" என்றாள் நிஷா குறும்பாக.

"கரெக்ட் நிஷா. நீங்க இரண்டு பேர் சாப்பிடறது ஒருத்தருக்கு தான் பத்தும்" என்றான் ஹர்ஷா கிண்டலாக.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.