(Reading time: 13 - 26 minutes)

"பீல் பண்ணாதீங்க பாஸ். குமார் அண்ணாக்கு வாங்கினது நிறைய இருக்கும். நைட் டிராவல் பசிக்கும்னு  எங்களுக்கும் அதிகமாதான் வாங்கினோம். " என்றாள் அஞ்சனா.

"ஓகே ஓகே. நாங்க இதையே சாப்பிடறோம். நீங்க ஞாபகமா வாங்கிகோங்க" என்றான் நவீன்.

"பஸ் ஸ்டார்ட் பண்ணிடாங்க. பை. பத்திரமா போங்க" என்றான் சர்வேஷ்.

"ஓகே. கால் பண்ணு ஹாசி." என்றாள் நிஷா.

"பை பை" இப்படி நிறைய "பை"யுடன் கிளம்பினர். அஞ்சனாவும் நிஷாவும் அவர்களுக்காக காத்திருந்த காருக்கு சென்றனர்.

வாரயிறுதி நாள் என்பதால் பஸ் நிரம்பி வழிந்தது. மூன்று பேர் அமரும் இருக்கையில் சர்வேஷ், நவீன், அத்வைத் அமர அவர்களுக்கு நேர் இருக்கையில் ஹர்ஷவும் அவனுக்கு முன் ஹாசினியும் இருந்தனர். ஹர்ஷா அருகில் ஒருவர் அமர்ந்திருக்க ஹாசினி அருகில் யாருமில்லை. பெருங்களத்தூரில் ஒருவர்  ஹாசினியருகில் அமர்ந்தார். இது சில சமயங்களில் நிகழ்வதுயென்பதால் அதை அவள் பெரிதாகயெடுக்கவில்லை. ஆனால் சில நிமிடங்களிலேயே அவளால் இயல்பாய் இருக்கமுடியவில்லை. அவர் அவளை இடித்துகொண்டே இருந்தார். அது இயல்பாக  நிகழ்வதுபோல் தெரியவில்லை. அவள் திரும்பி ஹர்ஷாவை பார்த்தாள். அவன் புரிந்துகொண்டு தன் அருகில் இருந்தவரிடம் பேசி அவரை முன்னிருக்கைக்கு மாற்றினான். இதை அவன் நண்பர்கள் பார்த்ததும் புரிந்து கொண்டனர்.

"தேங்க்ஸ் ஹர்ஷா. இப்போதான் ப்ரீயா இருக்கு" என்றாள் ஹாசி.

"இட்ஸ் ஓகே. " என்றான் ஹர்ஷா.

அதற்குள் சர்வேஷ் "ஹாசி. பசிக்குது. எங்களுக்கு டின்னெர் தருவீங்களா?"

“எனக்கும் பசிக்குது” என்றான் ஹர்ஷா.

"ஹா ஹா. இப்பவே பசிக்குதா? யாரோ வழியில் பார்துப்போம்னு சொன்னதா எனக்கு ஞாபகம்" என்றாள் ஹாசி.

"ஹா ஹா ஹீ ஹீ " என்று அசடு வழிந்தான் ஹர்ஷா.

"சொன்னது ஹர்ஷாவும் அத்வைதும். அதனால் அவங்களுக்கு கொடுக்காதீங்க. எனக்கு தாங்க" என்றான் சர்வேஷ்.

"டேய். என்னையும் சேர்த்துக்கோ" என்றான் நவீன்.

"அடப்பாவிகளா. எங்களோட உங்களுக்கு சப்பாதி முக்கியமா?" என்றான் ஹர்ஷா.

"இதுவேற தனியா நீ கேட்கனுமா மச்சி. உனக்கு தெரியாத" என்றான் நவீன்.

"அப்போ கண்டிப்பா தரமாட்டேன் போடா. பட்டினி கட" என்றான் ஹர்ஷா.

"மச்சி நீ சொல்றது கரெக்ட். அவனுங்களை விடு. எனக்கு தாடா" என்றான் அத்வைத்.

"ஐயோ. இதுக்குமேல என்னால் முடியாது. என்னை பார்த்தால் பாவமாயில்லை" என்றாள் ஹாசி.

"ஓகே. இதோட பிரேக் எடுத்துக்கலாம்" என்றான் நவீன்.

"என்னது பிரேக்கா " என்று அலறினாள் ஹாசி.

"இதை ஹோட்டல்ல நாங்க தொடருவோம். நீங்க அலறாதீங்க" என்றான் அத்வைத்

“என்ன டின்னெர் வாங்கனீங்க?” என்றான் ஹர்ஷா.

"சப்பாத்தி, பரோட்டா. பிடிக்குமா?" என்றாள் ஹாசி.

"பிடிக்கும்" என்றான் ஹர்ஷா.

"எங்களுக்கும் பிடிக்கும்" என்று கோரஸ் பாடினர் மூவரும்.

(யாரும் இவர்களை எதுவும் சொல்லவில்லையான்னு கேட்காதீங்க. டீச்சர் நடத்தும்போது பேசுற ஸ்டுடென்ட்ஸ்க்கு பஸ்ஸில் மெல்ல பேசதெரியாதயென்ன)

அனைவரும் சாப்பிட்டனர். சாதனாவும் அஞ்சனாவும் ஹாசிக்கு கால் செய்தனர். ஹாசி அவள் சித்தப்பாவிடம் ஹீரோ நால்வர் பற்றியும் கூறி கார் எடுத்துவர கூறினாள்.

மற்ற மூவரும் தூங்க ஹாசினியும் ஹர்ஷாவும் பேசி கொண்டிருந்தனர். நிறைய விஷயங்கள் பற்றி பேசி முடித்த பின்னர் அவனின் விபத்தை பற்றி கேட்டாள்.

"ஹர்ஷா. உங்களுக்கு எப்படி விபத்து நடந்தது" என்றாள் தயக்கத்துடன்.

"கூல் ஹாசி. உனக்கு எப்போ தெரியும்"

"உங்களை முதல்ல மீட் பண்ண வீக்லையே தெரியும். என் பிரிண்ட் இர்பானா பெரியம்மா வீடு உங்க வீடு பக்கதில்தான் இருக்கு."

"ஓ. எனக்கு மேல் படிப்பிற்கு ஆஸ்திரேலியா போக சான்ஸ் கிடைத்தது. அதற்கு ஏற்பாடு பண்ணிடிருந்தேன். டிரஸ் கொஞ்சம் பர்சேஸ் பண்ண மாலுக்கு சர்வேஷை  வரசொல்லிட்டு நான் போனேன். மாலுக்கு அருகில் ஒரு குழந்தை நடுவில் வந்தது. அவனை இடிக்ககூடாதுன்னு நான் டர்ன் பண்ண எனக்கு பின்னாடி வந்த வண்டி இதை எதிர்பார்க்காமல் மோத நான் கொஞ்சம் தூரம் தள்ளி ரோட்டில்  விழ என் கால்மேல் வண்டி ஏறிடுச்சு. அதன் பிறகு ஹாஸ்பிடலில் சர்வேஷ்தான் என்கூட இருந்தான். நவீனும் அத்வைதும் வேலை  தேடுற விஷயமா பெங்களூரில் இருந்தாங்க. விபத்தை பற்றி தெரிஞ்சதும்  அவங்களும் அதை விட்டுட்டு என்கூட இருந்தாங்க. நான் கொஞ்சம் தேறினதும் திட்டி இரண்டு பேரையும்  வேலைக்கு அனுப்பினேன். அப்பவும் பெங்களூர் போகாமல் இங்கயே வேலைக்கு சேர்ந்தாங்க. சர்வேஷ் மட்டும் அவங்க இரண்டு பேருக்கும் வேலை அவசியம் எனக்கு பிரச்சனை இல்லைன்னு சொல்லி  என்கூட இருந்தான். நவீனும் அத்வைதும் சர்வேஷ் கூட இருக்கணும்னு சொல்லிடாங்க . எனக்கு மட்டும் இல்லை என் அப்பா, அம்மா, தங்கை எல்லோரையும் உடைந்து போகாமல் பார்த்துகிட்டது இவங்கதான். பணத்திற்கு அப்பாகூட அலைந்து அம்மா, தங்கையை சாப்பிட வைத்து இன்னும் சொல்லணும்னால் எனக்கு ஒரு கால் இல்லை அப்படிங்கறதை அவங்க ஏத்துக்கற மனபக்குவத்தை கொடுத்து தைரியத்தை கொடுத்து இப்படி சொல்லிட்டே போகலாம். அவங்க இல்லையென்றால் நான் ரொம்ப கஷ்டபட்டிருபேன்.”

"சோ கிரேட் ஹர்ஷா. ஒருவனுக்கு உடம்பு முடியலையென்றால் அவன் கூட இருக்கறவங்க தைரியமா அவனுக்கு சப்போட்டா இருந்தா கண்டிப்பா அவன் அதை எதிர்த்து போராடுவான். உங்க விஷயத்தில் இது சரியா நடந்திருக்கு."

"எஸ். ஐ அம் சோ லக்கி". மனசுவிட்டு இரண்டு பேரும் பேசினர். கடைசி அரைமணி நேரம் இருவரும் அமைதியாக அதை ரசித்தனர்.

திருவண்ணாமலை வந்ததும் நால்வரையும் ஹோட்டலில் இறக்கிவிட்டு சென்றார் ஹாசினியின் சித்தப்பா.

தொடரும்

Episode # 06

Episode # 08

{kunena_discuss:855}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.