(Reading time: 15 - 30 minutes)

திலிருந்து அவள் பெற்றோர் உட்பட யாரும் அவளிடம் எதையும் ஞாபகப் படுத்த முயலவில்லை.

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய பின் சில நினைவுகள் அவள் பெற்றோரைப் பற்றி. ஆக அவர்களுடன் அவளால் ஓரளவு இணைய முடிந்தது.

இதில் வித்யாசமான விஷயம் என்னவென்றால் பெற்றோரைப் பற்றி இவளுக்கு நினைவு திரும்பிய அந்த சில நிகழ்வுகள் எல்லாம் அவர்களை இவள் மீது பெரும் பாசம் கொண்டவர்கள் என காண்பித்தாலும் ஏனோ இவள் அடிமனதால் அவர்களுடன் முழு திருப்தியுடன் இணைய முடியவில்லை.

ஒரு இனம் புரியா விலகல். அவர்கள் எத்தனை தான் நெருங்கி வந்தாலும் இவள் அறிவு அவர்களை நோக்கி உந்தி தள்ளினலும் அடிமனதில் ஒரு தடுமாற்றம்…வசதியின்மை….காரணம் புரியவே இல்லை.

அதே போல் புரியாத இன்னொரு விஷயம் இவள் திருமணம், கணவன் பற்றியது. இவளுக்கு குழந்தை இருக்கிறது என்றவுடன் அதன் தகப்பன் என்ற ஒரு கேள்வி…..

அவனைப் பற்றி யாரும் எதுவும் பேச்சு வாக்கில் கூட குறிப்பிடவில்லை.

முதலில் இத்தனை சுகவீனத்திலும் கணவன் என்று யாரும் இவளைத் தேடி வரவில்லை என்றதும் இவளுக்கு ஏற்பட்ட விபத்தில் அவன் இறந்துவிட்டானோ என்று ஒரு பயம் தோன்ற சுருண்டுவிட்டாள்.

அப்பொழுது அவளை ஆறுதல் படுத்தவென அப்படி ஒருவன் உயிருடன்தான் இருக்கிறான் என்று இவள் பெற்றோர் தெரிவித்தனர். அவன் பெயரைக் கூட குறிப்பிடவில்லை.

அவர்கள் தெரிவித்த விதத்திலேயே அவனை அவர்களுக்கு பிடிக்கவில்லை என்பது தெளிவாக புரிந்தது அவளது அறிவுக்கு. ஆனால் ஏனோ அந்த கணவன் என்ற நினைவு மட்டும் அவளுக்குள் ஒரு நிறைவான உணர்வை தந்தது.

விபத்திலிருந்து இவள் பெரும் போராட்டத்துக்குப் பின் வீடு திரும்பி 6 மாதம் ஆகிவிட்ட நிலையிலும் இன்னும் ஒரு முறை கூட அவன் வந்து பார்க்க கூட இல்லை, அவனிடம் இருந்து ஒரு அலைபேசி அழைப்புக் கூட இல்லை என்ற போதும், அவள் பெற்றோர் அவனை ஆழமாக வெறுக்கின்றனர் என்ற போதும், அந்த அறியாக் கணவன் மீது நம்பிக்கை தேய்பிறையாய் தேய்ந்து போன போதும், அவன் வராததால் வளர்பிறையாய் வளர்ந்த கோபம் குமுறிய போதும் அவன் பற்றி இருந்த அந்த அடிமன உணர்வு மாறவே இல்லை.

இன்றும் இவன் உள்ளே நுழையவும் தெரிந்துவிட்டது இது தான் அவன் என. அவன் அழைக்கவும் அவனுடன் கிளம்பி வரத்தான் தோன்றியது. அவனைப் பற்றி இவளுக்கு எதுவும் தெரியாமலே, அவள் பெற்றோர் அவனை  வெறுக்கின்றனர் என்ற ஒரே காரணத்திற்காக அவனை ஏன் விலக்கி நிறுத்த வேண்டும் என்று ஒரு கேள்வி வேறு மனதில்.

ஆனால் அவனுடன் வந்த பின்னல்லவா ஞாபகம் வருகிறது இவனின் சுய ரூபம்………இப்பொழுது என்ன செய்ய வேண்டும்? குழந்தை வேறு அவனுக்கு அருகில் இன்ஃபன்ட் கார் சீட்டில்….அவனை அடித்துப் போட்டு இறங்கி ஓட இது நேரமில்லை….உடல் இறுக பெரும் அதிர்ச்சியுடன் அவள்….

இப்பொழுது என்ன செய்ய வேண்டும்…? கத்தி ஆர்பாட்டம் செய்வதால் விட்டுவிட்டு போகிறவன் இவன் இல்லை…போன முறை இவள் கத்தி இருக்கிறாளே….அவன் விட்டது போல் தெரியவில்லையே…

குழந்தை இவளுக்கு வேண்டுமே….

அதே நேரம் அவன் மொபைல் சிணுங்கும் ஒலி…

“இதோ வந்துட்டு இருக்கேன்டா…….சுகா வீட்ல இருந்து…”

“…………………..”

“இதுக்கு மேலல்லாம் வெயிட் செய்ய முடியாது என்னால…”

“…………………..”

“இல்ல….உன் பேரு இதுல வரக் கூடாது அதான்….”

“………………………….”

“அதுலாம் ஒன்னும் இல்ல….நான் ஆஸி டூர்க்கு இப்பவே ரெடி…”

“…………………….”

“சரி வா….நான் ஈசி ஆர் என்டராகுறேன்…..”

அழைப்பு முடியவும் அவன் இணைப்பை துண்டித்த நொடி குழந்தை சிணுங்க ஆரம்பித்து, நொடி நேரத்தில் அது பேரழுகையாய் விதம் மாறியது.

“ஹ…”

இவள் ஆரம்பிக்கும் முன் அவன் மகளை சமாதான படுத்த தொடங்கி இருந்தான். “ஹாயா குட்டிமா….அழாதீங்கடா செல்லகுட்டி….” இதற்குள் அவசரமாக காரை சாலையின் ஓரத்தில் நிறுத்தினான்.

இவனுக்கு இந்தப் பெயர் எப்படி தெரியும்? இவளை அவ்வளவு கண்காணித்திருக்கிறானா? அதோடு தப்பி ஓடிக் கொண்டு இருக்கும்போது இப்படி இடையில் காரை நிறுத்துகிறான்….என்னை காப்பாத்த யாரும் வர மாட்டாங்களாமா? ஏன் நானே இப்போ இறங்கி ஓட மாட்டேனாமா?

இதற்குள் குழந்தையை எடுத்து மார்போடு சேர்த்து இடக்கையால் வாகாக ஏந்தியிருந்தான் அவன்.

“பசிக்குதாடா செல்ல புஜ்ஜு….அப்பா இப்ப எல்லாத்தையும் ரெடி பண்றேனே..” குழந்தை அழாதிருக்கும்படி மெல்லியதாக அவளை அசைத்தபடி வலக்கையால் அவன் எதையோ தேடுவது இவளுக்குப் புரிந்தது.

அவன் க்ளோவ் பாக்ஸிலிருந்து ஃபீடிங் பாட்டிலை எடுக்க, அவசரமாக தடுத்தாள் சுகவிதா. “இல்ல நான் தான் ஃபீட் பண்ணுவேன்…”

“நீ மெடிசின்ஸ் எடுத்துகிட்டு இருக்கிறதால செய்ய கூடாதோன்னு நினைச்சேன்…”

குழந்தையை அரவணைப்பாய் தூக்கி பின் சீட்டில் இருந்த இவளிடமாக நீட்டினான்.

பாய்ந்து அப்பினாள் மகள்.

ஆனால்…?

இதற்க்குள் கார் கதவை திறந்துவிட்டு இறங்கிவிட்டான் அவன்.

“முடிஞ்சதும் சொல்லு…பக்கத்துல தான் இருக்கேன்…”

இடப்புறமாக காரை ஒட்டி அவன் நிற்பது எட்டிப் பார்த்த இவளுக்கு தெரிகின்றது.

பிறர் கவனத்தை கவராமல் இருக்க அவன் முயல்வது புரிகின்றது.

இந்நேரம் இவள் குழந்தையுடன் இறங்கி ஓடிவிட்டால்….

பசியில் மடியில் தவிக்கும் குழந்தை….

குழந்தைக்கு உணவூட்ட முடிவு செய்தாள் சுகவிதா.

கரைந்தன மணி துளிகள். குழந்தை அமைதிப்பட இவள் மனதில் திடம் பெற்ற திட்ட அலைகள்.

மீண்டுமாய் வெளியில் நின்ற அவனை நோட்டமிட்டாள். அவன் முகம் முன்னிருந்த சாலை நோக்கி இருந்தது

பின்னால் இருந்த இவளை அவன் பார்க்கவில்லை. மெல்ல வலப்புற கதவை திறந்தாள். குழந்தையுடன் சாலையில் இறங்கி ஓட ஆரம்பித்தாள்.

“ஹேய்….சுகவிமா…” அவன் இவள் தப்பிப்பதை உணர்ந்து துரத்த தொடங்குகிறான் என புரிகின்றது…

“பார்த்துமா…ப்ளீஸ்….ஹேய் ஸ்டாப் ஸ்டாப்…” இவளுக்கு பின் இருந்தவன் இவளுக்கு முன் அசுரவேகத்தில் வந்த அந்த காருக்கு முன்பாக…..

சட்டென மனதில் மின்னலாய் அந்த காட்சி….

இப்படித்தான் யாரோ இவளை துரத்துகிறார்கள். இவள் காரில் இருக்கிறாள். துரத்துபவர்களிடமிருந்து தப்பிக்க இவள் கால் ஆக்‌சிலேட்டரில்….ரியர்வியூவில் பின் பகுதியை கண்காணிக்கிறது இவள் கண்கள் பரபரப்புடன்.

முன்னோக்கி பறக்கிறது அவளது கார்…

இவள் உணர்ந்து பார்வையை ரியர்வியூவிலிருந்து எடுத்து முன் பதிக்க நினைத்த நொடி….இவள் புறமாக ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்……….க்க்ரீஈஈஈஈஈஈஈச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்

அவ்வளவுதான் அந்த ஞாபகத்தில் இப்பொழுதும் உடலெல்லாம் பதறுகிறது….சட்டென உடல் வியர்வை கடலுக்குள்….கால்கள் மெழுகாய் …துணியாய்…ஐயோ….குழந்தையோட விழப்போறேன்….”ஜீசஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்……..”

நாற்புறமும் வந்து சூழ்ந்தான் அவன்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.