(Reading time: 7 - 14 minutes)

"நிஷா தாத்தா அலோவ் பண்ணமாட்டரா? " என்றாள் ஹாசி கிண்டலாக.

" எஸ் ஹாசி. கமல்கிட்ட நான் சொன்ன மினிட்ல இருந்து அலோவ் பண்ணமாட்டர்" என்றாள் அஞ் சிரிப்புடன்.

"நிஷ். இருக்கியா?" என்றாள் சாது.

"யா சாது." என்றாள் நிஷ்.

"என்னமா. என்ன யோசனை " என்றாள் ஹாசி.

"அஞ் இட்ஸ் டைம் டு டெல் ஆண்டி அபொட் கமல். நீங்க என்ன சொல்லறீங்க" என்றாள் நிஷ்.

"ஏன் நிஷ்" என்றாள் சாது.

"அவன் இப்போ ரொம்ப அதிகமா அஞ்சனவை காண்டாக்ட் பண்றான்." என்றாள் நிஷ்.

"நீ சொல்றது கரெக்ட் நிஷ். லவ் செய்யறமாதிரி இருக்கு" என்றாள் ஹாசி.

"லவ்வா? நீ வேற ஏன் ஹாசி. அவனுக்கு சொந்தமா ஹாஸ்பிடல் வேண்டும். என்னை கல்யாணம் பண்ணிக்கொண்டால் அப்பா கட்டி தருவார். அதான் இந்த நடிப்பு" என்றாள் அஞ். அவள் குரலில் அத்தனை வெறுப்பு.

"ஹ்ம்ம். கண்டிப்பா ஆண்டி, அங்கள்க்கு அவனை பற்றி தெரிஞ்சிருக்கும். நீயும் சொல்லிடு" என்றாள் சாது.

"ஓகே. நான் சொல்லிடறேன்" என்றாள் அஞ்.

" குட்டிமா. யார்கூட பேசற." நிஷா தாத்தா அவளை கேட்டார்

"கான்பெரன்ஸ் கால் தாத்தா"

"பாய் பிரிண்ட் கூட பேசாமல் நீங்க பேசிக்கறீங்க. எனக்கு இப்படி ஒரு பேத்தி"

"ஹா ஹா. தாத்தா அப்படியே திரும்புங்க"

"சும்மா பேசிகொண்டிருந்தேன் கண்ணம்மா. "

"என்ன சும்மா. பேத்திகிட்ட பேசுறா மாதிரியா இருக்கு. வயசானாலும் அறிவில்லை"

"புருஷன்கிட்ட பேசறமாதிரியா நீ பேசற. அறிவில்லைன்னு சொல்லற"

"நீங்க உங்க சண்டையை தொடருங்க. நான் மொபைல்ல பேசறேன்"

"ஹா ஹா" என்று ஹீரோ நால்வரும் சிரிக்க அப்பொழுதுதான் ஸ்பீக்கரில் போட்டது நால்வருக்கும் நினைவு வந்தது.

"ஹாசி" என்று பல்லை கடித்தாள் சாது.(பின்னே கோபம் வராதா அவளுக்கு. சர்வேஷ் அவள் குரலை கேட்க அவளால் அது முடியவில்லையே)

"ஹா ஹா " அதை புரிந்து கொண்டு சிரித்தனர் தோழியர்.

அங்கே நடப்பவை புரியாமல் முழித்தனர் நண்பர்கள். அவர்களின் முழியை பார்த்து சிரித்தாள் ஹாசி.

"ஏன் சர்வேஷ் முழிக்கறீங்க?" என்றாள் ஹாசி. (என்ன ஒரு ஹெல்ப்)

"இங்க என்ன நடக்குது. ஏன் சிரிக்கிறீங்க?" என்றான் சர்வேஷ்.

"காலேஜ் போனதும் சாதனாவை கேளுங்க" என்றாள் ஹாசி.

"ஏய்...நீ அங்கே வந்துதான் ஆகணும். உன்னை அங்கே கவனிச்சிக்கிறேன்" என்றாள் சாது.

"சாது நோ டென்ஷன். எவ்வளவு பெரிய ஹெல்ப் பண்ணிருக்கா" என்றாள் அஞ்.

"போடி. எப்போ கிளம்பற நீ" என்றாள் சாது.

"எப்பவும் போலதான் சாது.12 மணிக்கு. நீங்க?" என்றாள் ஹாசி.

"அஸ் யுஷுவல்" என்றனர்.

"கோவில் பார்த்தாச்சா சர்வேஷ். எப்படி இருந்தது?" என்றாள் நிஷ்.

"சூப்பர்..இவனிங் கிரிவலம் போகணும்"

"என்ஜாய்" என்றாள் அஞ்.

(இவங்க பேசினதை நான் எழுதினால் இன்னும் 10 பக்கம் போகும். இதோட இவங்க வெட்டி பேச்சை ஸ்டாப் பண்ணலாம்.)

அடுத்தநாள் நால்வருடன்  ஹாசினியும் கிளம்புவதாக முடிவானது. லஞ்ச் முடிந்து நால்வரும் விடைபெற்றனர்.

(இப்போ நாம அடுத்தநாள் 4.30மணிக்கு என்ன நடக்குதுன்னு பார்க்கலாம். இதன் நடுவில் நடந்ததை நெக்ஸ்ட் வீக் சொல்றேன்)

"சாதனா எங்க இருக்காங்க?" என்றான் அத்வைத்.

"இன்னும் 10மினிட்ஸ்ல வந்துடுவேன்னு சொன்னாள்" என்றாள் ஹாசி.

"ஓகே. வெயிட் பண்ணலாம்" என்றான் நவீன்.

"நிஷாவும் அஞ்சனாவும் எப்ப வருவாங்க?" என்றான் சர்வேஷ்.

"கரெக்டா 6மணிக்கு ஹாஸ்டல்ல இருப்பாங்க." என்றாள் ஹாசி.

"ஓகே மச்சி. நாங்க சும்மா சுத்திட்டு வரோம்" என்றான் நவீன்.

அவர்கள் செல்வதை பார்த்துகொண்டிருந்தாள் ஹாசி.

"ஹாசி" என்றான் ஹர்ஷா.

"ஹ்ம்ம்" என்று அவள் திரும்ப

அவள் கண்களை பார்த்து "எனக்கு உன்னை பிடிச்சிருக்கு ஹாசி" அவள் திகைப்புடன் பார்க்க

"உன் லைப் முழுக்க உன்கூட வரணும்னு ஆசைபடறேன். உன்னோட நண்பனா, அப்பாவா, குழந்தையா, புருஷனா இருக்க ஆசைபடறேன்.  உன்கூட பேசணும், சண்டைபோடணும், சமாதானபடுத்தனும். இப்படி ஒவ்வொரு நிமிஷமும் ரசிச்சி வாழனும்.” கண்ணில் கனவுடன் அவன் சொல்ல அவனையே பார்த்துகொண்டிருந்தாள்.

கனவிலிருந்து பஸ் ஹோர்ன் அவனை கலைக்க “டைம் எடுத்துக்கோ ஹாசி. நல்லா யோசிச்சு சொல்லு. முடிவெடுக்கும் போது என் கால் பற்றியும் யோசி" என்று சொல்லிவிட்டு அவளை பார்க்காமல் சென்றான்.

எப்படியோ ஒருதன் ப்ரொபோஸ் செய்துடான். ஹாசி நல்ல பதிலா சொல்லு. அட்லீஸ்ட் ஒரு ஜோடி ரோமன்ஸ் நாங்க பார்க்கறோம்

தொடரும்

Episode # 07

Episode # 09

{kunena_discuss:855}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.