(Reading time: 9 - 18 minutes)

ஹேய்… அதெல்லாம் வேண்டாம். நான் ஒரு ஓரமாக அமர்ந்து கொள்கிறேன்.” என்று கூறினாள்.

சாப்பிட்டு விட்டு எல்லோரிடமும் அடுத்தடுத்த வேலைகளைப் பற்றி பேசி விட்டு மேலே செல்லும்போது கனகாபிஷேகத்திற்கு தயாரானார்கள். மைதிலியைப் பார்த்துவிட்டு ராம் தலையசைத்தான். கொஞ்ச நேரத்தில் தாத்தா, பாட்டி உடை மாற்றி வர மாங்கல்யதாரணம் நடைபெற்றது. அது முடிந்தவுடன் அனைவரும் ஆசீர்வாதம் வாங்கும் போது தான் கவனித்தாள், ராம் அவர்களின் பேரன் என்பதையும், இந்த விழா சம்பந்தப்பட்ட ஏற்பாடுகளை தங்கள் நிறுவனத்திடம் ஒப்படைத்த சூர்யா குரூப் நிறுவனத்தின் எம்.டி என்பதையும்; கண்டு திகைத்தாள். மேலும் நேற்று பாடியவர்கள் எல்லாரும் அவர்கள் குடும்பத்தின் இளைய தலைமுறை என்பதையும் உணர்ந்தாள்.

அதற்குப் பிறகு கீழே சென்றவள், ராமின் கண்களில் அவள் படவில்லை. ராம் அவளைத் தேடியது தெரிந்தும் அவள் வரவில்லை. பிறகு மண்டபத்திலிருந்து அனைவரும் கிளம்பிய பிறகு அவளும் எல்லா வேலைகளும் முடித்து விட்டு, சேர்மனுக்கு மெசெஜ் அனுப்பிவிட்டு விடுதிக்குச் சென்றாள். விடுதியில் சென்று கதவைத் தாளிட்டு விட்டு அழ ஆரம்பித்தாள். பார்த்த முதல் கணமே அழுத்தமாக மனதில் பதிந்து ஒரே நாளில் தன்னைக் கவர்ந்தவன். ஆனால் அவனுக்கும் அவளுக்குமான பொருளாதார இடைவெளி மற்றும் உறவென்று சொல்ல யாருமில்லாத தன்னுடைய நிலை. தனக்கு இது நிச்சயம் ஒத்துவராது என்பதை உணர்ந்து தன்னை சமனப்படுத்த முயன்றாள்.

டம் - ஃபிராங்க்போர்ட். ராம் எல்லோரிடமும் பேசிய பிறகு படுக்கச் சென்றவனால் தூங்க முடியவில்லை. ராமிற்கும் மைதிலியை முதலில் சந்தித்தது எல்லாம் நினைவு வந்தது. எத்தனையோ முறை செய்தது போல் இந்த முறை மனதை அடக்க முடியவில்லை. அப்படியே நினைவுகள் பின்னோக்கி நகர்ந்தது.

ராம் கை கழுவுமிடத்திற்கு அருகில் வந்து பேசிய மைதிலியை முதலில் சாதாரணமாகத்தான் பார்த்தான். ஆனால் அவள் கண்களின் வசீகரத்திலும், நீளக் கூந்தலும் அவளை மற்றவரிடமிருந்து வித்தியாசப்படுத்தியது. அதே நேரம் அவள் அவன் யாரென்று தெரியாதபோதும், அக்கறையாகப் பேசியது அவனை நெகிழ்த்தியது. அவளை ஒட்டியே பேசி அவள் விடுதியில் கொண்டு விட்டு வந்து படுத்தவனுக்கு அவள் முகமும், அவளின் யாருமற்ற தனிமையுமே மனதில் நின்றது.

ஏற்கனவே அவள் சேர்மன் அவனுக்கு நல்ல பழக்கம். எனவே அவரிடம் பேசி மறுநாளும் அவளையே வரச் செய்தான். காலையில் அவள் வரும் வரை வாசலிலேயே எல்லோரையும் வரவேற்கும் பாவனையில் நின்றான். அவள் ஆட்டோவிலிருந்து இறங்கும் போது அதுவரை இன்னதென்று தெரியாமல் இருந்த உணர்வு, அவளே அவனின் வாழ்க்கைத் துணை என்று அடையாளம் காட்டியது. அவளைப் பார்த்தவுடன் கட்டிப் பிடித்து முத்தம் கொடுக்கத் தூண்டிய மனதை அடக்கி அவளை வரவேற்றான். அன்று அதன் பிறகு விசேஷத்தில் பிசியாகியவன், அவள் அவனை மீண்டும் சந்திக்க இயலவில்லையே என்று எண்ணிணான், பிறகு அனைவருடனும் வீட்டிற்குச் சென்றான்.

வீட்டில் அத்தைக் குடும்பம், தாத்தா பாட்டி எல்லோரும் இருக்கவே அடி மனதில் அவள் நினைவு இருந்தாலும் எல்லோரிடமும் பேசிக் கொண்டிருந்தான். இரவு உணவிற்கும் அவர்களிடமே சொல்லியிருந்ததால் அதுவும் வந்து சேர்ந்து விட்டது. எனவே வீட்டில் அனைவரும் ரிலாக்ஸ்டாக பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது தாத்தா

“ராம், நீ சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கோடா” என்றார்

யோசனையோடு “ம்..ம்… எனவும் எல்லோரும் திகைத்தனர். ஏனெனில் அதுவரை ராம் திருமணம் என்றால் ஓடிவிடுவான். இன்று சரி என்பது போல் கூறவும் ஒருவரை ஒருவர் பார்த்தனர். சந்தோஷிற்கு ஏதோ புரிவது போல் இருந்தது.

பாட்டி “ராம் பொண்ணு பார்த்துட்டியா? இல்ல பார்க்கணுமா?” என்றார்

சுதாரித்த ராம் எல்லோரையும் பார்த்து “எனக்கு இன்று ஒருநாள் டைம் கொடுங்கள். நான் இது விஷயமாக நாளை காலை எல்லோரிடமும் பேசுகிறேன். அத்தை, மாமா நீங்கள் எல்லோரும் இருக்க வேண்டும்.” என்று கூறிவிட்டு, “அம்மா நாளை காலை எல்லோரும் இங்கேயே சாப்பிட்டு விட்டு , இதைப் பற்றி பேசலாம்” என்றான்.

ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டே இரவு உணவு முடித்து விட்டுச் சென்றனர். ராமின் பின்னே சென்ற சந்தோஷ் “ராம், மைதிலியா? “ என்றான். ராம் ஆமென தலையசைக்கவும்,

சந்தோஷ் “நல்லா யோசிச்சிட்டியா?” என்றான்.

“இன்று காலை அவளைப் பார்த்தவுடன் தோன்றியது. ஆனால் பங்ஷனுக்குப் பிறகு அவளைப் பார்க்க முடியவில்லை. அதே யோசனையில் இருக்கும்போது தான், தாத்தா கேட்டவுடன் சம்மதித்தேன். இன்று இரவு முழுவதும் யோசித்துவிட்டு நாளை எல்லோரிடமும் பேசப்போகிறேன்.” என்றான்.

“மைதிலியிடம் பேசிவிட்டாயா?”

“இல்லை சந்தோஷ், நம் வீட்டில் பேசிவிட்டுத் தான் அவளிடம் பேசப்போகிறேன்”

“ஓ.கே. ஆல் தி பெஸ்ட். குட் நைட்” என்று சந்தோஷ் படுக்கச் சென்றான்.

ராமும் தன் அறைக்கு வந்தவன் காலையில் அவளுக்குத் தெரியாமல் செல்போனில் எடுத்த புகைப்படத்தைப் பார்த்தான், நாளை பெற்றவர்களிடமும் மற்றவர்களிடமும் எப்படிப் பேச வேண்டும் என்று யோசித்து விட்டு, நெடு நேரம் கழித்து தூங்கினான். கனவிலும் அவள் முகமே.

தொடரும்

Episode 01

Episode 03

{kunena_discuss:887}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.