(Reading time: 11 - 22 minutes)

"ன்னை பேசிட்டு வந்து கவனிக்கறேன்"

அதே நேரம் நம்ம ஹீரோஸ் என்ன டிஸ்கஸ் பண்றாங்கன்னு பார்க்கலாம்.

"ஹர்ஷ் என்னால் உனக்கு எவ்வளவு பெரிய விஷயம் தெரிஞ்சிருக்கு சோ இன்னிக்கு ட்ரீட் நீ தான் ஸ்பான்சர்"

"இது எனக்கு ஏற்கனவே தெரியும் சோ நோ ட்ரீட். அவள் என்கிட்ட அக்செப்ட் செய்யும் போது தரேன்  சர்வீ "

"இது செல்லாது..டேய் நீங்க சொல்லுங்க"

"சர்வீ ஹி இஸ் ரைட்.. நீ தான் ஸ்பான்சர்"

"அத்து  நானே மாட்டிகிட்டேனா..ஓகே தரேன்"

சாதனா மொபைலில் தன் காதலை வளர்க்க  ஹாசி ஹர்ஷாவிடம் முடிவை சொல்லாமல் அவனை கடுப்படிக்க அஞ்சனாவும் நிஷாவும் அவர்கள் இருவரையும் கிண்டல் செய்து காலத்தை ஒட்டினர்.

"ஸ் ஆ ஆ" வலியில் முனங்கிகொண்டே அஞ்சனா தன்னை சுற்றி பார்த்தாள்.

ஒரு வாலு பையன் கல்லை வைத்துகொண்டு முழித்தான். அவன் கல்லை தூக்கிபோட்டு விளையாடும்போது அது தன்மேல் பட்டதை புரிந்துகொண்டாள்.

"ஹலோ சுட்டி ..என்ன விளையாடற"

"ஹே...நீங்க அடிபீங்கன்னு நினைச்சேன்"

"ஹா ஹா எதுக்கு?"

"உங்களுக்கு அடிபட்டிருக்கு, ரத்தம் வருது. அதனால்தான்"

"உனக்கு இப்ப தெரிஞ்சுடுச்சுல  அதனால் இனிமேல் கல்லை வைத்து விளையாடதே"

"ஹ்ம்ம் ஓகே அக்கா"

"குட்டி இங்க என்ன செய்ற? அம்மா கூடவே இருக்கணும்னு சொன்னேன்ல"

"அம்மா அம்மா அது வந்து"

"இன்னிக்கு என்ன அட்டகாசம் பண்ண"

"ஹே என்ன ரத்தம்? நீ தான் பண்ணியா குட்டி? உன்னை கல் வைத்து விளையாடகூடாதுன்னு  சொன்னேன். அடிச்சாதான் சரிவருவ"

"அடிகாதீங்க அக்கா. அவனுக்கு இப்ப தெரிஞ்சிருக்கும். இனிமேல் இப்படி செய்யமாட்டான்."

"யெஸ் அம்மா. இனிமேல் செய்யமாட்டேன். சாரி அக்கா"

"வாங்க ஹாஸ்பிடல் போகலாம் "

"நீங்க அவனை கூடிட்டு போங்க. நான் அஞ்சனாவை பார்த்துகிறேன்"

"அதெல்லாம் வேண்டாம் அத்வைத். நான் ரூம் போறேன்"

"சின்ன குழந்தை மாதிரி அடம் பண்ணாதே..நீங்க போங்க லேட் ஆகிடுச்சு. நான் இவளை ஹாஸ்பிடலுக்கு அழைச்சிட்டு போறேன்"

"ஓகே சார். தேங்க்ஸ். கண்டிப்பா அழைச்சிட்டு போங்க. சாரி மேடம்"

" பரவாயில்லை”

"வா போகலாம்"

"நீங்க எங்க இந்த டைம்ல ? ஆபீஸ் போகலையா?"

"நைட் ஷிப்ட்தானே..ரூமிலிருந்து 9 மணிக்கு கிளம்பினால் போதும். ஹே இந்த சைடு ஹாஸ்பிடல் "

" வேண்டாம் அத்வைத். சின்ன காயம்தான்"

காயத்தை பார்த்துவிட்டு "சரி வா. பேண்ட்எய்ட் போடலாம்"

"ஊப்ஸ்..பெரிய பிளேயர்ன்னு பெத்த பெயர் காலேஜில், இந்த சின்ன காயத்திற்கு இவ்வளவு அலம்பல்"

'சின்ன காயம்னாலும் அதை பார்த்துக்கணும். உடம்பை நல்லா பார்த்துக்கணும்"

"ஸ் ஸ் ஆ ஆ "

"சின்ன காயம் தானே எதுக்கு இப்ப கத்தறீங்க மேடம்"

"அதுக்காக நீங்க பேண்ட்எய்ட் போட்டா வலிக்காதா"

"ஹ்ம்ம். நல்ல சமாளி"

"நைட் வேலைக்கு போறீங்க. மதியம் கோச். எப்ப தூங்குவீங்க?"

"காலையில் தூங்குவேன்"

"ஓகே. எப்ப ஆபீஸ் முடியும்?"

"6 மணிக்கு முடியும்"

"அப்ப நீங்க ரூம்க்கு போக 7 மணி ஆகிடும். சாப்பிட்டு நீங்க தூங்க 8 மணின்னு வைத்தாலும் 12 மணிக்கு எழணும். அப்பதான் 1 மணிக்கு காலேஜ் வரமுடியும். இங்க இருந்து நீங்க 6 மணிக்கு கிளம்புவீங்க. சோ அதன் பிறகும் தூங்க முடியாது. கம்மி டைம்தானே தூங்குறீங்க. இப்படி உழைத்தால் உங்க உடம்பு என்ன ஆகறது? இதில் உடம்பை நல்லா பார்த்துக்கணும்ன்னு எனக்கு அட்வைஸ் "

அவன் இமைக்காமல் அவளை பார்த்தான். தன் பெற்றோர், தம்பி, நண்பர்களுக்கு பிறகு தன்னைபற்றி பேசும் முதல் மனிஷி. அவன் மனம் இளகியது.

"என்ன இப்படி பார்க்கறீங்க? 4 மணி நேரம் தூங்கினால் உடம்பு தாங்குமா? அது என்ன மெஷினா?"

"ஐ ஹவ் டு வொர்க் அஞ்சனா"

"அதுக்குன்னு இப்படியா? உங்களை யாரும் கேட்கமாடான்களா? உங்க பிரிண்ட்ஸ், அம்மா, அப்பா இவங்க யாரும் கேட்கமாடான்களா?"

"நீ கேட்டதும் ஞாபகம் வருது எங்க உன்கூட இருக்கும் முப்பெரும் தேவியர்"

"இரண்டு பேர்   ரொம்ப பிஸி. நிஷா தாத்தாகூட பேசிட்டிருக்கா"

"ஒ ஓகே"

"நீங்க டாபிக் சேன்ஞ் பண்ணால் நாங்க மறந்திடுவோமா? "

"பச். விடு அஞ்சனா"

"உங்களுக்கு கால் வருது"

"ஹலோ அப்பா"

"நல்லா  இருக்கேன். நீங்க?"

"சரிப்பா. என்ன விஷயம் இந்த நேரம் கால் பண்றீங்க?"

"ஒ. எவ்வளவு தேவையப்பா?"

"அவ்வளவா? சரி அப்பா. நான் அவனுக்கு பணம் அனுப்பறேன்"

"இதில் என்ன கஷ்டம். அவன் சும்மா கேட்கமாட்டான் அப்பா. தேவையில்லாமல் செலவு செய்றவனில்லை.நான் அனுப்பிட்டு உங்களுக்கு கால் பண்றேன்"

அந்த பக்கம் பேசுவது கேட்கவில்லை என்றாலும்  அவன் பேசினதை வைத்து அவள் புரிந்துகொண்டாள்.

"ஹான் அத்வைத்..உங்க தம்பி எங்க படிக்கறாங்க?"

"அது தெரிஞ்சு நீ என்ன செய்ய போகிறாய்?"

"பச்.. அவனை கரெக்ட் பண்ணபோறேன்.. கேட்கற கேள்வியை பாரு..சரியான சிடுமூஞ்சி"

"நாங்க சிடுமூஞ்சி இவங்க பெரிய எலிசபெத் மகராணி"

பணத்தை பற்றிய கவலையும் மீறி அவன் அவளிடம் சின்ன பிள்ளையைபோல் சண்டையிட்டான்.

"நீங்க சொல்லலைனாலும் நாங்க மகராணி தான்..ஓகே பை சிடுமூஞ்சி"

"ஞ் என்னாச்சு? எப்படி அடிப்பட்டது?

"இவனை ..எனக்கு வர கோவத்திற்கு அப்படியே கடிச்சு கொதரனும்போல இருக்கு"

"அஞ் யாரை இப்படி திட்டுற?"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.