(Reading time: 8 - 16 minutes)

"ங்களுக்கு என்ன தெரியனுமோ அதைமட்டும் சொல்லுங்க. அவர் பைக் அவருக்கு கிடைக்க நாங்க ஹெல்ப் செய்யறோம்"

"அவன்கிட்ட நாங்க கேட்டுட்டோம் நிஷா. உங்ககிட்ட சொல்றதில் எங்களுக்கு ப்ரோப்ளம் இல்லை"

"நாங்க நாலுபேரும் ஒன்னா u.g படிச்சோம். ஆரம்பத்தில் அவன் யார்கூடயும் பேசமாட்டான். அவனுக்கு நண்பன்னு யாருமில்லை. ஒரு நாள் நாங்க மூணு பேரும் செகண்ட் ஷோ பார்த்துட்டு ரூம்க்கு ரிடர்ன் வரும்போது இவனை டாஸ்மார்க் வெளியில் பார்த்தோம்."

(நாம அந்த டைம்க்கு டிராவல் செய்யலாம்)

"ஹே அது நவீன் தானே "

"ஆமாம் ஹர்ஷ். ஏன் இப்படி இருக்கான்?"

"ஏன்டா சவேஷ் தண்ணி அடிச்சா இப்படிதான் இருபாங்க..வேற எப்படி இருபாங்க?"

"அத்து கடுபடிக்காம வா. அவனை பார்க்கலாம்"

"நவீன் நவீன் "

"ஹாய் ஹர்ஷா. நீங்க எங்க இங்க? நீங்களும் தண்ணி அடிப்பீங்களா? அடிக்காதீங்க. கெட்டு போய்டுவீங்க"

"அடப்பாவி தண்ணி அடிச்சிட்டு பேசற பேச்சா இது"

"அத்து அவனை பிடி. அவன் வீட்டில் விட்டுட்டு போகலாம்"

"சரி ஹர்ஷ்"

"நவீன் தம்பி. தம்பி ஏன் இப்படி உடம்பை கெடுதிக்கறீங்க"

"தாயம்மா ஏன் இவ்வளவு நேரம் முழிசிருகீங்க? உங்க உடம்பு கெட்டுடும்"

"எனக்கு ஒன்னும் ஆகாது. தம்பிகளா இவரை இந்த பக்கம் அழைச்சிட்டு வாங்க"

"வாங்க பிரிண்ட்ஸ். இதுதான் என் சிறைச்சாலை"

"தம்பி  அப்படி சொல்லதீங்க"

"சரி சொல்லலை. நீங்க பீல் பண்ணாதீங்க. தாயம்மா என் பிரிண்ட்ஸ்க்கு சாப்பாடு கொடுங்க"

"சரி தம்பி"

"ஹான் வேண்டாம். நீங்க செய்து கொடுங்க. இந்த பாவபட்ட பார்ட்டி சாப்பாடு வேண்டாம்"

"சரி தம்பி"

"ஹான். இங்கயே எடுத்துட்டு வாங்க. கீழ அவங்களை கூடிட்டு போனால் நீ பணக்காரனான்னு கேட்பாங்க. என் பிரிண்ட்சை இன்சல்ட் பண்ணுவாங்க"

"சரி தம்பி"

"எங்களுக்கு எதுவும் வேண்டாம் நவீன். நீ தூங்கு"

"நோ சர்வேஷ். நீங்க சாப்பிடனும் அப்பதான் நான் தூங்குவேன்"

"நாங்க கண்டிப்பா சாப்பிடறோம். நீ தூங்கு"

"ஹ்ம்ம். ஓகே அத்வைத். தாயம்மா அந்த பார்ட்டிபக்கம் கூடிட்டு போகதீங்க. அங்க பேட் பீபல் இருபாங்க"

"சரி தம்பி நான் பார்த்துக்கிறேன். நீங்க தூங்குங்க"

"ஹ்ம்ம். பை"

"ரொம்ப நன்றி தம்பி."

"என்ன தாயம்மா நீங்க"

"தம்பி நீங்க அவரோட படிக்கறீங்களா?"

"ஆமாம் மா"

"அவரை நீங்க பார்த்துக்கோங்க தம்பி. உங்களை நான் கெஞ்சி கேட்கிறேன்"

"நாங்க பார்த்துக்கிறோம். இவன் தினமும் குடிப்பானா?"

"இல்ல தம்பி.வீட்டில் பார்ட்டின்னால் இது மனசு பொறுக்காமல் குடிக்கும். தங்கமான தம்பி இப்படி கஷ்டபடுது"

"ஒ. சரிம்மா நாங்க கிளம்பறோம்"

தன் பிறகு நாங்க அவனை தனியாவிடலை. அவங்க வீட்டில் பார்ட்டினால் நாங்க அவனுக்கு சந்தேகம் வராதமாதிரி எங்க ரூம்க்கு கூடிட்டு போய்டுவோம். அவன் குடிக்கறதை விட்டான்.” - ஹர்ஷா

“அவன் தாத்தா ஒரு காலேஜ்ல கான்டீன் ஆரம்பிச்சார். அதை அவர் விருவுபடுத்தினர். அவருக்கு ஒரு பையன் ஒரு பொண்ணு. நவீன் அப்பா அந்த பிசினசை தொடர்ந்தார். அவன் அத்தை கல்யாணம் முடிஞ்சதும் சொத்து பிரச்சனை ஆரம்பிச்சது. அவன் அப்பா நவீன் அத்தைக்கு பிசினஸ் பதில் நிறைய பணம் தந்தார்.  அதனால் பிசினெஸ்சில் அவருக்கு பணம் பிரச்சனை வந்தது. நவீன் அப்பாக்கும் அவன் மாமாக்கும் இன்னிக்கும் பிசினெஸ் சண்டை இருக்கு. அவர் கஷ்டப்பட்டு பழைய நிலைமைக்கு கொண்டுவந்தார். இன்னும் பல பிசினெஸ் ஆரம்பிச்சார். அதன்பிறகு அவன் அப்பாக்கும் அம்மாக்கும் பணம்தான் பெரிசா தெரிஞ்சது. அவனை வளர்த்தது தாயம்மா. இது எங்களுக்கு தாயம்மா சொன்னது.” – சர்வேஷ்

"அவர் குடி பழகத்திற்கு காரணம்?" - சாது

"கொஞ்சம் மாதம் கழித்து அவனே அவன் குடிபழக்கம் பத்தி எங்ககிட்ட சொன்னான். 10th எக்ஸாம் முடிஞ்சு வகேஷன் அப்ப அவனை பணத்துக்காக கடத்திருக்காங்க. அவங்க வீட்டில் பார்ட்டி இருந்திருக்கு. அவங்க கால் பண்ணியும் யாரும் ஒழுங்கா ரெஸ்போன்ஸ் பண்ணலை. அந்த பார்ட்டி முக்கியமான பிசினஸ் பார்ட்டி. இவங்க விட்டா அவன் மாமாக்கு அந்த பிசினெஸ் போகிடும். அதனால் அவங்க நவீனை பத்தி கவலைபடலை. கடைசியில் தாயம்மா கடத்தினவங்ககிட்ட கெஞ்சி அடுத்தநாள் வரைக்கும் டைம் எக்ஸ்டெண்ட் பண்ணி இவனை காப்பாதி இருக்காங்க. அதில் இருந்து பார்ட்டினால் இவன் குடிசிருக்கான்" – அத்வைத்

"இந்த பைக் ப்ரோப்ளம்?" - அஞ்

"அவன் காலேஜ் படிச்சது ஸ்காலர்ஷிப்ல. படிச்சதும் அவன் வேலை தேடிகிட்டான். ஆனால் அவங்க அப்பாக்கு அது ப்ரெஸ்டிஜ் இஷ்ஷு ஆகிடுச்சு. சோ இவன் அவர்கிட்ட வேலை பார்க்கணும்ன்னு சொல்லிட்டார். இவனால் எந்த டேசிஷனும் எடுக்கமுடியாது. அவன் அப்பாசொல்றதை செய்யணும். சம்பளம் கம்மியா தருவார். அதில் இவன் ஒரு பகுதியை வீட்டுக்கு கொடுக்கணும். இந்தமாதிரி நிறைய கண்டிஷன்ஸ். இவன் வெளியில் வேலை தேடினாலும் கிடைக்க விடமாட்டார். ஒரு வகை சிறைச்சாலை. அவன் நிம்மதிக்காக நாங்க படிக்கற காலேஜ் கான்டீன்ல வொர்க் பண்றான். இதுக்கே ரொம்ப போராடினான். அந்த பைக் இவன் லோன்ல வாங்கியது. கொஞ்சம் நாள் முன்னால் கான்டீன்ல வேலைசெய்யற தாத்தாக்கு ஆபரேஷன்காக பணம் கொடுத்தான். தனக்கு எடுக்காதவன் அவருக்காக கான்டீன் பணத்தை எடுத்தான். அதான் அவர் இவன் பைக்கை எடுத்துகிட்டார்" – ஹர்ஷா

அனைவரும் அமைதியாக இருந்தனர்.

"இப்படியொரு பிளாஷ்பாகை நான் எதிர்பார்கலை" - அஞ்.

"இப்படியும் இருப்பங்களா?"- ஹாசி 

"இப்ப என்ன செய்யலாம்னு யோசிக்கலாம். நான் சொல்றதை கேளுங்க. உங்களுக்கு ஓகேனால் நாம ப்ரோசீத் செய்யலாம்" – நிஷா

நிஷா சொன்னதும் அனைவரும் அதற்கு ஒத்துகொண்டனர்.

தொடரும்

Episode # 10

Next episode will be published as soon as the writer shares her next episode.

{kunena_discuss:855}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.