(Reading time: 18 - 35 minutes)

" ரி நீ மாட்டிக்க வேணாம் .. சீக்கிரம் அங்கிருந்து கெளம்பு ..அந்த அருள் இங்கதானே இருப்பான் . முதலில் அவனை தாக்கலாம் " என்றான் அகில் ... அவனிடம் பதில் பேசிவிட்டு ஆனந்தமாய் சிரித்தாள் ஷீலா ..

தேனீயை  நோக்கி பயணித்து கொண்டிருந்தனர் கவிமதுராவும், வானதியும் .. உறங்கி கொண்டிருந்த மகனுக்கு தட்டி கொடுத்தபடியே அன்றைய நினைவுகளை அசைபோட தயாரானாள்  கவிமதுரா .. அவள் முகத்தை பார்த்தபடியே அமைதியாய் அமர்ந்திருந்த வானதியும் மெல்ல பேச்சினை துவங்கினாள் ..

" தேனீதான் உங்க சொந்த ஊரா அண்ணி ?"

" ம்ம்ம்ம் ஆமா வானதி .."

" இப்போ அங்க யார் எல்லாம் இருக்காங்க "

"  அம்மாவும் அப்பாவும் " என்றாள்  மகளவள் வாஞ்சையுடன் ..

" ஓஹோ , அப்போ நீங்க வீட்டுக்கு ஒரே பெண்ணா ?"

" ம்ம்ம்ம் ஆமா .. ஆண்பிள்ளை இல்லை என்ற குறையும் இல்லாத வகையில் அவங்களுக்கு பிறந்த வாலு  பொண்ணு நான் ஒருத்தி தான் " என்றாள்  அன்றைய நினைவுகளில் தன்னைத் தொலைத்தவளாய் ..

" ஓஹோ , அப்போ அன்னைக்கு நாம மீட் பண்ணினோமே ? அவங்க யாரு ? அவங்க உங்களது உறவா ?" என்று மனதில் இருந்த கேள்வியை கேட்டே விட்டாள்  வானதி .. சில நொடிகள் மௌனமெனும் கூட்டுக்குள் உறைந்திருக்க, அந்த மௌனதிரையை விளக்கி பேச ஆரம்பித்தாள்  கவிமதுரா ..

விமதுரா - கிரிதரன் பெண் பார்க்கும் படலம் வரை அனைத்தையும் கூறவும் அந்த கதையில் ஐக்கியமாகிவிட்ட  பிரதிபலிப்பில்

" வாவ் கிரி அண்ணா , உங்களுக்கு மேல நல்லா மாஸ்டர் ப்ளான் போடுறாரே " என்று கூறி இருந்தாள்  .. அவள் அண்ணா என்று உரைத்தது கவிதாவிற்கு புதிதாக இருந்தாலும் அதை பெரிது படுத்தும் மனநிலையில் அவள் இல்லை .. (அந்த மனநிலைக்கு செல்ல, நம்ம வானதியும் வழிவிடவில்லை என்பதுதான் உண்மை ..!)

" சரி அண்ணி , அடுத்து என்ன நடந்தது ?" என்று ஆர்வமாய் கேட்டாள்  வானதி ,.. நாமும் அவர்களோடு சேர்ந்து  காலச்சக்கரத்தை பின்னோக்கி சுழற்றுவோம் ..

மகளையே சந்தேகப்பார்வையுடன் பார்த்து கொண்டிருந்தார் வித்யா .. அதை உணர்ந்து தலையை நிமிர்ந்தாமல் மடிகணினியின் திரையில் பார்வையை பதித்தாள்  கவிமதுரா .. தானாய் கேட்காமல் அவளிடம் இருந்து பதில் வராது என்று உணர்ந்திருந்தார் வித்யா .. அதனால் அவரே பேச்சையும் ஆரம்பித்தார் ..

" அப்படி என்னதான்டி இந்த லேப்டாப்ல பண்ணிட்டு இருக்க நீ ?"

" ப்ச்ச்ச்ச்ச் ஒரு சூப்பர்  மேட்டர் கிடைச்சிருக்கு மம்மி ! இந்த கோ படத்துல அரசியல்வாதி ரகசிய திருமணம் மாதிரி, அரசாங்கம் மாணவர்களுக்கு கொடுக்குற வசதியில ஒருத்தர் கள்ளத்தனம் பண்ணுறதை  உன் புதல்வி கண்டுபிடிச்சிருக்கேன் ... அதை பத்தி தான் பிளான் போட்ட்டுட்டு இருக்கேன் .. சீக்கிரமா ஒரு ஸ்ட்ராங் ஆதாரம் வெச்சு அவனை மடக்கனும் " என்று அசால்டாய் சொல்லி அவரை கலங்க வைத்தார் ..

" பைத்தியாமாடி உனக்கு ? " என்று வித்யா பதறவும் , ஒருமுறை சுற்றும் முற்றும் பார்த்தாள்  கவிதா ..

" ஏன் மா இந்த கோவம் உங்களுக்கு ?"

" அப்படியே நாலு அரை விட்டா தெரியும் !"

" அம்மா , வர வர நீங்க சரி இல்லை .. அப்பா வரட்டும் சொல்றேன் " என்று மிரட்டினாள்  மதுரா ..

" அப்பா .. வரட்டும் அவர் .. அவர்தான் உன்னை இப்படி கெடுத்து வெச்சு இருக்கார் "

" சரி  இப்போ உங்க கோபத்தின் காரணம் என்ன ?"

" என்னவா  ? ஏனடி  தெரியாமல் தான் கேட்குறியா ? உனக்கு ஏனடி இந்த வேண்டாத வேலை எல்லாம் ? "

" அம்மா இது என்னுடைய வேலை , என்னுடைய ட்ரீம் .. தப்பான விஷயத்தை தட்டி கேட்கவும் ஒரு பவர் வேணும் .. என் பேனாவுக்கு அந்த ஷக்தி இருக்குன்னு தெரிஞ்சும் நான் எப்படி சும்மா இருக்க முடியும் ? "

" இது விளையாட்டு விஷயம் இல்ல மதுரா ..  நான் இதுக்கு கொஞ்சமும் ஒத்துக்கவே மாட்டேன் " என்று அவர் உச்சஸ்தாயியில் பேசும்போதே

" அப்படி என்ன பிரச்சனை  அத்தை ?" என்று கேட்டபடி உள்ளே வந்தான் கிரிதரன் , வழக்கம் போல அந்த கன்னக்குழி சிரிப்புடன் ! கண்களாலேயே அவனுக்கு நன்றி சொன்னவள்

" இருங்க நான் ஜூஸ் கொண்டு வரேன் " என்று ஓடியே விட்டிருந்தாள்  சமையலறைக்குள் .. ஆனால் அதற்குள்  வித்யா  கவிமதுராவிடம் பேசிகொண்டிருந்ததை  சொன்னதையும், அவளது லேப்டாப்பில் அவன் அந்த செய்திகளை படித்ததும் அவளுக்கு தெரியாமல் போனது .. சரியாய் அவள் வரும் நேரமாய் பார்த்து  புகைப்படங்கள் இருந்த கோப்பையை திறந்து,  இந்த போட்டோ எப்போ எடுத்திங்க ? என்று வித்யாவிடம் கதை கேட்க தொடங்கினாள்  ..

" ஹே , என்ன தரூ இது ? இப்படித்தான் அடுத்தவங்க அனுமதி இல்லாமல் லேப்டாப்பை பார்குறதா ? " என்றாள்  .. அவனும் அவளுக்கு ஈடுகொடுத்து

" சோ வாட், இன்னும் ஒரு மாசத்துல நமக்கு கல்யாணம் .. எது இன்று உன்னுடையதோ ஒரு மாசம் பிறகு அது என்னுடையதாகிறது " என்று சிரித்தான் ..

" உங்ககிட்ட பேசி ஜெயிக்க முடியுமா ? பிசினஸ் மேன்  ஆச்சே " என்றாள்  கவிமதுரா

" நீ மட்டும் என்னவாம் ? வாய் விட கை அதிகமாய் பேசுமாமே ! என் பாடு திண்டாட்டம் தான் " என்றான் சோகமாய் .. அவன் சொன்ன விதத்தில் வித்யா சிரிக்க, கவிமதுரா இருவரையும் கோபமாய் முறைத்தாள் ..

" ஹே , நீ நியுஸ் ரிபோர்ட்டர் சோ பேனா பிடிக்கிற கை அதிகம் பேசும்னு சொல்ல வந்தேன் மா .. நீ என்ன நினைச்ச ? " என்று கண்ணடித்தான் ..

" நீங்க ஆசை பட்டு கேட்டு அதை நான் செய்யாமல் இருப்பேனா ? கை அதிகம் பேசுறதை வருங்கலாத்தில் செயல்படுத்தி காட்டுறேன் " என்று இரு கரங்களையும் தேய்த்து கொண்டாள் ..

" ஹா ஹா , உன்கிட்ட பேசினா வந்த வேலையே மறக்குது பார் .. அத்தை , கவியை கொஞ்ச நேரம் என்னோடு அனுப்பி வைக்க முடியுமா ? ஜஸ்ட் ரெண்டு மணி நேரம் தான் .. சீக்கிரமா வந்திடுறோம் .. மாமா கிட்ட வேணும்னா இப்போவே போன் பண்ணி சொல்லவா ? " என்றான் பவ்யமாய் ..

" அட , தாராளமா கூட்டிட்டு போங்க மாப்பிளை  " என்றார் வித்யா ..

" ஹெலோ என்ன நடக்குது இங்க ? என்னை கூட்டிடு போறதுன்னா , என்னை ஒரு வார்த்தை கேட்குறது இல்லையா தரூ ?" என்றாள்  அவள் ..

" ஹா ஹா .. அதெல்லாம் தலையே ஓகே சொல்லிடுச்சு .. இனி வால்  ஆட கூடாது சீக்கிரமா வா ! " என்று அன்பு கட்டளை போட்டான் அவன் ..

" சரி எங்க போறோம் ? " என்று அவள் கேட்கவும் புருவம் உயர்த்தினான் கிரி ..

" ஐயோ , ட்ரெஸ் மாற்றனும் தரூ " என்று அவள் கூறவும்

" இதுவே நல்லத்தான் இருக்கு வா " என்றபடி அவளது கை பிடித்து இழுத்து சென்றான் கிரி .. அவர்களது  ஜோடி பொருத்தத்தை பார்த்து மனதிற்குள் ரசித்தார்  வித்யா ..

" அப்படி எங்க அண்ணி கூட்டிட்டு போனார் ?" என்று ஆர்வமாய் கேட்டாள்  வானதி ..

மீண்டும் அன்றைய நினைவுகளில் அவள் முகத்தில் புன்னகை அரும்பியது ..

காரில்,

" என்ன ஹீரோ சார் , காலையிலேயே திடீர் விஜயம் ? அம்மாவுக்கு வாயெல்லாம் பல் உங்களை பார்த்ததும் "

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.