(Reading time: 19 - 38 minutes)

ரியாய் அவள் போனை வைக்கவும் கிரிதரனிடம் இருந்து குறுந்தகவல் வந்தது ..

புது மலர் தொட்டு செல்லும் காற்றை நிறுத்து

புது கவி பாடி செல்லும் ஆற்றை நிறுத்து

கிசு கிசு கொண்டு செல்லும் கிளியை நிறுத்து

காதல் வந்ததே எனக்கு காதல் வந்ததே

இரு புயல் துடிக்கின்ற முத்தம் நிறுத்து

இருதயம் அடிக்கின்ற சத்தம் நிறுத்து

இலங்கையில் நடக்கின்ற யுத்தம் நிறுத்து

காதல் வந்தது எனக்கு காதல் வந்ததே 

சினிமா பாடல்தான் என்றாலும் அவளுக்காக அவன் தேடி அனுப்பிய வரிகள் அல்லவா ? அவன் அனுப்பி வைத்த வரிகள் எல்லாம் அவள் முகத்தில் புன்னகையை உறைய வைத்து தனது கடமைகளை செய்த திருப்தியின் இன்பாக்ஸில் அமர்ந்து கொண்டன.. ஐந்து நிமிடத்திற்கு ஒருமுறை ஏதாவது பாடலை அனுப்பிக்கொண்டே இருந்தான் அவன் ..

தனது மகளின் சௌந்தர்யத்தை கண்களால் நிரப்பி கொண்டார் வித்யா .. எங்கே இவள் கடமை , பெண்ணியம் என்று பேசி திருமணமே செய்து கொள்ளாமல் இருந்துவிடுவாளோ என்று தவித்த தவிப்பு அவருக்கு மட்டுமே தெரிந்த இன்னல் அல்லவா ? மெல்ல அவள் நெற்றியில் முத்தமிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் அவர் ..

" கவி , மணி ஆச்சு கெளம்பலாமா ?" என்றார் விமல் .. இருவீட்டாருமே சேர்ந்து அருகில் இருக்கும் மண்டபத்தில் விமரிசையாய் நிச்சயதார்த்த ஏற்பாடுகளை  செய்து வைத்திருந்தனர் .. பூக்களால் அலங்கரிக்கபட்ட வாசலில் கவிமதுரா முதல் அடி எடுத்து வைத்ததுமே , கிரிதரன் இதழில் புன்னகை தோன்றியது .. அவளது ஒவ்வொரு அசைவினையும் கண்களால் படம் எடுத்தான் ..

" சுபாஷ் அண்ணா , கிரி அண்ணா உடல்தான் இங்க நிக்கிறது .. ஆவி எங்கன்னு கண்டுபிடிங்க " என்றான் சந்தோஷ் ..

" போடா , எனகென்னமோ அண்ணாவின் கண்ணுல இருந்து எக்ஸ் ரே பண்ணுற மஷின் கண்டுபிடிக்கலாம்னு தோணுது " என்று இணைந்து கொண்டான் சுபாஷ் .. கவிமதுராவின் வாலுத்தனதிற்கும், சுபாஷ் - சந்தோஷின் குறும்பிற்கும் பத்து பொருத்தமும்  பிசராமல் இணைந்திருக்கவும் அவர்கள் மூவரும் ஏற்கனவே நல்ல நட்போடு தான் இருந்தனர் .  இப்போதும் அதே உரிமையில்

" அண்ணி , தயவு செஞ்சு வெட்கபடுற  மாதிரி காமிடி பண்ண வேணாம் " என்று வாரினான் சந்தோஷ் ..

கவிதாவோ " ஹே உன் அண்ணா பாவம்ப்பா,அவருடைய வருங்கால மனைவி கொஞ்சமாச்சும் வெட்கப்படனும்ன்னு கனவு கண்டிருப்பார் .. அவரு கனவை நிறைவேற்ற விடுங்க ரெண்டு பேரும்  " என்று சிரித்தாள் அவள் .. கிரிதரன் அப்போது இடைபுகுந்து

" டேய் , என்னை சைட் அடிக்க விடுங்க டா .. ஏன்டா இப்படி பாதையை மறைக்கிரிங்க தடியன்களா  என்று அவன் குறைப்படவும்  சிரிப்பலை அந்த மேடையையே நிறைத்தது .. கிரிதரனை பார்த்து கண் சிமிட்டியபடி அருகில் அமர்ந்தாள்  கவிமதுரா .. அடுத்த குறுந்தகவல் அனுப்பி இருந்தான் அவன் ..

" இந்த அகிலத்தின் ஓசைகள் நின்றுவிட வேண்டும்

அவள் விடும் சுவாசத்தின் சத்தம் மட்டும் வேண்டும்

நட்சத்திர மண்டலத்தின் ஓர் இடம் வேண்டும்

நாங்கள் மட்டும் பேசிக்கொள்ள தனி மொழி வேண்டும்

கண்ணசையில் மின்னல் விழ,

புன்னகையில் பூக்கள் விழ

கை அசைவில் வானம் விழ

பெண் அசைவில் நானும் விழவே

காதல் வந்ததே , காதல் வந்ததே "

மெல்ல விழி உயர்த்தி கிரிதரனை பார்த்தாள்  கவிமதுரா .. அவன் விழிகள் முழுதும் நேசத்தையே அறிதாரமாய் பூசி இருந்தான் .. கன்னம் குழி விழ வசீகரமாய் சிரித்தான் .. எந்த பெண்ணுக்கு கிடைக்கும் இப்படி உளமார நேசிக்கும் ஆணழகனின் கரம் பிடிக்க ? என்று சிலிர்த்தாள் அவள் .. மேலும் அருகில் நின்று கொண்டிருந்த மீராவதி  - கண்ணாபிரானை பார்த்தாள்  .. அழகான குடும்பத்தை அமைப்பதும் அதன் அமைதியை கட்டிகாப்பதும் கூட  , பெரிய கலை தான் .. மனமார இறைவனுக்கு நன்றி கூறினாள்  கவிமதுரா ..

" ஓகே இனி , ரெண்டு பெரும் மோதிரம் மாத்திக்கிற நேரம் வந்தாச்சு !" என்று உற்சாகமாய் கூறினான்  சந்தோஷ் ..

" வைட் அதுக்கு முன்னாடி நான் பொண்ணு கிட்ட தனியா பேசணும் " என்றான் கிரிதரன் ..

" டேய் , என்னடா கிரி இது ?" என்று ஆச்சர்யமாய் கேட்டார் மீரா

" ரெண்டு  நிமிஷம் தான் அம்மா !"

" நல்ல நேரம் முடின்ய போகுது  கிரி .. அதன் பிறகு பேசலாமே "

" மதுரா கிட்ட பேசுற நேரம் தான் எனக்கு நல்ல நேரம் , நான் அஞ்சே நிமிஷத்தில் வரேன் " என்று பார்வையினாலேயே  கவிமதுராவை அழைத்தான் ..

" சரி அண்ணா , நாங்க எல்லாரும் கொஞ்ச நேரம் தூரமா நிற்கிறோம் ..இங்கயே பேசுங்க .. வெளில மழை தூறுது " என்றான்  சுபாஷ் ..

" மழையா ? அப்போ அதைவிட சூப்பர் லொகேஷன் உலகத்திலேயே இருக்காதே " என்று சிரித்தவன் மதுராவை பார்த்தான் ..

" அஞ்சு நிமிஷம் தான் டைம் இருக்கு .. பின்னாடி தான் தோட்டம் நடந்து போனா லேட் ஆகிடும் " என்று கை நீட்ட  அவன் சொன்னது புரியவும் அவனோடு கரம் கோர்க்க ,

" ஜூட் " என்று கிரிதரனும் கூவ , இருவரும் தோட்டத்திற்கு ஓடினர் .. மழைத்துளி முகத்தில் சடசடவென கோலமிட ஓடிவந்த விளைவாய் இதயம் படபடவென துடிக்க அதைவிட வேகமாய் துடித்தது கவிமதுராவின் விழிகள் ..

" என்ன விஷயம் தரூ ?"

" உன்கிட்ட ஒரு உண்மைய சொல்லணும் "

" என்ன உண்மை ?"

" ஐ லவ் யூ "

" லூசு , அதான் எனக்கு தெரியுமே , போன வாரம் தானே ப்ரபோஸ் பண்ணிங்க ?"

" மை டியர் அழகு அதிரூப சுந்தரியே , சொல்றதை முழுசா கேளு "

"ம்ம்ம் சொல்லுங்க "

" இந்த கல்யாணம் வேணாம்னு சொல்றதுக்காக உன்னை காபி ஷாப்ல பார்க்கனும்னு வந்தியே , அப்போதே எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சது .. ஓவரா அலட்டல் இல்லாமல் இயல்பாய் அதே நேரம் நிமிர்ந்த பார்வையுமாய் இருந்த உன்னை பார்த்ததுமே  மனசை பரிகொடுத்திட்டேன் .. அதனால்தான் கல்யாணம் வேணாம்னு  சொல்லாமலே திரும்பிட்டேன் .. உன் மனசுல வேற யாரும் இல்லன்னு தெரிஞ்ச பிறகு தான் , உன் மனசை வென்று உன்னை கை பிடிக்கணும்னு நினைச்சேன் .. ஆனா என் மனசை உனக்கு காட்டுறதுக்கு எனக்கொரு வாய்ப்பு வேணுமே , அதற்காகத்தான் இந்த கல்யாணத்துக்கு உன்னை சரி சொல்ல வைத்தேன் " என்று அவன் கூறவும்  அவள் அவனை முறைத்தாள் ..

" ஹே ஸ்வீட்டி, நான் என்ன பண்ணுவேன் ? நிஜம்மாவே இது வேணாம்னு சொல்லத்தான் வந்தேன் .. பட் உன்னை பார்த்ததும் என் லைப் நான் உன்கூட தான் வாழணும்னு தோணிருச்சு " என்றான் அவன் பாவமாய் ..

" இப்படி கோபமாய் பார்த்தா என்ன அர்த்தம் மதுரா ? அப்போ என்னை நீ மன்னிக்கவே மாட்டேன் "

" மன்னிச்சிருக்க மாட்டேன் ஒருவேளை இந்த கல்யாணத்தை நீங்க வேணாம்னு சொல்லி இருந்தா " என்றாள்  அவள்  குறும்பாய் .. முதலில் புரியாமல் அவளை  பார்த்தவன்

" ஹே நீ .. நீ  என்ன சொல்லுற ?"

" டியுப் லைட் , இதை புரிய இவ்ளோ நேரமா.. அஞ்சு நிமிஷம் ஓவர் ..எனக்கு குளிருது வா போகலாம் " என்று அவன்  கையை பிடித்து இழுத்தபடி ஓடினாள் ..

" ஹே லவ் சொன்னதுக்காக ஒரு  ப்ளாயிங்  கிஸ்  ஆச்சும் கொடுடி " என்று கெஞ்சினான் அவன்.

" ஹா ஹா ..போ போ நீ உண்மையை மறைச்சதுக்கு இதான் தண்டனை" என்று சிரித்தாள் அவள் ..

இனிதே  அவர்களின் நிச்சயம் பெற்றோர்களின் ஆசிர்வாதத்துடன் நடந்து முடிந்தது ..

நண்பர்களே உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் இந்த குட்டி எபிசொட் வைச்சு என்னை மன்னிச்சிடுங்க .. அடுத்த எபிசொட்ல இன்னும் அதிக பக்கங்கள் தர முயற்சிபண்ணுறேன்  நன்றி

தவம் தொடரும்

Episode # 13

Episode # 15

{kunena_discuss:838}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.