(Reading time: 16 - 31 minutes)

"துளசி... துளசி".... என்று கத்திக் கொண்டே, கீழே வந்தவன், ஏதோ தோன்ற, ஒரு வேளை, அம்மாவுடன் பேசிக் கொண்டிருக்காளோ ? என்று தன் பெற்றோர் அறையை, தட்டியவன், வெளியே தூக்கக் கலக்கத்துடன் வெளியே வந்த சியாமளா, " என்ன சரண்... என்னப்பா , என்ன விஷயம் .. தூங்கப் போக வில்லை..." என்றவரை,

"அம்மா, துளசி".. என்று இழுத்தவன், மெல்ல "துளசி என் ரூமில் இல்லை" என்றான் பதட்டமாக.

"ஓ... துளசியை தேடினயா கண்ணா.. உனக்கு துளசி சொல்லவில்லை?.. என்றவர், "துளசி எங்களது பக்கத்து அறையில் தான் இருக்கிறாள்.. மாடியேறுவது கஷ்டமாக இருக்கிறது என்று, இன்று காலையில் என்னிடம் கீழே தங்கிக் கொள்கிறேன் என்றாள்.. பிரசவ நேரம் நெருங்கி விட்டது அல்லவா.. இனி மாடி ஏறுவது சற்று கஷ்டமே.. கீழே, பக்கத்து அறையிலேயே என்றால் நானும் அவ்வப்பொழுது பார்த்துக் கொல்வேன்.. இரவு துணைக்கு, சின்ன பொண்ணு, அவளுடன் படுத்துக் கொண்டிருக்கிறாள்.. நீ கவலை படாமல் தூக்கு போ.. உன்னிடம் சொல்லி விட்டேன் என்றாளே, பயந்து விட்டாயா..."

சட்டென்று, துளசியை விட்டுக் கொடுக்காமல், " ஓ.. மறந்து விட்டேன் அம்மா.. வேலை டென்ஷன்.. காலையிலேயே என்னிடம் சொன்னாள்தான்"...என்று இழுத்தவன்,

"என்னப்பா, இன்னும் என்ன போ.. போய் தூங்கு.. குட் நைட்" என்று சொல்லிவிட்டு ரூமிற்குள் சென்று விட்டார் சியாமளா.

தனது அறைக்கு வந்து உடை மாற்றியவன், 'எவ்வளவு திமிர்.. என்னை பார்க்க பிடிக்காமல் ரூமையே மாற்றி விட்டாள்.. இதில் என்னிடம் சொல்லி விட்டதாக வேறு அம்மாவிடம் பொய் சொல்லி இருக்கிறாள்.. எப்படியாவது என்னை அவாய்ட் செய்ய வேண்டும் அவளுக்கு.. இருக்கட்டும் , பார்த்து கொள்ளலாம், எங்கே போய் விடப் போகிறாள்,... என்று நினைத்தவன்,.. ஆனால் அது சின்ன அறை ஆயிற்றே .. அது எப்படி போதும் அவளுக்கு.. நன்றாகத் தான் ப்ளான் செய்திருக்கிறாள்.. வேறு ரூம் என்றால், நானும் அவளுடன் கீழேயே தங்கி விடுவேன் என்றே, சின்ன அறைக்கு சென்றிருக்கிளாள்.. இப்பொழுது, கூட இந்த கின்னப் பொண்ணூ வேறு.. மனதிற்குள் பொறுமியவன், 'இது எதில் கொண்டு போய் முடியுமோ, துளசி என் ரூமை விட்டு போனாளா, இல்லை என் வாழ்க்கையை விட்டே போக முடிவு செய்திருக்கிறாளா??'..... அவளை நினைத்தபடியே உறங்கினான்.

மேலும் பதினைந்து நாட்கள் கடந்தன.. ஒன்பதாம் மாதம் நடுவில் இருந்த துளசி, அந்த மாதக் கடைசியில் டாக்டர் சுபா கூறியபடி, ஹாஸ்பிடலில் அட்மிட் ஆக வேண்டும்.. வலி வரும் வரை எல்லாம் பொறுத்திருக்கக் கூடாது, என்று டாக்டர் சொல்லி இருப்பதை நினவு கூர்ந்தவள், இது நார்மலாக ஜனித்த குழந்தை இல்லை என்றும், ஐ.வி.எப். பேபி என்றும் சொல்லி இருந்தார்..

இப்பொழுதெல்லாம், ராமை பார்கவே முடிவதில்லை.. விடியற் காலையிலேயே செல்பவன், இரவு பத்து மணிக்குத்தான் திரும்பி வருகிறான்.. மொத்ததில், அவளை கண்டு, கொள்ளவே இல்லை..

துளசிக்குதான், அன்றைய பேசுக்கு பின், அவன் முகத்தில் விழிப்பதே சங்கடமாக இருந்தது.. 'தான், கூறியதை, மன்னிக்க மாட்டானா' என்று ஏங்கினாள்.. அவனை பார்த்து மன்னிப்பு கேட்க சரியான சந்தர்பமும் வரவில்லை.

ன்று ஞாயிற்று கிழமை.. ஏனோ, அவளுக்கு காலையில் இருந்து உடம்பு படபடப்பாக இருந்தது... சாப்பிடவே பிடிக்கவில்லை...

மூன்று மணியளவில் வயிறு வலிப்பது போல் உணர்ந்தாள்.. சிறிது நேரம் தூங்கலாம் என்று படுத்தும் பார்த்தாள்.. ' ஒன்றும் இருக்காது'.. என்று தனக்குள் கூறி கொண்டவள் எப்படியும் டாக்டர், இன்னும் இரண்டு வாரம் கழித்துத்தான், வரச் சொல்லி இருக்கிறார் தனக்குள் கூறிக் கொண்டாள்.

சிறிது சமாளித்தவள், மேலும் முடியாமால் போகவே மெல்ல வெளியே வந்தவள், சோபாவில் அமர்ந்து கொண்டு, டி.வி. பார்த்துக் கொண்டு இருந்த சியாமளாவை 'அத்தை' என்று கத்தி அழைத்தாள்.

டக்கென்று, திரும்பிய சியாமளா ரூமின் வெளியே வயிற்றை பிடித்து கொண்டு, நிற்கும் துளசியை பார்த்து விட்டு 'என்னம்மா' என்று பதறி அவளிடம் விரைந்தார்.

அதற்குள் வலி பொறுக்க முடியாமல் நெற்றியில் வேர்வை பெருக, மயங்கி கீழே விழுந்தாள் துளசி... விழுந்தவளை, சட்டென்று தாங்கி பிடித்த சியாமளா...

"சரண்" என்று பெருங் குரலெடுத்து கத்தி அழைத்தாள். "என்னம்மா" என்று பதறி அடித்தபடி மாடியில் இருந்து கேட்டவனை 'துளசி' என்றவர்,.... மயங்கிய துளசியை கண்டு மாடிப்படிகளை கடகடவென்று தாண்டியபடியே விரைந்து வந்தான்.

மயங்கி சரிந்த துளசியை சோபாவில் சாய்வாக அமர வைத்து , "அம்மா நான் உடனே ஹாஸ்பிடலுக்கு போக வேண்டும்.. நான் முதலில் துளசியை அழைத்துக் கொண்டு செல்கிறேன்.. நீங்களும், அப்பாவும் அவளுக்கு தேவையானவைகளை எடுத்துக் கொண்டு வந்து சேருங்கள்..," என்று கூறி துளசியை கையில் குழந்தையை ஏந்துவது மாதிரி தூக்கிக் கொண்டு கார் நோக்கி விரைந்தான்.

காரின் பின் சீட்டில் துளசியை படுக்க வைத்துவிட்டு காரை ஓட்டி செல்லும் போதே டாக்டர் சுபாவுக்கு போன் செய்து தயார் நிலையில் இருக்க சொல்லி கேட்டுக் கொண்டான்.

ஹாஸ்பிடலை அடைந்தவர்கள், அங்கே ஸ்டெச்சருடன் தயார் நிலையில் இருந்த செவிலிகள், துளசியை காரிலிருந்து ஸ்டெச்சருக்கு மாற்றி, உள்ளே அழைத்து சென்றனர்.. அதற்குள் மயக்கம் தெளிந்திருந்த துளசியின் மனதில், ஓர் இனமறியா பயம் ஆட் கொண்டது.. 'என்னவாகுமோ, ஏதோ என்று, .... இன்னமும் ஆபரேஷனுக்கு குறித்த நாளின் இடையே இரண்டு வாரம், இருக்கிறது என்று எண்ணினேனே.. இது தான் பிரசவ வலியோ.. கிடுக்கி பிடித்தாற் போல இருக்கிறது.. வலியில் உயிரே போய் விடும் போல இருக்கிறதே.. சொல்லி அழ தாயில்லாமல் என்ன நிலை இது'.. பலவிதமான உணர்வுகள் ஆட்டி படைத்தன.

ஆபரேஷன் தியேட்டரை ரெடி செய்ய சொல்லிவிட்டு வெளியே வந்த டாக்டர் சுபா,.. துளசியை பரிசோதனை செய்து விட்டு, " பனிக்குடம் உடைந்து விட்டது.. கொஞ்சம் வலியை பொறுத்துக் கொள் துளசி.. உன் கணவரிடம் பேசி விட்டு வருகிறேன்"...

வெளியே வந்த டாக்டர். சுபா, சரணிடம் வந்தார்.. அதற்குள், சரணின் பெற்றோரும் வந்து விட்டனர்.. வெளியே தவிப்புடன் நின்று கொண்டிருந்த சரணிடம், திடீரென பனிக்குடம் உடைந்து விட்டதால், துளசிக்கு ஏமர்ஜென்சி ஆபரேஷனுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.. அதற்கு சில ஃபார்மாலிட்டீஸ் பூர்த்தி செய்ய வேண்டும்.. சரண் நீ அனைத்தையும் முடித்து விட்டு வா.. நான் துளசியிடம் செல்ல வேண்டும்"...

"ஐய்யோ, ஏன் டாக்டர் நார்மல் டெலிவரி ஆகாதா" என்று கவலையில் தெரியாமல் கேட்டவனை,

"சோதனை குழாய் குழந்தைகள், வெகு அதிசயமாகவே சாதாரண பிரசவத்தில் பிறக்கும்.. மற்றபடி இவள் ஒரு கன்னித் தாய்.. அதனாலேயே இன்னமும் கொஞ்சம் கடினம்.. நாங்கள் சாதாரண பிரசவத்திற்கு வெயிட் செய்ய மாட்டோம்.. ஏன் என்றால், இந்த மாதிரி குழந்தைகள், பிரஷ்யஸ் பேபி என்போம்.. இதை பத்திரமாக பூவுலகில் கொடுக்க முடிவு செய்து, அறுவை சிகிக்சை மூலமாகவே பிரசவம் நடக்கும்" என்று ஒரு பிரசங்கமே அவனிடம் நடத்தி விட்டார் டாக்டர் சுபா.

சியாமளா, டாக்டர் சுபாவின் கையை பிடித்துக் கொண்டவர், "டாக்டர், துளசியை பார்த்துக் கொள்ளுங்கள்..முதல் பிரசவம்.. தாயில்லா பெண் அவள்," என்று தழுதழுத்தார்.

அவர் கைகளை ஆறுதலாக தடவி விட்டு, "நாங்கள் டாக்டர்கள், எங்கள் உயிரைக் கொடுத்தானாலும், எங்கள் பேஷண்டுகளை கவனித்துக் கொள்வோம்... பயப்பட வேண்டாம்.. நீங்கள் பெரியவர்கள்.. சரணுக்கு ஆறுதல் சொல்லுங்கள்" என்று சொல்லிவிட்டு ஆப்ரேஷன் தியேட்டருக்குள் சென்று மறைந்தார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.