(Reading time: 16 - 31 minutes)

னைத்து ஆவணங்களையும், கையப்பமிட்டு விட்டு, ஆபரேஷன் தியேட்டர் வாசலிலேயே நின்றிருந்தார்கள் சரணும், அவன் பெற்றோரும்.. கணவன் என்ற முறையில் அனைத்து ஆவணங்களிலும் கையெழுத்து போட்டிருந்தான் சரண்.

சற்று நேரத்தில் வெளியே திரும்பவும் வந்த டாக்டர், "சரண், துளசி என்னை உள்ளே அழைக்கிறாள்"., என்று கூறினார்.

"என்ன டாக்டர், துளசிக்கு ஒன்றுமில்லேயே", என்றவனை, டாக்டர். சுபா, "ஒன்றும் பயப்படாதே.. இதெல்லாம் சகஜம் தான்.. டெலிவரி சமயத்தில் கணவனை பார்க்க எந்த பெண்ணுமே விரும்புவாள்.. போப்பா... போய் என்னவென்று கேளு.. டயமாகிறது"

பதட்டத்துடன், உள்ளே சென்ற சரண், மௌனத்திலேயே கழிந்து விட்ட சில நாட்களின் தாக்கத்தில் சில நிமிடங்கள் அமைதியாக அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்.. பின்னர், மெல்ல , " என்ன துளசி, என்னம்மா, உனக்கு ஏதாவது என்னிடம் சொல்ல வேண்டுமா"... என்று சற்று விட்டேத்தியான குரலில் கேட்டவனை,

"இப்பொழுது கூட சொல்லத் தோன்றவில்லையா உங்களுக்கு", என்று பல்லைக் கடித்துக் கொண்டு, வலியை பொறுத்துக் கொண்டு ஆத்திரத்துடன் கேட்டாள் துளசி.

ஒன்றும் புரியாதவன் போல் பார்த்த சரணுக்கு, அவள் எதை பற்றி பேசுகிறாள் என்று தெளிவாகவே புரிந்தது.. அவளுக்கு அது யார் குழந்தை இது என்று தெரிய வேண்டி கேட்கிறாள் என்று புரியாத முட்டாளா என்ன அவன்.. " இது", என்று இழுத்தவனை, ஆவலுடன் நோக்கிய துளசியை, கனிவுடன் பார்த்தவன்,

"இந்த குழந்தை.".. சொல்லி விட்டு கதற துடித்த தன் மனதை அடக்கி, பேச துணிந்த தன் நாவையும் கட்டுப்படுத்தி தன் தீர்மானத்தை நினவு கூர்ந்தவன், 'இல்லை, எந்த நிலையிலும், இந்த உண்மை எனக்குள் புதைந்து போக வேண்டிய உண்மை என மீண்டும் ஒரு முறை, தனக்குள் வலியுறுத்திக் கொண்டு, ஓர் அழ் மூச்செடுத்தான்.

"இதோ பார்.. துளசி.. மனதை கண்டதையும் நினைத்து உழப்பிக் கொள்ளாதே.. என் மேல் நம்பிக்கை வைத்து செல்.. உன் கௌரவத்திற்கோ, தாய்மைக்கோ, எந்த களங்கமும் வராது.. தெளிவான மனதுடன் செல்.. எது எப்படியிருந்தாலும், அது என் குழந்தை, நம் குழந்தை என்றே உலகத்துக்கு அறிமுகப் படுத்தப்படும்.. மற்றபடி, உன்னை பாதுகாக்க வேண்டியது என் கடமை.. இதில் நான் தவற மாட்டேன், என அவளின் கை பிடித்தி நம்பிக்கையூட்டியவனை வெற்று பார்வை பார்த்தவாறு இருந்தாள் துளசி.

உள்ளே வந்த செவிலிகள்,, "டயமாகி விட்டது சார், டாக்டர் ரெடி" என கூறி துளசியை உள்ளே அழைத்துச் சென்றனர்.. அவன் முகத்தையே பார்த்துக் கொண்டு செல்லும் துளசியை, மன பாரத்துடன் துயரத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான் சரண்.

கழியாதோ, எனக் கழிந்த சில பல நிமிடங்களுக்குப் பின், .... கேட்டது மழலையின் குரல்.. சிறிது நேரத்தில் டாக்டர், சுபா, கையில் குழந்தையுடன் வெளியே வந்தவர்,

"சரண்.. பிடி உன் மகனை ", என்று கூறி மென்மையான டவலில் சுற்றிய குழந்தையை அவன் கையில் கொடுத்தவர், " கங்கிராஜீலேஷன்ஸ்.. உங்களுக்கு பேரன் பிறந்து விட்டான் மேடம்" என்று சியாமளாவிடம் மகிழ்சிசியுடன் தன் வாழ்த்துக்களை சொன்னார் டாக்டர் சுபா.

பார்க்கப் பார்க்க தெவிட்டவில்லை சரணுக்கு.. மென்மையாக, ரோஜாப்பூக்களின் இதழ்களால், ஆனது போல், மிக மிருதுவாக இருந்த குழந்தையை கையில் தாங்கியவன் மனம் கர்வத்தில் பூரித்தது.. ' இவன் என் மகன்' என்று ஓங்கி கத்த வேண்டும் போல் இருந்தது.. மெல்ல குழந்தையை தடவியன் கைகளில் ஒரு வித பரவச நடுக்கம்.. தன் தாயிடம் கையில் கொடுத்தவன், "அம்மா என் மகனை பாருங்கள்" என்று கண்களில் கண்ணீர் பொங்க சொன்னான்...

குழந்தையை கையில் ஏந்திய சியாமளா, கண்ணிர் மல்க, தன் கணவரை நோக்கி, " நம் மகன் நம்மிடம் வந்துவிட்டான்" ... என்று கூறி தழுதழுத்தார்.. குழந்தையை பார்த்த கிருஷ்ணனுக்குமே பரவசம்.. "சரண் குழந்தை அப்படியே உன்னைத்தான் உரித்து வைத்திருக்கிறது.. இதோ பார்.. காது மச்சம் கூட " என்று சொன்னவர், காதில் துளை போடும் இடத்தில் இருந்த அந்த பெரிய மச்சத்தை சுட்டி காட்டினார்.. " பரவாயில்லை, சித்தாப்பா, மாதிரி இருக்கிறான் உன் மகன்" , என்று பெருமை பட்டுக் கொண்டார்.

திடுக்கிட்ட சரண் , டாக்டரை நோக்க, அப்பொழுதுதான், டாக்டர் சுபா, கிருஷ்ணன் சொன்னதை கேட்டவர், குழந்தையின் காதருகே பெரியதாக இருக்கும் மச்சத்தை பார்த்து அவருமே அதிர்ச்சியுற, 'இதென்ன புது குழப்பம்.. இவர் என்ன சொல்கிறார்??.. இவருக்கு என்ன தெரிந்திருக்கும்' என்று அதிர்ச்சியில் பேசாமல் இருந்த சரணைப் பார்த்து , "வாருங்கள், துளசியை ரூமிற்கு மாற்றி இருப்பார்கள்.. அவளை முதலில் போய் பார்க்க வேண்டாமா" என்று பேச்சை திசை திருப்பி, அவர்களை உள்ளே அழைத்துச் சென்றார்.

துளசி இருந்த ரூமிற்க்குள், குழந்தையுடன் நுழைந்தவர்கள்,, அப்பொழுதுதான் அரை மயக்கத்தில் இருந்து கண் விழித்திருந்தாள் துளசி... அவளது பார்வை குழந்தையை தேட, சியாமளா, "துளசி.. கங்கிராட்ஸ்.. உனக்கு மகன் பிறந்திருக்கிறான்.. நீ எப்படிம்மா இருக்கிறாய்.. என்று கேட்டபடியே... குழந்தையை தேடும் அந்த கன்னித் தாயிடம் அவள் மகனை கையில் வைத்தார்.. பாரும்மா எப்படி அழகாக இருக்கிறான்" என்றார்.

மகனை தன் கையில் முதன் முறையாக ஏந்தியவள், அவனை ஒரு முறை பார்த்து விட்டு, ராம் சரணைன் முகத்தை பார்த்தாள்.. சரணுமே அவளைதான் அப்பொழுது பார்த்துக் கொண்டிருந்தான்.. இருவர் விழிகளும், ஆனந்தத்துடன், ஒன்றையொன்று பார்த்துக் கொள்ள அங்கே ஒரு புது காவியம் மகிழ்ச்சியில் உதயமானது.

அடுத்த அத்தியாயத்துடன் நிறைவு பெரும்....

Episode # 11

Episode # 13

{kunena_discuss:881}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.