(Reading time: 12 - 24 minutes)

சாரி மாமா .. நானே உங்களிடம் இந்த விஷயத்தை சொல்லியிருக்கணும். ஏனோ மறந்து விட்டது” என்றான் ஆதி.

“அதனால் என்ன மாப்பிள்ளை? அதிதி உங்கள் தங்கை மட்டுமல்ல, என் நண்பனின் மகளும் கூட. அவளும் எனக்கு மதி, வாணி போலே தான். “ என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே அதிதியும் உள்ளிருந்து வந்து அவர்களை வரவேற்றாள். பிறகு வாணியை தன் அறைக்கு அழைத்து சென்றாள். மதியின் அம்மாவை , ஜானகி அழைத்து செல்ல, அப்பவை ராகவன் அழைத்து கொண்டார்.

ஹாலில் தனித்து இருந்த ஆதிக்கு இது எப்படி என்று தோன்ற ஆரம்பித்தது. தன் அப்பா, அம்மாவிடம் பேச வேண்டும் என்று எண்ணியவன், சற்று நேரத்தில் ஆதியின் அப்பா அழைக்கவே அங்கே சென்றான்.

“ஆதி, இன்று பிரகாஷ் வீட்டினரிடம் பேச வேண்டியதை முடிவு செய்து விடலாமா “ என்றார்.

“சொல்லுங்க பா. “

“அவளுக்கு போடும் நகை பற்றி .. என்று சொல்லும் போதே ,

“இருங்கள் அப்பா. அம்மாவையும் அழைத்து விடலாம் “ என்று கூறியவன், அதிதி வாணியை தவிர எல்லோரையும் அழைத்தான். சூர்யா அவன் அறையில் வாணி வருவாள் என்று பலமாக மேக் அப் செய்து கொண்டிருந்தவன், ஆதி கூபிட்டதுவும் வந்தான்.

அங்கே வாணியின் அப்பா அம்மாவை பார்த்து விட்டு , அடடா வடை போச்சே என்று மனதிற்குள் நினைத்து கொண்டு வாணியை மிஸ் பண்ணிட்டோமே என்று எண்ணினான். இனிமேல் அவள் அதிதியோடு தான் வருவாள்.

எல்லோரும் இருக்கவும், “இப்போ பேசலாம் பா” என்றான் ஆதி

“ஜானகி ..அதிதிக்கு செய்ய போவதை பற்றி பேசலாம். நீ சொல்லு “ அவள் நகை பற்றி சொல்லவும், மேற்கொண்டு என்ன செய்யலாம் என்று பேச ஆரம்பித்தனர்,

அப்போது  சூர்யா “அண்ணா, பிரகாஷ் வீட்டில் எதுவும் டிமான்ட் செய்ய மாட்டார்கள்.”

இல்ல சூர்யா. நாம் தெளிவாக சொல்லி விடலாம். அவர்களுக்கு அது வசதியாக இருக்கும். அவர்கள் உறவில் கேட்ட்டால் சொல்ல வேண்டுமல்லவா”

ஆதி ... நிச்சயம் டேட் குறிக்க ஜோசியரை வர சொல்லிட்டியா

சொல்லிட்டேன் ,, என்று விட்டு தன் அம்மாவை ஒரு பார்வை பார்த்தான். பிறகு நல்ல நாளில் அவர்களை வருத்த மனமில்லாமல் விட்டு விட்டான். ஜானகியின் கையை மீனாக்ஷி அழுத்தி ஆறுதல் படுத்தினார்.

பிரகாஷ் வீட்டார் வந்தனர், ஏற்கனவே ஒருவரை ஒருவர் அறிமுகமாயிருந்தலும் , முறைப்படி அறிமுகபடுத்தி கொண்டனர். பிரகாஷ் வீட்டினரும் அவன் ஜாதகத்தை எடுத்து வந்திருக்கவே அங்கேயே ஜோசியரை பொருத்தம் பார்த்து நிச்சயத்திற்கு நாள் குறிக்க சொன்னார்கள்.

ப்ரகாஷின் பெற்றோர் “தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள் சார். நாங்கள் கொஞ்சம் ஜோசியத்தில் நம்பிக்கை உடையவர்கள். மனப் பொருத்தம் முக்கியம் எனினும், மற்றவர்களால் தம்பதிக்கு இடைஞ்சல் வரக் கூடாதல்லவா .. அதனால் ஜோசியர் பார்க்கட்டும். அவர் பிரச்சினை இருப்பின் பரிகாரமும் சொல்லுவர். அதற்காகத்தான். “ என்றார்.

ஆதியின் மன நிலையில் லேசாக மாற்றம் ஏற்பட்டது. நம் அம்மா செய்தது தவறில்லையோ என்று. என்றாலும் நடப்பில் கவனம் செலுத்தினான்.

ஜோசியர் பேச ஆரம்பித்தார். “இரண்டு ஜாதகமும் நன்றாக பொருந்துகிறது. அமோகமாக வாழ்வார்கள். நீங்கள் எப்படி தேதி வேண்டும் என்று சொன்னால், அதற்கேற்றார் போல் பார்க்கலாம்” என்றார்.

எல்லாருக்கும் மனதில் பெரிய நிம்மதி. அப்போது பிரகாஷின் அப்பா, “நல்ல சேதி சொன்னீர்கள் .. அப்படியென்றால் சம்பந்தி வரும் முதல் முஹூர்த்ததில் வைத்து கொள்ளலாமா “ என்றார்.

இருவருக்கும் ஏற்ற முதல் முஹூர்த்தம் இன்னும் ஒரு மாதத்தில் இருக்கிறது மேலும் இரண்டு தேதிகளும் கொடுத்தார் ஜோசியர்.

உங்களுக்கு எப்படி வசதி சம்பந்தி ?

அவ்வளவு சீக்கிரமாகவா? மண்டபம் கிடைக்க வேண்டுமே .. என்றார் ராகவன்.

அதெற்கென்ன சம்பந்தி .. எங்கள் மண்டபமே அந்த தேதியில் ப்ரீயாக இருக்கு என்று நினைக்கிறேன். இருங்கள் பார்க்கலாம் என்றார். அவர் போனில் பேசும் போது பிரகாஷோ இதேல்லாம் அதிதியை வரசொல்லி விட்டு பேசக் கூடாதா.. என்று பொருமிக் கொண்டிருந்தான். அவன் கவலை அவனுக்கு.

அவன் கவலை புரிந்தார் போல், பிரகாஷின் அம்மா, “நீங்கள் பொண்ணை அழைத்து வாருங்கள் சம்பந்தி அம்மா” என்றார். ஜானகி மதியை பார்க்க, மதி சென்று அதிதியை அழைத்து வந்தாள். பின்னோடு வாணியும் வர எல்லாருக்கும் டிபன், காபி பரிமாறப்பட்டது.  வாணியை அறிமுகப் படுத்தி விட்டு , எல்லாரும் உட்கார்ந்து பேசி கொண்டிருந்தனர்.

அதற்குள் பிரகாஷின் அப்பா, மண்டபம் ப்ரீயாக இருப்பதை உறுதி செய்தவர், மீண்டும் எந்த தேதியில் வைத்து கொள்ளலாம் என்று கேட்டார்.

ஜோசியர் சொன்ன கடைசி தேதிக்கு கூட இன்னும் நாற்பது நாட்களே இருந்தன. என்ன செய்வது என்பது போல் ஆதியை பார்த்தார் ராகவன்.

அவரை கவனித்தவர், “அவசரப்படுத்துவதாக நினைக்க வேண்டாம். இரண்டு வருடத்திற்கு முன்பே நாங்கள் பிரகாஷிடம் கேட்டதற்கு பொண்ணு எல்லாம் நான் செலக்ட் செய்துட்டேன். நான் சொன்ன பிறகு நீங்கள் பேசுங்கள் என்றான். பிறகு உங்கள் வீட்டு சூழ்நிலை சரி இல்லை. அதனால் தள்ளி போட்டான். இப்போ போன வாரம் வந்து இன்று உங்கள் வீட்டிற்கு பொண்ணு கேட்டு போகலாம் என்று அழைத்து வந்திருக்கிறான்.

அவன் ரொம்ப நாளாக காத்திருப்பதால்தான் அவசரப் படுகிறேன். கல்யாண வேலையைப் பற்றி கவலை வேண்டாம். எங்களால் முடிஞ்ச அளவு நாங்களும் உங்களோடு செய்கிறோம் “ என்றார்.

அதற்குள் “நீங்கள் வாருங்கள் நாம் தோட்டத்தில் இருப்போம். ஒரு பதினைந்து நிமிஷத்தில் அவர்கள் டிஸ்கஸ் செய்து சொல்லட்டும் “ என்று சுந்தரம் அழைக்க, மதியின் அம்மா, பிரகாஷின் அம்மாவை அழைத்து கொண்டு சென்றார்.

அவர்கள் தோட்டத்தில் பூர்விகம் பற்றி பேசிக் கொண்டிருக்க, இங்கே உள்ளே ஆதியின் குடும்பத்தினர் கலந்து பேசினார்கள்.

“ஆதி நீ என்ன சொல்றப்பா?

அப்பா ஏற்பாடுகள் பற்றி கவலை வேண்டாம். அதை நானும், சூர்யாவும் பார்த்துக் கொள்கிறோம். மற்றபடி பர்சேசிங் எல்லாம் உங்களால் முடித்து விட முடியுமா அம்மா என்றான்

அது முடித்து விடலாம் பா. முடிந்தால் இன்றைக்கே லிஸ்ட் போட்டு விடலாம் என்றார்.

வேறு என்ன பிரச்சினை

எல்லருக்கும் இன்விடேஷன் கொடுத்து முடிக்க முடியுமா?

அதெல்லாம் பார்த்துக் கொள்ளலாம்.

அதற்குள் மதி , அதியிடம் மெல்ல பேசி அவளுடைய வசதியை பற்றி கேட்டாள். எல்லோரும் பேசி இரண்டாவது தேதியை டிசைட் செய்யவும், வெளியே சென்றவர்கள் உள்ளே வரவும் சரியாக இருந்தது. எல்லோரும் சேர்ந்து அந்த டேட் பிக்ஸ் செய்து அன்றே ஒப்பு தாம்பூலம் மாற்றிக் கொண்டனர்.

கல்யாணத்திற்கு முதல் நாள் நிச்சயதார்த்தமும் மறுநாள் திருமணம் மற்றும் மாலை ரிசெப்ஷனும் வைக்கலாம் என்று முடிவு செய்தனர். பிறகு பிரகாஷின் வீட்டார் கிளம்பி சென்று விட, ஆதி வீட்டாரும், மதி வீட்டாரும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது ஆதியின் அம்மா , எல்லோரிடமும் பொதுவாக “கல்யாணம் முடிஞ்சதும் நாம் எல்லோரும் நம் சொந்த ஊருக்கு சென்று வரலாமா ? என்று கேட்டார்.

அதை கேட்ட ஆதி வேகமாக அவன் அறைக்கு சென்று விட்டான்.

அவன் கோபமாக சென்றதை அறிந்த அதிதியும், சூர்யாவும் “ஏம்மா, இப்போ இது தேவையா? “ என

“இல்ல. அவன் கட்டயாம் வரணும். இந்த பூஜை அப்போவே செய்ய வேண்டியது. முக்கியமா அவனுக்க்காக தான் நான் இப்போ சொல்றதே.”

அண்ணா வருவானா ?

“மதி நீ பேசித்தான் அவனை அழைத்து வர வேண்டும்”. என்றார் ஜானகி

“நானா? நான் சொன்னால் கேட்பாரா அத்தை ?”

உன்னால் மட்டும் தான் முடியும் மதி. நீ கூப்பிடு அவன் கட்டாயம் வருவான். என்றார்.

அவள் யோசனையோடு தலையாட்டவும், ஜானகியும், மீனாட்சியும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

அதிதிக்கும் சூர்யாவுக்கும், அம்மா சொல்வது புரியாவிட்டாலும், ஏதோ உள்நோக்கத்தோடு சொல்வது போல் தெரியவே அமைதியாக இருந்தனர்.

பிறகு மதியின் குடும்பமும் கிளம்ப, அவர்களை அனுப்பி விட்டு எல்லோரும் அவரவர் அறைக்கு திரும்பினர்.

மதி யோசனையோடு ஆதியின் அறையில் நுழைந்தாள்.

தொடரும்

Episode # 07

Episode # 09

{kunena_discuss:903}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.