(Reading time: 13 - 26 minutes)

"ன்னாச்சு உனக்கு?"

"எல்லாத்துக்கும் நீ தான் காரணம்!நீ மட்டும் என் நிலா வாழ்க்கையிலவராம இருந்திருந்தா!நானும் அவளும் சந்தோஷமா வாழ்ந்திருப்போம்!"

"நிலா உன்னை காதலிச்சான்னு நம்புறீயா?"

"................."

"இந்த நிமிஷம்வரை உன்னை எவ்வளவு முடியுமோ அவ்வளவு வெறுக்கிறா அவ!"-அவன் இதயம் நொறுங்கி போனது.

"உனக்குள்ள ஒரு மனசு இருக்குன்னு எனக்கு தெரியும் சங்கர்!சந்தர்ப்பமும் சூழ்நிலையும் உன்னை ஏமாற்றி இருக்கு!எனக்கு நீ நல்லவனா தான் தெரியுற!"

"நிறுத்து...உன் அனுதாபத்தை கேட்க நான் இல்லை!"

"உனக்கு அனுதாபம் சொல்லவும் நான் வரலை!இந்த கொலையை நீ பண்ணலை!"-சங்கர் திடுக்கிட்டான்.

"யார் பண்ணா?"

"உளராதே...இங்கிருந்து போ!"

"உண்மை சிங்கம் மாதிரி!அதை நேரடியா எதிர்க்கிற துணிவு எவனுக்கும் இருந்ததில்லை!நீ அந்த சிங்கத்துக்கு உன்னை பலியாக்க பார்க்கிற!"

"தத்துவம் பேசுறதைவிட்டு கிளம்பு!"

'"நான் உண்மையை தேட ஆரம்பித்தால் அது நிற்கிற இடம் மிஸஸ்.ராகினி பிரபாகரனா இருக்கும்!"-இது என்ன நிலாவின் சிற்றன்னை பெயரை கூறுகிறான்?

"நீ எனக்கு தம்பி மாதிரி சங்கர்!நான் உன்னை எதிரியாகவே பார்க்கலை!நீ பண்றது எல்லாம் ஒரு குழந்தை மாதிரி தான் இருக்கு!"

"நிலா அடிக்கடி சொல்லுவா!சின்ன குழந்தைங்க மனசுல எந்த கபடமும் இருக்காது!ஆனா,அதோட மனசுக்கு பிடித்தவங்களுக்காக எந்த பழியா இருந்தாலும் அந்த குழந்தைங்க ஏத்துக்கும்னு சொல்லுவா!"-ரஞ்சித்தின் மொழிகள் சங்கர் மனதில் பெரு மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கலாம்.அவனிடமிருந்து பெருமூச்சு வெளியானது!

"ராகினி அத்தை மாமாவைவிட பத்து வயசு சின்னவங்க...

குடும்ப சூழ்நிலைக்காக மாமாவை கல்யாணம் பண்ணிக்க வேண்டிய நிலைமை!தன்னோட இளமை மாமாக்காக கழிவதை அவங்க விரும்பலை!

அவர் சொத்து அவங்களுக்கு அடிமையாக நினைத்தாங்க!அதுக்கு ஒரே தடை நிலா!இந்த விஷயம் எனக்கு தெரிந்து நான் அவளை எவ்வளவோ மறைமுகமா எச்சரித்தேன்.அவளுக்கு என்னை ஆரம்பத்துல இருந்தே பிடிக்காது!அதனால என் பேச்சும் அவளுக்கு பிடிக்கலை.அவளை எவ்வளவு முடியுமோ அவ்வளவு கொடுமை படுத்துனாங்க!அந்த நேரத்துல என் பார்வைக்கு அவங்க பண்ற கொடுமை தான் தெரிந்தது.நிலாவுக்கு தேவைப்படுற ஆறுதல் தெரியலை!புரியவும் இல்லை.கடைசியில அவ மகேந்திரன் பாதுகாப்புக்கு போனா!அதுக்காக முதல்ல சந்தோஷப்பட்டவனே நான் தான்!"

"அதுக்கப்பறம் தனியா பிரிந்து போனவள் உயிருக்கு எந்த ஆபத்தும் வர கூடாதுன்னா நான் அவங்க சொல்றதை கேட்கணும்னு சொன்னாங்க!எனக்கு அப்பவும் நிலா தான் முக்கியம்னு தோணுச்சு!அவளுக்காக என் மனதையே சாகடித்தேன்!அன்னிக்கு மாமாவை மிரட்ட துப்பாக்கியை எடுத்தேன்!சுட்டேன்...நான் சுட்டது சுவரை!அவர் மேல பாய்ந்த குண்டு ராகினி அத்தை சுட்டது!"-ரஞ்சித்தின் முகம் வெளிறியது!

"அவங்க சிங்கத்தோட குகையில மாட்ட போற மானுக்காக விரிக்கப்பட்ட வலை இதுன்னு சொன்னாங்க!எனக்கு என்ன பண்றதுன்னே புரியலை!எனக்கு அந்த நேரத்துலையும் நிலா தான் முக்கியமா இருந்தா!மாமா உயிர் போனதுக்கூட என் புத்திக்கு புரியலை!"-சங்கரின் கண்கள் கலங்கின.

ரஞ்சித்திற்கு தன் காதல் மீதே சந்தேகம் வந்தது!எவ்வளவு தியாகங்களை செய்துள்ளான்!நான் என்ன தியாகித்தேன் அவளுக்காக???

(அப்படி என்றால் இந்த நல்லவனையும் வில்லனாக காட்டிய பெருமை கதாசிரியரான என்னையே சாரும்!கொஞ்சம் எல்லை மீறி தான் போயிட்டோம்)

காரில் பயணித்து கொண்டிருந்த ரஞ்சித்தின் மனம் நிலை கொள்ளவில்லை.

அவன் ஒரு புதிய முடிவை எடுத்தான்.அம்முடிவால் பல அதிர்ச்சிகள் பலருக்காய்....!!!!

தன் கரத்தில் அணியப்பட்டிருந்த கணையாழியை கண்டவன்...

"என்னை மன்னிச்சிடு நிலா!என் முடிவு நிச்சயம் உன்னை கஷ்டப்படுத்த எடுக்கப்பட்ட முடிவு இல்லை!ஒரு காதலை சாகடிக்க நான் விரும்பலை!"-அவன் கண்களில் கண்ணீர் திரண்டது.

வீட்டிற்கு வந்தவன்...

"கார்த்திகா!"-என்று அவளை அழைத்தான்.

"என்ன மாமா?"

"உன் கூட கொஞ்சம் தனியா பேசணும்!"

"சொல்லுங்க மாமா!"

"நீ யாரையாவது காதலிக்கிறீயா?"

"இல்லை மாமா!"

"கல்யாணம் பண்ற யோசனையில இருக்கியா?"-அவள் முகத்தில் நாணம் படர்ந்தது.

"என்ன திடீர்னு?"

"சொல்லு...."

"வீட்டில சம்மதம்னா..."

"நான் சொல்ற பையனை கல்யாணம் பண்ணிக்கிறீயா?"-அவள் விசித்ரமாய் பார்த்தாள்.

"பதில் சொல்லு!"அந்நேரம் யோசனையும் அவளுக்கு வரவில்லை.மனம் தன்னால் சம்மதம் அளித்தது.

"ரைட் ஓ.கே."-உண்மையில் அந்த பையன் சங்கர்!!!(உங்களில் எத்தனை பேர் நான் கொடுத்த குறிப்பினால் ரஞ்சித்தின் முடிவு விபரீதமாக இருக்கும் என்று நினைத்தீர்கள்?)

"உனக்கு பைத்தியமா ரஞ்சு?கார்த்திகா சின்ன பொண்ணு!அவளை போய் அந்த அயோக்கியனுக்கு...எப்படி உன்னால இதை யோசிக்க முடிந்தது?வீட்டில இருக்கிறவங்க இதுக்கு எப்படி சம்மதிச்சாங்க?"

"அம்மூ...சின்ன வயசுல நடந்த சில நிகழ்வுகளுக்காக ஒரு மனுஷனோட உண்மையான அன்பை என்னிக்கும் சந்தேகிக்காதே!!"

"அன்பா?அவன் ஒரு கொலைகாரன் ரஞ்சித்!"

"ஒண்ணை நல்லா தெரிஞ்சிக்கோ!மனதளவுல வளர்ந்த அன்பை சாகடிக்கறது தான் கொலை!சொல்ல போனா அது கொலையை விட மோசமானது!!"-நிலாவின் புருவங்கள் சுருங்கின...

"நீ யாரை சொல்ற?"

"நான் என்னை சொல்லிக்கிறேன்!"

"உன்னையா?"

"சங்கர் உன் மேலே வைத்திருந்த அன்பு உடைய காரணம் நான் தான் அம்மூ!"

"ரஞ்சு!"

"நான் பண்ணதுல தப்பு இருக்குதுன்னு எனக்கு தோணலை!சங்கர் நல்லவனா கெட்டவனான்னு கேஸ் நடக்கும் போது தெரியும்!இந்த ஜென்மத்துல என்னால உன்னை விட முடியாது!ஆனா,நான் இதை ஆமோதித்தே ஆகணும்!என்னோட காதல் சங்கரோட அன்புக்கு முன்னாடி ஒண்ணுமே இல்லை!"-அவ்வளவு தான் அவளுக்கு கோபம் தலைக்கேறியது.நிலா அமைதியாக அவ்விடத்தை நீங்கிவிட்டாள்.

ரஞ்சித் அவளை தடுக்கவில்லை.ஆனால் அவன் பார்லையில் இருந்த தீர்க்கம் உண்மையில் அவனை கேள்விக்குறியாக்கியது!!

தினைந்து நாட்களுக்கு பிறகு...

நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டான் சங்கர்..

"குற்றவாளி கூண்டில் நிறுத்தப்பட்ட இவர் தன்னை வளர்த்த தனது தாயின் சகோதரனை இரக்கமே இல்லாது சுட்டு கொன்று இருக்கிறார்!எனவே,இவருக்கு தகுந்த தண்டனை அளிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்!"-வாதாடினார் வழக்கறிஞர்.

"சங்கரின் தரப்பிலிருந்து சாதகமாய் சாட்சி உள்ளதா?"-அவன் தரப்பு வழக்கறிஞர் இல்லை என தலையசைத்தார்.

சங்கர் அமைதியாய் இருந்தான்.

"ஒருநிமிஷம்!"-குரல் கேட்டு நிமிர்ந்தனர்.

ரஞ்சித் கையில் ஒரு டேப்புடன் வந்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.