(Reading time: 13 - 26 minutes)

"நீங்க கேட்ட சாட்சி!சங்கர் எந்த தப்பும் செய்யலைன்னு ஆதாரம்!"-அதிர்ச்சியாயினர் அனைவரும்.

அதை வாங்கி தனது மடிக்கணினியில் போட்டார் நீதிபதி.

துல்லியமாய் இருந்தது சாட்சி!!

அவன் சுட்ட குண்டு சுவரையும்,அவன் அத்தை சுட்டது பிரபாகரின் நெஞ்சையும் துளைத்தது!!!

"அது பொய்!அது நிஜம் இல்லை!"-கத்தியவன் சங்கர்!

"இது அவங்க வீட்டில இருந்த சிசிடிவி கேமராவுல இருந்து எடுத்தது தான்!

தெரிந்தோ தெரியாமலோ சங்கர் மேல நிறைய பேருக்கு இருந்த விசுவாசம் உண்மையை ஜெயிக்க வைத்திருக்கு!"-சங்கரை பார்த்தப்படி கூறினான் ரஞ்சித்.

"கிடைக்கப்பெற்ற சாட்சிகளை வைத்து பார்க்கும் பட்சத்தில் சங்கர் நிரபராதி என நிறுபிக்கப்பட்டது!ஆகவே அவரை விடுதலை செய்ய இந்த நீதிமன்றம் உத்தரவிடுகிறது!மேலும், கொலையாளியான பிரபாகரனின் மனைவியை கைது செய்து 12 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை அளிக்க இந்த கோர்ட் உத்தரவிடுகிறது!"-தீர்ப்பு வழங்கியாயிற்று!!

பசுக்களில் நான் காமதேனு!பட்சிகளில் கருடன்!வேதங்களில் சாமவேதம்!என கீதையை உரைத்த இறைவன் தர்மங்களில் நான் உண்மை எனவும் உரைத்திருக்கின்றான்.

அதாவது,உடலைவிட்டு உயிர் நீங்கினால் மரணம் சம்பவிப்பது இயற்கை!அந்த மரணம் சம்பவித்தாலும் ஆன்மா அழியாது என்பதே உண்மை!

ஒருவனின் மேலான பண்புகளை மறைத்து அவனை தீயவனாக்கி காலம் கண்ணாமூச்சி ஆடலாம்!ஆனால்,விதியானது ஒரு வழியை அடைத்தால் நம்பிக்கை பிறிதொரு வழியினை நிச்சயம் திறவும்!!

உண்மை வேள்வியைவிட சீரியது என்பதை எவரும் மறவ வேண்டாம்!!

"ஏன் இப்படி பண்ண?"

"தெரிந்தோ தெரியாமலோ நீ எனக்கு உறவாகிட்ட!அதான்..."

"இதோப்பார்!நிலா வாழ்க்கையில நான் தலையிட மாட்டேன்!அவளுக்காகவோ!மாமாக்காவோ நீ என் மேலே அக்கறை காட்ட வேண்டாம்!"

"டேய்!ஆனா,நீ ரொம்ப நல்லவன்டா!உனக்கு போய் யார்டா வில்லன் கெட்அப் போட்டது!"-சிரித்தப்படி உரைத்தான் ரஞ்சித்.

"என் வீட்டு மாப்பிள்ளையாக போற!உன் மேலே பழி விழலாமா?"

"என்ன?"

-ரஞ்சித் கார்த்திகா பற்றி கூறினான்.

"என்ன நினைச்சிட்டு இருக்க நீ!என் வாழ்க்கையில எந்த தைரியத்துல நீ முடிவு எடுக்குற? மரியாதையா போயிடு!"-சங்கர் கோபமாக அங்கிருந்து நகர,எதிரில் வெண்ணிலா வந்தாள்.

அவளைக் கண்டவனின் கால்கள் நின்றன.

"ஸாரி சங்கர்!"-முதன்முதலாய் அவனுக்காய் அவள் சிந்திய கண்ணீர் அவன் மனதை கரைத்தது.

"உண்மை என்னன்னு தெரியாம உன்னை கஷ்டப்படுத்திட்டேன்!என்னை மன்னிச்சிடு!"-நிகழும் நிகழ்வுகள் அனைத்தும் நிஜமா என்றிருந்தது அவனுக்கு!!

"நிலா!நியாயப்படி நான்தான் மன்னிப்பு கேட்கணும்!அழாதே ப்ளீஸ்!"

-அவள் மௌனம் சாதித்தாள்.

"சரி ப்பீல் பண்ணாதீங்க!அதான் எல்லாம் சரியாயிடுச்சே!வீட்டுக்கு வாங்க பிரதர்!கார்த்திக்கா வெயிட்டிங்!"-சங்கர் அவனை உற்று பாரத்தான்.

"யார்டா நீ?எப்படிடா உன்னால உன் அத்தை பெண்ணை என்னை மாதிரி ஒருத்தனுக்கு தர மனசு வருது?"

"பாஸ்...நீங்க எனக்காக உங்க காதலையே தந்திருக்கீங்க!நான் உங்க வாழ்க்கைக்கு ஒரு வெளிச்சம் தரேன் அவ்வளவு தான்! அவளே சம்மதிச்சிட்டா!நான் எப்படி தடுக்க முடியும்??"-அங்கு நிலா இல்லை என்றால் அவர்களுக்குள் கைக்கலப்பு வருவது உறுதி!!

காலம் உருண்டது......

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு...

தனது அறையில் பழைய நிகழ்வுகளை அசைப்போட்டு கொண்டிருந்தான் சங்கர்.

திருமணமாகி ஒன்றரை ஆண்டுகள் ஆகின்றன...

தன்னையே நம்பி வந்தவளுக்காய் இதுவரையில் அரைமணி நேரமும் செலவிட்டதில்லை!!

அவளும் பொறுமையாய் காத்திருக்கிறாள் என் காதலுக்காய்!

அவன் மனம் அவனையே திட்டியது!

நேற்றைய தினம் நிலா அவள் குழந்தையோடு வந்த போது கார்த்திகாவின் முகம் ஏக்கத்தில் வாடியதை அவன் கவனிக்காமல் இல்லை!!

ஒரு பெருமூச்சைவிட்டான்.

சட்டென கதவு திறக்கும் சப்தம் கேட்டது!

நினைவை கலைத்தான்.

அவள் தான்!!

அவனை பார்த்தவள் தலையை தாழ்த்திக்கொண்டு அந்த அறையை சீர் செய்தாள்.

சங்கரின் விழிகள் அவளை நீங்கவில்லை.

அவள் ஒரு புத்தகத்தை மேலே வைக்க முயன்று கொண்டிருந்தாள்.அவளுக்கு எட்டவில்லை.

சங்கர் எழுந்து அப்புத்தகத்தை வாங்கி மேலே வைத்தான்.

முதன்முதலாய் கிடைக்கப்பெற்ற அவனது நுனிவிரல் தீண்டல் அவளை சிலிர்க்க வைத்தது.

அவளது நெருக்கம் அவனை தடுமாற வைத்தது.

அவனிடமிருந்து அவசரமாய் விலகிவளின் புடவைநுனி அவன் கைகடிகாரத்தில் சிக்கியது.

சட்டென திரும்பியவள் கைகடிகாரத்தில் சிக்கியதை கண்டதும் இயல்பானாள்.

சங்கர் அதனை எடுத்துவிட்டான்.

இருவருக்கும் இடையே தயக்கம்!யார் காதலை கூறுவது?

காலத்தோடு காதலும் கண்ணாமூச்சி ஆடியது.

"கார்த்திகா!"-தைரியத்தை வரவழைத்து ஆரம்பித்தான்.

"நான் உன்கிட்ட ஒண்ணு சொல்லணும்!"

"சொல்லுங்க!"

"அது!நான்...."-அவன் இழுக்கவும்,இடி இடிக்கவும் சரியாய் இருக்க,அவள் பயத்தில் அவனை அணைத்துக்கொண்டாள்.நிலைமை அவனுக்கு சாதகமானது!

சங்கரின் கைகள் அவளை வளைத்தன.

"என்னாச்சு?"

"எனக்கு இடின்னா பயம்!"-அவனுக்கு ரஞ்சித் கூறியது நினைவு வந்தது!

"கார்த்திகா அவ நிழலை பார்த்துக்கூட சில நேரம் பயப்படுவா அதனால பத்திரமா பார்த்துக்கோ!"-சங்கருக்கு சிரிப்பு வந்தது.

நிலைமை உணர்ந்தவள் அவனிடமிருந்து விலகினாள்.ஆனால்,இம்முறை அவள் கரத்தை சங்கர் பற்றி அவளை நகரவிடாமல் செய்தான்.

அவள் கண்களில் குழப்பம் தெரிந்தது.

அவள் காதருகே சென்று,

"ஐ லவ் யூ!"என்றான்.

கார்த்திகாவின் இதயம் தாறுமாறாய் துடிக்க ஆரம்பித்தது.அவள் கேள்வியாய் பார்த்தாள்.

சங்கர் குனிந்து அவள் நெற்றியில் முத்தமிட்டான்.காத்திருந்த தேடல் பூர்த்தியானதை உணர்ந்தவள் கண்கள் கண்ணீரை சிந்தின.

அவளின் கண்ணீர் தன் இருதயத்தை நனைக்கும்படி சங்கர் அவளை தனதாக்கி கொண்டான்.

ஞ்சித்-நிலாவின் நிலையை தாம் ஊகித்திருப்பீர்கள்.இக்கதை தமது இதயம் கவர்ந்த கதையாகி இருக்கும் என்று நம்புகிறேன்.

காலச்சக்கரம் காதலுக்கு என்றும் விரோதி அல்ல!

காதல் என்னும் அழகிய வெண்ணிலா நிச்சயம் தனக்குரிய வானத்தை என்றாவது ஒருநாள் வந்தடையும்!!!

முற்றும்!

Episode # 21

{kunena_discuss:821}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.