(Reading time: 21 - 41 minutes)

...................

ம்.......

அவர்கள் பேசுவது அந்த கைப்பேசியில் பதிவாகிக்கொண்டே இருப்பதை அறியாமல்  மறுமுனையில் பேச்சு தொடர்ந்தது. 'ம்.... ம்ஹூம்... என்பதை தவிர வேறெந்த வார்த்தைகளுமே அவனிடமிருந்து வரவில்லை.

பேசி முடித்த பிறகு அழைப்பை துண்டித்து விட்டு, அந்த உரையாடலை அப்படியே தனது கைப்பேசியில் பதித்துக்கொண்டான் சஞ்சீவ். இனி இந்த விளையாட்டை எப்படி தொடருவது என்பது தெளிவாக புரிந்து விட்டிருந்தது அவனுக்கு. அழைப்பு வந்ததற்கான அடையாளத்தை அழித்தான் அவன்.

சில நிமிடங்கள் அறைக்குள் வந்தவன் 'தேங்க்ஸ் பரந்தாமன்' என்றபடி கைப்பேசியை அவரிடம் நீட்டிவிட்டு நகரந்தான் சஞ்சீவ். இப்போது அவசரப்பட்டு எதையும் செய்து விடும் நிலையில் இல்லை அவன். நடக்கவிருக்கும் அவனது தங்கையின் திருமணமே அவனுக்கு முக்கியமாக பட்டது.

அவனது தந்தை உயிருடன் இல்லாத நிலையில் பார்த்து பார்த்து நடத்திக்கொண்டிருக்கிறான் இந்த திருமணத்தை. அம்மா மகிழ்ச்சியின் எல்லையில் இருக்கிறார். எல்லாம் நல்ல படியாக முடிய வேண்டும். அதன் பிறகு மற்றதை கவனித்துக்கொள்ளலாம் முடிவுடன் நடந்தான் சஞ்சா.

ருந்ததியின் வீட்டில் உணவு மேஜையில் அமர்ந்திருந்தனர் அனைவரும். உதட்டில் பொருத்திக்கொண்ட ஒரு சின்ன புன்னகையுடனும், எதுவுமே நடக்காத பாவத்துடன்  மேகலாவும், கொஞ்சம் கடுகடு பார்வையுடன்  அஸ்வத்தும் வந்து அமர்ந்தனர். சந்திரிக்காவுக்கு நேர் எதிரே அமர்ந்திருந்தார் மேகலா. அவருக்கு அருகில் அஸ்வத். ரிஷிக்கு நேர் எதிரே!!!!!

ரிஷியை எப்போதுமே பிடித்ததில்லை அஸ்வதிற்கு. அப்பா தன் மீது காட்டும் அக்கறையை விட ரிஷியின் மீது காட்டும் அக்கறை அதிகம் என்று ஒரு உணர்வு எப்போதுமே உண்டு அவனுக்கு. அதனாலேயே அவனை மட்டம் தட்டி பார்ப்பதில் தனி ஆனந்தம் அஸ்வத்துக்கு. அவனை இந்த வீட்டு மாப்பிளையாக கனவிலும் ஏற்றுக்கொள்ளும் நிலையில் இல்லை அஸ்வத்.

திரும்ப திரும்ப மேகலாவையே உரசியது சந்திரிகாவின் பார்வை. கொஞ்சம் கூட சட்டையே செய்யாமல் அமர்ந்திருந்தார் மேகலா. உணவு பரிமாறப்பட அனைவரும் சாப்பிட துவங்கினர்.  அங்கே சுற்றிக்கொண்டிருந்த ஏ.சி காற்றிலும், பரவிக்கிடந்த மௌனத்திலுமே கூட வெப்பம் கலந்து கிடப்பதை போலவே தோன்றியது ரிஷிக்கு.

சந்திரிகா விழி நிமிர்த்தாமல் சாப்பிட்டுக்கொண்டிருக்க, மெதுவாய் நிமிர்ந்தன மேகலாவின் இமைகள். எவ்வளவு தான் தன்னை விறைப்பாக காட்டிக்கொண்டாலும் தனது பழைய தோழியை  கொஞ்சமாக வருடத்தான் செய்தது அவரது பார்வை.

தனது தட்டில் இருந்த இனிப்பை எடுத்து சந்திரிக்கா சுவைக்க துவங்க, சின்ன புன்னகை மேகலாவின் இதழ்களில். சந்திரிகாவுக்கு எப்போதுமே இனிப்பு பிடிக்கும். சந்திரிகா அதை ரசித்து சாப்பிடும் அழகை ரசிக்கத்தான் செய்தது தோழியின் மனம். மேகலா என்ற அந்த பழைய தோழி இன்னும் செத்துவிடவில்லையோ?????

நல்ல வேளையாக அவளுக்கு சர்க்கரை வியாதி இல்லை போலும்.!!!! 'சந்திரிக்காவுக்கு இன்னொரு ஸ்வீட் போடுங்க. உணவை பரிமாறிக்கொண்டிருந்தவரிடன் சொல்லக்கூட விழைந்தது மனம்!!!!

ஆனால் அடுத்த நொடி மனக்குரங்கு தாவி மறுபடியும் கொம்பில் ஏறி அமர்ந்துக்கொண்டது. 'நான் எதற்கு அவள் மீது அக்கறை கொள்கிறேன்.???? அவள் என்ன சாப்பிட்டால் எனக்கென்ன? ச்சே.. திடீரென்று என்னவாயிற்று எனக்கு?????

'ஏம்பா..... இன்னைக்கே அருந்ததி அவங்களோட போறா மாதிரி ப்ளானா? அஸ்வதின் குரல் மௌனம் கலைத்தது.

சரேலென விழி நிமிர்த்தினான் ரிஷி. 'எங்கே வருகிறான் இவன்?' அஸ்வத்தின் தொனியில் ஒளிந்திருந்த வெறுப்பை உணராமல் இல்லை ரிஷி.

'ஆமாம் ஏன்? ........ இயக்குனர்

'இன்னைக்கு தான் ஆடி மாசம் ஆரம்பம். இப்போ எதுக்கு. ஒரு மாசம் போகட்டுமே. அவள் உடம்பும் நல்ல படியா குணமாகட்டும். அதுக்கப்புறம் நல்ல நாள் பார்த்து அனுப்பலாமே?' .... இது மேகலா.

ரிஷியின் குரல் பாய்ந்து வருவதற்கு முன்னால் அவனது தந்தையின் குரல் முந்திக்கொண்டது. 'எனக்கு இதிலே எல்லாம் நம்பிக்கை இல்லை சம்மந்தி' என்றார் அவர். 'மனசு சுத்தமா இருந்தா போதும் வேறே எதை பத்தியும் கவலை இல்லை எனக்கு.'

'எனக்கும் பிரச்சனை இல்லை சம்மந்தி... நீங்க கூட்டிட்டு போங்க.' என்றார் இயக்குனர்.

மேகலாவின் முகத்தில் இரும்பின் இறுக்கம் படர்ந்தது. சில நொடிகள் அங்கே மௌனதின் சஞ்சாரம்.

வெறுப்பின் எல்லையில் நின்ற அஸ்வதின் வாயிலிருந்து மெல்ல வெளிவந்தன அந்த வார்த்தைகள் 'நீங்க ரொம்ப கிரேட் அங்கிள்.' என்றான் அவன் கல்யாண ராமனை பார்த்து. 'உங்களுக்கு கோவில் தான் கட்டணும்.'

இமைக்கவில்லை ரிஷி. 'என்ன சொல்ல வருகிறான் இவன்???' உள்ளுணர்வு எதையோ உணர்த்தியது அவனுக்கு.

புரியாமல் பார்த்தார் ராமன் 'ஏம்பா அப்படி சொல்றே?'

'இல்லை இப்போ சொன்னீங்களே. உங்களுக்கு எதை பத்தியும் கவலை இல்லை அப்படின்னு. அதுக்காக தான் சொல்றேன்.' ஒரு முறை அவன் பார்வை சந்திரிக்காவை தொட்டு திரும்ப  'யார் யாரோ சாப்பிட்ட எச்சில் தட்டிலே கவலையே இல்லாம இத்தனை வருஷமா சாப்பிட்டுட்டு  இருக்கீங்களே அதுக்காக தான் சொல்றேன்'

அவன் மீது பாய்ந்திருந்தான் ரிஷி., அவன் சொல்லி முடித்த வார்த்தைகளின் முழுப்பொருள் எல்லாருக்கும் புரியும் முன்னரே ரிஷியின் அடி அஸ்வத்தின் முகத்தில் இறங்கியிருந்தது.!!!!

எரிமலையாய் சீறினான் ரிஷி 'யாரை பார்த்து என்னடா பேசுற பொறுக்கி நாயே!!! எடுத்திடறேன். உன் உடம்பிலிருந்து தலையை தனியா எடுத்திடறேன் அப்புறம் எப்படி பேசுறேன்னு பார்க்கிறேன்.!!!!'

அவன் கை அஸ்வத்தின் கழுத்தை அழுத்தி இருக்க, மேகலாவும், அருந்ததியும் பதறிப்போனவர்களாக இருவரையும் பிரிக்க முயன்றனர். அஸ்வத் இப்படி பேசுவான் என்று யாருமே ஏன் மேகலவே கூட எதிர்ப்பார்க்கவில்லை.

'ரிஷி.. விடு அவனை .' அதிர்ந்து ஒலித்தது சந்திரிக்காவின் குரல்.

'நீ சும்மா இரு...ம்....மா..... இவ......னை....'

'ரிஷி .... அம்மா சொல்றேன் இல்ல... விடு...........' அவனை விடுவித்தன ரிஷியின் கைகள்  ஆனால் மனம் நெருப்பில் குளித்து கிடந்தது. அஸ்வத்தின் உதடுகள் கிழிந்து ரத்தம் வழிந்துக்கொண்டிருந்தது.

'அம்மா .... முதல்லே இங்கிருந்து கிளம்பு' ..... கர்ஜனை ரிஷியிடமிருந்து,  'கிளம்புங்கப்பா......' சாப்பிட்ட கையை கூட கழுவவில்லை யாரும். 'அப்படியே நடங்க.....'  கோபம் கொந்தளிக்க முழங்கினான் அவன்.

பேச்சிழந்து நின்றிருந்தார் இந்திரஜித். அவர்களை தடுக்கும் சக்தி இல்லை அவருக்கு. நடுங்கிப்போய் நின்றிருந்தது அவனது ரோஜாப்பூ. அசைவில்லை அவளிடத்தில். சட்டென திரும்பி அவளிடம் வந்தான் ரிஷி. மிரண்டு போயிருந்த அவளது பார்வையினால் அவனது முகத்தில் துளியிலும் துளியானதொரு  மாற்றம். சிறிதிலும் சிறியதாக ஒரு கனிவு ரேகை.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.