(Reading time: 17 - 33 minutes)

துர் உங்கள மாதிரிதான் என்னை பார்த்துகிட்டாங்க தெரியுமா….ஆனா அத்தனையும் பொய்…..அது பொய்யா…? இல்ல நிஜமா…?....ஆனா மொமன்ட்ரி….எனக்கு அது தெரியலைதான…..மதுருக்காக எத்தனை வருஷம்…...ஆனா பாருங்க நீங்க…..உங்கள நான் முதல் நாள்ள இருந்து …. ஐ ஜஸ்ட் இக்னோர்ட்….ஆனா நீங்க நிஜம்…இப்பவும் இத்தனைக்கு பிறகும்…. மதுரப் பத்தி பேசினா கூட யூ டாலரேட் மீ….யு லவ் மீ…

எனக்கு மனுஷங்கள புரிஞ்சுக்க தெரியல நிக்கி……அப்பாவுக்கு குடும்பம்னா உயிர்னு  நினச்சேன்…. அது பொய்…சதீஷ் சரி இல்லைனு நினச்சேன் அதுவும் பொய்….மதுர்தான் எல்லாம்னு நினச்சேன்…அதுவும் பொய்…..நீங்க என் வாழ்கையில வரவே மாட்டீங்கன்னு நம்பினேன்….இப்ப நீங்கதான் எல்லாம்ன்ற மாதிரி ஒரு லைஃப்…

நான் ஏன் இவ்ளவு முட்டாளா….எல்லாத்தையும் எப்பவும் தப்பா மட்டுமே புரிஞ்சிகிற மாதிரி இருக்கேன்… எனக்கு …” அவள் அழுது கொண்டே பேச தன் வலக்கையால் அவள் கன்னத்தை தாங்கினான் கணவன்.

என்னவகை ஆறுதல் அது என்று புரியவில்லை நல்லிசைக்கு…..ஆனால் தன் மொத்த தலை பாரத்தையும் அந்த கையில் சாய்த்தாள். அடுத்த நொடி தன் தோளில் இழுத்து புதைத்திருந்தான் அவளை.

“எல்லாம் பொய்யுன்னும் இல்லை, நிஜம்னும் இல்லைடா….அத தண்டி இது வேற…..கைன்ட் ஆஃப் ஸெராக்‌ஸ்னு வச்சுகோயேன்….உண்மைதான்....ஆனா முழு உண்மை அது கிடையாது….அதுக்காக அது பொய்யும் கிடையாது. உன் அப்பா உன் மேல வச்சிருக்கிற பாசம் நிஜம்…பட் அவருக்கு சதீஷ் வகையில இன்னொரு பக்கம் இருக்குது….அது மாதிரிதான் சதீஷ்…. அவர் குடும்பம் வகையில சரியானவரா இருந்திருக்கலாம்…..ஆனா நவ்யா எதுக்கு அவர்ட்ட இருந்து அப்டி ஓடி வந்தா? அவருக்கும் இன்னொரு பக்கம் இருக்குது…. அது மாதிரிதான்….”

நிக்கி விளக்கிக் கொண்டு போக, வார்த்தையின்றி கேவினாள் அவள்.

அவள் தலையில் விழுந்தது அவன் முதல் முத்தம். அடுத்து அவள் பின் தலையை பிடித்திருந்த  தன் கையால் எப்பொழுது அவளை வளைத்தான், எப்பொழுது அவளை படுக்கையில் சாய்த்தான்….எப்பொழுது அவள் வல புறமாய் இவன்  படுத்து இடபுறம் ஒரு கை ஊன்றி….

கோழிக் குஞ்சாய் அவன் மார்போடு சென்று பம்மினாள் இசை. இருந்த அத்தனை விரக்திக்கும் விரோதமாய், இன்செக்யூரிடிக்கும் எதிராய் ஒரு பாதுகாப்பு உணர்வு அவன் மார்பில்…. எல்லாம் மறந்து போயின அவளுக்கு…அவன் அவளை அந்த நிலையில் மெல்ல அணைத்துக் கொள்ளும் போது.

கணவனின் கை அணைப்பு…..மறுக்க மனதில் அவன் எதிராய்  எதுவும் இல்லாத நிலை…அனைத்திற்கும் மேலாய், உலகத்தை தனியாக தன்னால் எதிர்கொள்ளவே முடியாது என்றிருந்த உள்ள நிலை…. அவனிடம் தன்னை மொத்தமாய் ஒப்படைத்திருந்தாள் அவள் அவ்வேளை…..ஆறுதலோ காதலோ அவன் எப்பக்கம் நடத்தியிருந்தாலும் தொடர்ந்திருப்பாள்தான்….

“லில் உன்ட்ட கொஞ்சம் பேசணும்டா…… அதாவது என்னைப் பத்தி…”

சட்டென விழுந்தது ஆசிட் அபிஷேகம் அவள் உயிர் மீது…..துள்ளி துடித்து அவள் எழ முனைய அதற்கு தடையாய் இறுகியது அவன் பிடி.

You might also like - Ullamellam alli thelithen.. A sweet romantic story 

“இவனைப் பத்தி என்ன தெரியும் எனக்கு….எதுவுமே தெரியாம இவன இவ்ளவு நம்பி…..இந்த அளவுக்கு போய்ட்டமேன்னு….கன்னா பின்னானு யோசிச்சு வைக்காத…..” இவள் மனதின் அந்த நேர நிலையை வார்த்தை மாறாமல் ஒப்பித்தான் அவன்.

உண்மையில் அவனைப் பத்தி அவளுக்கு என்ன தெரியும்…?

“கல்யாணம் ஆகிருக்கு நமக்கு….இத்தனை நாள் என் கூட இருந்திருக்க……என்னை பார்த்திருக்க….பழகி இருக்க….நீ நம்புற உன் அம்மாவரைக்கும் என்னை பத்தி நல்லாத்தான் உன்ட்ட சொல்லி இருக்காங்க….இப்டி ஆயிரம் காரணம் சொல்லலாம்…சும்மா கன்னா பின்னானு யோசிக்றத நிறுத்து…”

விலகி எழ அவள் முயன்ற முயற்சியை நிறுத்திவிட்டாலும் கண்களில் கார்காலம் மறுபடியும்….

“எனக்கு என்னைப்பத்தி இதெல்லாம் பேச யாருமே இல்லடா லில்….நீயும் கேட்க மாட்டியா….?” அவ்வளவுதான் அதற்கு பின்னும் இவள் தன்னை நினைத்து அழுது கொண்டிருப்பது எப்படியாம்?

“சொல்லுங்க நிக்கி”

“நான் யுஜி முடிச்சதும் ஐ எஃப் எஸ் கிளியர் செய்து யூஎஸ்ல இன்டியன் எம்பெஸில ஒர்க் பண்ணிட்டு இருந்தேன்….” நிச்சயமாய் இப்படி ஒரு ஆரம்பத்தை அவள் எதிர் பார்க்கவில்லை. ஒரு மியூசிஷியனோட பேக்ரவ்ண்ட் இப்படியா இருக்கும்??

“ உங்க அம்மா அப்பால்லாம்?”

“ம்… இருக்காங்க….ஆனா  எனக்குன்னு யாரும் இல்ல….உன்னையும் அவிவையும் தவிர…” அவன் அணைப்பிலிருந்தவள் அவனை வலியும் ஆறுதலுமாய் நிமிர்ந்து பார்த்தாள். உறவு இருந்தும் இல்லாதிருப்பதின் கொடுமை இவளுக்கு தெரியாதாமா?

அவன் முகத்தில் மென்மை உணர்வு. இவள் வலி அவனுக்காக அல்லவா..? நெற்றியில் இதழ் வைத்தெடுத்தான். கண்மூடி அவனோட இன்னுமாய் ஒன்றிக் கொண்டாள். ஐ’ம் தேர் ஃபார் யூ என்றது அவள் உடல் மொழி.

“அப்ப ஒரு நாள் நான் ஷாப்பிங்க் வந்துட்டு இருந்தப்ப போலீஸ் என் காரை ஸ்டாப் பண்ணினாங்க….ஐ வாஸ் அரெஸ்டட்…என் கார்ல இருந்து ட்ரெக் சீஸ் செய்ததா கேஸ்…” அவன் பேசிக் கொண்டே போக மிரண்டு போய் அவனைப் பார்த்தாள்.

“பயப்படாத இப்ப லீகலி ஐ’ம் க்ளியர்ட்…..”

அவள் முகத்தில் நிம்மதி உதயம்.

“இங்க உன் கூடதான இருக்கேன்…”

புன்னகை அவள் இதழ் புறம்.

ப்போது வாஷின்டனில் இருந்தான் நிக்கி. அன்று அவனுக்கு பிடிக்காத ஷப்பிங் டே. க்ராசரி வாங்க போய்விட்டு திரும்பிக் கொண்டிருந்தான்.

அப்பொழுதுதான் கவனித்தான் இவன் காருக்கு பின்னால் வந்த போலீஸ் வெகிகிள் இவனுக்கு  புல் ஓவர் சிக்னல் செய்து, லவ்ட் ஸ்பீக்கரில் காரை ஓரமாக நிறுத்த சொன்னது.

இவனை நிறுத்த சொல்வதென்றால்?? ஒன்றும் புரியவில்லை. ஏதாவது மிஸ்அண்டர்ஸ்டாண்டிங்காக இருக்கும். வேகத்தை குறைத்து வலது ஓரமாக நிறுத்தினான் இவன். இப்பொழுதுதான் பார்க்கிறான் இரண்டு போலீஸ் கார் ஒன்றன் பின் ஒன்றாக. பேக் அப்புடன் இவனை ??

வந்தவர்களில் ஒருவன் இவனிடமிருந்து கார்கீயை வாங்கிக் கொள்ள அதற்குள் மற்ற மூவர் இவன் காரை முன்னும் பின்னும் அலசி குடைந்தனர். இவன் தான் இன்டியன் எம்பஃஸி ஸ்டாஃப் என வார்த்தையாலும் கையிலிருந்த ஐ டி கார்ட் இன்ன பிறவாலும் விளக்கிக் கொண்டிருந்தான்.

இதற்குள் ஒரு போலீஸ் தன் கையில் சில சிறு பாக்கெட்டுகளுடன் வந்தான். “ஹெராயின்” என்றபடி.

ஹெராயின் இப்படித்தான் இருக்கும் என்பது கூட நிக்கிக்கு அப்பொழுதுதான் தெரியும். ஒரு வேளை அது ஹெராயினாக கூட இல்லமல் இருக்கலாம். இவனுக்கு என்ன தெரியும் அதைப் பத்தி.

தனக்கு எதிராக எதோசதி என மட்டும் புரிகிறது. ஆனாலும் இவன் இங்கு எதுவும் எதிர்த்து சண்டையெல்லாம் போட முடியாது. 4 பேர் கையிலும் போலீஸ் பிஸ்டல் என்பது வேறு… முதலில் இவன் எம்பஸி ஸ்டாஃப்….நடந்து கொள்ள வேண்டிய முறை என்று ஒன்று இருக்கிறது. இன்டியன் கவர்மென்ட் இவனுக்காக வரும்.

எப்படியும் இவனை எதுவும் செய்ய முடியாது. மேக்‌சிமம் இந்தியாவுக்கு திரும்பிப் போ என சொல்ல முடியும்…அந்த அளவு இவன் பதவிக்கு இம்யூனிடி இருக்கிறது….ஆக பதற்றம் இல்லாமல் தான் நிக்கி அவர்களுடன் சென்றதே….

அவனை நேரடியாக செல்லுக்கு கொண்டு போனார்கள். ஒரு போலீஸ் அதிகாரி இவன் குற்றத்தை இவனுக்கு விளக்கினார்.

“அது எப்டி வந்ததுனே தெரியாது….அது என் கார்ல இருந்துதான் எடுத்தாங்கன்றதுக்கு கூட நிச்சயம் கிடையாது” என்ற இவனது வார்த்தைகளுக்கு எந்த அர்த்தமும் இல்லை அவர்களுக்கு.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.