(Reading time: 17 - 33 minutes)

வன் தன் ஆஃபீஸிற்கு இன்ஃபார்ம் செய்தான். அவர்களும் தேவையான அனைத்தும் செய்வதாக சொன்னார்கள். ஏதேதோ செய்யவும் செய்தார்கள்தான். பலன்தான் பூஜ்யம்.

நிக்கிக்கு சிறை வாசம். அதுவும் நாட்கள் நகர நகர என்ன செய்யவென்று தெரியவில்லை. அப்பொழுதுதான் டி வியில் அந்த செய்தியை பார்த்தான்.

இன்டியாவில் அஸ்ஸாம் காட்டுப் பகுதியில் அமெரிக்க போர் விமானம் அனுமதியின்றி பறந்திருக்கிறது. அங்குள்ள தீவிரவாதிகளுக்கு அம்யூனியன் சப்ளை செய்ய முயன்றதாய் இந்திய அரசு இரண்டு அமெரிக்க பைலட்ஸை கைது செய்திருந்தது.

நிக்கி எதிர் பார்த்தது போல்தான். இரண்டு நாட்டு கவர்மென்ட்டும் உள்ளுக்குள் பார்கெய்ன்…..ஒரு வழியாய் அந்த பைலட்ஸுக்கும் நிக்கிக்கும் விடுதலை. உடனடியாக இன்டியா அனுப்பிவிட்டனர் நிக்கியை.

அவனும் வெறுத்துப் போய்தான் இருந்தான். இந்தியா திரும்புவதில் அவனுக்கும் நிம்மதியே…. இந்தியா வந்த பின்புதான் அவனுக்கு அடுத்த ப்ரச்சனையை விளக்கினார் அவனது அஃபீஷியல் ஹெட்.

யூஎஸ்ஸில் இவனை ட்ரெக் ஸ்மகிளிங் என்று கேஸ் பதிவு செய்திருந்ததல்லவா, அதில் இவன் அங்குள்ள ஒரு இன்ஃபேமஸ் மாஃபியா கூட்டத்தை சேர்ந்தவன் என்று கதை பில்டப் செய்திருந்தனர்.

உண்மையில் அந்த மாஃபியா கூட்ட ஹெட் அண்ட் அவன் சன் இருவரையும் கைது செய்து விசாரணைக்குப் பின் இப்பொழுதுதான் மரணதண்டனை விதித்திருந்தது அமெரிக்கன் கவர்மென்ட். அந்த நேரத்தில் இவனை விடுதலை வேறு செய்தாச்சு.

இவன் அரெஸ்ட் அண்ட் ரிலீஸுக்கு பின்னால் இருந்த அரசியல் பார்கெய்ன் எல்லாம் கிளாசிஃபைட் ஆக்ட். அதாவது சீக்ரெட் செயல். பப்ளிக்கிற்கு தெரியாது. 

ஆக இவன் அப்ரூவராய் மாறி மாஃபியாவையும் அவன் மகனையும் மாட்டிவிட்டதால் தான் இவனுக்கு விடுதலை என்ற வகை   இன்ஃபோ அந்த கும்பலுக்கு கிடைத்திருக்கிறதாம்.

 யார் யார் மெம்பர்ஸ் என்றெல்லாம் அந்த கும்பலுக்கு முழுதாக தெரியாது. போலீஸ் டாகுமென்ட்ஸ், அவர்கள் தயாரித்த இவன் அந்த கேங்க் என்பதற்கான ஃபேக் எவிடென்ஸ் என எல்லாம் சேர்ந்து  நிக்கிதான் முக்கிய தலைகளை மாட்டிவிட்டு விட்டான் என எல்லோரும் நம்புகிறார்களாம்.

“மாஃபியாஸ் பொதுவாக ரிவெஞ்சிங் நேச்சர்ட்….எதிரியையும் அவன் ஃபேமிலியையும் மொத்தமா காலி செய்திடுவாங்க….அதனால் கவனமா இருங்க…உங்க ஃபேமிலியை விட்டுவிலகி இருங்க” ன்னு இவனுக்கு அட்வைஸ்.

அட பாவிகளா? எவ்ளவு காலமா அப்டி இவன் ஒழிய முடியுமாம்?

“அந்த மாஃபியா அண்ட் சன்னை எக்‌சிக்யூட் செய்ற வரைக்கும் தலை மறைவா இருந்தா போதும்…. அதுக்கு பிறகு ரிவெஞ்ச் எடுக்கன்னு வர்றதுக்கு அந்த மாஃபியா ஃபேமில ஆள் இல்லை…மாஃபியாவுக்கு ஒரே சன்தான்” என்றது அஃபீஷியல் ஹெட்.

ஆக அந்த அப்பாவுக்கும் மகனுக்கும் மரணதண்டனை நிறை வேற்றப் படுமளவும் இவனுக்கு சபதடிகல் லீவ். நிக்கிக்கு அந்த மாஃபியா பூச்சாண்டி ஒன்றும் பயமாக இல்லை….யூஎஸ்ல இருந்து கிளம்பி இந்தியா வந்தெல்லாம் எவனும் எதையும் செய்யப் போவதில்லை என்று எண்ணம்…

இருந்தாலும் முடிந்தவரை அடுத்தவர் கவனத்தை தன்னை நோக்கி இழுக்காத ஒரு லைஃப் ஸ்டைலில்,  ரிலாக்‌ஸாக தான் இருந்தான்.

ஆனால் அவன் நினைத்தது போல் நடந்து கொள்ளவில்லை அந்த மாஃபியா கும்பல். அடுத்து நடந்த விபரீதங்கள் அவன் குடும்பத்தை நிரந்தரமாய் பிரிந்து, இவனை இந்த நிலைக்கு தள்ளிய ஒரு கூட்டத்தை  இன்வெஸ்டிகேட் செய்யவென திரும்பவுமாய் யூஎஸ் போக வைத்தது. இப்போதும் அந்த கூட்டத்தினர் இந்தியாவில் செய்யும் ஆட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வேலை இவனது. அதில் இவனது கோ வொர்கர் சர்வன்.

“உலகத்துக்கு நாங்க ஏதோ ஒரு வேலை செய்றதா காமிச்சுகிடனும்…. சர்வனுக்கு இந்த  மிஷன் அவரோட பாஷன்….மத்தபடி அவர் பிஸினஸ் பேக்ரவ்ண்ட்ல இருந்து வந்தவர்தான்…. இன்டியால இருக்கனும்னு வேற அவருக்கு ஆசை….சோ இங்க பிஸினஸ் செட் செய்து பிஸினஸ்மேன் லைஃப்……

எனக்குதான் பேக்ரவ்ண்ட்னு ஒன்னு இல்லாம போச்சே…… சர்வன் ஆஃபீஸ்ல உன்னைப் பார்க்கவும் எனக்கு பாடலாம்னு தோணிச்சு….அப்ப நான் கம்போஸ் செய்த சாங்ஸைப் பார்த்துட்டு சர்வனும் அவன் வைஃபும் பிடிவாதமா அதை ஆல்பமா ரிலீஸ் செய்தாங்க….அது பயங்கர ஹிட்… அப்டித்தான் நான் மியுசிஷியனானது…. என் எல்லா சாங்ஸும் உன்னைப் பத்தி மட்டும் தான் இருக்கும்….”

You might also like - Vasantha Bairavi.. A family drama story 

அவன் இயல்பாய் பேசிக் கொண்டிருக்க அவனை இறுக்கி அணைத்து அவன் மார்பில் புதைந்திருந்தவள் அழுது கரைந்து கொண்டிருந்தாள்.

“ விஷயத்தை அம்மா அப்பா உட்பட யார்ட்டயும்  சொல்லக் கூடாதுன்றது அக்ரிமென்ட்….அதுக்கான ரீசன் உனக்கே புரியும்…கவர்மென்ட்ட நம்ம வெட்டிங்கை இன்ஃபார்ம் செய்து…..அவங்க உன்னை அப்சர்வ் செய்து ஹார்ம்லெஸ்னு இப்ப பெர்மிஷன் கொடுத்த பிறகு தான் உன்ட்ட இதை ஷேர் செய்றேன்….அதான் முன்னாலயே இதை சொல்லலை.”

அவளது இறுகிய பிடி அவனுக்கு பகர்ந்தது நன்றி.

சற்று நேரம் சூழ்நிலையின் ஆழத்தில் மௌனத்தில் கரைய…. “காலைல இருந்து நீ வெளியவே வரலை…..உன் அப்பாவுக்கு நீ சதீஷ் பேசுனதை கேட்டுட்டன்னு விஷயம் புரிஞ்சிருக்கும்… ஆனா உன் அம்மா, அவிவ்லாம் பத்தி கொஞ்சம் யோசிச்சுப் பாரு….சாப்டுட்டு வெளிய போய் எல்லோரையும் பார்த்துட்டு வரலாம் வா…”

நிக்கி சொன்ன பிறகுதான் அவளுக்கு இதெல்லாம் உறைக்க அவசர அவசரமாக எழுந்து குளித்து ஃப்ரெஷ் அப் செய்துவிட்டு வந்தாள். அவனது வற்புறுத்தலுக்காக முதலில்  சாப்பிட்டவள் தன் அம்மாவையும் மகனையும் தேடிச் சென்றாள்.

இவளைப் பார்க்கவும் அம்மா முகம் மலர்ந்ததை பார்க்க வேண்டுமே…. ஒரு வழியாய் அம்மாவை சமாளித்து மகனோடு சற்று ஆடிவிட்டு…  …எல்லோருக்குமாக பழம் எடுக்க கிட்செனுக்கு போனாள்.

டைனிங் டேபிள் மேலிருந்த ஆப்பிள்களை எடுத்து இவள் தோல் சீவ தொடங்க அவளை இடையோடு அணைத்து அவள் தோள் மீது முகம் இறுத்தி அவள் கன்னத்தில் தன் கன்னம் வைத்து அவன்…

முதல் கணம் எதிர்பாராத நிகழ்வில் அதிர்ந்தாலும் மறுகணம் மௌனமாய் அதை ரசித்தாள்….   “ஃப்ரிஜ்ல பூ இருக்குது நிலா துண்டு…” மென்மையாய் ஆசையாய் அவன்.

“…………………”

“இன்னைக்கு உனக்கு ஓகேனா வச்சுக்கோ……எதுனாலும் உன் இஷ்டம் தான்….” மனைவியின் முடிவுக்கு விட்டான் அவன்.

“அது….அது இப்ப வேண்டாம் நிக்கி” திக்கி திணறி சொன்னாள் இசை.

“ஏன்டா…..? இந்த சிச்சுவேஷன் மாற காத்திருக்றதுல அர்த்தமே இல்லை….விரும்பினாலும் விரும்பலைனாலும் இந்த சிச்சுவேஷன் கடைசி வரை இருக்குமே…இது என் ப்ரொஃபஷன்….” அவளை கட்டாயபடுத்துவதாக நினைத்துவிடக் கூடாது என அவன் நினைப்பது அவன் குரலில் தெரிந்தது.

“அதுக்கில்ல நிக்கி….ஏதோ வகையில் என் மேரேஜ் லைஃப்க்காக அக்கறைபட்ட ரெண்டு பேர் இன்னைக்கு நிம்மதியா இல்லை….நான் நகலை பார்த்து கஷ்டபட்ட மாதிரி…..உண்மைய பார்க்காம கஷ்டபடுறாங்கன்னு தோணுது…..அவங்க மொத்த லைஃபை என்னால மாத்தி அமைச்சுடலாம் முடியாதுதான்….ஆனா அவங்கட்ட பேச முடிஞ்சதை பேசி, என்னால முடிஞ்சதை செய்துட்டு  வந்துட்டா கூட எனக்கு ஒரு வகையில நல்லா இருக்கும்….அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்னு  உங்களுக்கு இது ஃபூலிஷ் சென்டிமென்டா பட்டா…..” சொல்லியவள் தயங்கி நிறுத்தினாள். “ உங்க முடிவுதான் என்னுதும்…” தரை பார்த்து முனங்கினாள்.

“எதுனாலும் உன் இஷ்டம்னு சொன்னேன்….” அவன்  அழுத்தமாய் சொன்னான்.

மறு நாள் இசையின் பெற்றோர் விடை பெற அவிவை அவர்களுடன் அனுப்ப மறுத்த இசை அதற்கு அடுத்த நாள் அவிவை வைத்தே சதீஷுக்கு வலை விரித்தாள் நிக்கியின் ஆலோசனைப்படி.

வா சதீஷ் வா….வந்து மாட்டிக்கோ…..

Friends ஃஸ்டோரி நாட் புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்……இந்த ஷார்ட் அப்டேட்காக சாரி….இன்னும் ஒன் ஆர் டூ அப்டேட்டில் நகல் நிலாவை முடிச்சிடுவோம். தொடர்ந்து படித்து உங்கள் கருத்துக்களை பகிருங்கள். நன்றி

தொடரும்

Episode # 10

Episode # 12

{kunena_discuss:878}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.