(Reading time: 13 - 25 minutes)

" துக்கு பின்னாடி நிறைய மனமாற்றமும் நடந்துருக்குன்னு சொல்லுறேன் அருள் ... அதுக்கு காரணம் வானதியின் பிரிவு தான் அருள்... உங்களுக்கு நடந்தது எல்லாமே தெரியும்னு நினைக்கிறேன் ... வானதி வீட்டை விட்டு வந்திருந்தாலும் , அவ தோழி மூலமா , பண விஷயத்தில் உதவிகிட்டு தான் இருக்கா .. ஆனா , பணம் மட்டும் அவங்களை சந்தோஷப்படுத்திடுமா அருள் ? "

"..." 

" இதபத்தி வானதிகிட்ட பேசும்போது , அவ பிடி கொடுக்கவே இல்லை.. ரொம்ப கோபப்பட்டா... அவ மனசு மாறுறவரை  நாங்க இப்படித்தான் இருப்போம்னு கவிமதுரா முடிவெடுக்க உங்க இஷ்டம்ன்னு  சொல்லிட்டா அருள் ... "

" நான் பாத்துக்குறேன்  கிரி "

" அருள் ???"

" தேங்க்ஸ் .. இப்படி சொல்லி அவ வாயை அடைச்சதுக்கு ... பட் கவலையே வேணாம் ... என் நதி பத்தி எனக்கு தெரியும் ... நானே இதை சரி பண்ணுறேன் " என்றிருந்தான் அருள் ...என்னடா செய்ய போறன்னு  சத்யா கேட்டும்  பதில் சொல்லாமல் சிரித்து வைத்தான் .. ஒரு வாரமாய் இதைப்பற்றி யோசித்து இதோ இன்று வானதியை அவர்களது வீட்டிற்கு   அழைத்து செல்கிறான் அவளுக்கே தெரியாமல் ! வானதி என்ன பண்ண போறா ? இது ஷாக் நம்பர் 1 ... ஹீ ஹீ 

You might also like - Ullamellam alli thelithen.. A sweet romantic story 

ந்தோஷ் சொல்லி இருந்தது போல கோவிலில் காத்திருந்தாள்  சாஹித்யா .. எத்தனை நேரம் ஆகியும் அவனை காணவில்லை .. கோபமாய் அவள் போனை எடுக்க சந்தோஷே அழைத்தான் ..

" ஹே பொண்டாட்டி "

" சந்தோஷ் எங்க இருக்கீங்க ?"

" வாசல்ல கார் ல இருக்கேன் ..சீக்கிரம் வா ?"

" ம்ம்ம்ஹ்ம்ம் நான் வர மாட்டேன் .. நீங்க இறங்கி வாங்க "

" வா சதும்மா "

" சாமி கும்பிடலையா ?"

" அடடா.. நாம கோவிலுக்கு தான் போறோம் .. ஆனா வேற கோவில் "

" வேற கோவிலா ?"

" கொஞ்சம் கார்ல ஏறி என் பக்கத்துல உட்கார்ந்துகிட்டே இந்த கேள்வியை கேளேன் பேபி ..நேரம் ஆச்சு சீக்கிரம் "

" வரேன் வரேன் "  காலை உதைத்து கொண்டு இரண்டடி வைத்தவள் தன் சிறுபிள்ளை  தனத்தை நினைத்து சிரித்தாள் .. (கடைசியாய் ! )

காரில் ,

" ரொம்ப லேட் ஆகுது சந்து ! அப்படி என்ன ஊர் உலகத்துல இல்லாத கோவில் ... இவ்வளவு தூரமா போகனுமா ? அம்மா என்னை கொன்னு  போட்ருவாங்க ... போனையும் வாங்கி வெச்சுகிட்டிங்க  .. ஏன் பா ?"

" ஷ்ஷ்ஷ்ஷ்..அரைமணி நேரமாய் உன் கேள்விக்கு நான் பதில் சொன்னேனா சத்யா ? அப்போ இனிமே மட்டும் எப்படி செய்வேன் ? கொஞ்சம் நேரம் அமைதியா வா "

முகத்தை தூக்கி வைத்து கொண்டு சாலையில் பார்வையை பதித்தாள்  சத்யா ... மிக அழகாய் இருந்தது அந்த சாலை ..

" இது என்ன இடம் சந்து ? ரொம்ப அழகா இருக்கு !" ... பதிலே இல்லை அவனிடம் ..

"ஹும்கும்ம்ம்ம் .... " என்று முகத்தை திருப்பினாள்  சாஹித்யா .. அந்த கோவிலின் முன் காரை நிறுத்தினான் சந்தோஷ் .. யாராலும் அதிகம் பராமரிக்க படாத கோவில் என்று பார்த்ததுமே தெரிந்தது .. அங்கங்கு சிலந்தி வலை பின்னி இருந்தது ..கண்களில் மிரட்சியுடன்  பார்த்தாள்  சாஹித்யா ..

" இதுதான் நீங்க சொன்ன கோவிலா ?"

" ம்ம்ம் இறங்கு "

" இங்க எப்படி சாமி கும்பிடுறது ?"

" ஏன் கடவுள் தான் தூணிலும் இருக்கார் , துரும்பிலும் இருக்காரே " என்றான் சந்தோஷ் நக்கலாய் .. வாயை மூடி கொண்டாள்  சாஹித்யா ...

அந்த கோலத்திலும் கலையாத புன்னகையுடன் நின்றார் வேல்முருகன் .. முருகனின் வதனத்தை மனதிற்குள் நிறைத்து கொண்டாள்  சாஹித்யா ..

" சரியோ தப்போ என்  வாழ்க்கையில் எது நடந்தாலும் நீயே பார்த்துக்க முருகா " என்று மனமுருக வேண்டிய நேரம் அவள்  தோளில்  பாரம் ஏறியது போல தோன்றவும் மெல்ல பட்டென கண்விழித்தாள்  சாஹித்யா .. தங்கச்சங்கிலியுடன் இணைத்திருந்த மாங்கல்யம் , கும்பிட்டு கொண்டிருந்த அவளது கரம் மீது தவழ்ந்தது .. அவன் அவளுக்கு  பொன் தாலி சூட்டி இருந்தான் ... அதிர்ச்சியாய்  அதை தொட்டு பார்த்து நிமிர்ந்தாள்  சாஹித்யா ... சந்தோஷ் அவள் முன்பு தலைகுனிந்து நிற்க, "பளார்" என்று அறைவிடும் சத்தம் கேட்டு நிமிர்ந்தான்  சந்தோஷ் .. சத்யா தன்னைத்தானே , இருக்கும் ஷக்திஎல்லாம்  ஒன்று திரட்டி அறைந்திருந்தாள் ..

" சத்யா என்ன இது முட்டாள்தனம் ?"

" உன்னை நம்பி தனியா வந்த நான் முட்டாள்தானே ? அதுக்கு இது சரிதான் .. என்னை நானே கொன்னால் கூட தப்பே கிடையாது " என்று கத்தினாள்  சத்யா .. விழிகள் இடுங்க சத்யாவை பார்த்தான் சந்தோஷ் ..

தவம் தொடரும்

Episode # 19

Episode # 21

{kunena_discuss:838}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.