(Reading time: 15 - 29 minutes)

ரி என்று தேர்வு செய்ய சென்றார்கள். சுந்தரம் ஆதியின் அருகில் வந்து “ஆதி, வைரம் எல்லாம் வாணிக்கு வேண்டாம் பா. இன்னும் சில நகை செட்டுகள் வேறு வாங்க வேண்டும். என்னிடம் அவ்வளவு பணம் இல்லை. அதிதிக்கு வேண்டுமானால் எடுத்துக் கொள்ளட்டும் “ என்று கூற,

“ஏன் மாமா .. பணத்தை பற்றி பேசுகிறீர்களே? அதிதி, என் தங்கை என்றால், வாணியும் என் தங்கைதானே .. இந்த நகைகளுக்கு நான் தான் கொடுக்க போகிறேன். இது இரண்டு குடும்பத்துக்கும் மூத்த மகனாக நான் செய்யும் கடமை.” என்றான்.

இதைக் கேட்டு கொண்டிருந்த எல்லோரும் நெகிழ்ந்தனர். வாணி ஆதியின் அருகில் வந்து “தேங்க்ஸ் & சோ ஹாப்பி மாமா “ என்று கூற, ஆதி அவள் தலையை தடவி சமாதான படுத்தினான் .

“ஏன் வாணி , ஏதோ புகையும் வாசனை வரவில்லை “ என்று சூர்யாவைப் பார்த்து கூற, வாணியோ “அது என் அக்காவிடமிருந்துதான் மாமா “ என, மதி அவளை அடிக்க என்று வேடிக்கை நடந்தது.

இப்போது வாணியும், அதிதியும் நகை தேர்வில் ஈடுபட, மதியின் காதில் “ஏன் மதி, உன்னை அப்படி அணைக்கவில்லை என்று பொறாமையா?” என்றான் ஆதி.

திகைத்து விழித்த மதியைப் பார்த்த ஆதி சிரித்துக் கொண்டே, தோளோடு அணைத்தார் போல் “வா.. உனக்கும் பார்க்கலாம் “ என்றான்.

மதி “எனக்கு எதற்கு? அவர்கள் தானே மணப்பெண்கள்”

“ஏன் உன் நாத்தனார், தங்கை கல்யாணத்தில் நீ மட்டும் ஜொலிக்க வேண்டாமா “

“ஏன் .. நான் ஜொலிக்க வேண்டும்”

“நான் பார்த்து ரசிக்கத்தான்” என்று கண்ணடித்து கூற, மதியின் முகம் மதி முகமானது.

இவர்களிடம் ஒரு காதை வைத்திருந்த சூர்யா “அண்ணா... கிளப்பற போ.. எனக்கும் கொஞ்சம் சொல்லி குடேன்”

You might also like - Nagal nila... A suspense filled story 

“ஏய்.. போ .. வேலையை பாரு.. என்று விரட்டினான் ஆதி. பெரியவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்கள்.

ஒரு வழியாக நகை கடை வேலை முடியும் நேரம், நேராக பிரகாஷ் ஆதியிடம் , ”மச்சான் அதிதியை அழைத்து கொண்டு வெளியில் சென்று வருகிறேனே .. ப்ளீஸ் பெரியவர்களிடம் சொல்லுங்களேன்” என்றான்.

“மாப்பிள்ளை .. உங்களுக்கும் நான் தான் கிடைத்தேனா? பெரியவர்கள் எல்லோரும் சேர்ந்து என்னை டின்னு கட்ட போறாங்க பாருங்க.. “

“ப்ளீஸ் மச்சான். நீங்க சொன்ன கேட்பாங்க... “ என, அருகே வந்த சூர்யாவோ “அண்ணா, காலையிலேயே டீல் போட்டுத்தான் வந்திருக்கேன். அதனால் பெர்மிசன் வாங்கி கொடு.. அப்படியே நீயும் கொஞ்ச நேரம் அண்ணியோடு என்ஜாய் செய். “ என,

“அடிங்க.. எல்லோரும் போய்ட்டா, யாரு ஆபீஸ் போறது... நான் சொல்றேன் , ஆனா ஒரு மூன்று மணி நேரத்திலே வந்திடனும் , மாப்பிள்ளை நீங்க அதிதியை இருட்டுறதுக்கு முன்னாடி வீட்டில் விட்டுடுங்க. சூர்யா நீ 5 மணிக்கு வாணிய வீட்டில் விட்டு நேர நம்ம போரூர் சைட்டுக்கு வந்துடு. நானும் அங்கேதான் இருப்பேன்”

சூர்யா முனகிக் கொண்டே நகர, ஆதி “என்ன அங்க முணுமுணுப்பு ?” என்றான். அவனை பார்த்து அழகு கட்டிக் கொண்டே நகர்ந்தான்.

இரு வீட்டு பெரியவர்களிடம் சொல்லி அவர்களை அனுப்பி வைத்தவன், ஆதி வந்த வண்டியில் பிரகாஷ், மதி மற்றும் ஆதியின் அம்மா, அப்பாவை கொண்டு அவரவர்கள் வீட்டில் விட்டு தங்கள் வீட்டிற்கு வந்தான்.

மதிய உணவு முடித்து கொஞ்ச நேரம் தன் அம்மா அப்பாவிடம் பேசிக் கொண்டிருந்தான்.

“அப்பா ... நீங்கள் ஊருக்கு பத்திரிகை கொடுக்க என்றைக்கு போகிறீர்கள் .. நீங்கள் முடித்து விட்டு வந்தால் நாங்கள் லோகலில் கொடுக்க ஆரம்பிக்கலாம்”

“இன்னும் இரண்டு மூன்று நாளில் மதியின் பாட்டி சுந்தரம் வீட்டிற்கு வருகிறார்கள். அவர்களை வாணிக்கு துணை வைத்து விட்டு .. நாங்கள் நால்வரும் கிளம்புகிறோம்.”

அங்கே எத்தனை நாட்கள் ஆகும் பா?

மூன்று அல்லது நான்கு நாட்கள் ஆகும்.

இல்லை. வாணியை வேண்டுமானால் அங்கே தனியாக இருப்பதற்கு இங்கே வரசொல்லி விடலாமல்லவா,

வேண்டாம் பா.. இதுவரை வேறு. நிச்சயம் செய்த பின் அவளை முறைப்படிதான் நம் வீட்டிற்கு அழைத்து வர வேண்டும். வேண்டுமானால் மதியை வேண்டுமானால் அங்கே இருக்க சொல்.

ஆதி திகைத்து விழித்தான். அவர்கள் இருவரும் சரியாக பேசாமல் இருந்தாலும், இவர்கள் திருமணம் முடிந்ததிலிருந்து , மதி அந்த வீட்டை விட்டு சென்றதில்லை. அவர்கள் அம்மா, அப்பா தான் வந்தார்களே தவிர, இவள் சென்றதில்லை. மதிக்கு தெரியாவிட்டாலும், ஆதியின் நாள் தொடக்கமே, மதியின் முகத்தில்தான் இருக்கும். அவனுக்கு அவளை அனுப்ப மனதில்லை.

“இல்லை அம்மா. இங்கே அதிதி தனியாக இருப்பாளே.”

“அவளுக்குத்தான் நீங்கள் இருவரும் துணை இருக்குறீர்களே? வாணிதான் பாவம். தனியாக இருப்பாள்.

ஆதி என்ன சொல்வது என்று தெரியாமல் முழித்தான். அப்போது மதிதான் “இருக்கட்டும் அத்தை. அங்கே பாட்டியோடு அத்தையும் வருகிறர்கள். அதனால் பயம் இல்லை. வாணிக்கும் பெரும் பாலும் ஷாப்பிங்க்கு தான் சரியாக இருக்கும். நான் வேண்டுமென்றால் தினமும் பகலில் ஒரு தடவை பார்த்து விட்டு வருகிறேன்” என்றாள்.

“நல்ல பொண்ணும்மா நீ.. அவனே அனுப்ப யோசிப்பான். நீ வேற..” என்று விட்டு உள்ளே சென்றார்.

“தேங்க்ஸ் மதி. நான் என்ன சொல்ல என்று தவித்தேன்.”

“ஏன் சார்.. நான் எங்க அம்மா வீட்டுக்கு போனால் உங்களுக்கு என்ன தவிப்பு?” என்று சிரித்துக் கொண்டே வினவ,

ஆதியோ யோசிக்காமல் “நீ இல்லாமல் நான் எப்படி “ ஆரம்பித்தவன், சற்று சுதாரித்து “நீ இல்லாமல் அதிக்கு கஷ்டமாக இருக்கும். அதான். என்னதான் நாங்க இருந்தாலும் லேடீஸ் துணை வேணும் இல்லியா? என்று சமாளித்து “ஆமாம், நீ என்ன நினைச்ச? “ என்றான்

மதியும் சுதாரித்து “நானும் அதேதான் நினைச்சேன்” என்றாள்,

“அதேதான் என்ன?”

நீங்க என்ன நினைச்சீங்களோ அதுதான். “

இருவரும் முடிவில் சிரித்தனர். பிறகு “மதி, வாணி கல்யாணம் முடியும் வரை வேலைக்கு வர வேண்டாம்னு சொல்லிடு. அதிக்கும் சொல்லிடு. அதியின் வேலையை யாரிடமாவது வீட்டிற்கு எடுத்து வர சொல்லி பார்க்க சொல். இல்லை சூர்யாவிடம் கொடுத்தனுப்ப சொல், “

மதி சரி எனவும் , அவன் “நான் ஆபீஸ் கிளம்புகிறேன். நைட் வர லேட் ஆகும். “

“இப்போதான் உடம்பு சரியாகி இருக்கு. ரொம்ப ஸ்ட்ரைன் பண்ணாதீங்க.”

“சரிங்க மேடம். அப்புறம் “ என சிரித்துக் கொண்டே வினவ, அவள் ஒன்றுமில்லை என தலையாட்டினாள்.

தி காரில் போகும்போது அவன் மனம் “சூர்யா, அதிதி கல்யாணம் வரைக்கும் தாக்கு பிடிக்கிறது கஷ்டம் போலே இருக்கே ஆதி. இப்போவே என் வினுவை ஏதோதோ செய்யணும்னு தோணுது. “ என்று புலம்பியது,.

ஆதி தன் பத்மா அத்தையை பற்றிய உண்மையை ஓரளவு கண்டு கொண்டான். ஆதிக்கு சுந்தரம் மாமாவை பற்றி அவ்வளவு கவலையில்லை. எப்போது மதியோடு திருமணத்திற்கு அவனிடம் கேட்டாரோ அப்போதே அவருக்கு தன் மேல் எந்த வருத்தமும் இல்லை என்று புரிந்து கொண்டான். ஆனால் மதியின் அம்மாவோ முதலில் சம்மதிக்கவில்லை என்று கூறியது அவனுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியிருந்தது. அந்த சிறு வயது சம்பவத்தில் அவன் மேல் மீனாட்சி அத்தைக்கு வருத்தமோ, கோபமோ என்று வேதனைப் பட்டது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.