(Reading time: 15 - 29 minutes)

ல்லா விட்டால் ஏன் அன்றைக்கு மறுநாள் அவனிடம் யாரும் சொல்லாமல் சென்றார்கள்? அப்படி தன்னை தவறாக நினைத்தவர்கள் இப்போது எப்படி மாற்றிக் கொண்டார்கள், இதெல்லாம் தெரிய வேண்டியிருந்தது.

அவனை தவறாகத்தான் நினைத்தார்கள் என்று தெரிய வந்தால் தன்னால் இப்படி சந்தோஷமாக இருக்க முடியாது. அதனால் தான் அதை கேட்பதை திருமணம் வரை தள்ளிப் போட்டிருக்கிறான்.

அங்கே மதிக்கோ அவன் சமாளித்த விதமே மனதில் ஓடியது, ஆதி என்னை ஏற்றுக் கொள்ள ஆரம்பித்து விட்டாரா? என்று விண்ணில் பறந்தது மனது. ஆதியின் வினு என்ற அழைப்பிற்காக காத்திருக்க ஆரம்பித்தாள்.

முடிவு செய்தபடி, சுந்தரம், மீனாட்சி, ராகவன், ஜானகி நால்வரும் ஊருக்கு கிளம்பினர். மணமக்கள் எல்லோரும் ஷாப்பிங்கில் பிஸியாக இருக்க, மதியும் அதி, வாணியோடு எல்லா இடத்திற்கும் சென்றாள். ஆதிக்கு அலுவலக வேலையோடு, அலுவலகம் சம்பந்தப்பட்டவர்களுக்கு இரண்டு திருமண அழைப்பிதழ் அனுப்புவது, காண்ட்ராக்ட்காரர்களிடம் மெனு பைனலைஸ் செய்வது என்று பிஸியாக இருந்தான்.

You might also like - Rose and Thorn... Free English romantic story 

மண்டபம் பிரகாஷ் வீட்டினரது என்பதால், அதில் செய்ய வேண்டிய அலங்காரங்களை மனமக்களோடு கலந்து முடிவு செய்தான். தொழில் முறையில், உறவில் வருகிறவர்கள் தங்க ரூம் ஏற்பாடு செய்தான்.

சூர்யாவும் மணமகன் ஆனதால், அவனை அதிகம் அலைய விடாமல், பார்த்துக் கொண்டான். ஆதி வீட்டிற்கு லேட் ஆக வருவதால், ஷாப்பிங் முடித்து விட்டு மதி, வாணி, அதிதி மூவரும் மதியின் வீட்டிற்கு சென்று வெகு நேரம் அரட்டை அடித்துவிட்டு, சூர்யா வந்து அவர்களை அழைத்து செல்லும் வரை இருந்தார்கள்.

சூர்யாவிற்கு இதுதான் சாக்கு என்று, வாணியோடு கொஞ்ச சற்று நேரம் கிடைத்தது என அவனும் தாமதமாகவே அவர்களை அழைத்து வருவான்.

இரு வீட்டு பெரியவர்களும் ஊரில் இருந்து வந்த பிறகு நிற்க நேரமில்லால் வேலைகள் ஆரம்பித்தது.

பிரகாஷ் அதிதிக்கு பிடித்த மாதிரி தன் வீட்டில் அவர்கள் தங்கும் பகுதியை மாற்றி அமைக்க முடிவு செய்து அதிதியை தன் வீட்டிற்கு வருமாறு கேட்டான். முறைப்படி திருமணத்திற்கு பின் அழைத்து வருவதுதான் சரி என்று வீட்டினர் கூறி விடவே, சூர்யா வந்து அந்த பகுதியை பார்த்து விட்டு அதியிடம் சொன்னான்.

அதற்கேற்ப உள் அலங்காரங்கள் மற்றும் தேவையான மாற்றங்களை அதிதி கூற, இவர்கள் கம்பனியே அந்த வேலையை முடித்து கொடுத்தனர்.

பகலில் அதிதியோடு ஷாப்பிங் சென்ற மதி, மாலையில் ஆதியோடு பத்திரிகை வைக்க சென்றாள். ஆதியோடு செல்லும் போது இப்போதெல்லாம் இருவரும் ஒருவர் காலை மற்றவர் வாரி விட்டுக் கொண்டனர்,

அதிதி தன் டான்ஸ் ஸ்கூல் பிரெண்ட்ஸ் மற்றும் டீச்சருக்கு நேரில் பத்திரிகை வைக்க விரும்பவே மதியை அழைத்து சென்றாள். மற்ற பிரெண்ட்ஸ் எல்லாருக்கும் தபாலில் அனுப்பி விட்டாள். முக்கியமான பிரெண்ட்ஸ் எல்லாருக்கும் போனில் அழைப்பு விடுத்தாள்.

மதி அவள் டான்ஸ் ஸ்கூல் சென்றதும் அவளுக்கு தன்னை அறியாமல் கால்கள் ஆட தோன்றின. கிளாஸ் ரூம் தவிர ஒரு ஹாலில் சி.டி. பிளேயர் ஒன்று இருக்க, மதி அதிதியிடம்

“ அதி, நாம் இருவரும் கொஞ்ச நேரம் இங்கே டான்ஸ் பண்ணலாமா ?” என்று கேட்டாள்.

“அண்ணி, உங்களுக்கு டான்ஸ் தெரியுமா?

“ஹ்ம்ம். எட்டு வருடம் கற்றுக் கொண்டிருக்கிறேன்.

“சரி வாருங்கள்”

யாரும் எதுவும் சொல்ல மாட்டார்களா?

“ஒன்றும் சொல்ல மாட்டார்கள். இது என்னைப் போல் பழைய ஸ்டுடென்ட்ஸ் வரும்போது பரக்டிஸ் செய்வதற்கு, மேலும் எங்கள் மேடம் இங்கேதான் ப்ராக்டிஸ் செய்வார்கள். “

“சரி வா. “ என்று கூறி விட்டு, அதிதி பாட்டு போட, இருவரும் டான்ஸ் ஆடினார்கள். அரை மணி நேரம் கழித்து நிறுத்தியவர்கள், சற்று நேரம் அமர்ந்தார்கள்.

அப்போது டான்ஸ் டீச்சர் வர, அதிதியும், மதியும் வணங்கினார்கள்.

“வணக்கம் மேடம். நான் வெண்மதி. அதிதியின் அண்ணி. அதிக்கு திருமணம். அவசியம் வர வேண்டும்” என்று கூற,

“கட்டாயம் வெண்மதி. உன்னுடைய நாட்டியம் நன்றாக இருந்தது. “ என்று கூறி விட்டு, அவள் குரு பற்றியெல்லாம் கேட்டார். இருவருக்கும் டீ வரவழைத்து கொடுத்தார். சற்று நேரம் பேசி விட்டு இருவரும் கிளம்பினார்கள்.

வரும் வழியில் “அண்ணி, எங்கள் சங்கீத் , மெகந்தி பங்க்ஷன் போது நீங்களும் டான்ஸ் பண்ண வேண்டும்.” என்றால் மதி.

“வேண்டாம் அதிமா. நீங்கள் எல்லோரும் ஆடுங்கள். நான் பார்க்கிறேன்.”

“அதெல்லாம் முடியாது நீங்கள், நான், வாணி மூன்று பேரும் ஆடுகிறோம். வாணிக்கு பரத நாட்டியம் தெரியுமல்லவா”

“தெரியும். அவளும் கற்றுக் கொண்டாள். ஆனால் நான் எதற்கு”

“நாம் மூவரும், யாருக்கும் தெரியமால் சர்ப்ரைசாக ஆடலாம். ப்ளீஸ் அண்ணி” என்று கெஞ்ச அவளின் மனம் வாட பொறுக்காத மதி, சரி என்றாள். என்ன பாட்டு என்றெல்லாம் பேசியவர்கள், பயிற்சியை ரகசியமாக செய்தார்கள். தினமும் ஒரு அரை மணி நேரம் இவர்கள் டான்ஸ் ஸ்கூல் க்கு சென்று அங்கேயே பயிற்சி செய்தார்கள். அவரவர்கள் துனைவர்களிடம் கூட சொல்லவில்லை.

ஹாய் பிரெண்ட்ஸ்,

நீங்கள் எல்லோரும் எதிர்பார்த்தது போல் மதியின் F.B யை இந்த எபிசோடில் கொடுக்க முடியவில்லை. அது தெரிவதற்கு முக்கியமான இரு நபர்கள் தேவை. அதுதான் ஜானகி மற்றும் மீனாட்சி அம்மாக்கள்தான். அவர்கள் திருமண ஏற்பாடுகளில் பிஸியாக இருப்பதால் F.B யை தள்ளி போட்டிருக்கிறோம்.

மேலும் அடுத்த எபிசோடில் மெகந்தி & சங்கீத் பங்க்ஷன் காத்திருப்பதால் நம்ம சில்ல்சீ பிரெண்ட்ஸ் எல்லோரையும் அதற்கு அழைக்கிறேன். முக்கியமாக “திவ்யா மேடம்“ உங்களுக்கு ஸ்பெஷல் அழைப்பு. வாங்க கலக்கலாம்.

தொடரும்

Episode # 13

Episode # 15

{kunena_discuss:903}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.