(Reading time: 9 - 18 minutes)

ம்ம்ம்  அப்புறம்... ...

உன் மூளைய டெஸ்ட் பண்ணேன் பரவா இல்லை நீ பாஸ் ஆய்ட்ட

நீ மொதல்ல எக்ஸாம் ல பாஸ் ஆகு டி அப்புறம் எனக்கு நீ டெஸ்ட் வைக்கலாம் .

அதோட மூளை இல்லாத நீ என் மூளைய டெஸ்ட் பண்றியா இது எப்டி தெரியுமா இருக்கு புளி எலுமிச்ச பலத்த பாத்து நீ ரொம்ப புளிக்கற னு சொல்லுச்சாம் அந்த கதையா இருக்கு

கன்னத்தில் கையூன்றி வேடிக்கை பார்த்த மற்ற இருவரையும் ஒரு பார்வை பார்த்தவள் அவனிடம் திரும்பி 

டேய், நீ ரொம்ப பேசுற அடக்கி வாசிக்கல உன் அரளிக் காய் மேட்டர அவுத்து விட்ருவேன் .

மேலும் சுவாரஸ்யம் கூட அது என்ன எப்ப பார்த்தாலும் அவன அரளிக்காய் னு சொல்லி ஆப் பண்ற அது என்ன சொல்லு கேப்போம்- சந்தியா .

ஹேய், சந்து அவ எதோ சொல்றான்னு நீயும் கூட எதோ கத சொல்லற மாறி கேட்டுட்டு இருக்க அது எதுனா பீலா விடும் அத விடு.

அது எப்டி விடலாம் நீ என்ன மூளை இல்லாதவனு சொன்னீல அதுக்கு இது தான் பணிஷ்மன்ட் . அந்த கதைய சொல்லியே தீருவேன் . இருக்கையில் நன்றாக காலை மடக்கி அமர்ந்து கொண்டாள் .

அது ஒரு கனா காலம்.

நீ அந்த   ஸ்கூல்ல சேர்ந்தப்ப நடந்தது. 

இவன் 8த்  படிச்சிட்டு இருந்தப்போ இவன் கிளாஸ்ல ஒரு நியூ ஸ்டுடென்ட் சேர்ந்தா . 

கொஞ்ச நாளாவே  அவளுக்கு இந்த சார் மேல கண்ணு இவர் போற இடம்லாம் வாறதும் போறதுமா ஒரு மினி லவ் ஸ்டோரியே  ஓடிருக்கு . ஒரு கட்டத்துல அந்த அம்மா அவளோட ப்ரண்ட் கிட்ட அவன் எனக்கு கிடைக்கலனா இந்த அரளிக்காய அரச்சி குடிச்சி செத்துருவேன்னு  சொல்லி இருக்கா.

அரளிக்காயா ? அது ஸ்கூல்ல எங்க இருக்கு... எனக்கு தெரியாம -சந்தியா

நாங்க படிக்குற வரைக்கும் பார்க்கவே இல்லையே-காவ்யா

அதுவா .. குட்டியா கோலிகுண்டு சைஸ்ல ஒரு காய் இருக்குமே அத தான் மகா ராணி அரளிக்காய்னு சொல்லிருக்கா.....

ஓஹ்.... அப்புறம்..?

அவ  நேர  இவ அத்தை  மக ரத்தினம்  கோமதி கிட்ட பத்த வச்சு விஷயம் கிளாஸ் மிஸ்க்கு தெரிஞ்சி ...

ம்ம்ம்ம் தெரிஞ்சு அப்புறம் என்னாச்சு

வேற என்ன எல்லா கதைலயும் வர மாறி ஒரு காதல் ஜோடி புறாவ பிரிச்சிடாங்க ... என்று தன் கண்ணில் சிந்திய நீரை விரலால் சுண்டி தெறித்தாள் ,

அது சரி இதுல இவன் பயப்படற அளவுக்கு என்ன இருக்கு ..  என்று காவ்யா கேட்க

அது வேற ஒன்னும் இல்ல இந்த மூஞ்சியையும் ஒரு பொண்ணு பார்த்து அத கரக்ட் பண்றதுக்குள்ள இப்டி கட் பண்ணிடாங்கலேன்னு என் கிட்ட சொல்லி ஒரேஅழுகை அதான் .

ஒஹ் , இது அந்த கோமதிக்கு தெரியுமா  கட்டுனா இவன தான் கட்டுவேன்னு ஊர்ல சொல்லிட்டு இருக்காளே அதான் கேட்டேன்  -காவ்யா

அவளுக்கு தெரிய கூடாதுன்னு தான் இவ கால் விழாத குறையா கெஞ்சுறேன்  எலி   சாரி எழிலரசன் .

அப்போ இவ சொன்னதுலாம் உண்மையா நா கூட இவ எதோ கப்சா விடுறானு நினச்சேன்-சந்தியா

அட சந்து,இவள பத்தி தெரியாதா . பாதி நிஜம் பாதி புருடா  அந்த பொண்ணு என்ன பார்த்து அதுக்கு என் மேல சின்ன அட்ரக்ட் வந்ததுலாம் உண்மை ஆனா விஷயம் கிளாஸ் மிஸ் வர போய் அவ வீட்ல பாதியிலேயே படிப்ப நிப்பாட்டிடாங்க அத தான் இவள்ட சொல்லி பீல் பண்ணேன் இவ ப்ளேட்டையே மத்தி போட்டு என் வாழ்க்கைக்கு உலை வைக்க பாக்குறா அதான் அந்த மேட்டர ஆரம்பிச்சாலே அவ கால்ல விழுந்துடுவேன் . எங்க மாமாக்கு தெரிஞ்சா அப்புறம் கோமதி எனக்கில்லை ... என்று வெகு வருத்தமாகவே கூற  அங்கு எழுந்த சிரிப்பலை ஓய வெகு நேரம் ஆனது .

அட என்ன இங்க  நடக்குது . அடி திவ்யா வெட்டியா உக்கார்ந்து கத பேசாம பொய் எதாவது வேலைய பாரு டி  போ ... டேய், எழில்  அங்க உங்க பெரியப்பா கூப்டாங்க போய் என்னனு கேளு இந்தாமா ,இந்த பூவ இன்னும் கொஞ்சம் கூட வச்சிக்கோ இப்படி ஆளுக்கொரு வேலையை ஏவி விட்டது வேறு யாராயிருக்கும் மேகலை தான்.

You might also like - Ninaithale inikkum... Youthful college story 

ஹாய் சித்தி எனி ஹெல்ப்.... என்றபடி அங்கு வந்தாள்  திவ்யா . 

அவளருகே வந்த சித்தியோ அவளின் தலையை மேலும் கீழும முன்னும்் பின்னும் இடமும் வலமும் திருப்பி பார்தார்.

என்ன சித்தி என்ன பாக்குற..

திவு செல்லம் எதாவது கனவு கண்டியா..

இல்ல ..

பின்ன எதாச்சும் அடி பட்ருச்சா

ப்ச்... இல்ல சித்தி ஏன்  இப்படி கேக்குற

அப்புறம் ஏன்மா திடீர்னு இப்படிலாம் பேசுற..

எப்படி,.... சித்திய்ய்ய்ய்ய்...என்று பல்லை கடித்தாள். 

ச்ச, நாமே திருந்தணும்னு நினச்சாலும்  உலகம் நம்ம திருந்த விடாதே  என்ற தனக்குள் கூறி கொண்டாள் . 

(மக்களே, உலக  மகா அதிசயம் திவ்யா திருந்த போறாளாம் )

சரி சரி, உனக்கே அத்தி பூத்தாற் போல நல்ல குணம் வந்துருக்கு அத ஏன் கெடுப்பானேன் 

இந்தா வந்திருக்க தம்பிக்கு காபி போட்டு வை இதோ வரேன் ... என்று அவர் நகர இவளுக்கு பூகம்பமே வெடித்தது .

இந்த சித்திக்கு நாம என்ன கெடுதல் செஞ்சோம் இல்ல வந்திருக்கவர் தான் என்ன கேடு செஞ்சார் . இப்டி நம்ம கையால காபி போட்டு தர சொல்லுதே...என்று யோசித்தவள். அடுக்களையில் இருந்து சற்று தலையை வெளிய தள்ளி அந்த நபருக்கு தன் இரங்கலை கண்களால் தெரிவிக்க முயன்றாள்.

சட்டென்று அவளின் மூளைக்குள் பல்ப் ...

டட்டடைங்.....

அட இந்த கண்ணு என்ன மின்மினி  பூச்சி மாறி இங்கயும் அங்கயும் துள்ளுது. அப்புறம் இந்த மூக்கு அது கூட பரவா இல்ல கொஞ்சம் நல்ல இருக்கு . அப்புறம் அது என்ன வாயா ? அது இதுவரைக்கும் இந்த தண்ணி தம் லாம் பாத்ததே இல்ல போல .. அப்புறம் ... அந்த மீச அது கூட பாக்ற மாறி தான் இருக்கு ... மொத்ததுல ஒரு 99 மார்க் கொடுக்கலாம். அவ்ளோதான் கூடலாம் கொடுக்கமுடியாது (எப்படி நம்ம  ஹீரோ இன்ட்ரோ )    

அடுத்த அத்தியாயத்துல நம்ம ஹீரோவ பார்ப்போம் அதுவரை... காத்திருப்போம்.

தொடரும் . . .

Episode # 02

Episode # 04

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.