(Reading time: 10 - 19 minutes)

ந்த இடத்திலிருந்து நூறடி தூரத்தில் அந்த இன்னோவா கார் வந்துகொண்டிருந்தது. சாரா வெளியே எட்டி பார்த்துக் கொண்டிருந்தாள். கொஞ்ச தூரத்தில் ஒரு ஜோடி நிற்பதைப் பார்த்தாள். அடுத்த வளைவில் அவர்களைக் கடந்துதான் போகப்போகிறார்கள்.

உள்ளே திரும்பி வினோத்திடம்,”டேய்..அடுத்த பென்ட்ல லெப்ட் சைட்ல ரெண்டு பேர் நிக்குறாங்க. தனியா இங்க வந்து என்னமோ பண்றாங்க. நெக்ஸ்ட் அவங்கள சாய்க்கலாம்..ஓகே?” என்று கண்ணடித்தாள்.

அந்த ஐபோன் திரையில் அவர்கள் இருவரும், அந்த இடத்தின் பின்னணியில் அழகாகத் தெரிந்தனர்.

திரையைத் தன் விரலால் தொட்டான் அரவிந்த். க்ளிக் என்ற சத்தம் கேட்டது. ஒரு வினாடி ஸ்க்ரீனையே உற்றுப் பார்த்தான்.

“கிளிக் ஆயிடுச்சா என்ன?” என்றான்.

“அய்யோ..உன்ன வச்சு..வீடியோ மோட்ல இருக்கு.. போட்டோ இல்ல..”என்று அவனைப் பார்த்து கிண்டலாய் சிரித்தாள் அவள்.

அந்த கார் அந்த வளைவை அடைந்தது.

You might also like - Mounam etharku... A family drama...

நித்யா ஷவரை திறந்து விட்டு அதன் கீழே கண்மூடி நின்றாள். கொட்டிய நீரின் குளிர்ச்சி உடல் முழுவதும் பரவி உதர வைத்தது. அடுத்தடுத்த இரு மரணங்கள் தந்த சோகம் வதைத்தது. பயம் ஒரு பக்கம்,கவலை ஒரு பக்கம் என இவளை துளைத்தெடுத்தன. மேலும் இந்தத் தனிமை ஏதோ செய்தது.

அப்பொழுது முகுந்த் சொன்னது நினைவில் வந்தது. அவன் தன் காதலைத் தெரிவித்து சில நாட்கள் ஆகியிருந்தது. அதற்குள் வினோத் இறந்து போக, இவள் பதில் சொல்ல மறந்து போய்விட்டாள்.

முகுந்த், இவள் அறிந்தவரையில் அதீத புத்திசாலி. கல்லூரியிலும் சரி, அலுவலகத்திலும் சரி, திறமையில்,எப்போதும் எல்லோருக்கும் மேல்தான் அவன். இவள் மீது அவனுக்கு எக்கச்சக்க பிரியம். இருவரின் மரணத்திருக்குப் பின் மிகவும் பயந்து போய் தனிமையில் வாடுகிறாள் என்பதை உணர்ந்து எத்தனையோ முறை தன்னோடு தங்கிவிடச் சொல்லிக் கேட்டுக்கொண்டே இருக்கிறான். நேரம் கிடைக்கும் போதெல்லாம் இவளுடனே செலவிடுகிறான். ஆனால் இவையெல்லாம் தெரிந்திருந்தும், சரி என்று சொல்ல ஏதோ ஒரு தடையை உணர்ந்தாள். அது அவனிடம் உள்ள குடி,போதைப் பழக்கமாகத்தான் இருக்கக்கூடும். எவ்வளோ சொல்லியும் அவன் கேட்கவில்லை.  அது மட்டுமே அவனிடம் இவளுக்குக் கவலைகொள்ளச் செய்யும் விஷயமாக இருந்தது. சரி..காலம் பதில் தரட்டும் என காத்திருந்தாள்.

குளித்து முடித்து வெளியே வந்தாள். கடிகாரம் மணி பதினொன்று எனக் காட்டியது. ஆபிசிலிருந்து கிளம்பும்போதே இரவு எட்டு மணி.

கிட்சன் சென்றாள். பிரிட்ஜில் பால் இருந்தது. அதை எடுக்க முற்படும் முன், ஹாலில் ஏதோ விழுந்து உடைந்தது.

சத்தம் கேட்டு அதிர்ந்தாள். ஹாலை அடைந்தாள். எதுவும் உடைந்திருக்கவில்லை. சுற்றும் முற்றும் பார்த்தாள்.

 யாருமில்லாத இந்த வீட்டில் எங்கேயிருந்து அந்த சத்தம் வந்திருக்கக் கூடும். யோசித்தபடியே திரும்பி கிச்சனை நோக்கி இரண்டு மூன்று அடிகள் நடந்திருப்பாள். திடீரென லேசான மணம் வீசியது. ஏதோ ஒரு பூவின் வாசனை போல. கொஞ்சம் கொஞ்சமாய் அது அதிகமானது.

அப்படியே நகராமல் நின்றாள். ஒரு பெண் குரல் எங்கோ பாடுவது போல் ஒலி கேட்டது. அந்த குரலிலிருந்த மர்மம் திகிலூட்டியது. அந்த சத்தம் வந்த திசையை நோக்கித் திரும்பினாள்.

"யாரது?" என்றாள். இவளின் குரல் சுவற்றில் பட்டு சில முறை எதிரொலித்தது.

சட்டென அந்த ப்ளாட்டிலிருந்த விளக்குகள் எல்லாம் விட்டு விட்டு எரியத்தொடங்கின. கதவை யாரோ நகத்தால் கீறுவது போல ஒரு சத்தமும் கேட்டது. எல்லா விளக்குகளும் அணைந்துவிட்டன. இருளில் மூழ்கியது. பயத்தில் சுவரில் சாய்ந்து சரிந்தாள்.

அப்போது ஒரு வெண்ணிற ஒளி திரைசீலை மேல் விழுந்தது. அது ஏதோ ஒரு உருவமெடுக்கத் தொடங்கியது. பாடல் ஒலி இன்னும் தெளிவாய்க் கேட்டது. அதன் மொழி புரியவில்லை.

அந்த உருவம் பெண் வடிவமாகத் மாறியது. காற்றில் மிதப்பது போல அசைந்து ஆடியது.

நித்யாவிற்கு உடல் நடுங்க ஆரம்பித்துவிட்டது. கால்கள் எழ மறுத்தன.

"காப்பாத்துங்க" என்று கத்தினாள். ஆனால் அதைக் கேட்கும் தூரத்தில் யாருமில்லை.

அந்த பெண் உருவம் திரும்பியது. முகம் தெரியாத அளவுக்கு ஒளிர்ந்தது. இவள் எழுந்து ஓடினாள். கதவைத் திறக்க முயன்றாள். ஆனால் கதவு வெளிப்புறமாகப் பூட்டப் பட்டிருந்தது. கத்தினாள்,கதறினாள். யாரும் வரவில்லை.

பின்னால் திரும்பிப் பார்த்தாள். அந்தப் பெண் உருவம்,இவள் முகத்திற்கு மிக அருகில் நின்றிருந்தது. கண்களை உருட்டியபடி,ரத்தக்கறை படிந்த பற்களோடு இவளைப்பார்த்து சிரித்தது.

இவள் அரண்டுபோய் கீழே விழ,அந்த உருவம்பற்களைக் கடித்தபடி, உறுமிக்கொண்டே இவள்மேல் பாய்ந்தது. நித்யாவின் உடல் செயலிழந்து போனது. அந்த பெண் உருவம் அஞ்சலியின் கோர வடிவமாக இருந்தது. இவள் கழுத்தை நெருங்கியது. அதன் வாயிலிருந்து ஒரு துளி ரத்தம் இவள் கழுத்தில் விழுந்தது. அந்த பேயின் பற்கள் இவள் கழுத்தில் பதிவதை உணர்ந்தாள். அதோடு இவளின் இதயத்துடிப்பு ஒடுங்கியது.

Episode # 03

Episode # 05

தொடரும்

{kunena_discuss:911}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.