(Reading time: 20 - 39 minutes)

'ன்னு தெரியலை ஆனா மனசு ரொம்ப சந்தோஷமா இருக்கு.' நிறைவான குரலில் சொன்னாள் அஹல்யா. ஒரு பெருமூச்சு ரிஷியிடம். அவனும் குழந்தையின் அருகில் வந்து அமர்ந்தான்.

'பார்க்க ரொம்ப அழகா இருக்கு இல்ல ரிஷி?' புன்னகையுடன் கேட்டாள் அவர்கள் அருகில் வந்த அருந்ததி.

'புன்னகையுடன் குழந்தையையே பார்த்திருந்தான் ரிஷி. எது ஈர்த்ததோ? எது செலுத்தியதோ? குழந்தையின் தலை வருடி அதன் நெற்றியில் அழுத்தமாக முத்தமிட்டான் அவன். அவனது  முக பாவங்களையே படித்துக்கொண்டு நின்றிருந்தனர் வைதேகியும், ராமனும்.

அங்கே, அந்த மண்டபத்தின் இன்னொரு தனி அறைக்குள் திவாகரை கொண்டு தள்ளிவிட்டு கதவை சாத்தினான் சஞ்சா...

You might also like - Unakkaga mannil vanthen - A romantic comedy blended with fantasy... 

'என்ன தைரியம்டா உனக்கு?', சஞ்சாவின் கனல் பார்வையும், ஒருமையில் வாரத்தைகளும்  ஒரே நேரத்தில் பாய கலக்கத்துடன் நிமிர்ந்தான் திவாகர்.

'என்ன வாடா போடான்னு பேசறானேன்னு பார்க்குறியா? உனக்கும் உன் வார்த்தைகளுக்கு ஆரம்பத்திலிருந்து எவ்வளவு மரியாதை கொடுத்தேன் நான்? உன்னை ஒருத்தன் தூண்டி விட்டவுடனே எங்க முதுகிலேயே குத்த பாக்குறியே? எனக்கு உன்னையும் தெரியும். உன்னை தூண்டி விட்டவனையும் தெரியும்டா.'

'அப்படி எல்லாம் இல்லை சார். இனிமே தப்பு செய்ய மாட்டேன். மத்த எல்லாத்தையும் தாண்டி நான் ஆரம்பத்திலிருந்தே ரிஷியோட மிகப்பெரிய ரசிகன். இப்போ அதுக்கும் மேலே... நான் இப்போ ரிஷியை நேரிலே இவ்வளவு பக்கத்திலே பார்க்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு. எனக்கு ரிஷியோடவே இருக்கணும் போலே இருக்கு...'

'வாயை மூடு ராஸ்கல்...'  எகிறினான் சஞ்சா. 'அன்னைக்கு உன் தங்கச்சி எல்லா உண்மையும் சொல்லிட்டு இந்த குழந்தையை விட்டுட்டு செத்து போனதும் நீ என்ன பண்ணே? என்னாலே இந்த குழந்தையை பார்த்துக்க முடியாது அப்படின்னு குதிச்சே. ஒண்ணு ரிஷி இந்த குழந்தையை கூட்டிட்டு போகணும் இல்லை எனக்கு பணம் வேணும்னு கத்தினே. அப்போ எங்கே போச்சு ரிஷி மேலே இருக்கிற இந்த அன்பு, பாசம் மண்ணாங்கட்டியெல்லாம்? எப்பவுமே பணம் மட்டும் தானேடா உன்னோட குறி...'

'அது முன்னாடி சார். இப்போ மாறிட்டேன் சார்...'

'எப்படி? எப்படி? சிரித்தான் சஞ்சா. பத்து நிமிஷத்திலே சார் மாறிட்டீங்களோ?. ரிஷிக்கு இந்த விஷயம் தெரிய வேண்டாம் தெரிஞ்சா அவன் ரொம்ப வருத்தப்படுவான்னு நான் முதலிலேயே சொன்னேன். உனக்கு அவன் மேலே நிஜமாவே அக்கறை இருந்திருந்தா நீ இப்படி செய்திருக்க மாட்டே..'

...............

'என் தங்கை கல்யாணம் முடிஞ்சதும் நான் தீக்ஷவை கூட்டிட்டு போறேன்னு சொன்னேன்.. எது வேணும்னாலும் எப்போ வேணும்னாலும் என்னை கூப்பிடுன்னு சொல்லி என் பெர்சனல் நம்பரை உனக்கு கொடுத்தேன். உனக்கும், உன் பொண்டாட்டி மீனாவுக்கும் நான் எவ்வளவு பணம் அனுப்பினேன்? சொல்லப்போனா இத்தனை நாள் அவ தீக்ஷாவை நல்லா பார்த்துகிட்டா அவளுக்கு இந்த குழந்தை மேலே இருக்கிற அக்கறை கூட உன் தங்கச்சி குழந்தை மேலே உனக்கு இல்லையேடா. அதை தெருவுக்கு கொண்டு வந்திருக்கே? கொதித்தது சஞ்சாவின் குரல்.

.பதில் பேச முடியாமல் தலை குனிந்தான் திவாகர்.

'அப்படி நிஜமாவே நீ உண்மையானவனா இருந்திருந்தா எனக்கு ரிஷியை பார்க்கணும் பேசணும்ன்னு நீ நேரடியா என்கிட்டே கேட்டிருக்கணும். அப்போ நான் வேறே மாதிரி யோசிச்சு இருந்திருப்பேன். எப்போ நீ வில்லத்தனம் பண்ண ஆரம்பிச்சியோ அதுக்கு அப்புறம் நீ ரிஷியை நெருங்ககூட முடியாது' உறுதியான குரலில் சொன்னான் சஞ்சா.

'சார்... சஞ்சீவ் சார்... ப்ளீஸ்... எனக்கு ஒரே ஒரு வாய்ப்பு கொடுங்க...' கெஞ்சலாக கேட்டான் திவாகர். இடம் வலமாக தலை அசைத்தபடி ஜன்னல் அருகில் சென்று நின்று தன்னை ஆசுவாச படுத்திக்கொண்டான் சஞ்சா. சில நிமிடங்கள் கழித்து திவாகரின் பக்கம் திரும்பினான்

'சரி திவாகர். நான் உனக்கு இன்னொரு வாய்ப்பு கொடுக்கறேன்.' கொஞ்சம் தழைந்தது சஞ்சாவின் குரல். 'நீ திருந்தி வாழறதுக்கு ஒரு சந்தர்ப்பம். நீ இனிமே இந்த ஊரிலே இருக்க வேண்டாம் சிங்கபூர்லே வேலை வாங்கி தரேன் போறியா? மீனாவும் உன் கூட வருவா. குழந்தை இனிமே எங்க கூட இருக்கட்டும். அவளை நாங்க மகாராணியா பார்த்துப்போம். நீ அதுக்கப்புறம் எப்படி நடந்துக்கறேன்னு பார்த்திட்டு மத்த விஷயங்களை யோசிப்போம். என்ன சொல்றே?' என்றான் நிதானமான குரலில்.

சஞ்சாவையே பார்த்திருந்தான் திவாகர். இந்த திட்டத்தில் உடன்பாடு இல்லை அவனுக்கு, ரிஷியுடன் எப்படியாவது சேர்ந்துவிடவேண்டும் என்பதே அவனது இப்போதைய தவிப்பு. சஞ்சீவ் கண்டிப்பாக அதற்கு ஒப்புக்கொள்ள போவதில்லை. இதை வேறே மாதிரி செயல் படுத்த வேண்டுமென தோன்றியது திவாகருக்கு.

'நான் கொஞ்சம் யோசிக்கணும் சார்'

'சீக்கிரம் யோசி. உன் பொண்டாட்டி கிட்டே பேசிட்டு சீக்கிரம் சொல்லு. அதுக்கும் மேலே வேறே ஏதாவது தப்பா யோசிச்சேனா அதுக்கப்புறம் உன்னை ஒண்ணுமில்லாம ஆக்கிடுவேன் புரியுதா?' என்றான் அவன் கண்களுக்குள் பார்த்து.

மெல்ல தலை அசைத்தான் திவாகர்.

'இப்போ நீ என்ன செய்யறே உன் கையிலே இருக்கிற மொபைல என்கிட்டே கொடுக்கிற' என்றபடி கை நீட்டினான் சஞ்சா . அவன் கை வந்து சேர்ந்தது மொபைல்.

'இந்த கல்யாணம் முடியற வரைக்கும் நீ இந்த ரூமிலேயேதான் இருக்கப்போறே. உனக்கு நேரத்துக்கு சாப்பாடு வரும். துணைக்கு என் ஆள் ஒருத்தர் வருவார். நிம்மதியா படுத்து தூங்கு'   சொல்லிவிட்டு கதவை வெளியில் பூட்டிக்கொண்டு நடந்தான் சஞ்சா.

கைபேசியை எடுத்து அந்த எண்ணை அழைத்து 'என்ன என்னவோ பெருசா சொன்னே? கடைசியிலே இவ்வளவுதானா உன் திட்டமும் நீயும்.?' எள்ளலாக கேட்டார் மேகலா.

'நிஜமாவே நான் இதை எதிர்ப்பார்க்கலை மேகலா. இந்த அஹல்யா இந்த விஷயத்திலே இறங்குவான்னு நான் எதிர்ப்பார்க்கவே இல்லை.. ஆனா கண்டிப்பா நான் தோத்து போக மாட்டேன். இந்த விளையாட்டு இன்னும் முடியலை' என்றது எதிர்முனை. 'கடைசியிலே அந்த திவாகர் தோளிலே கை போட்டு உள்ளே கூட்டிட்டு போனான் தெரியுமா ரிஷி அதுதான் நமக்கு சாதகமான விஷயம்'

'புரியலை...'

'இப்போ திவாகர் அந்த மண்டபத்திலேதான் இருக்கான். அவனுக்கு அங்கேயே ஏதாவது ஆபத்து .வரணும். சின்னதா ஏதாவது ஒண்ணு நடந்தா கூட போதும். பழி ரிஷி மேலே விழணும். அதுதான் முக்கியம். அதுக்கப்புறம் எல்லா தன்னாலே நடக்கும். பார்க்கலாம்.' 

நேரம் இரவு ஒன்பதை தாண்டி இருந்தது. அனைவரும் சாப்பிட்டு முடித்திருக்க, குழந்தை இன்னும் உறங்கிக்கொண்டிருந்தாள். அவள் அருகில் இருந்தனர் அருந்ததியும், அஹல்யாவும். உள்ளே வந்தான் சஞ்சா.

'சாப்பிட்டியா? அருந்ததி.

'ம்...நல்லா...'

'மத்தவங்க எல்லாரும் சாப்பிட்டாச்சா? அஹல்யாவை பார்த்தபடியே கேட்டான் சஞ்சா. நேரடியாக எப்படி கேட்பதாம்? சில மணி நேரங்கள் முன்பாக 'இங்கே இருந்து எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கிளம்பு' என்று சொன்னவன் இப்போது வந்து அக்கறையாக விசாரித்தால் அதை எப்படி எடுத்துக்கொள்வாள் அவள்?

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.