(Reading time: 15 - 30 minutes)

ன்னடி இப்படி வெடிகுண்டை தூக்கி தலையில போடுற?...” என்ற கோகிலவாணியிடம்

“அவர் அப்படித்தான்மா சொன்னார்… ஆனா ஜித் எனக்கு பொண்டாட்டி ருணதி தான்னு சொல்லிட்டு கோபமா போயிட்டான்…”

“பெருமாளே… இந்த மட்டும் காப்பாத்தினப்பா…” என கோகி சற்றே ஆசுவாசம் அடைய,

“ஆமாம்மா… ஜித் ருணதி மேல உயிரா இருக்குறான்… அதுதான் அவனோட அப்பா கோபத்துக்கு பெரிய காரணமே…”

“என் பேத்திக்கு மாப்பிள்ளை நல்லவரா தான் இருக்குறார்… ஆனா என் மகளுக்கு மாப்பிள்ளை தான் இப்படி புத்தி மாறி போயிட்டாரே…” என கோகிலவாணி புலம்ப,

“அட விடும்மா… இதெல்லாம் தெரிஞ்சது தானே… பார்ப்போம்… இன்னும் என்ன எல்லாம் நடக்குதுன்னு…”

“நீ சொல்லுற மாதிரி லேசா எடுத்துக்க முடியாது ஜெயந்தி எல்லாத்தையும்…”

“ஏன்மா அப்படி சொல்லுற என்னாச்சு…??”

“இன்னும் என்ன ஆகணும்?... ருணதிக்கு நாளுக்கு நாள் வெறுப்பு கூடிட்டே போகுது…”

You might also like - Oru kootu kiligal... A family drama...

 

“பின்ன எனக்கு தாலி கட்டினவர் இப்படி இருந்தா, அவளுக்கு வெறுப்பு வராம எப்படி இருக்கும்?...”

“நீயும் அவளுக்கு சப்போர்ட்டா பேசாத… ஜெயந்தி…”

“அவளுக்கு ஆதரவா பேசாம வேற யாருக்கும்மா பேச சொல்லுற நீ?...”

“ஏண்டி உனக்கும் புத்தி மழுங்கி போச்சா என்ன?... அவளுக்கு ஆதரவு குடுக்கணும் தான்… ஆனா இப்போ நாம ஆறுதலா இருக்க வேண்டியது ஜித்துக்கு தான்…”

“ஜித் ???…” என்றவருக்கு, மகனை எப்படி இந்த சிக்கலில் இருந்து வெளிக்கொண்டு வர என்றே தெரியவில்லை கொஞ்சமும்…

“ஆமா ஜெயந்தி… அவன் தான் பாவம்… பொண்ணுங்க நாம அழுது தீர்த்திடலாம்… ஆனா ஆம்பளை அவன் என்ன செய்வான்?... தன் மனக்கஷ்டத்தை யாருக்கிட்ட பகிர்ந்துப்பான்…”

“உண்மைதான்ம்மா… பெத்த தகப்பன் கிட்ட இதுபத்தி அவன் பேசவே முடியாது… ஏன்னா பிரச்சினையை உண்டாக்கினவரே அவர் தான்… எங்கிட்ட அவன் ரொம்ப பேசுறதே கிடையாது… ராத்திரி தூங்க மட்டும் தான் வீட்டுக்கே வரான்… அதையும் மீறி நான் எதாவது பேச்சுக்கொடுத்தா, போம்மா, போய் சமையல் வேலையைப் பாருன்னு என்னை அனுப்பிடுவான்… அதையும் மீறி அங்கேயே நின்னா, அப்பாகிட்ட நீ என்னால திட்டு வாங்க வேண்டாம்ம்மா… என் பிரச்சினையை நானே பார்த்துக்கறேன்… நீ போம்மான்னு என்னை சொல்லிட்டு ராத்திரி முழுக்க தூங்காம, சாப்பிடாம அவனோட அறையில குறுக்க நெடுக்க நடந்துட்டே இருப்பான்…” என ஜெயந்தி கவலையோடு சொல்ல,

கோகிலவாணி தனது மகளை சமாதானப்படுத்தினார்…

“துருவ் குட்டி எப்படிம்மா இருக்குறான்… அவனை ஒருநாள் தூக்கிண்டு வாயேன்… பார்த்து ரொம்ப நாளாச்சு…”

“காலையில ருணதி இருக்கும்போது முடியாதும்மா… அவ வேலைக்குப்போனதும் ஒருநாள் கோவிலுக்கு தூக்கிட்டு வரேன் ஜெயந்தி…”

“ஹ்ம்ம்,…”

“என்னடி ஏன் ஒரு மாதிரி ஆயிட்ட?...”

“என் பேரப் பிள்ளையை என்னால நினைச்ச நேரத்துல பார்க்க முடியலையே… கூட இருக்குற குடுப்பினையையும் என் ஆம்பிளையான் இல்லன்னு பண்ணிண்டிருக்கிறார்… இப்படி பார்க்குற குடுப்பினையையும் அந்த பெருமாள் ஏன்ம்மா எனக்கு தரமாட்டேங்குறார்?... நான் என்னம்மா பாவம் செஞ்சேன்… நேக்கு எதுக்கு இப்படி ஒரு நிலைமை?...”

“எல்லாம் சரி ஆகிடும்டி… பெருமாள் மேல பாரத்தை போடு…”

“பாரம் எவ்வளவு தான்ம்மா அவர் மேல போடுறது… நம்ம சுமையே அவருக்கு பெரும் சுமையா இருக்கும்ம்மா…”

“அவர் பகவான் ஜெயந்தி… இந்த சிருஷ்டியையே அவர் தான் சுமக்குறார்… அதுல நாம எல்லாம் கடுகளவு கூட இருக்க மாட்டோம்….”

“இப்படி சொல்லி சொல்லித்தான் அவரை நம்ம கஷ்டம் எல்லாத்தையும் சுமக்க வச்சிட்டிண்டிருக்கோம்…”

“அவர் நம்மளை படைச்சவர் ஜெயந்தி… அவருக்கு நம்ம கஷ்டம் எல்லாம் சுமையே கிடையாது…”

“அப்படின்னு நாம தான்ம்மா சொல்லிண்டிருக்கோம்… ஆனா உண்மையில பகவானும் பாவம் தான்.. லோகம் முழுக்க உள்ளவா எல்லாரும் அவரை சேவிக்கிறா… அதேநேரம் அவா அவாளோட சின்ன சின்ன பாரத்தையும் அவர் மேல சுமத்திண்டு சும்மா இருக்குறது நல்லா இல்லம்மா… நம்மால தீர்க்க முடியாத கஷ்டத்தை தான் அவர் கிட்ட இறக்கி வைக்கணும்… நமக்கு எதுக்கு அவர் அறிவையும் புத்தியையும் கொடுத்திருக்கிறார்ன்னு நீ நினைச்சுண்டு இருக்குற… அந்த புத்தியையும் நாம பயன்படுத்தணும்… அடுத்தவாளுக்காக இல்லாட்டியும் நமக்காகவேணும் நாம அதை பயன்படுத்திக்கத்தான் வேணும்…” என்றார் அழுத்தம் திருத்தமாய் ஜெயந்தி…

“நாமளும் கொஞ்சம் முயற்சி பண்ணனும்னு சொல்லுறீயா ஜெயந்தி…”

“நாம நம்மால முடிஞ்சதை செஞ்சுட்டோம்ம்மா… இனி ருணதியும் ஜித்தும் தான் செய்யணும்… இது அவாளோட வாழ்க்கை… இதை அவா தான் சரி செய்யணும்….”

“அதுக்காக அவா பார்த்துப்பான்னு நாம பேசாம குத்துக்கல்லு மாதிரி நின்னுண்டிருக்க முடியாதேடி…”

“அதுவும் சரிதான்ம்மா… ஆனா இனி நாம இதுல பேசவோ, செய்யவோ எதுவும் இல்லை…”

“என்னடி இப்படி சொல்லிட்ட பட்டுன்னு…”

“உண்மைதான்ம்மா… நாம பேசினாலும் எடுபடலைன்னும் போது நாம தூர நிக்குறது தான் நல்லது…”

“தினமும், ருணதி கிட்ட அந்த கத்து கத்தினாலே அவ காதுல எதையும் வாங்கமாட்டா… இதுல தூர நின்னு வேடிக்கைப் பார்த்தா ரொம்ப நன்னா இருக்கும்டி… ரொம்ப நன்னா இருக்கும்…”

“அம்மா… நான் சொல்லுறதைக் கேளு… நாம கெஞ்ச கெஞ்ச தான் அவாளுக்கு நம்மள கெஞ்ச வைக்கத்தோணும்… அதே நீ கெஞ்சுறதை நிறுத்திட்டு சும்மா இருந்துப்பாரு, அவா நம்மக்கிட்ட பேச முன் வருவா… எந்த விஷயத்தையும் ஆறப்போட்டு செய்யுறது நல்லதுதான்மா…”

“நீ என்னவோ சொல்லுற… ஆனா ருணதி அந்த ரகம் கிடையாதுடி… அவகிட்ட இதுபத்தி பேசிட்டே இருந்தா தான் அவ மரமண்டையில கொஞ்சமாச்சும் ஏறிண்டே இருக்கும்… இல்லன்னா அவ்வளவுதான்…”

“நீ கொஞ்ச நாள் ருணதிகிட்ட இதைப் பத்தி பேசாதம்மா… நான் சொன்னது யாருக்கு பொருந்துமோ இல்லையோ, என் ஆம்பிளையானுக்கும், உன் பேரனுக்கும் நல்லாவே பொருந்தும்….”

“ஜெயந்தி நீ சொல்லுறது?...”

“உனக்கு புரிஞ்சா சரிதான்ம்மா.. எனக்குத் தெரிஞ்சு ஜித் ஏற்கனவே என்ன செய்யணும்னு முடிவெடுத்திருப்பான்… இல்ல இனியாச்சும் எடுப்பான் நான் பேசாம இருந்தா… அதே போல அவன் தோப்பனாரும்…

“ஜித் அப்பாவா?...”

“ஆமாம்மா… அவரை நான் காதலிச்சு கைப்பிடிச்சேன்… இப்பவும் என் மனசுல அந்த காதல் இருக்கப்போய்த்தான் அவரோட நான் வாழ்ந்திண்டிருக்கேன் அந்த வீட்டுல இத்தனை நடந்த பிறகும்… இல்லன்னா?...”

“ஜெயந்தி???”

“பயப்படாதம்மா… தப்பா எந்த முடிவுக்கும் நான் போகமாட்டேன்… அவருக்கு என் மேல இப்ப அந்த காதல் இல்லம்மா… அது நான் வாய் மூடி மௌனிச்சாதான் அவருக்கு உறைக்கும்னா நான் அதை செய்யுறதுல எந்த தப்பும் நேக்கு தெரியலைம்மா… நான் பேசினா தான அவருக்கு கோபம் வருது… அடிக்க கூட கைநீட்டுறார்… நான் பேசவே இல்லன்னா?....” என அவர் சொன்னதும்

கோகிலவாணி மகளை விநோதமாக பார்த்தார்…

வைஜெயந்தியின் வீட்டிற்கு ஐந்து வீடுகள் முன்னமே அவர் இறங்கிக்கொள்ள, கோகிலவாணியையும் பத்திரமாக வீட்டிற்கு அழைத்து வந்தான் மகத்….

அங்கே ருணதி மகத்தையும் கோகிலவாணியையும் ஒன்றாய் பார்த்துவிட்டு, “இவர்கள் எப்படி ஒன்றாக இங்கே… அதும் இந்த காலை வேளையில்…” என சிந்திக்க அவளை மேலும் சிந்திக்க விடாது அதற்கு முற்றுப்புள்ளி வைத்தான் மகத்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.