(Reading time: 15 - 30 minutes)

நான் கடை வரைக்கும் போயிருந்தேன்… அப்பதான் வர்ற வழியில பாட்டி நடந்து போயிட்டிருந்தாங்க… என்ன பாட்டி இவ்வளவு தூரம்னு கேட்டேன்… கோவிலுக்கு வந்தேன்ப்பா… வீட்டுக்கு போயிட்டிருக்கேன்னு சொன்னாங்க… நானும் அந்த வழியாதான் போவேன், வாங்க உங்களை டிராப் பண்ணிடுறேன்னு சொன்னேன்… அவங்க வேண்டாம்னு தான் சொன்னாங்க… நான் தான் வற்புறுத்தி காரில் ஏறச் சொன்னேன்…” என அவன் விளக்கம் கொடுக்க, அவளும் ஹ்ம்ம்…. என்றபடி விட்டுவிட்டாள்…

“சரி…. கோகி… நான் சமைச்சு வச்சிட்டேன்… எனக்கு நேரமாகுது… நான் கிளம்புறேன்…”

“சரிடி… பார்த்து போயிட்டுவா….”

“பாட்டி… நானும் போயிட்டு வரேன் அம்மாகூட….”

“ஹே… துருவ் கண்ணா… நீயுமா?...”

“ஆமா பாட்டி… நதிகா என்னைப் பார்க்கணும்னு சொன்னாளாம்… நான் போய் அவளைப் பார்த்துட்டு வந்திடுறேன்… சரியா… நீ வீட்டுல பத்திரமா இரு நாங்க வர்ற வரைக்கும்… கதவைப் பூட்டிக்கோ பாட்டி….”

“சரிடா… கண்ணா.. போயிட்டுவா…” என்ற கோகிலவாணி அவனை உச்சிமுகர்ந்து முத்தமிட்டார்…

You might also like - Poo magalin thedal... A breezy family oriented romantic story... 

 

“ஏண்டி… பிள்ளையை நட்த்தியேவா கூட்டிண்டு போகப்போற?...”

“ஆட்டோல நான் போயிப்பேன் பாட்டி… நீ கவலைப்படாத…”

“இந்த தெருவுல தான் ஒரு ஆட்டோக்காரனும் வந்து தொலையமாட்டானே…. அப்புறம் நீ எப்படி போவ?...”

“எப்படியோ அதை நான் சமாளிச்சிக்கிறேன்… நீ முதலில் வழியை விடு…” என்றாள் ருணதி…

“அட இருடி… சும்மா சண்டைக்கோழி மாதிரி எப்ப பாரு சிலுப்பிண்டு… மகத் தம்பி அருள் இல்லத்துக்கு தான் போறேன்னு எங்கிட்ட சொன்னான்… நீ அவனோடவே காரில் போயிடேன்…”

“பாட்டி…. நமக்கு உதவி செய்யுறாங்க அப்படிங்கிறதுக்காக, அவங்களை மேலும் மேலும் தொந்தரவு பண்ணக்கூடாது பாட்டி… அதை முதலில் புரிஞ்சிக்கோ…”

அவள் அப்படி சொன்னதும், “இதுல என்ன தொந்தரவு இருக்கு ருணதி… அங்க தான் நானும் போறேன்… அதான் பாட்டி எங்கூட காரில் போயிடுன்னு சொல்லுறாங்க… இதுல என்ன தப்பிருக்கு ருணதி?...”

“தப்பில்லை… ஆனா, எதுக்கு உங்களுக்கு வீண் சிரமம்?.. அதான்…”

“ஒரு சிரம்மும் இல்லை…” என்றவன், “பாட்டி நாங்க வரோம்…” என சொல்லிவிட்டு,

“துருவ் கண்ணா நாம போகலாமா?...” எனக் கேட்க,

“ஹ்ம்ம்… சரி…” என்றான் அவனும் உற்சாகமாய் நதிகாவைப் பார்க்க போகிறோம் என்ற சந்தோஷத்துடன்…

“ஹ்ம்ம்… வா…” என்றபடி குட்டி துருவை தூக்கிக்கொண்டு மகத் முன்னாடி செல்ல, ருணதி எதுவும் பேசாமல் பின்னாடி சென்றாள்…

“எங்கிட்ட அப்படி கத்தினா, இப்போ அந்த தம்பி சொன்னதும் சரின்னு கேட்டுண்டா… எப்படி?..” என யோசித்தவர்,

“சரி… எது எப்படியோ, அவ பத்திரமா போனா சரி தான்…” என்றவர் கதவைப் பூட்டிவிட்டு உள்ளே சென்றார்…

அருள் இல்லம் வரும் வரை எதுவும் பேசாமல் இருந்தனர் இருவரும்…

“நீ உள்ளப் போ…. நான் வரேன்…”

“துருவ் குட்டி…” என அவள் இழுக்க,

“நான் கூட்டிட்டு வரேன்… நீ போ…” என்றான் மகத்…

“சரி…” என்றபடி அவளும் உள்ளே சென்று காவேரியிடம் பேசிவிட்டு, தனது வேலைகளை ஆரம்பித்தாள்…

பின் சீட்டில் இருந்த குட்டி துருவை தூக்கச் சென்றவனின் மேல் காரை ஏற்றுவது போல் கொண்டு நிறுத்தினாள் கன்யா…

அவளின் அந்த மிரட்டலுக்கு பயப்படாமல் அசையாமல் நின்று அவளை வெறித்தான் அவன்…

“என்ன அசிஸ்டெண்ட்… பயந்துட்டியா?...” என்றபடி தோரணையாக இறங்கினாள் அவள் காரை விட்டு…

அவன் எதுவும் பேசாமல் அமைதியாக காரின் மேல் சாய்ந்து கொண்டு கைகளை குறுக்கே கட்டிக்கொண்டு சுற்றும் முற்றும் வேடிக்கைப் பார்த்தான் இலகுவாக…

“திமிர்… உனக்கு எவ்வளவு இருந்தா இப்படி நான் பேசுறது கேட்காத மாதிரி நிப்ப?...”

“………….”

“இரு… இன்னும் எத்தனை நாள் இந்த திமிரோட இருப்ப… உன்னை ஒரு நாள் நான் எங்கிட்ட கெஞ்ச வைக்கலை… என் பேரு கன்யா இல்லை…”

“சரி மாத்தி வச்சிக்கோ…”

“ஏய்….” என கத்தியவளிடம்,

“இந்த கத்தல். மிரட்டல், உருட்டல் எல்லாம் எங்கிட்ட செல்லாது… புரிஞ்சதா?... தேவை இல்லாம என் வழியில வர்ற வேலை வச்சிக்காத…”

“உன் வழியா… அப்படி ஒன்னு இருக்கா உனக்கு?... இப்போ நீ பார்க்குறியே ஒரு வேலை… அது என் அப்பாவால உனக்கு கிடைச்சது… அதை முதலில் நீ தெரிஞ்சிக்கோ…”

“அப்பாவா?... ஓ… அவர் இப்போ தான் உனக்கு அப்பாவா தெரியுறாரா?... அப்ப இதுநாள் வரை அவரை விரோதின்னு சொன்னது எல்லாம் டிராமாவா?...”

“நீ ரொம்ப பேசுற அசிஸ்டெண்ட்…”

“நீதான் என்னை பேச வைக்குற…”

“ஓ… பேசு… பேசு… எல்லாம் கொஞ்ச நாள் தான்… எத்தனை நாள் அவளை இப்படி கண் கொத்தி பாம்பா கூட இருந்து கவனிக்கிறேன்னு நானும் பார்க்குறேன்…”

“சரி…” என்றவன் நகர முயற்சிக்க,

“இன்னைக்கு வேணும்னா நீ அவளை டிராப் பண்ணலாம்… ஆனா எப்பவும் நீ இங்கேயே இருந்து அவளுக்கு டிரைவரா இருக்க முடியாது…”

“சொல்லிட்டல்ல கிளம்பு…”

“உன்னை நம்பி குருமூர்த்தி அவ்வளவு பெரிய ஹாஸ்பிட்டலை ஒப்படைச்சிருக்குறார்…. ஆனா நீ பொறுப்பில்லாம இங்க எவளோ ஒருத்திக்கு டிரைவர் வேலை பார்த்துட்டு இருக்குற….”

“அவ்வளவு அக்கறை உனக்கு இருந்தா நீ வேணும்னா ஹாஸ்பிட்டல் வேலையைப் பாரு… நான் இங்கேயே இருந்துடுறேன்…”

“ஏய்… யாரைப் பார்த்து வேலைப்பார்க்க சொன்ன?... லட்சம் பேருக்கு வேலை கொடுக்குற உயர்ந்த நிலையில நான் இருக்கேன்…  உன்னை மாதிரி கைகட்டி இன்னொருத்தர் கிட்ட வேலைப் பார்க்குற நிலை எனக்கு இல்லை… புரிஞ்சதா அசிஸ்டெண்ட்…”

“நீ பேசுறன்னு நானும் பேசினா, அப்புறம் சேறு சகதில கல் எறிஞ்ச மாதிரி ஆகிடும்….” என அவன் சொல்ல,

அவள் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்றாள்…

“என்னைப் பார்த்து சேறு சகதின்னு சொல்ல உனக்கு எவ்வளவு தைரியம்???... சொல்லுடா… சொல்லு… ஆனா இதுக்கெல்லாம் சேர்த்து வச்சு உன்னை நான் பழிவாங்கலை… என் பேரு கன்யா இல்லடா… ஆஃப்ட்ரால் என் ஹாஸ்பிட்டலில் வேலைப் பார்த்து மாச சம்பளம் வாங்குற உனக்கே இவ்வளவு திமிர் இருந்தா பல பேருக்கு சம்பளம் குடுக்குற எனக்கு எவ்வளவு திமிர் இருக்கும்?...”

“தெரிஞ்சா சரி… திமிர் இருக்குன்னு…” என அவன் இலகுவாக சொல்ல, அவளுக்கு கோபம் எல்லையைத் தாண்டியது…

“நீ சொன்ன சேறையும் சகதியையும் நீ எடுக்க முடியாம திணறலை… திணறுவடா… அந்த நாள் ரொம்ப தூரம் இல்ல… எங்கிட்ட நீ கெஞ்சுவடா… அப்ப தெரியும் இந்த கன்யாவோட இன்னொரு முகம்…” என அகங்காரமாய் சொல்லிவிட்டு காரினில் வேகமாக சென்றாள் கன்யா…

அவள் சென்றதும், காரினுள் விளையாடிக்கொண்டிருந்த குட்டி துருவனை, அவள் சென்றுவிட்டாள் என முழுதும் அறிந்தபின் காரிலிருந்து கீழே இறக்கித் தூக்கிக்கொண்டான் மகத்…

தொடரும்

Episode # 11

Episode # 13

{kunena_discuss:907}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.