(Reading time: 12 - 23 minutes)

15. வசந்த பைரவி - ஸ்ரீலக்ஷ்மி

வீட்டை விட்டு வெளியேறிய அஜயும் பைரவியும் சிறிது நேரத்தில் அந்த பங்களாவை சென்றடைந்தனர்கள்.

"டாக்ஸிக்கு பணத்தை கொடுத்துவிட்டு ஒர் கணம் அந்த அலங்காரமான பெரிய கேட்டையும் அதன் பின்னிருந்த பங்களாவையும் பார்த்தவன், மெல்ல காரை விட்டிறங்கி பைரவியையும் இறங்கச் சொன்னான்.. வாசலில் காவலுக்குரிய அறையில் இருந்த சென்டிரியிடம் சென்றான்.

அவன் பின்னேயே வேகமாக நடந்தாள் பைரவி..

vasantha bairavi

கேட்டில் இருந்த காவலாளியிடம் தாங்கள் ஆனந்தை சந்திக்க வந்திருப்பதாகச் சொன்னவன், அப்போதுதான் காரிலேயே பணத்தை கொடுத்த பின் பர்ஸை சீட்டிலேயே விட்டுவிட்டு வந்து விட்டதை உணர்ந்தவன்,

"ஷிட்.. பைரவி..  ஐ லெஃப்ட் மை வாலெட் இன் தெ கார்.. நீ உள்ளே போ நான் வந்து விடுகிறேன் என்றவன்.. மேடமை உள்ளே அனுப்புங்கள் நான் இதோ வந்து விடுகிறேன்", என்று சொல்லி மீண்டும் வெளிப்பக்கம் போய் கார் அதிக தூரம் போய் விட்டதா என்று பார்த்தான்.. கார் போயே விட்டது..

அதற்குள் செகியூரிடி உள்ளே வீட்டிற்கு ஃபோன் செய்து விசாரித்துவிட்டு, "நீங்க போங்கம்மா அதோ இந்த நடைப்பாதையிலேயே போங்க", என்று கேடை திறந்து அவளை உள்ளே அனுப்பினான்.

"அஜய் நான் உள்ளே போய் வெயிட் செய்கிறேன்.. நீயும் வா சீக்கிரம்.. எனக்கு அவர்கள் யார் எவர் என்று தெரியாது.. பர்ஸ் போனால் போகட்டும் சீக்கிரம் வந்துவிடு", என்று சொல்லிவிட்டு கேட்டின் உள் பக்கம் சென்று மறைந்தாள்..

காவலாளி.. மீண்டும் கேட்டை மூடினான்.. அஜய் ஃபோனை எடுத்து அந்த கால் டாக்ஸி டிரைவரின் எண் இருக்கிறதா என்று பார்க்கத் தொடங்கினான்..

நடைப்பாதையின் நடந்த பைரவிக்கு வழி நெடுக அமைதிருந்த வண்ணப் பூக்களை பார்த்து ஆனந்தம் பீறிட்டது.. நடைப் பாதையின் ஒரு புறத்தில் பெரிய லான் இருந்ததது.. லானின் அடுத்த பக்கத்தில் தென் பட்ட அழகிய மலர்களை ரசிக்கும் பொருட்டு சட்டென்று யோசிக்காமல் புல் தரையை கடந்து அந்தப் பக்கம் போய் தோட்டத்தின் அழகை ரசிக்கத் தொடங்கினாள்..

ஒரத்தில் அமைந்திருந்த குளத்தின் கரையில் அமர்வதற்கென்று சிறு படிகட்டுகளும் இருந்தது.. குளத்தில் வெள்ளை அல்லிப்பூகளும் ஊதா அல்லிகளும் நிறைந்திருந்தன.. ஒரு கணம் அந்த மங்கிய நிலவொளியில் அல்லிப்பூக்களின் அழகில் மனதை பறி கொடுத்தவள்.. 'நிச்சயம் இந்த வீட்டை கட்டியவர் யாராக இருந்தாலும் பாராட்டுதலுக்கு உரியவர்.. எவ்வளவு அழகான வடிவமைப்புடன் கூடிய தோட்டமும் அதன் பின் கம்பீரமாக இருக்கும் வீடும்..வெளியிலிருந்து பார்த்தால் யாருக்கும் தெரியாது'.., என்று நினைத்தவளின் ரசனையை குலைப்பதற்கென்றே பிறவி எடுத்தாற் போல் கர்ண கொடூரமாய் நாயின் குறைப்பை கேட்டாள்..

'அய்யோ..மை காட்.. நாயா..இப்படி குலைத்து ஊரைக் கூட்டுகிறது..', என்று நினைத்தவளுக்கு யோசிக்க அவகாசம் கொடுக்காமல் நல்ல உயரமான ஜெர்மன் ஷெப்பர்ட் நாய் அவளருகில் நெருங்கி இன்னமும் பலமாக குரைக்கத் துவங்கியது'.

அவளை சுற்றி சுற்றி வந்து தன் கோரை பற்களை காட்டியபடி பலமாக குறைத்தது நாய்..

இதற்கெல்லால் அசந்தால் எப்படி??..யோசித்த பைரவி, சட்டென்று.. விசிலடித்தாள்.. பின் நாயை ஒரு முறை முறைத்து பார்வையை விலக்காமல் சிட் டவுன் என்றாள் அதிகாரமாய்..

ஒரு கணம் ஒன்றும் புரியாமல் விழித்த நாய்.. சிட் டவுன் என்ற வார்த்தைக்குக் கட்டுப்பட்டோ இல்லை இதுவரை எல்லோருமே தன்னை பார்த்து பயந்து ஒடியிருக்கும் நிலையில் ஒருத்தி தெரியாமல் ஆடாமல் அசையாமல் நின்று அதிகாரம் செய்ததாலோ.. எதுவோ.. அவள் சொல்படி சட்டென்று உட்கார்ந்து விட்டது..

You might also like - Ennai edho seithu vittaai... A family drama...

பைரவிக்கு மெல்ல புன்னைகை அரும்பியது அந்த நாயை கண்டு.. "குட் பாய்", என்றவள்.. 'நீ பாயா கேர்ளா..' தெரியலையே எனக்கு', என்று நினைத்ததை சத்தம் போட்டும் சொல்லிவிட்டாள்..

"ம்ம்.. பாய் தான்", என்று ஒரு குரல் ஒலித்தது..

"ஏய் நாய் கூட பேசுமா என்ன?.. விசித்திரமா இருக்கு.. ஸ்டிரேஞ்".. என்றவளுக்கு..

"நாய் பேசாது ஆனால் அதன் மாஸ்டர் நன்றாய் பேசுவான்", என்ற குரலில் திரும்பியவள் அங்கே முகமெல்லாம் சிரிப்புடன்.. நல்ல உயரத்தில் அதற்கேற்ற பர்சனாலிடியில் வாட்ட சாட்டமாய் நின்றிருந்த ஆண்மகனை பார்த்தவளுக்கு சட்டென்று சிறு நாணம் தோன்றியது..

"ஒ.. சாரி.. நான் தெரியாமல் இந்தப் பக்கம் அழகாய் இருக்கிறதே என்று வந்து விட்டேன்.. அதான் நாய் டென்ஷனாகி குரைத்துவிட்டது போல.. பை தெ பை ஐ யாம் பைரவி.. நான் இங்கு ஆனந்த் என்ற ஒருவரை சந்திக்க வந்திருக்கிறேன்"..

"ஐ.. நோ..ஃபோன் கால் வந்து பத்து நிமிடம் ஆகியும் நீங்கள் உள்ளே வரலையே என்று நினைத்த போது.. மிர்ச்சியின் குரல் கேட்டு.. ஏதாவது பிராப்ளமோ என்று வந்தேன்.. இன்றைக்கென்று மிர்சியை பார்த்துக் கொள்ளும் என் டிரைவர் வெளியே போயிருக்கிறார்....சாரி..நீங்கள் தேடி வந்த ஆனந்த் நான் தான்", என்று கையை நீட்டினான்.

நீட்டிய கரத்தை பற்றி குலுக்கியவள்.. "நைஸ் மீட்டிங் யூ ஆனந்த்..நல்ல வேளை நீங்கள் வந்து விட்டீர்கள்.. நான் எப்படி இந்த மிர்ச்சியிடமிருந்து தப்புவது என்று யோசித்துக் கொண்டு இருந்தேன், எப்படியும் ஒரே கடியில் அரைக் கிலோ சதையை பிடுங்கிடும்னு நினைச்சேன்", என்று இலகுவாய் சிரித்தவளின் அழகில் ஒரு கணம் மனம் தடுமாறிய ஆனந்த்..

"ஹேய் எங்க மிர்ச்சி ரொம்ப சாதும்மா.. ஒன்னும் பண்ணாது.. ஆள் தான் கொஞ்சம் ரஃப் அண்ட் டஃபா இருக்கும்..அதன் மாஸ்டரை மாதிரி மத்தபடி பக்கா தயிர் சாதம்.. வெஜிடேரியன்..சரி வாங்க உள்ளே போகலாம்", என்று பற்றிய கரத்தை விடாமலேயே அவளை வீட்டிற்கு செல்லும் பாதையில் அழைத்துச் சென்றான்..

'இதென்னடாயிது கையை விட மாட்டேங்கிறான்..' , என்று தர்மசங்கடமாய் அவனுடன் நடந்த பைரவியை அதிக நேரம் சங்கடப் படுத்தாமல்,

"ஹாய் ", என்று அஜயின் குரல் கேட்டது..

சட்டென்று திரும்பியவர்கள்.. முகமெல்லாம் சிரிப்பாய் அஜய் நின்றிருக்கக் கண்டார்கள்..

"அஜய் பர்ஸ் கிடைத்ததா?"

"அந்த டிரைவர் ரெண்டு கிலோமீட்டர் போனதுக்கபுறம் நோட்டீஸ் பண்ணிட்டு திரும்பி வந்து குடுத்துட்டு போனான்.. நைஸ் ஆஃப் ஹிம்", என்றவன் தன் நண்பனை பார்த்து மெல்ல புன்னகைக்க

"ஹாய்.. அஜய்.. எப்படி இருக்கே மேன்?.. சோ நைஸ் டு சீ யூ அகைய்ன்", என்று நண்பனை தழுவிக்கொண்டான் ஆனந்த்..

"ஹாய் ஆனந்த்.. ஐ யாம் ஃபைன்..நீ எப்படி இருக்கே.. இன்னமும் கொஞ்சம் சதை போட்டு இருக்கே போலிருக்கு", என்று நண்பனை அரவணைத்துக் கொண்டான் அஜய்.

"ம்ம்.. அம்மா அப்பா தங்கை எல்லார் கூடவும் இருக்கேன்.. நல்ல சாப்பாடு.. வேறு என்ன வேண்டும்....சரி சரி.. வா உள்ளே போகலாம் என்று இருவரையும் அழைத்துச் சென்றான்.."

வீட்டினுள் அலங்காரம் பிரமிக்க வைக்கும் படி இருந்தது.. பணம் இருந்தால் எதுவும் சாத்தியம் இந்த உலகத்தில் என்று நினைத்துக் கொண்டாள் பைரவி..

பதினைந்து இருபது பேர் ஒரே சமயத்தில் அமரக் கூடிய வகையில் இருக்கைகள் அமையப் பெற்றிருந்தன.. சோஃபாவில் அமர்ந்தவர்கள் ஒரு கணம் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தபடி அமர்ந்திருந்தனர்..

"சொல்லு அஜய்.. ஹாட் ஆர் கோல்ட்..டிரிங்க் எடுத்துக்கறயா?..", என்று உபசரித்தவனை பார்த்த அஜய்..

"ஆனந்த்.. நான் ஒரு டாக்டர்.. என்னிடமே டிரிங்க் ஆஃபர் பண்ணறயா?..சரி.. சரி.. எனக்கு ஏதாவது ஃப்ரெஷ் ஜூஸ் தா", என்றான்

"வாட் அபவ்ட் யூ பைரவி.. உனக்கு..? "

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.