(Reading time: 12 - 23 minutes)

"னக்கும் அதே.. ஐ ப்ரெஃபர் ஸ்வீட் லைம் ஜூஸ் இஃப் அவைலபில்." என்றாள்.

அருகிலிருந்த மணியை அழுத்தியவன் பணியாளிடம் ஜூஸ் கொண்டு வருமாறு பணித்தான்.

பின்னர்..,அஜய் பக்கம் திரும்பி" சொல்லுடா.. என்ன ப்ளான் உனக்கு.. என்ன விஷயமா வந்துருக்கே இண்டியா?.. ஏதாவது நான் பண்ண முடியுமா?"

"அதற்கு அஜய்", ஆனந்த் உனக்குத்தான் தெரியுமே.. நான் கேன்ஸர் மெடிசின்லே ரிசர்ச் பண்ணரேன்னு.. அது சம்பந்தமா தான் இங்கே ஒரு சின்ன புராஜெக்டா வந்தேன்.. ஆல்ரெடி.. கேன்சர் இன்ஸ்டிடுடிலே எனக்கு எல்லா உதவியும் கிடைக்கறது.. எனிவே..தாங்க்ஸ்.,, நீ சொல்லு உன்னோட கம்பெனி எப்படி இருக்கு?.. புதுசா ஆரம்பிச்சது எப்படி இருக்கு பிக்கப்?"

"கூல்.. ஒரு பிரச்சனையும் இல்லை.. நிறைய புது வாக்ஸின்ஸ் கண்டுபிடிக்கறதுலே.. ரிசர்ச் பண்ணறோம் மத்தபடி மெடிகல் எகுப்மெண்ட்ஸ் ஸ்பெஷலைஸ் பண்ணறோம்..அதுக்காக நான் நிறைய டிராவல் பண்ண வேண்டி இருக்கு.. அதைவிடு.. உன்னோடது என்ன பிளான்.. ஏதோ முன்னே ஒரு கேர்ள் ஃப்ரெண்ட் இருந்தாளே.. அவளோட ப்ரேக் ஆயிடுத்தா?..", என்று ஆர்வமாய் கேட்டான்..

"பாத்தியா எப்படி போட்டு வாங்கறே?.. எனக்கு ஃப்ரெண்ட் ஒருத்தி இருந்தா ஆனா அவ இப்ப இல்லை.. இப்போ வேற ஒரு ஃப்ரெண்ட் இருக்கா.. ஆனா ப்யூர்லி ப்ளாடொனிக்.. ஒன்னும் இண்டெரெஸ்டிங்கா இல்லை சொல்லிகறாப்பலே..உனக்கு என்ன ப்ளான்.. உன்னோட அம்மா ரெண்டு வருஷம் முன்னாடியே கல்யாணத்துக்கு பார்த்துண்டு இருந்தாளே?.. ஒன்னும் ஃபிக்ஸ் பண்ணலையா?"

"இல்லடா.. எனக்கு மனசுக்குப் பிடிச்சாப்போலே ஒன்னும் இல்லை..ஆனா தெரியலை..கிடைப்பாள்ங்கிற நம்பிக்கை இருக்கு..", என்றவன் பார்வை ஒரு குறுகிய ஷணம் பைரவி மேல் படிந்து மீள்வதை பைரவியால் உணர முடிந்தது..

You might also like - Puthir podum nenjam... A romantic story...

"இதென்னா..இவன் பார்வை இப்படி இருக்கா இல்லை நான் தான் வீணாக யோசிக்கிறேனா?', என்று நினைத்தவளை உலகுக்கு மீட்டது ஆனந்தின் குரல்.

"என்ன மிஸ். பைரவி.. ஏதோ யோசனையில் இருக்கீங்க?.. நீங்க என்ன பண்ணறீங்க.. அதெல்லாம் சொல்லலையே?", என்று கேட்டவனை

பார்த்து லேசாய் புன்னகைத்தவள், "இல்லை மிஸ்டர். ஆனந்த் ஏதோ நினைப்பு.. சாரி. நானும் ரிசர்ச் பண்ணிண்டு இருக்கேன்.. பேஸிகல்லி நான் ஒரு மெடிகோ..ஜெனரல் இண்டெர்னல் மெடிசின் ஸ்பெஷலைஸ் செய்திருக்கேன்.. இப்போ ரிசர்சுலே இறங்கிட்டேன்.. ஜீன் பேட்டர்ன் பத்தி ரிசர்ச் பண்ணறேன்.."

"ஆனந்த்.. பைரவி மெடிசின் கூட சேர்ந்து மியூசிக்லேயும் ரிசர்ச் பண்ணறா?.. அவளோட டாபிக்கே டிஃப்ரெண்டா இருக்கும்.. சங்கீதம் பாரம்பரியமா வழிவழியா மரபணுக்கள் மூலமா வரதா இல்லை.. பழக்கத்தினால் வர குணதிசயமான்னு ரிசர்ச் செய்யறா..மேலும் மேடம் ரொம்ப நல்லா பாடுவா..பெர்ஃபார்மன்ஸ் குடுக்கற அளவுக்கு..", என்று பைரவி புகழ் பாடினான் அஜய்..

"ஹெய்.. ஹி இஸ் எஃஸாஜிரேடிங்க்.. ரிசர்ச் பண்ணறது உண்மை.. ஓரளவு பாடுவேன்.. அது சம்பந்தமாத் தான் வந்துருக்கேன்.. மத்தபடி பெரிய ஜீனியஸ் இல்லை நான்", என்றாள் தன்னடக்கத்துடன்..

அதற்குள்..சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி ஒரு அறுபத்தைந்து வயது மதிக்கக் கூடிய ஒரு பெரியவர் அங்கு வந்து சேர்ந்தார்.. பார்ப்பதற்கு ஆனந்த் போலவே ஜாடையில்.. யாரும் சொல்லாமலேயே தெரிந்துவிட்டது அவர் ஆனந்தின் தந்தை என்று..

"வாங்கோ வாங்கோ..சாரி.... என்னால் வாசல் வந்து வரவேற்க முடியவில்லை.. ஐ யாம் ராமனாதன் ஆனந்தின் அப்பா", என்று பரஸ்பரம் அறிமுகப்படுத்திக் கொண்டார்..

சிறியவர்களின் முகமனை ஏற்றவர்.. சிறிது நேரம் அவர்களுடன் சம்பாஷனையில் ஈடுபாட்டார்..

"அஜய் எங்கப்பாவுக்கு காலில்  ஃப்ராக்சர்.. ரெண்டு காலிலேயும்.. ஆயிடுத்து இன்னமும் ஒரு ரெண்டு மாசம் தான் அதுக்கப்புறம் அவர் பழையபடி நடமாடத் தொடங்கிவிடுவார்", என்று அவர் கால்கள் எப்படி பாதிப்படைந்தது என்று அதைப் பற்றி சிறிது நேரம் பேசியபடி இருந்தனர்..

"ஆனந்த் எங்கே உன் அம்மாவும் தங்கையும்?", என்று கேட்ட அஜயை பார்த்தவன்,

"ரெண்டு பேரும் ஏதோ கல்யாண ரிசப்ஷனுக்கு போயிருக்கா.. அப்பாவால் போக முடியாது நான் ஆஃபிஸில் பிஸி இன்னிக்கு..பாவம் அப்பாதான் வீட்டில் இருந்தபடியே நிறைய வேலைகளை செய்கிறார்..இன்ஃபாக்ட்..அவர் அஸிஸ்டண்ட் திடீரென்று ஒரு விஷயமாய் வெளியூர் போக வேண்டி வந்ததனால் இப்போ மொத்த வேலையையும் அவரே செய்யனும்.. அதான் நான் அவருக்கு ஒத்தாசையா ஒருத்தரை தேடிண்டு இருக்கேன்.. யாராவது தெரிஞ்சால் சொல்லு", என்றான்

"ஒஹ்.. ஷ்யூர்..மத்தபடி வேறு என்ன விஷயம்?"

"ம்ம்.. வாங்கோ இப்போ போய் சாப்பிடலாம்", என்று அவர்களை டைனிங் ஹாலுக்கு அழைத்துச் சென்றான்..

பலவிதமான ருசியான உணவுகளில் திணறித்தான் போயினர் அஜயும் பைரவியும்.. ஒரு வழியாய் உண்டு முடித்தபின் மீண்டும் சிறிது நேரம் ஹாலில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்..

"அப்பா பைரவி நன்னா பாடுவாளாம் உங்களுக்குத்தான் மியூசிக்னா உசிராச்சே..எங்கப்பா ரொம்ப பெரிய மியூசிக் லவர்.. எல்லா சங்கீத சபாவிலேயும் மெம்பர்..", என்று எடுத்து கொடுத்தான் ஆனந்த்..

"அப்படியா.. பைரவி எனக்காக ஒரு பாட்டு பாடேம்மா..இஃப் யு டோண்ட் மைண்ட்", என்று பெரியவர் கேட்க..

"ஒஹ் அங்கிள்.. நான் ஒன்னும் அவ்வளவு பெரிய ஆள் இல்லை..ஏதோ கொஞ்சம் பாடுவேன்....சரி சொல்லுங்கோ உங்களுக்கு என்ன பாட்டு பிடிக்கும்?"

"ம்ம்..என்னுடைய சாய்ஸ்.. பாரதியின் சின்னஞ்சிறு கிளியே ...உன் கண்ணில் நீர் வழிந்தால்..ன்னு வருமே அது எனக்கு ரொம்பப் பிடிக்கும் உனக்குத் தெரியுமா?".

"ம்ம்.. தெரியும்.." என்றவள்,

மெல்ல தன்னை ஒரு நிலைப்படுத்திக் கொண்டு ராகமாலிகையில்..பாடத் தொடங்கினாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.