(Reading time: 10 - 20 minutes)

25. நினைத்தாலே  இனிக்கும்... - புவனேஸ்வரி 

ன்னத்தில் கை வைத்து கொண்டு அமர்ந்திருந்தான் பிரேம் .. தற்பொழுது இருக்கும் நிலைமைக்கு அவனால் செய்ய முடிந்தது இது மட்டும்தான் ! சுபத்ராவின் வீட்டில் அவன் தங்கி இருக்கும் மூன்றாவது நாள் அது .. அவளது சுடு சொல்லும் எரிச்சல் பார்வையும் , அதீத மௌனத்தையும் மட்டும்தான் இந்த மூன்று நாட்களாய் பார்த்து கொண்டு இருக்கிறான் அவன் .. மத்தபடி அவர்களுக்குள் எந்தவொரு மாற்றமும் வந்ததை தெரியவில்லை .. அவளின் தாயாரோ கடமைக்கு ஓரிரு வார்த்தைகள் பேசுவார் .. தந்தை கொஞ்சம் பேசினாலும், அவ்வப்போது அவரது முகத்திலும் கடுமைதான் .. இதில் அவளது அண்ணன் அசோக் தான் மொத்தமும் வில்லனை போலவே வளம் வந்தான் .. அவனது கோபமான பேச்சில் , ஏன்தான் இங்கு வந்தோம் ? என்று அடிக்கடி தோன்றியது அவனுக்கு .. இருப்பினும் சுபத்ராவிற்காக பொறுத்து கொண்டான் .. தன்னால் தானே இவள் இப்படி ஆகினாள்  ? என்ற குற்ற உணர்ச்சி அவனை பெரிதும் வாட்டியது ..

கன்னத்தில் கை வைத்து கொண்டிருந்தவனின் கைகளை சட்டென இழுத்துவிட்டு கை கொட்டி சிரித்தாள் அந்த புதியவள் .. பழைய பிரேமாக இருந்திருந்தால் அவளது அழகிய தோற்றத்தை பார்த்ததுமே தனது வசனங்களை தொடங்கி இருப்பான் .. ஆனால் இப்பொழுதோ , நிதானமாய் அவளை பார்த்தான் .. கூடவே கொஞ்சம் எரிச்சலும் மூண்டது ..

" ஹே என்ன முறைக்கிற ?" என்றவாறே பேச்சை தொடங்கினாள்  அவள் ..

ninaithale Inikkum

" ஹலோ , நான் உங்களை பார்த்து முறைக்கவே இல்லை "

" ஓ அப்போ சைட் அடிச்சியா ?"

" இது பாருங்க , இந்த மாதிரி பேச்செல்லாம் என்கிட்ட வேண்டாம் " என்று அங்கிருந்து எழுந்தே விட்டான் பிரேம் ..

" அடடே... பாருடா அந்த அளவுக்கு நீ திருந்திட்டியா பிரேம் ? பரவாயில்லையே .. பார்க்கவே பெருமையாய் இருக்கு " என்று அவள் கூறவும் கேள்வியாய்  அவளை பார்த்தான் அவன் .. " என் பேரு உங்களுக்கு எப்படி தெரியும் "

" ஹாய்  ஐ எம் அப்சரா " என்று கை நீட்டினாள்  அவள் .. அவளது சிநேகமான அணுகுமுறைக்கு கட்டுபட்டு அவன் கை கொடுத்த நேரம் , அங்கு வந்த அசோக், வழக்கத்தை விட கொஞ்சம் அதிகமாகவே பிரேமை முறைத்துவிட்டு போனான் .. அதை கண்டு அப்சராவின் இதழில் வெற்றிப்புன்னகை உதித்தது .. அவன் செல்லும்வரை  பிரேமின் கைகளை கட்டாயமாய் பிடித்து கொண்டு நின்றாள் .. பிரேமே  எரிச்சலுடன் "ச்ச என்ன பெண்ணிவள் ?" என்று நினைத்து கொண்டான் .. அதையே அவனது முகமும் பிரதிபலிக்க

" ரொம்ப தேங்க்ஸ் அண்ணா " என்றாள்  அப்சரா

" அண்ணா வா ?"

" ஆமா, அண்ணா தான் .. அசோக்  இங்க வர்றதை பார்த்து தான் உங்ககிட்ட பேச்சு கொடுத்தேன் .. நான் எதிர்பார்த்த  மாதிரியே அசோக்குக்கு கோபம் வந்துருச்சே " என்றவள் சிரிக்கவும் அவனுக்கு " ஐயோ " என்பது போல இருந்தது ..

" ஏற்கனவே அவன் என் மேல செம்ம கோபத்துல இருக்கான் . இதுல இது வேற என்ன நாடகம் ? யாரு நீ?

" நான் உங்களுக்கு தங்கச்சி மாதிரின்னு வைச்சுகோங்க  "

" இப்படி சுத்தி  வளைச்சு பேசுறதா இருந்தா நீ என்கிட்ட பேசவே வேணாம் .. நான் ஏற்கனவே ரொம்ப நொந்து போயிருக்கேன் "

" அட என்ன நீ என்ன சொன்னாலும் புலம்பி தள்ளிட்டு இருக்க ? இது பாரு அண்ணா , லைப் ல தப்பு நடக்குறது சகஜம்தான் .. அதை எப்படி சரி பண்ணனுமேன்னு பார்க்கணுமே தவிர சும்மா அதையே நினைச்சிட்டு இருக்க கூடாது .. எனக்கு உன்ன பத்தி எல்லாமே தெரியும் . உன்னை யாரு இங்க கூட்டிட்டு வந்தாங்கன்னு கூட எனக்கு தெரியும் " என்று  சொல்லவும் பதட்டத்தில் அவனுக்கு வியர்த்தே விட்டது ..

" நான் சுபத்ராவுடைய மாமா பொண்ணு .. எனக்கு அசோக் மாமாவுக்கும் கொஞ்சம் ஊடல் ..அதான் உன்னை வெச்சு கொஞ்சம் பொசசிவ்னஸ்  கேம் விளையாடினேன் "

" இதெல்லாம் ரொம்ப ஓவர் .. உன் பிரச்சனைக்காக என்னை மாட்டி விடுறியே "

" ஹெலோ , சுபி உன்கிட்ட பழைய மாதிரி பேசணும்னு எண்ணமே இல்லையா உனக்கு ?"

" இருக்குத்தான் .. அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் ?"

" ஏன் , காதல் மட்டும்தான் பொறாமை வருமா ? நட்பில் வராதா ?"

" அவ என்னை நண்பனே இல்லைன்னு சொல்லிட்டா .. நீ வேற சும்மா வெறுப்பேத்தாம இரு "

" சுபியா அப்படி சொன்னா ? எல்லாம் நாடகம் .. அவளுக்கு உன்மேல கோபம் இருக்கு தான் .. ஆனா , உன்னை வெறுக்கல .. நீ என்கூட கூட்டணி போட்டு என் பேச்சை கேளு .. கண்டிப்பா அவ பேசுவா " என்றாள்  அப்சரா நம்பிக்கையுடன் ..

" உன் மாமாகூட சேரணும்னு என்னை  வெச்சு நீ கேம் எதுவும் பிளான் பன்னல தானே ?"

" ச்ச ச்ச .. அதான் உன்னை அண்ணான்னு பாசமா கூப்பிட்டேனே .. அப்பறம் எப்படி ஏமாற்றுவேன் ? " 

" ஹ்ம்ம் வசனம் எல்லாம் நல்லாத்தான் .. பார்ப்போம்  போக போக என்னாகுதுன்னு " என்று கவலையாய் சிரித்தான் அவன் . அவர்களின் கூட்டணி வெற்றி பெறுமா என்று பொறுத்திருந்து பார்ப்போம் !

" ஆளுமா டோலுமா ... ஆஅ .ஆ ..ஆ.. " இசையெனும் இன்ப வெள்ளத்தில் மூழ்கி இருந்தான் செல்வம் ..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.