(Reading time: 12 - 23 minutes)

டனே கிளம்பினாள் பாட்டி, தானும் கூடவே போனான்,  பாட்டியும் அம்மாவும், அப்படித்தான், அவர்கள் புருஷன் கூப்பிட்ட உடனே போவார்கள்,    அதே கமலா சித்தி, சித்தப்பாவை  பற்றி கொஞ்சம் கூட கவலைப் படமாட்டாள், பாவம் சித்தப்பா என்று நினைத்துக் கொண்டே தாத்தா ரூமிற்கு பாட்டியுடன் வந்தான்

தாத்தா ரூமுக்கு வந்தார்கள், நீலகண்டன், தன், மனைவியை,' வா, சிவா, ஒரு நல்ல விஷயம் பேசனும் உன்னிடம், அப்புறம்தான் மற்றவர்களிடம் பேசனும்' என்றார்

'என்ன?' என்றார் அவர்

‘நம்ம வனிதாக்கு நல்ல வரன் வந்திருக்கு நம்ம ருத்ராக்கு தெரிந்த பையன் , பாங்கில் வேலை பார்க்கிறான் பையன், நல்ல பையன் என்கிறான் நம்ம ருத்ரா, நம்ம எல்லோரும் பேசி சரி என்றால், அந்த பையன் அவன் அம்மாவை கூட்டிக்கொண்டு  வருகிறேன் என்று சொன்னானாம், என்ன சொல்கிறாய்?,’

'இப்ப என்ன அவசரம் இது என்ன அந்த காலமா?' என்று கேட்டார்

'இல்லம்மா, ஆனா ஒரு நல்ல வரன்... பிக்கல், பிடுங்கல் இல்லை, அது மட்டுமில்லை கமலா இருக்கும் இருப்புக்கு நாம முன்னிருந்து இந்தப் பெண்களை கரை ஏத்த வேண்டும், இதான் என் முடிவு,' என்றார்

'நீங்கள் சொல்வதும், சரிதான், பெண்ணுடைய, படிப்பு போய்விடுமே என்றுதான்,' என்றார் சிவகாமி

'அதுவும், அந்தப் பையன், கல்யானத்துக்கு பிறகு,மேலே படிக்கட்டும் என்று சொல்லி விட்டாராம்,'

'சரி, எல்லோருடனும் பேசி முடிவெடுங்கள், ' என்றார் சிவகாமி,

‘அடேய், ருத்ரா, பெரியவர்களை கூப்பிடு, சின்னவர்கள் வேண்டாம், என் ரூமிலேயே பேசலாம், நீயும் வந்துவிடு,’ என்றார், நீலகண்டன்

ருத்ராவும், எல்லோரிடமும் சொல்லிவிட்டு வந்தான் அப்போது வனிதா ஸ்டடியில் உட்கார்ந்து படித்துக் கொண்டிருந்தாள், அவளிடம் சென்று மெதுவாக விஷயத்தை கூறினான், அவளும் சரி என்று தலை ஆட்டினாள், அவள் தலையை வாஞ்சையுடன் தடவிக் கொடுத்தான்..

பிறகு அங்கிருந்து, தாத்தா ரூமுக்குப் போனான், அங்கு அப்பா, அம்மா, சித்தப்பா இருந்தார்கள், இவனும் அங்கு சேர்ந்துக் கொண்டான். தாத்தா, அவர்களிடம் விஷயத்தை சொன்னார், அதில் சிவேஷ் ஒன்றும் வாயே திறக்கவில்லை, அவருக்கு தன் மகன் மேல் எப்பவும் ஒரு நம்பிக்கை உண்டு, அவன் எது செய்தாலும் ஒரு காரணம் இருக்கும், அதனால் ஒன்றும் பேசவில்லை, கணேஷிடம் எல்லா விஷயத்தையும் கூறினார்,  நீலகண்டன்... அவன் அண்ணனைப் பார்த்தான், ‘என்ன அப்படி பார்க்கிறாய், உன் பெண்ணுடைய கல்யாணப் பேச்சு அதனால் நீதான் முடிவெடுக்கணும்’ என்றார் சிவேஷ்

“அப்பா, நீங்கள் என்ன சொன்னாலும், அதையே செய்வோம்,“என்றான் கணேஷ்

ஆனால் நீலகண்டனோ, ‘உன் மனைவியிடம் யார் பேசுவார்கள்?’ என்று கேட்டார்

‘அப்பா அவள் இந்த வீட்டிலேயே இருப்பதில்லை, இந்தப் பெண்களுக்கு அவள் என்ன செய்திருக்கிறாள்,’ என்று அவன் கேட்க,

அவரோ, ‘, என்ன செய்யறது அவள் அம்மாவாகி விட்டாளே, அதற்காகவாவது நீ அவளிடம் கேட்டுத்தான் ஆகவேண்டும், நாளைக்கு சம்பந்தியிடம் நம் வீட்டு கதையையா சொல்வது,’என்று கேட்டார்.

‘அப்பா, நம் வனிதாவுக்கு இதில் இஷ்டமா என்று கேட்க வேண்டும்’ என்றான் கணேஷ்

“அவளுக்கு இஷ்டம்தானப்பா நம் ருத்ரா அவளிடம் பேசினான், அவன் என்னவோ தன் சொந்த தங்கையைப் போல்தான் நினைத்து எல்லாம் செய்கிறான், அந்தப் பையன் உன் பெண் மீது இஷ்டப்பட்டு விட்டானே என்ற போது அவனுக்கு கொஞ்சம் பெருமையாக இருந்தது,”

“சரிப்பா, நீங்கள் சொல்வது போல் இப்போது நான் கமலாவிடம் பேசுகிறேன்,அவளை வரச் சொல்கிறேன்,” என்றான் கணேஷ்.

“அப்பா, நம்ம வித்யாவை விட மூன்று வயது சின்னப் பெண், இவளுக்கு என்ன அவசரம் என்று கமலா கேட்பாள். நான் பதில் சொல்லிக்கிறேன், அது சரி ஏன் என்று எனக்கு விளக்கம் சொல்கிறீர்களா?’ என்று கேட்டு

அவனே, ‘அவளுக்கு என்ன செய்யப் போகிறோம்? நான் மூன்று பெண்களை வைத்திருக்கிறேன், என்னிடம் ஒரு சேவிங்க்ஸ் கூட  இல்லைப்பா,’ என்று வருத்தத்துடன் சொல்லியபோது

‘என்னடா இது, பைத்தியக் காரன் மாதிரி பேசறே?, நீங்கள் எல்லாமே என் சொத்து, உன் பெண்ணுங்க எல்லாமே என் சொத்து, என் பிள்ளைங்க, அதனாலே அவர்கள் எல்லோருக்கும் ஒரு பிளாட் , நகை, எல்லாம் சேர்த்து வைத்திருக்கிறேன், இது தவிர, நீங்கள் மறக்க வேண்டாம், இன்னும் ரெண்டு தம்பிங்க இருக்காங்க அவங்களுக்கும் நான் சேர்த்து வைத்திருக்கிறேன், அதை எல்லாத்தையும் என் பேரனான ருத்ராவிடம் தான் பொறுப்பை கொடுப்பேன், அவன் பேரில்தான் பவர் எழுதி வைத்திருக்கிறேன் , ஏன் என்றால், என்னைப் போலவே இவனுக்கு இந்தக் குடும்பத்தில் பொறுப்பும் அக்கறையும் உண்டு, என்னுடைய எல்லாச் சொத்துக்களுக்கும் அவன் தான் பவர் ’ என்று கூறினார்

எல்லோரும் சரி, என்றனர்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.