(Reading time: 12 - 23 minutes)

தெல்லாம் நம் ருத்ரா பேசிவிட்டான் அவளிடம், அவளுக்கும் அந்தப் பையனைப் பிடித்திருக்கிறது; இப்போ, நீயும், உன் மனைவியும் தான் முடிவு பண்ண வேண்டும் , அந்தப் பையன் கல்யாணம் பண்ணிக்கொண்டு படிக்கட்டும் என்கிறாராம், இனி, உங்கள் முடிவு, ஞாபகம் வைத்துக் கொள் உனக்கு மூன்று பெண் குழந்தைகள், அந்த மூன்றையும் ஒழுங்காக வளர்த்து நல்ல பேரோடு, பெண்களை கல்யாணம் பண்ணிக் கொடுக்க வேண்டும், அது பெரிய பொறுப்பு….இப்ப ஏதோ நம்ம ருத்ரா, உன் பெண்களிடம் பேசி, டியுஷன் எடுத்து அவர்களை ஒரு அவரேஜ் ஸ்டூடன்ட் ஆக்கி வைத்திருக்கிறான், அதனால் என்னைக் கேட்டால், இதை உன் பெண்டாட்டியிடம் எடுத்துச் சொல்லி இரண்டு பேரும் பேசி  முடிவெடுங்கள்,’ என்று கூறி முடித்தார்.

‘சரிப்பா, அவளிடம் பேசுகிறேன் ,’என்றான் கணேஷ்

‘இத பார், இந்த ஞாயிற்று கிழமை பெண் பார்க்க வரச் சொல்லலாமென்று இருக்கிறேன், அதனால், அவளை வந்து மூன்று பெண்களுக்கு அம்மாவாக இங்கு வந்து இருக்கச் சொல்,பெண்ணை மாமியார் வீட்டுக்கு அனுப்பும் வயதிலும் இவள் பிறந்த வீட்டில் சீராடிக் கொண்டிருக்கிறாள், நன்றாகவே இல்லை,’ என்றார் நீலகண்டன்,

‘சரிப்பா நான் பேசுகிறேன், அவர்களிடத்தில், அந்த தினேஷ், எங்கே? வரச் சொல்லுங்கள்,’ என்றார்

எல்லோரும் கலைந்தனர்.

‘ருத்ரா, உனக்கு தினேஷ் பற்றி ஏதாவது தெரியுமா? அவன் ஏன் கல்யாணத்துக்கு எந்தப் பெண்ணை பார்த்தாலும் வேண்டாமென்கிறான், இதோ அண்ணன் பெண்ணுக்கே கல்யாணம் பண்ணப் போகிறோம் இவன் ஏன் இப்படி பன்றான்னு தெரியலியே,’ என்று வருத்தப் பட்டார்.

'நான் பேசறேன் தாத்தா சித்தப்பாவிடம், நீங்க கவலைப் படாதீங்க!' என்றான்

'சரி' என்று கூறி, அடுத்து செய்ய வேண்டியதை நினைத்துக் கொண்டிருந்தார்,

ருத்ரா அருணுக்கு போன் செய்தான், 'சித்ரா என்ற பெண் வருவாள் அவளை உனக்கு செக்ரட்டரியாக நானே தேர்ந்தெடுத்துவிட்டேன், அவளுக்கு மாதம் பதிமூன்றாயிரம் சம்பளம், ஆனால்….  இப்போதைக்கு நான்தான் முதலாளி என்பது தெரியவேண்டாம், நான் சிநேகிதன் போல இருக்கட்டும், அவளை இண்டர்வியு பண்ணு, ஆனால், செலெக்ட் பண்ணிவிடு! '

'சரி சார்!'

'சரி... நான் நாளைக்கு பேசறேன்!'

அங்கிருந்து தினேஷ் ரூமுக்குப்  போனான், 'என்ன சித்தப்பா, இங்கேதான் இருக்கீங்களா? என்ன வந்து படுத்திட்டீங்க,சாப்பிடலியா?,'என்று அவன் அருகில் சென்றான் ருத்ரா, அப்போது அந்த வாசனையை உணர்ந்து விட்டான்

‘குடிச்சிருகீங்களா? சொல்லுங்க,உங்களுக்கு என்ன ப்ராப்ளம்? கல்யாணத்தை ஏன் அவாய்ட் பண்றீங்க, என் கிட்ட சொல்லுங்க, நான் உங்கள் ப்ராப்ளத்தை சரி பண்ணறேன்,’ என்று நயமாக சொன்னான்

' யாராலும், சரி பண்ண முடியாதுடா!' என்றான் தினேஷ்

' இந்த உலகத்தில் சரி பண்ண முடியாதது எதுவும் இல்லை, நீங்கள் என்னவென்று சொல்லுங்கள், நான் சரி பண்ணுகிறேன், வீட்டில் மற்றவர்களைப் போல் நீங்களும் சந்தோஷமாக ஒரு குடும்பஸ்தனாய் வாழ வேண்டுமென்று தாத்தாவும், பாட்டியும் தினம் கடவுளிடம் வேண்டிக் கொள்கிறார்கள். நீங்கள் ஏதாவது லவ்வில் மாட்டிக் கொண்டிருக்கிறீர்களா சொல்லுங்கள்,' என்று ஊக்கினான்

'ஆமாம்!' என்றான் தினேஷ்

'நினைத்தேன்! மேலே சொல்லுங்கள்!' என்றான்

'அந்தப் பெண்ணுக்கு, அவர்கள் வேறு இடத்தில் கல்யாணம் செய்து விட்டார்கள், ஏனென்றால், அவர்கள் ஜாதி வேறு, இப்போது, என்னால் வேறு பெண்ணை நினைக்கக் கூட முடியவில்லை,அவளைப் பார்க்கக் கூட முடியவில்லை, அவளை வெளியூரில் கட்டிக் கொடுத்துவிட்டார்கள்,' என்று முடித்தான்

'சரி சித்தப்பா, கல்யாணம்கிறது, நாம் பார்த்து முடிவு பண்ணுவது இல்லை, நமக்கு மேலே ஒருவன் முடிவு பண்ணறது, இதை உணர்ந்தீங்கன்னா, இந்த மாதிரி குடித்து படுக்க மாட்டீங்க, உங்களுக்கு அதை மறக்கனும்னா, கம்பெனிக்கு போங்க இருக்கிற எல்லா வேலையும் இழுத்துப் போட்டு செய்யுங்க, வீட்டு வேலையை செய்யுங்க, அதை விட்டு விட்டு குடித்து அழிவதா?' என்று கேட்டான்  

‘இப்போ நான் சொல்வதைக் கேளுங்க, உங்களுக்கு மாற்று மருந்து ,ஒரு நல்ல பெண்ணாய் பார்த்து கல்யாணம் செய்வதுதான், நீங்கள் உங்கள் மனைவியோடு,அவள்தான் உங்கள் காதலி என்று நினைத்து வாழுங்கள், உங்கள் வாழ்வில் எல்லா சந்தோஷமும் வந்துவிடும், நம் மனதை எப்போதும் பாசிடிவ் ஆக வைத்துக் கொள்ள வேண்டும், அந்தப் பெண் யாரோ அவள் கல்யாணம் செய்துக் கொண்டு குடும்ப வாழ்வில் சந்தோஷமாக இருப்பாள், இனி என்ன நினைத்தாலும் அவள் திரும்பி வரப் போவதில்லை, அதனால் உங்கள் வாழ்க்கையை ஏன் வீணாக்கிக் கொள்ள வேண்டும்,அதில் என்ன பிரயோசனம், உங்களை நினைத்து உங்களைப் பெற்றவர்கள் கவலைப் பட வேண்டுமா? நினைத்துப் பாருங்கள் உங்கள் அப்பா உங்களுக்கு வேண்டிய சொத்து சேர்த்து வைத்திருக்கிறார், நீங்கள் மற்றவர்கள் மாதிரி படிப்பு முடித்து வேலை கிடைக்க வில்லை, பணம் இல்லை என்று கஷ்டப் பட வைத்திருக்கிறாரா, எல்லாம், இருந்தும், நீங்கள் ஏன், அவரை மன வருத்தப் பட வைக்கிறீர்கள்,’ என்று கூறி தினேஷை கூர்ந்து பார்த்தான்

'நீ சொல்வதும் சரியாகத்தான் தோன்றுகிறது,' என்றான் தினேஷ்

'சரி இப்போதாவது, நான் சொல்வதைக் கேளுங்கள், முதலில் நன்றாக, சுடுதண்ணியில் குளித்து விட்டு வாருங்கள், நான் போய் உங்களுக்கு எலுமிச்சை ஜூஸ் செய்துக் வைக்கிறேன், அதை குடித்து விட்டு, தாத்தா உங்களைக் கூட்டி வரச் சொன்னார், அவரிடம் பேசி விட்டு வரலாம், கொஞ்ச நாள், நீங்கள் என்னுடன் என் ரூமிலேயே படுங்கள், எல்லாம் சரியாகிவிடும்,’ என்றான்

'சரி!' என்றான் அவனும், எழுந்து குளியலறைக்கு சென்றவுடன், ருத்ரா கீழிறங்கி சமையல் அறைக்குச் சென்று எலுமிச்சை எடுத்து ஜூஸ் செய்தான், அங்கு வந்த அம்மா 'என்ன பன்ற ருத்ரா, நான் செய்யறேன் நீ எதுக்கு சமையல் அறையில்,' என்றாள்

'ஏன் மா, பாவம் நீயும் பாட்டியும் தான் எப்பவும் சமையலறையே கதி என்றிருகிறீர்கள், இனிமே வாரத்தில் ஒருநாள் நம் பெண்களைக்  கொண்டு நான் சமைக்கிறேன்,’ என்றான் அம்மாவின் கன்னத்தைத் தட்டி,

அவன் அம்மாவிற்கு பெருமையாகவும், சந்தோஷமாகவும் இருந்தது.

Episode # 03

Episode # 05

தொடரும்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.