(Reading time: 27 - 53 minutes)

ப்பாக்கிட்ட பேசலாம்ன்னா அவர் பிஸ்னஸ் விஷயமா இப்போ ஊருக்கு போயிருக்காரு... இந்த கல்யாணம் முடிஞ்சதும் தான் அம்மாக்கிட்ட பேசனும்ன்னு காத்துக்கிட்டு இருந்தா... ஆனா அதுக்குள்ள அவ தலையில இடி இறங்குற மாதிரி ஒரு செய்தி சென்னையில இருந்து வந்தது.

சப்னாவோட ஃப்ரண்ட் தான் அவளுக்கு ஃபோன் பண்ணா... பிருத்வியை ரெண்டு பொண்ணுங்கக் கூட தியேட்டர்ல பார்த்ததா சொன்னா... அது தான் அந்த இடி இறங்குன செய்தி...

பிருத்வி காலேஜ்ல படிக்கும் போதே அவ்வளவா பொண்ணுங்கக் கூட குளோஸா பழக மாட்டான்... சும்மா ஏதாவது பேசுவதோட சரி... இவக் கூட பழக வைக்கவே இவ கஷ்டப்பட வேண்டியிருந்தது... ஆனா பிருத்வி பொண்ணுங்கக் கூட தியேட்டர்க்கா... அது யாராக இருக்கும்... ஒருத்தி கண்டிப்பா அவனோட தங்கச்சியா தான் இருக்கும்... இன்னொருத்தி யாரு..?? என்று தான் அவள் குழப்பிக் கொண்டிருந்தாள்.

பிருத்விக்கிட்ட நேரடியா உன்கூட சினிமாக்கு வந்தது யாருன்னு கேக்க முடியாது... அதனால் வேற மாதிரி கேட்க முடிவு செய்தாள்... அவன் ஃபோன் செய்ததும்... வழக்கமான பேச்சுக்கள் முடிந்ததும்... அவளின் கேள்விக்கு வேறு மாதிரி கேள்விக் கேட்டு விடை அறிய முயன்றாள் அவள்...

"பிருத்வி... அப்புறம் என்னோட பிரண்ட் உங்களை ரெண்டு பொண்ணுங்கக் கூட தியேட்டர்ல பார்த்ததா சொன்னா பிருத்வி... ஆனா நான் நம்பல... நீ வேற யாரையாவது பார்த்திருப்பன்னு நான் சொல்லிட்டேன்.."

"இல்லை சப்னா... உன்னோட ஃப்ரண்ட் என்னை தான் பார்த்திருப்பாங்க... அம்மாவோட குளோஸ் ஃப்ரண்ட் நியூயார்க்ல இருந்து வந்திருக்காங்க... ஃபிரண்ட்ன்னு சொல்றதை விட எங்க ரிலேஷன் மாதிரின்னு சொல்லலாம்...

அவங்களை அத்தைன்னு தான் கூப்பிடுவோம்... அவங்க பொண்ணு யுக்தாவும் பிரணதியையும் கூட்டிகிட்டு போனேன்... ஆக்சுவலா ரெண்டுபேருக்கும் துணையா தான் அப்பா போயிட்டு வர சொன்னாரு... அப்ப தான் உன்னோட ஃப்ரண்ட் என்னை பார்த்திருப்பான்னு நினைக்கிறேன்..."

"ஓ அப்படியா பிருத்வி... எனக்கு தெரியும் உங்களை பத்தி... இருந்தாலும் அவ என்கிட்ட சொன்னாளேன்னு தான் கேட்டேன்... நீங்க தப்பா நினைச்சுக்காதீங்க பிருத்வி.."

"ஹே.. இதுல என்ன இருக்கு... நீ இங்க இருந்திருந்தா நானே உனக்கு அவளை இன்ட்ரடீயூஸ் பண்ணி வச்சிருப்பேன்..."

"ஓகே பிருத்வி... நான் அப்புறம் பேசறேன்..." என்று ஃபோனை வைத்துவிட்டாள்.

நியூயார்க்ல இருந்து வந்திருக்காளா... அய்யோ இந்த டைம் பார்த்து நான் இங்க வந்துட்டேனே... சே... என்னிக்காவது அவங்க பேரண்ட்ஸ் என்னை இது மாதிரி பிருத்வி கூட எங்கேயாவது அனுப்பியிருந்திருப்பாங்களா..?? அந்த பிரணதி தான் என்கிட்ட நல்லா பேசியிருப்பாளா..??

அந்த யுக்தா எப்படியிருப்பாளோ..?? இப்போ சென்னைக்கு போகனும்ன்னு சொன்னாக் கூட அம்மா கல்யாணம் முடிஞ்சதும் போன்னு சொல்லுவாங்களே... கல்யாணம் முடிஞ்சதும் ஏதாவது சாக்கு சொல்லிட்டு முதலில் சென்னைக்கு கிளம்பனும்...

இப்படியெல்லாம் பிருத்வி சொன்ன செய்தியை கேட்டு அவள் மனது புலம்பியது... பிருத்வியை காதலிச்சா மட்டும் போதும் என்று மட்டும் தான் அவள் முயற்சிகள் எடுத்தாளே தவிர... அவர்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் மனதில் இடம் பிடிக்க வேண்டும் என்று அவள் நினைத்ததில்லை...

பிருத்வியே நேராக அவர்களிடம் அவன் காதலைப் பற்றி சொன்னதால் தான் அவர்கள் சம்மத்தித்தார்களே தவிர... அவளை அவ்வளவாக அவர்களுக்கு பிடிக்கவில்லை... அதுவும் பிரணதிக்கு சுத்தமாக இவளை பிடிக்காது... அதற்கு காரணம் என்ன என்று தெரியும் சப்னாவிற்கு.. இருந்தாலும் அவள் அதைப் பற்றி கவலைப்படவில்லை.... பிருத்வியை திருமணம் செய்துக் கொண்டால் மட்டும் போதும் என்று தான் நினைத்திருந்தாள்... ஆனால் இப்போது யுக்தா வந்திருப்பது தான் அவளுக்கு யோசனையாக இருக்கிறது.

காதல் என்றால் என்ன..?? உண்மை காதல் அழிவதில்லை... அந்த காதலர்கள் பிரிந்தாலும் அந்த காதல் நிலைத்திருக்கும் என்று சொல்கிறார்களே அதற்கு அர்த்தம் என்ன..??

உண்மை காதல் நம் காதல் கைக்கூடும் என்ற நம்பிக்கையை நமக்கு கொடுக்க வேண்டும்... அப்படியே அந்த காதல் பிரிந்தாலும் அதை தாங்கிக் கொள்ளும் சக்தியையும் கொடுக்க வேண்டும்...

தன் இணை தன்னை விட்டு பிரிந்தால்... அதற்காக தன்னை வருத்திக் கொள்வதோ.. இல்லை தன் இணையை வருத்துவதோ கூடாது... அதற்கு மாறாக தன் இணை உறுத்தல் இல்லாமல் வாழ நாம் ஒதுங்கி கொள்ள வேண்டும்... அதே நேரம் நாம் நம்மை உயர்த்திக் கொள்ளவும் வேண்டும். இது தான் உண்மையான காதல்.

ஆனால் சப்னாவின் காதல் உண்மையானதா..?? முதலில் அது காதல் தானா..?? பிருத்வியிடம் ஏற்பட்ட ஒரு ஈர்ப்பு... ஒரு போட்டியால் ஏற்பட்ட உந்துதலில் உண்டானது தான் இந்த காதல்... இந்த காதலை அடையவே அவள் பல தில்லுமுல்லுகளை செய்ய வேண்டியிருந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.