(Reading time: 3 - 6 minutes)

ஒற்றர்கள் அதை கண்டு பிடித்ததாக கூறல்

உலகாளும் தலைவன்

உடையானே ஒற்றன்

பார் முழுதும்

பகல் இரவும்

பாராரோ அரண்மணை முற்றம்

அறியாரோ அவர் இக் குற்றம்

யாரோ ஒற்றன்

சொல்லிட்டான் குற்றம்

தப்பிட்டார் நம் முதல் சுற்றம் (6)

 

நறுமீன் அச்சம்

மதில் முற்றம் ஒற்றறிந்தவன்

அறிந்தானோ

{tooltip}தமியள்{end-link} தனிமையானவளை {end-tooltip} இவள் தமயனை சந்திப்பதை?

தவறாக புரிந்தானோ

தாய் சேய் ஒப்பொழுகும் அவ்வுறவை?

கசந்தானோ

கன்னி மகள் இவளின் கணவன் எனும் நிலையை?

துன்புறுத்த மனமின்றி

தூரமாய் விலக்கினானோ ? அல்லை

வகுத்திட்டானோ

வஸ்தி போல் வரல் என்றே ஒரு சொல்லை? (7)

 

நறுமீன் தன் அண்ணனையும் தவிர்த்தல்

நடந்தவை தெரியாது

நாடி தெளியவும் முடியாது

நரம்பில் வீணையாய்

நாடா பொருளாய்

நகர்வின்றி கிடந்தாள்

நலம் கெட்டொழிந்தாள்

நாடாமல் தமயனை பிரிந்தாள்

நலம் அது இரு ஆண்மகட்கும்

நம்பினாள் நறுமீன் தனக்குள்ளே மொழிந்தாள். (8)

 

விளக்கம் : நறுமீன் தன் அண்ணனை சந்திக்கவில்லை, செஷாங்கனும்  அவளை அரசவைக்கோ மற்ற எந்த விதமான சந்திப்பிற்கோ அழைக்கவில்லை, மற்றும் மொர்தகனை நறுமீன் சந்திக்கும் அந்த மதில் புறம் சிலர் கூடி மன்னனை கொல்ல சதி தீட்டினர், அது அறியபட்டு முறியடிக்கபட்டது என்பது வரலாற்று குறிப்பில் இருக்கின்றது. ஆனால் இதற்கான எந்த விளக்கமும் இல்லை. அதை நான் இவ்வாறு என் கற்பனையில் காரணபடுத்தியுள்ளேன்.  அந்த சதியை யார் முறியடித்தது அதன் பின் விளைவு என்ன? அது நறுமீன் வாழ்க்கையில் எத்தகைய சூழலை கொண்டு வந்தது என வரலாற்றில் இருக்கின்றது. அதை நாம் அடுத்த பகுதியில் காண்போம். நன்றி

தொடரும்

நறுமீன் காதல் - 08

நறுமீன் காதல் - 10

{kunena_discuss:789}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.