(Reading time: 28 - 56 minutes)

"பாத்துடி வாயில கொசு போயிட போகுது. அவரு கேட்டா உன்னை மொதல்ல வேலையே ஒழுங்கா செய்யிம்மா , அப்பறம் சைட் அடிக்கலாம்னு சொல்லுவாரு. " என்று சிரித்த படியே , திவ்யா சொன்ன "என் ஆளு" பட்டத்திற்கு உரிய, விநாயக்கிடம் காலை வணக்கத்தை தெரிவித்தபடி உள்ளே சென்றாள்.

விநாயக் தான் அந்த டீமின் கோ ஆர்டினேடர். பார்பதற்கு சற்று நன்றாக இருப்பதால் (டைம் பாஸ் பண்ண) திவ்யா அவரை சைட் அடிப்பாள்.

உள்ளே நுழைந்த திவ்யா "ஹே மது ஷார்ப்பா 11.30க்கு பிரேக். ஓகேயா? " என்றவாறே தன் சிஸ்டத்தை உயிர்பித்தாள்.

"ஹ்ம்ம் ஓகே ஓகே. வேற என்ன வேலை" என்று கண் சிமிட்டியவாறே தன் சிஸ்டம் முன்பு அமர்ந்து வேலையை தொடங்கினாள் மது.

திவ்யா சொன்னதை போல ஷார்ப்பாக 11.30க்கு கபடேரியா சென்று 2 காபி கப்களை எடுத்து வந்து ஒரு டேபிளில் அமர்ந்தனர்.

"இந்த வீக் எண்டு என்ன பிளான் வெச்சுருக்கே மது?"

"நாளைக்கு பார்ஸ்ட் சலரி வருது. சோ நாளைக்கு சாயங்காலம் நம்ம ரெண்டு பேரும் போயி  அம்மாக்கு அப்பாக்கு சித்தப்பாஸ்க்கு சித்திஸ்க்கு அண்ணன்களுக்கு அப்பறம் ..."

"உன் வீட்டு நாய்குட்டிக்கு ...ஏஏஏஏஏண்டி நீ இப்படி இருக்க ?"

"கரெக்ட் கரெக்ட் நாய்குட்டிக்கு அப்பறம்... எல்லார்க்கும் எதாவது கிப்ட் வாங்கணும். அப்பறம் அப்பறம் வெள்ளிகிழமை மது ஊருக்கு போக போறா...... " என்றாள் மது.

"என்னது ஊருக்கு போறியா... நான் இல்லாம நீ தனியா ஊருக்கு வரக்கூடாதுன்னு அப்பா சொல்லிருக்காருல.,மறந்துட்டியா? சான்சே இல்ல... நான் உன்னை விட மாட்டேன்"

"ஆமா இவ பெரிய லேடி மைக் டைசன். இவளை நம்பி எங்க அப்பா விட்டுட்டு போயிருக்காரு.. நீயே ஒரு ஹேர் பின் மாதிரி இருக்கே... நீ எனக்கு பாடி கார்டா ? என்ன கொடுமை மது இது..." என்று வராத கண்ணீரை துடைத்து விட்டாள்.

"நான் ஆல்ரெடி டிக்கெட் புக் பண்ணிட்டேன். சோ நோ மோர் டாக். நான் கெளம்பறேன் அவ்வளவு தான்." என்ற மதுவிடம்,

"நீ பிடிவாதம் பிடிச்சா பிடிச்சது தான...சரி நான் உன்னை கொண்டு வந்து பஸ்ல ஏத்தி விடறேன். ஒகே?" , இதுக்கும் முடியாதுனு சொன்ன பல்லை தட்டி கையில கொடுத்துருவேன். அப்பறம், இந்த அழகான மது குட்டி, மது பாட்டியா தான் வீட்டுக்கு போவ... ஜாக்கிரதை.." என்று மிரட்டினாள் திவ்யா.

“ஹே... நான் ஒரு ஜோக் சொல்லவா?” - மது

"அய்யயோ... இன்னைக்குமா...நீ மறந்துட்டேனு நெனைச்செண்டி... எப்படிடி தினமும் உனக்கு இவ்வளோ மொக்கை ஜோக்ஸ் கெடைக்குது..." - திவ்யா

"வாட்ஸ் அப் டி செல்லம் ... என் அண்ணன் எனக்கு பார்வர்ட் பண்ணுவான்...செம ஜோக்கா இருக்கும்...கேளேன் ப்ளீஸ் ப்ளீஸ் "- மது

"மாட்டேனு சொன்னா விட்டுடவா போற... கோயிலுக்கு நேந்து விட்ட ஆடு மாதிரி எங்க வீட்டுல என்னை உனக்கு நேந்து விட்டுடாங்கனு நெனச்சியா... இருடி இரு ..என்ன காப்பாத்த ஒருத்தன் பொறந்து வருவாண்டி… காலைல லேட்டா எழுந்ததுக்கு இதுவும் வேணும் இதுக்கு மேலயும் வேணும்.சொல்லி தொலை.." - திவ்யா

"நீ கோபமா இருக்க...நான் சொல்லலை " என்று சோகமாக முகத்தை வைத்து கொண்டாள் மது.

"அய்யயோ இது வேறயா...ஹிஹிஹி இப்போ சொல்லு" என்றாள் திவ்யா.

"நீ நான் கேக்கற கேள்விக்கு சரியாய் பதில் சொல்லிட்டினா நான் இனிமேல் ஜோக் சொல்லவே மாட்டேன். ஆனா தப்பா பதில் சொன்ன தினமும் நான் சொல்ற ஜோக்ஸ் கேட்டு நீ சிரிக்கணும். டீலா நோ டீலா ? - மது

"சூப்பர் டி செல்லம்.. நீ கேளு ...நான் சும்மா டக்கு டக்குனு பதில் சொல்றேன் பாரு...ஆனா பேச்சு மாற கூடாது... நீ கேக்கற கேள்விக்கெல்லாம் பதில் சொன்னா நீ இனிமேல் ஜோக் சொல்ல கூடாது ஒகே ?" –திவ்யா

“"மொதல்ல ஒரு கேள்விக்கு பதில் சொல்றியானு பாப்போம்.....முதல் ஜோக் ப்ளஸ் கேள்வி ...

 உனக்கு ஒரு மேத்ஸ் டெஸ்ட்,

 ஆலமர இல்லை 000.67,

 அரச மர இல்லை 00.87

 வேப்பமர இல்லை 89

 கூட்டினா என்ன வரும்??? “ – மது

"ஹஹஹ ... ஏமாந்து போனாயே என் செல்லாகுட்டி ...இட் இஸ் வெரி வெரி சிம்பிள்... 89.757...எப்புடி!!! நாங்கெல்லாம் கணித மேதை ராமானுஜர் பரம்பரை தெரயுமா..." - திவ்யா

"ஹிஹிஹி... சிக்கினாள் சிவனாண்டி ... உன் பதில் தவறு திரு நக்கீறியே (நக்கீரரின் பெண் பாலாம் !!! )... இது எல்லாத்தையும் கூட்டினா குப்பைதான் வரும்... ஹஹஹ…….. ஹோஹஓஹோ..." என்று விழுந்து விழுந்து சிரிதவளின் தலையில் நங்கென்று கொட்டினாள் திவ்யா.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.