(Reading time: 28 - 56 minutes)

தியின் முகத்தில் இருந்த கலகலப்பும் சிரிப்பும் மறைந்து , "அப்பா மறுபடியும் ஆரம்பிச்சுடிங்களா ?  நான் ஒரே அடியா கல்யாணம் வேண்டாம்னு சொல்லல... இப்போ வேண்டாம்னு தானே சொல்றேன். எனக்கு நம்ம மில்லுல பண்ண வேண்டிய வேலை இன்னும் நெறைய இருக்குபா. அதுக்கு கல்யாணம் எல்லாம் பெரிய தடையா இருக்கும். ப்ளீஸ் பா"  என்று கெஞ்சலில் முடித்தான்.

கையில் கப்பும் ஸ்நாக்ஸ் தட்டுமாக வந்த அபிராமி, "உங்க அப்பா என்ன கட்டிகிட்டதுக்கு அப்பறம் தான் இந்த மில்லே வாங்குனாரு. நீ என்னடான கல்யாணம் தடையா இருக்கும்னு சொல்ற. இங்க பாரு தம்பி எனக்கும் இந்த ரெண்டு புள்ளைங்க முகத்தயுமே பார்த்து ரொம்ப போரடிக்குது" என்று தன் இரு மருமகள்களையும் காட்டி சொன்னவர் அவர்களை பார்த்து கண்ணடித்தார்.

"ஆனாலும் உங்க அம்மாக்கு இந்த கோயம்பத்தூர் குசும்பு கொஞ்சம் ஜாஸ்தியாவே இருக்கு " என்று தன் கணவன் வெற்றியின் தோளில் இடித்தாள் அஸ்வினி.  "அவங்களுக்கு போர் அடிச்சா என்ன...எனக்கு இன்னும் போர் அடிக்கலையே " என்று தன காதில் கிசுகிசுப்பாய் தன கணவன் சொல்லவும் அவள் முகம் சிவந்தது

"இதை தவிர நீ கல்யாணம் வேண்டாம்னு சொல்ல வேற எதாவது ஒரு காரணம் சொல்லு" என்று கேட்டனர் விஜயும் வெற்றியும்.

மதிக்கு பதில் சொல்ல முடியவில்லை. இது வரை இவன் 6 பெண்களின் புகைப்படங்களை கண்டு வேண்டாம் என்றும் சொல்லி விட்டான். அந்த 6 பெண்களுமே கோயம்பத்தூரின் மிக வசதியான குடும்பங்களை சேர்ந்த மிக அழகான பெண்கள். ஆனால் இவன் மனம் தேடும் ஏதோ ஒன்று அந்த பெண்களிடம் இல்லை. இன்றும் அவனால் உணர முடிகின்ற அந்த இளம் கையின் ஸ்பரிசமும் அந்த கண்களில் இருந்த தவிப்பும் கவலையும் பயமும் கருணையும் அவனால் வேறு எந்த பெண்ணிலும் காண முடியவில்லை. இது அவனுக்கே புரியாத புதிர். தான் தேடுவது அந்த ஒரு சில விஷயங்களை மட்டுமா இல்லை தான் தேடுவது அந்த பெண்ணை தானா? அவன் மனம் போன போக்கை எண்ணி அவனே சற்று குழம்பி போனான். வெளிநாடுகளுக்கு பலமுறை சென்றவன். எத்தனையோ பெண்களை கண்டும் பேசியும் இருக்கிறான். ஆனால் யாரிடமும் இவன் இது வரை அந்த ஏதோ ஒன்றை உணர்ந்ததே இல்லை. இப்போது இவர்களுக்கு என்ன பதில் சொல்வது என்று மனம் குழம்புகையிலே ,

"ஹாஆவ்....தம்பி எனக்கு தூக்கமே வருது... தயவு பண்ணி அந்த போட்டோவ கொஞ்சம் பார்தரலாமா ? அந்த தரகர் கொடுத்த பில்ட் அப்ல எனக்கும் கண்டிப்பா அந்த போட்டோவ  பார்த்தே ஆகணும்" என்றார் அஸ்வினி.

"சரிப்பா இது தான் கடைசி...இனி நீயே சொல்லாம நாங்க உனக்கு பொண்ணு பாக்க மாட்டோம். சரி தானா. இந்த ஒரு போட்டோவ மட்டும் பார்த்துரு " என்று அபிராமியும் சொல்ல , சரியென்று அந்த கவரில் இருந்த போட்டோவை வெளியே எடுத்தான் மதி.

ஒரு கை அந்த போட்டோவை பிடித்திருக்க கண்கள் அந்த போட்டோவில் உள்ள முகத்தில் பதிந்து நகராமல் ஸ்டிரைக் செய்ய ஒரு கை அந்தரத்தில் திறந்த கவரை பிடித்து அங்கேயே நிற்க, மதியின் மைண்ட் பேக் கிரௌண்டில் ,"அவள் வருவாளா அவள் வருவாளா உன் உடைந்து போன நெஞ்சை ஓட்ட வைக்க அவள் வருவாளா " என பாடல் கேட்க , அவனை சுற்றி இருந்தவர்கள் பேசியது எல்லாம் ஏதோ தூரத்து ஓசையாக அவனுக்கு தோன்ற, இந்த உலகம் மறந்து மெய்மறந்து அவன் நினைவுகள் 7 வருடங்கள் பின்னோக்கி சென்றது.

(இப்போ ஒரு கொசுவத்தி சுருள் சுத்துது... பிளாஷ் பேக்..... டொட்டொடொயியியி......)

மதி அப்போது கல்லூரி இரண்டாம் வருடம். செமஸ்டர் லீவில் ஊருக்கு வந்தவனுடைய மிக முக்கியமான பொழுது போக்கு தன் அண்ணன் விஜயின் ராயல் என்பீல்டை எடுத்து கொண்டு ஊர் சுற்றுவது . அன்றும் அதே போல ஊர் சுற்ற பைக்கை எடுத்து கொண்டு கிளம்பினான். வாயில் அப்போதைய சூப்பர் ஹிட் சாங் "விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய் முன்னே முன்னே..." என்று பாடிய படி பைக்கை ஒரு வளைவில் திருப்ப , அங்கே ஒரு இளம்பெண் அழகான மாம்பழ வண்ண பட்டுப்பாவாடையும் சிவப்பு நிற தாவணியும் அணிந்து ஒரு சைக்கிளை ஓட்ட தெரியாமல்  அப்படியும் இப்படியும் ஆட்டி கொண்டு எதிரில் வரும் வண்டியை பார்க்காமல் வெகு கவனமாக சாலையையே பார்த்து வளைந்து நெளிந்து வந்து கொண்டிருந்தாள்.

சாலை வளைவில் திரும்பிய உடன் இவன் கண்ட இந்த காட்சி முதலில் இவனுக்கு சிரிப்பை உண்டாக்கினாலும் அந்த பெண்ணை எச்சரிக்கும் பொருட்டு ஹாரன் அடிக்கவும் மறக்கவில்லை. ஆனால் அது தான் தவறாகி போனது. அவன் ஹாரன் அடித்ததும் ஏற்கனவே இருந்த படபடப்பில் இந்த சத்தமும் சேர்ந்து கொள்ள நிமிர்ந்து எதிரே வரும் பைக்கை கவனித்தவள் சைக்கிளை இடது புறம் திருப்பாமல் வலது புறம் திருப்ப, சுதாரித்த மதி ராயல் என்பீல்ட் இடித்தால் நிச்சயம் இந்த பெண் தாங்க மாட்டாள் என அவளை இடிப்பதை தடுக்கும் பொருட்டு வண்டியை வலப்புறம் திருப்ப, இவன் சென்று இடித்தது ஒரு வேப்பமரத்தில்.

இடித்த வேகத்தில் வண்டியுடன் அவன் கீழே சாய, அதைக்கண்ட அந்த பெண் சைக்கிளின் ப்ரேக்கை போட்டு சைக்கிளை நிறுத்தி விட்டு அவனிடம் ஓடினாள். ( இதை மொதல்லையே செஞ்சு இருக்கலாம். ஆனா என்ன பண்ண இத்தன நேரமா ப்ரேக் எப்படி போடறதுன்னு தான் பாப்பா யோசிச்சிட்டு இருந்தது... ஹிஹிஹி )

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.