(Reading time: 28 - 56 minutes)

"ன்றிங்கம்மா , அந்த பையனுக்கு ஏற்கனவே நாலஞ்சு போட்டோ காட்டிட்டேன்... பையனுக்கு ஒன்னும் பிடிக்கலை. சரி நம்ம அம்முனி போட்டோவ பார்த்தா நிச்சயமா புடிக்காம போகுங்களா? அழகு, பணம், குணம்னு நம்ம அம்முனி சௌபாக்கியவதி ஆச்சுங்களே. அதன் இங்க வந்தேன். எனக்கு ஆனாலும் கொஞ்சம் சந்தேகம் இருந்துச்சுங்க. எங்க நம்ம பாப்பாக்கு இப்போ வரன் பாக்கறிங்கள இல்லையானு. அதனால மாப்பிளை வீட்டுல நான் இதை பத்தி எதுவும் சொல்லலை.  நல்ல குடும்பங்க. நம்ம ஐயாக்கு தெரியாததுன்களா. எல்லாரும் நல்ல மனுசங்க. பையன் வெளிநாடெல்லாம் போயி படிச்சிட்டு வந்துருக்காரு. இப்போ அவரு தான் மில்லை எடுத்து பெருசா ஏதோ விரிவு படுத்திருக்காருன்னா பார்த்துக்கோங்களேன். "

"தெரியும் பரம்பரை பணக்காரங்க. நம்ம விட சொத்துபத்து ஜாஸ்தி. ஆனா அந்த தலைக்கனம் கொஞ்சம் கூட இருக்காது" என்றார் பால சண்முகம்.

"ஆமாண்ணா, அவரு பெரிய பையன் பேரு விஜய். எனக்கு நல்ல பழக்கம். நல்ல பொறுப்பான பையன்." என்றார் சக்தி சண்முகம்.

"ஆமாண்ணி, நானும் அவங்க வீட்டு மருமக பொண்ணுகளை கோயில்ல வெச்சு பார்த்துருக்கேன் ... வாராவாரம் நம்ம பெருமாள் கோயிலுக்கு வருவாங்க. நல்ல மாதிரி பொண்ணுங்க தான். " என்றார் மோகனா.

"அது மட்டும் இல்லாம பக்கத்துலையே நம்ம பொண்ணு இருக்குமே" என்றார் லலிதா.

"எப்படியோ எல்லாரும் முடிவு பண்ணிடிங்க நம்ம வீட்டு பிசாசு குட்டியை அடுத்த வீட்டுக்கு அனுப்ப" என்று சிரித்தனர் சரணும் ரகுவும்.

"இந்த நெறைஞ்ச மனசோட இந்த தட்டை வாங்கிக்கோங்க . எல்லாம் நல்லபடியா முடியனும்" என்றவாறே சிவசண்முகம் மங்களம் தம்பதியினர் ஒரு தட்டில் வெற்றிலை, பாக்கு, பழம், புடவை வேஷ்டி சட்டையுடன் ஒரு சில ஆயிரம் ருபாய் நோட்டுகளையும் வைத்து தரகரிடம் நீட்டினர்.

"ரொம்ப சந்தோசம்ங்க . நல்லபடியா முடிச்சிருவோம்" என்ற படி அந்த தட்டை பெற்று கொண்டு விடை பெற்றார்.,

"கடவுளே அந்த ஜோசியர் சொன்னது போல எதுவும் குழப்பம் இல்லாம என் பொண்ணு வாழ்க்கை நல்ல படியா அமையனும்" என்று பாரத்தை இறைவனிடம் விட்டு விட்டு வேலைய பார்க்க தொடங்கினார் மங்களம்.

அதே சமயம் அந்த ஜோதிடர் பெருமாளின் முன் நின்று , "பெருமாளே, அற்புதமான ஒரு ஜாதகத்துல இப்படி ஒரு குழப்பம் எதற்கு? அந்த தாயோட முகத்தை பார்த்து என்னால சொல்ல முடியலையே.. உண்மையை மறைச்சு அனுப்பிட்டேன். என் பொண்ணு வயசு தான அந்த பொண்ணுக்கும். அவ வாழ்க்கையை நீ தான் காப்பத்தனும்" என்று மனமுருக வேண்டி விட்டு இனி வேறு எந்த ஜாதகமும் பார்க்க மனமொப்பாமல் வீட்டிற்கு கிளம்பினார்.

விதி என்பதை வெல்ல இறைவனாலும் முடியாத போது மனித ஜன்மம் என்ன செய்ய இயலும்.

தெய்வ பிறப்பான ராமரை வன வாசம் செல்ல வைத்தது விதி அன்றோ?

சீதா தேவியை விட்டு ராமரை பிரித்து வைத்து சதி செய்தது விதி அன்றோ?

குப்பைதொட்டியில் பிறந்தவன் நாடாள்வதும் நாடாளும் மன்னன் மகன்

படுக்கையில் உணவின்றி இறப்பதும் விதி செய்யும் சதி அன்றி வேறென்ன?

இந்த உலகில் ஒரோரு உயரும் உயிர் பெற்று விழும் முன் அவனுடைய எதிர்காலம் எழுதப்பட்டு விடுகிறது.  உன் பிறப்பின் நோக்கமும் அதிலே எழுதப்படுகிறது. இங்கே மதுவின் எதிர்காலம் எவ்வாறு எழுதப்பட்டுள்ளது? அவளின் இறந்த காலமும் நிகழ் காலமும் பூக்களாலும் பஞ்சு மெத்தையாலும் அலங்கரிக்கப்பட்ட பாதையாக இருந்தது..

அவளின் எதிர்காலம் அவளுக்கு கொடுக்க போவது மலர் பாதையா? முற்ப்பாதையா?  எதுவாயினும் அது சென்று சேரும் இடம் ஒரு பூந்தோட்டம் ...

அன்று மாலை வீட்டிற்குள் நுழையும் போதே வீடே கல கலவென பேச்சும் சிரிப்புமாக இருந்தது. முகத்தில் தோன்றிய மென்னகையுடன் உள்ளே நுழைந்தான் மதி என்று அழைக்க படும் மதிவாணன். (இவரு தாங்க நம்ம ஹீரோ சார்).

"என்ன அம்மா என்ன வீடே ஒரு கலவர பூமி மாதிரி இருக்கு. என்ன விஷயம்?"என்று அங்கே கையில் ஒரு கவரை வைத்து விளையாடி கொண்டிருந்த தன் அண்ணன்களையும் அண்ணியரும் பார்த்தவாரே தன் தாய் அபிராமி அம்மாளின் தோளில் கை போட்டு கொண்டு அமர்ந்தான்.

"டேய் நீ முதல்ல என் பொண்டாட்டி தோள் மேல இருந்து கைய எடு?" என்று அதட்டிய கந்தசாமியை பார்த்து (அவரு தாங்க நம்ம ஹீரோவோட அப்பா) "சீ இவரு இம்சை தாங்க முடியலை இருப்பா நான் உனக்கு டி கொண்டு வரேன்" என்று முயன்று வரவழைத்த கோபத்துடன் (சும்மா லுலுலாயக்கு) கிச்சனுக்குள் நுழைந்தார் அபிராமி.

"டேய் பசங்களா நீங்க பாக்கறது இருக்கட்டும். மொதல்ல அந்த கவரை தம்பி கிட்ட கொடுங்க. அவன் பார்க்கட்டும்" என்று கந்தசாமி சொன்னதும்,

"இந்தாங்க கொழுந்தனாரே, நல்லா பாருங்க... பார்த்துட்டு ஒரு நல்லா முடிவ சொல்லுங்க பார்ப்போம்" என்று மதியுடைய அண்ணி சித்ரா (நம்ம மதியுடைய மூத்த அண்ணன் விஜயுடைய மனைவி) அந்த கவரை மதியிடம் நீட்ட,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.