(Reading time: 18 - 36 minutes)

ங்களுக்கு கஷ்டமா இருக்குன்னா சொல்லிடுங்க… என் அம்மாவ நான் பார்த்துப்பேன்… இதே ஊரில் வேற வீடு நாங்க பார்த்துக்கறோம்…” என தன் முகத்தை பார்த்துக்கூட சொல்லாது முகம் திருப்பிக்கொண்டு சொல்லிவிட்டு தாயுடன் சென்ற மகனையே நினைத்துக்கொண்டிருந்தார் கேசவன்…

அந்நேரம் பார்த்து, சூடான காபியைப் போட்டு கொண்டு வந்து அவரின் முன் வைத்தார் வைஜெயந்தி…

அவரைப் பார்த்த கேசவனுக்கு, சில வருஷங்களுக்கு முன் தன்னை நம்பி வந்த வைஜெயந்தி கண் முன் வந்து போனார்…

தன்னை நம்பி வந்தவள்… தன்னை காதலித்து மணந்தவள்… அவர்கள் இருவருக்கும் இடையே எந்த ஒரு மனஸ்தாபமும் வந்ததில்லை ருணதியும் துருவனும் அவர்களின் வாழ்க்கையில் வரும் வரை…

எனில், அவர்கள் இருவரின் மேல் இருக்கும் வெறுப்பை, தன் மனைவியிடம் காட்டுவது சரிதானா?..

தோளுக்கு மேல் வளர்ந்த மகனின் முன் மனைவியை கை நீட்டி அடிக்க துணிந்தேனே…. அதனால் தானே அவன் அப்படி ஒரு வார்த்தையை சொன்னான்….

நான் நல்ல கணவன் இல்லை என்று என்னை நம்பி வந்தவளை அடித்த கணமே உறுதியாகிவிட்டது…

இப்போது நல்ல தந்தையாகவும் நான் இல்லை என்று சொல்லாமல் சொல்லிவிட்டதோ விஜய்யின் வார்த்தைகள்???…

கேள்வியோடு அமர்ந்திருந்தவர், கையில் பையுடன் வெளியே கிளம்பிய வைஜெயந்தியை பார்த்தார்…

வைஜெயந்தியோ, அவரை பார்ப்பதை தவிர்த்தார்….

“ஜித்… எவ்வளவு நேரம்?... வா… போகலாம்… நேரமாச்சு…” என அழைக்க,

“இதோ வரேன்ம்மா…” என்றபடி குரல் கொடுத்தான் ஜித் உள்ளே இருந்து…

“சரி சீக்கிரம் வா,,,,” என்றவர், அங்கு வந்த விஜய்யிடம், “அம்மா கூட வாடா….” என சொல்ல,

எங்கே, எதற்கு என எதுவும் கேட்காமல் சரி என்றான் விஜய்…

“நீ போய் காரை ஸ்டார்ட் பண்ணு…. நானும் ஜித்தும் பின்னாடியே வரோம்….” என்றதும், விஜய் சென்றான்…

ஜித் வந்ததும், “அப்பாகிட்ட சொல்லிட்டு வா……” என வைஜெயந்தி சொல்லி அனுப்ப,

அவன் சென்று அவரிடம் சொல்லிவிட்டு, தாயின் அருகே வந்தான்…

தன்னிடம் ஒரு வார்த்தை கூட பேசாது இருக்கும் மனைவியை பார்த்தவருக்கு உள்ளுக்குள்ளே வலித்தது… அதை பார்வையிலும் அவர் வெளிப்படுத்த, வைஜெயந்தியோ கேசவனை நிமிர்ந்து கூட பார்க்கவில்லை…

மனைவியின் பாராமுகத்தை ஏற்றுக்கொள்ள முடியாது தவித்தவர், ஜித்திடம், “பார்த்து போயிட்டு வாங்க…” என்றார்…

காரில் ஏறியதும், “அம்மா… நாங்க கிளம்பிட்டோம்… நீங்க எல்லாரும் கிளம்பிட்டீங்களா?...” என வைஜெயந்தி கோகிலவாணியிடம் போனில் கேட்டுவிட்டு, “சரி சரி சீக்கிரம் வாங்க…” என்றபடி போனை வைத்தார்…

“நதி… என்னடி பண்ணிட்டு இருக்குற?... நேரமாச்சுடீ… உன் அத்தை போன் மேல போன் பண்ணிட்டே இருக்குறா?... வாடி… சீக்கிரம்…” என ருணதியை அவசரப்படுத்திக்கொண்டிருந்தார் கோகிலவாணி…

“பாட்டி… அம்மா வந்துட்டு தான் இருக்குறாங்க… நீ ஏன் இப்படி கத்துற?...” என சொல்லிக்கொண்டே வந்தான் குட்டி துருவ்…

“உன் அம்மா நான் இந்த கத்து கத்தியே லேட்டாக்குறா… இதுல நான் மெதுவா சொன்னா கேட்பாளா அவ?...”

“அதெல்லாம் கேட்பாங்க… என் அம்மா குட் தான் எப்பவும்… நீ தான் எப்ப பாரு திட்டிக்கிட்டே இருக்குற…”

“சரிடா கண்ணா… நான் தான் திட்டுறேன்… அப்படியே இருக்கட்டும்… இப்போ நீ கூப்பிடேன் அமைதியா… உன் அம்மா வராளா பார்க்கலாம்…”

“அவ்வளவுதான… இப்ப பாரு…” என்றவன், “ஹ்ம்மா… நான் கிளம்பிட்டேன்… நீயும் சீக்கிரம் கிளம்பி வாம்மா….” என சொல்லி முடிக்க கூட இல்லை,

“இதோ வந்துட்டேன் கண்ணா…” என்றபடி அவசரம் அவசரமாக வந்தாள் ருணதி…

“எப்படீ?....” என தன் சர்ட் காலரை தூக்கிவிட்டுக்கொண்ட துருவனை தூக்கி முத்தமிட்டார் கோகிலவாணி….

“என் கண்ணே பட்டுடும் போல இருக்கு….” என்று பேரனுக்கு திருஷ்டி கழித்தவர்,

“சரி வாங்க போகலாம்…” என்றபடி வீட்டின் முன் இருந்த ஆட்டோவினுள் ஏறினார்கள் அனைவரும்….

தே நேரம் அருள் இல்லத்தில்…

“ராஜா எங்க பவித்ரா?...”

“சார் வெளியே பிரபு அண்ணா கூட பேசிட்டிருக்குறார் அம்மா…”

“ஏன் பவித்ரா, ராஜாவை மட்டும் சார் சொல்லுற… ஆனா பிரபுவை மட்டும் அண்ணான்னு உரிமையா சொல்லுற?.. நானும் இத உங்கிட்ட கேட்கணும்னு பலதடவை நினைச்சிருக்கேன்… ஆனா ஏனோ கேட்கலை…”

“கிட்டத்தட்ட நான் பொறந்ததுல இருந்தே இங்க தான் இருக்குறேன்… என்னைப் பெத்த மகராசியும் இங்க போட்டுட்டு போயிட்டா… எனக்கு விவரம் தெரிய ஆரம்பிச்சப்ப, இங்க என்னோட சேர்த்து பத்து பதினைஞ்சு பேர் மட்டும் தான் இருந்தோம்… மகத் சார் சின்ன வயசில இருந்தே ரொம்ப அமைதி… யாரோடவும் அதிகம் பேசமாட்டார்… அப்படி அவர் கொஞ்சம் பேசுறதே உங்ககிட்டேயும், பிரபு அண்ணாகிட்டேயும் தான்… பிரபு அண்ணா இங்க வந்தப்போ எனக்கு அப்போ எதுவும் தோணலை… அறியாத என் வயசும் ஒரு காரணமா இருந்திருக்கலாம்… ஆனா, போக போக, அவர் என் மேல பாசமா மட்டும் இல்லாம ஒரு அண்ணனுக்கே உண்டான கலாட்டா, சேட்டை, வம்பு எல்லாம் எங்கிட்ட பண்ணுறதை பார்த்தப்போ எனக்கு அவரை அண்ணான்னு சொல்லுறதை தவிர வேற எந்த ஒரு உறவு முறையிலும் கூப்பிடத்தோணலை அம்மா….”

“உங்களை ஏன் நான் அம்மான்னு கூப்பிடுறேன்னு கூட எனக்கு தெரியாது… ஆனா, அம்மான்னு நான் சொல்லுறப்போ என் மனசு முழுக்க சந்தோஷம் இருக்கும்மா… பெத்தவ முகம் நான் பார்த்தது கிடையாது… அதனாலேயே என்னவோ உங்களை என் மனசு அம்மாவா மட்டும் தான் பார்த்துச்சு…” என்றவள் கண்கள் கலங்கியது…

“பவித்ரா….” என்ற காவேரியின் குரலும் தழுதழுக்க,

“மகத் சார் பாசமா பேசிருக்குறார்… பழகியிருக்குறார்… ஆனா, அவர் மேல ஏனோ அளவுக்கு அதிகமா மரியாதை தான் வந்திருக்கு… என்னோட சின்ன வயசில இருந்து பார்த்திருக்குறேன்… என்னை தூக்கி வளர்த்தும் இருக்குறார்… அதையும் நீங்க சொல்லி நான் தெரிஞ்சிகிட்டேன்… அவர் எங்கிட்ட கிண்டல் பண்ணி, கலாட்டாவா பேசி நான் பார்த்ததே இல்லை… எப்பவுமே நல்லா பேசுவார், பாசமா அக்கறையா இருப்பார்… இதெல்லாம் சேர்த்து எனக்கு அவர் மேல மரியாதை தான் அம்மா வந்துச்சு…” என அவள் சொன்னதும் காவேரியின் பார்வை அவள் மேலே படிந்தது அசையாமல்…

“அப்ப ராஜா உனக்கு உறவே இல்லையா பவித்ரா?...”

“உறவுக்கு ஆதாரம் அம்மான்னா, ஆணிவேர் அப்பா தான்… எனக்கு ஆணிவேர் அவர் தான் அம்மா… அவர் வயசுக்கு என்னை அவரால அந்த உறவு முறை சொல்லி கூப்பிட மனசு ஒத்துழைக்கலை… ஆனா யாரைப் பார்த்து இப்படி இருக்கணும்னு நான் விரும்புறனோ, யாரை பார்த்து நான் வாழ்க்கையில முன்னேறனும்னு நினைக்கிறனோ, யாரைப் போல கணவன் கிடைக்கணும்னு ஆசைப்படுறனோ, எல்லாமே மகத் சார் தான்… பொதுவா பொண்ணுக்கு தகப்பன் தான் எல்லாமே… என் அப்பா மாதிரி என்னை நல்லா பார்த்துக்குற புருஷன் வேணும்னு ஆசப்படாத பொண்ணு இந்த உலகத்துல யாருமே இருக்க முடியாது… எனக்கு அவரும் அப்படித்தான்ம்மா… அவர் தகப்பனை போல என்ன, என் தகப்பனே அவர் தான்…” என அவள் சொல்லிமுடித்ததும்,

அறையின் வாசலில் சுவர் ஓரமாய் கலங்கிய விழிகளோடு நின்றிருந்த மகத்தின் தோள் மீது கை வைத்து தட்டி கொடுத்தான் பிரபு…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.