(Reading time: 18 - 36 minutes)

டேய்... மெதுவா போ…” என பிரபுவிடம் அறிவுறுத்திக்கொண்டே வந்தான் மகத் அவனருகில் அமர்ந்துகொண்டு காரில்…

“டேய்… இதுக்கு மேலயும் மெதுவா எப்படி போறது?...” என அலுத்துக்கொண்டே கார் ஓட்டியவன்,

“அண்ணா… கொஞ்சம் மெதுவா தான் போங்களேன்…” என நதிகாவை மடியில் வைத்துக்கொண்டு சொல்லியச் பவித்ராவின் வார்த்தையை கேட்டதும் தானாகவே வேகத்தை குறைத்தான்…

“பாருடா… ராஜா சொல்லி கேட்கலை… உன் தங்கச்சி சொன்னதும் கேட்டுட்டீயே?...” என காவேரி சொல்ல, அனைவரும் சிரித்தனர்…

எங்கேயாவது வெளியே போகலாம் ராஜா… என காவேரி சொன்னதும் மறுக்காமல் சரி என்றான் மகத்…

கார் சென்று கொண்டே இருந்த போது, காரின் வலப்புறம் பார்த்துவிட்டு, “அம்மா… அங்க பாருங்க… யார் இருக்குறாங்கன்னு…” என்றபடி பவித்ரா காவேரியிடம் சொல்ல, அவரும் அந்தப் பக்கம் பார்த்துவிட்டு அந்தச் இடம் போகலாம் என்றார்…

“இந்த நதிக்கரை பக்கம்… உன்னை நான் பார்ப்பேன்னு எதிர்பார்க்கவே இல்ல ருணதி…” என்றபடி காவேரி ருணதியின் அருகே செல்ல… அவள் முதலில் திகைத்து பின் “நானும்தான்…” என்றாள்…

“இங்க நீ…” என்றபடி பேச வாயெடுத்தவர், அங்கே ஜித், மற்றும் துருவன் இடுப்பில் வேஷ்டியோடு சட்டை எதுவும் அணியாமல் ஐயரின் முன் அமர்ந்திருக்க, அவர்கள் இருவருக்கும் அருகில் கோகிலவாணியும், வைஜெயந்தியும் நின்றிருந்தனர்…

“இந்த பிண்டத்தை தண்ணீரில் கரைச்சிட்டு வாங்க…” என ஐயர் சொன்னதைக் கேட்டு ஜித், துருவனை தூக்கிக்கொண்டு அவன் கையினால் ஒரு பிண்டத்தை கரைத்துவிட்டு, தானும் ஒரு பிண்டத்தை கரைத்துவிட்டு வந்ததும், கோகிலவாணி பேரனை வாங்கிக்கொள்ள, ஜித் வைஜெயந்தியின் அருகே சென்று,

“எனக்கு நேரமாச்சும்மா… நான் கிளம்புறேன்…” என்றபடி நகர்ந்து வந்தவன், அங்கே மகத்தினை பார்த்ததும் ஒரு சில வினாடிகள் அவன் மீது பார்வையை செலுத்திவிட்டு, காரை எடுத்துக்கொண்டு கிளம்பினான் வேகமாக…

நடப்பதை கவனித்த காவேரிக்கு தான் தவறான நேரத்தில் வந்துவிட்டோமோ என்ற எண்ணம் தோன்ற, அப்படியே திரும்பி செல்ல நினைத்து மகத்திடம் கண் காட்ட, அவனும் மற்றவர்களிடம் செல்லலாம் என்றபோது, நதிகாவை பார்த்த துருவ்,

“திகா… எப்படி இருக்குற?...” என்றபடி கோகிலவாணியிடம் இருந்து அவளருகே ஓடினான் அவன்…

‘துருவ்… நான் நல்லா இருக்குறேன்… நீ எப்படி இருக்குற?...”

“நல்லா இருக்குறேன்… திகா…” என்றவன் அவளின் கைப்பிடித்துக்கொள்ள, அவளும் அவன் கைகளை பிடித்துக்கொண்டாள்…

“வா… திகா… விளையாடலாம்…” என்றவன், அவளை அழைத்துக்கொண்டு அங்கே ஓடி விளையாட, கோகிலவாணி வைஜெயந்தியிடம், நீ போய் அவங்களை பார்த்துக்கோ… நான் பேசிட்டு வரேன்… என்றார்…

“இப்போ போனவர்?...” என காவேரி இழுக்க,

“அவர் என்னோட மாப்பிள்ளை… என் பொண்ணு வைஜெயந்தியோட மகன்… என் பேரன் ஜிதேந்தர்…” என கோகிலவாணி சொன்னதும்,

“கேட்குறேன்னு தப்பா நினைக்காதீங்கம்மா… துருவனோட சேர்ந்து அவர்?......” என அதற்கு மேல் கேட்க முடியாது திணறியவர்,

“சரிம்மா… நாங்க கிளம்புறோம்…” என சொல்லிவிட்டு, “பவித்ரா, நீ போய் நதிகாவை கூட்டிட்டு வா…” என சொல்ல,

“என் பேத்திக்கு நீங்க ஒரு நல்ல வேலை கொடுத்து அவளுக்கு உதவி செஞ்சிருக்கீங்க… உங்ககிட்ட மறைக்குறதுக்கு என்ன இருக்கும்மா?...” என கேட்ட கோகிலவாணி, ருணதியைப் பார்க்க அவள் இமை மூடினாள்…

“இவ தான் வைஷ்ணவி…” என்றபடி தன் பையிலிருந்து ஒரு போட்டோவை எடுத்து காவேரியிடம் கொடுத்தார் அவர்…

அனைவரின் பார்வையும் அந்த போட்டோவின் மீது நிலைத்திருக்க, மகத்தின் பார்வையோ ருணதியின் மீது இருந்தது…

தொடரும்

Episode # 30

Episode # 32

{kunena_discuss:907}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.