(Reading time: 12 - 23 minutes)

ஏமனா ஓகே ஓகே” என்று தன் காதில் தவறாக விழுந்தது என்று தன்னை சமாதானம்ச் செய்து  கொண்டாள் திவ்யா.

மூன்று போருமே அமைதியாக இருந்தனர். யாருக்கும் என்ன பேசுவது என்று தெரியவில்லை. விஷ்ணு ஏதோ விளையாட்டாக அனு பின்னால் சுற்றுகிறான், இன்றோடு அதற்கு முற்றுப் புள்ளி வைக்கலாம் என்றுதான் திவ்யா அவனை அழைத்துப் பேசினாள். ஆனால் அவனது பதில்கள் திவ்யாவை வாய் அடைக்கச் செய்துவிட்டது. அடுத்து என்ன பேசுவது என்று தெரியாமல் குழம்பி நின்றாள்.

அதற்குள் அனு விஷ்ணுவைப் பார்த்து “அன்று முதல் நாள், என்னிடம் ஏதோ சொல்ல வேண்டும் என்று வந்தீர்களே, அது என்ன” என்று கேட்ட திவ்யா அதிர்ந்து போனாள். இதற்கு விஷ்ணு பதில் அளித்தால் கண்டிப்பாக அனுவின் கல்யாணத்தில் குழப்பம் வரும் என்று திவ்யாவிற்கு தெரியும்.

அனு கேட்டதும் விஷ்ணு திவ்யாவை ஒரு முறை பார்த்தான், திவ்யாவும் கண்களிலே பதில் கூறாதே என்பது போல் செய்கை காட்டினாள்.

“அது ஒன்னும் முக்கியமான விஷயம் இல்லை அனு. அதை விடுங்க. உங்க மேரேஜ் எப்போ? எனக்கு அழைப்பிதழ் தர மாட்டீங்களா? நான் உங்க திருமணத்திற்கு வரலாமா ஒரு நண்பனா?” என்று பேச்சை மாற்றினான். விஷ்ணுவிற்கு நாகரீகம் தெரியும். திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட பெண்ணிடம் காதல் சொல்வது தவறு என்று.

திவ்யாவிற்கு அப்பாடா என்று இருந்தது. அனுவும் தன் கேள்வியை மறந்து விஷ்ணுவின் கேள்விக்கு பதில் கூற தொடங்கினாள். “கண்டிப்பா இப்போதிருந்தே நீங்கள் என் நண்பர்தான். இன்னும் திருமண பத்திரிக்கை ரெடி ஆகலை. ரெடி ஆனதும் கண்டிப்பாக முதல் பத்திரிக்கை உங்களுக்குத்தான்” என்று மகிழ்ச்சியான குறளில் கூறினாள் அனு.

அனு தன்னை நண்பனாக ஏற்றுக் கொண்டதிலே அவனுக்குள் இருந்த அத்தனை துன்பங்களும் பறந்தோடிப் போனது.

“ரெம்ப தேங்ஸ் அனு. நீங்க என்னை ஃப்ரெண்டா ஏத்துக்கிட்டதே எனக்கு சந்தோஷம். பத்திரிக்கை எல்லாம் எதற்கு, எப்போ மேரேஜ் னு டேட் மட்டும் சொல்லுங்க ஜமாய்சிடளாம்” என்றான்.

அனு காதலியாய் கிடைக்காததை நினைத்து கவலை படுவதை விட, தோழியாகக் கிடைத்ததை நினைத்து மகிழ்ச்சி அடைந்து கொள்ளலாம் என்று முடிவிற்கு வந்து விட்டான் விஷ்ணு.

“வரும் பிப்ரவரி 14 தான் திருமணம்” திவ்யா பதில் கூறினாள்.

அதைக் கேட்டவுடன் விஷ்ணுவின் முகம் மாறியது. அவளோடு திருமணம் நடக்கத்தான் கெடுத்து வைக்கவில்லை என்றால் அவள் திருமணத்தைப் பார்க்கக் கூட அருகதை இல்லாதவன் ஆகி விட்டோமே என்ற கவலைதான் அதற்குக் காரணம்

அவன் முகம் மாறுவதைப் பார்த்த அனு “ஏன் விஷ்ணு, என்ன ஆச்சு? திடீர் னு டல்லாயிடீங்க” என்றாள்.

“அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை அனு. பிப்ரவரி 14, காதலர் தினத்தன்று திருமணம். வாழ்த்துக்கள் அனு” என்று வாழ்த்துக் கூற கையை நீட்டினான் விஷ்ணு.

அனுவும் மகிழ்ச்சியோடு அவன் வாழ்த்துக்களை ஏற்றுக் கொண்டாள்.

ஏற்றுக் கொண்டதோடு “இன்றில் இருந்து தூரத்தில் இருந்த பார்ப்பது எல்லாம் வேண்டாம்” என்று பதியில் அனு நிறுத்த இதயமே நின்று போவது போல் ஆனது விஷ்ணுவிற்கு, “அதுதான் நண்பர்கள் ஆயிட்டோமே இனி பக்கத்தில் வந்தே என்னுடன் பேசலாம்” என்று அழகான சிரிப்போடு கூறினாள் அனு. அதைக் கேட்டதுதான் மீண்டும் அவன் இதயம் துடிக்க ஆரம்பித்தது.

அனு இப்படிக் கூறுவாள் என்று திவ்யா எதிர் பார்க்கவில்லை. விஷ்ணுவை அழைத்த போது என்ன நடக்கும் என்று எதிர் பார்த்தாளோ அது நடக்கவில்லை ஆனாலும் கெட்டதாகவும் எதுவும் நடக்கவில்லை அது வரை அவளுக்குச் சந்தோஷம் தான்.

“சரி அனு, நாம கிளம்பலாமா. ரெம்ப நேரம் ஆகிவிட்டது. அப்பா தேடுவார்” என்று திவ்யா அனுவை பார்த்துக் கூற அப்போதுதான் தன் கடிகாரத்தைப் பார்த்தாள் அனு.

“ஆமாம் திவ்யா லேட் ஆயிடுச்சி கிளம்பலாம்” என்று திவ்யாவை பார்த்துக் கூறிவிட்டு, விஷ்ணு பக்கமாக திரும்பி “சரி விஷ்ணு நாங்க கிளம்பனும், மீண்டும் பார்க்கலாம்” என்று கூறிவிட்டு இருவரும் கிளம்ப தன் விதியை நினைத்து அழுவதா இல்லை சிரிப்பதா என்று தெரியாமல் அங்கேயே உட்கார்ந்திருந்தான் விஷ்ணு.

எம லோகத்தில் ஆப்பிள் ஜுஸ் குடித்துக் கொண்டே, இங்கே நடந்ததை பார்த்துக் கொண்டிருந்த சித்ர குப்தர், எமனைப் பார்த்து “என்ன பிரபு இது, காதலன் ஆவேன் திருமணம் செய்வேன் என்று வீராவேசம் பேசிவிட்டுப் போனான் இன்று பார்த்தால் நண்பர்கள் என்று கூறி திருமணத்திற்கு அழைப்பிதழ் கேட்கிறான்”.

“ஹா ஹா ஹா, குப்தரே, நேற்று அவன் அவளுக்கு யாரே ஊர் பேர் தெரியாதவன். ஆனால் இன்று இருவரும் நண்பர்கள். நாளை எது வேண்டுமானாலும் நடக்கலாம். அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று தெரியாததுதான் மனித வாழ்க்கையின் ஸ்வாரசியம். அது அவர்களுக்கு மட்டும் ஸ்வாரசியம் இல்லை நமக்கும் தான். நடப்பதை வேடிக்கை பார்ப்பது மட்டும் தானே நமது கடமை. ஸோ லெட்ஸ் வாட்ச் அண்ட் என்ஜாய்” என்று கூறிவிட்டு தன் கையில் இருந்த மாம்பழ சாரை சுவைத்தார் எமன்.

தொடரும் . . .

Episode # 12

Episode # 14

{kunena_discuss:906}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.