(Reading time: 8 - 15 minutes)

11. கொஞ்சம் பெரிய குழந்தைகளுக்கான கதை இது... - தங்கமணி சுவாமினாதன் 

Koncham periya kuzhanthaigalukkana kathai ithu

நேரம் கடந்து கொண்டே இருக்க இதோ வந்து விடுகிறேன் என்று சொல்லிச் சென்ற கணவன் இன்னும் திரும்பாமலிருக்க பொறுமை இழந்தாள் ஹேமாவதி.புலம்ப ஆரம்பித்தாள்.

அண்ணா... என்ன இன்னும் இவரைக் காணோம்?நேரம் சென்று கொண்டே இருக்கிறது.எப்போது ஊர் சென்று சேர்வது? இத்தனை நாழிகை கோயிலில் என்ன செய்கிறார்?..

கொஞ்சம் பொறு ஹேமாவதி.கோயிலில் ஏதும் அபிஷேகம் நடக்கிறதோ என்னவோ?வந்து விடுவார்.கவலை வேண்டாம் என்று தங்கைக்கு சொல்லிக்கொண்டிருந்தான் ஹேமாவதியின் அண்ணன் சுந்தரேசன்.

மேலும் நேரம் செல்லச் செல்ல ஹேமாவதிக்குக் கவலையும் பயமும் ஏற்பட்டது..மீண்டும் சொன்னதையே சொல்லிப் புலம்ப ஆரம்பிக்க..சுந்தரேசனுக்கும் சிறிதாய்க் கவலை மனதில் எட்டிப் பார்த்தது.

ஹேமாவதி நான் போய் குணசேகரனை அழைத்து வருகிறேன் நீ பத்திரமாய் இரு என்று சொல்லிக் கிளம்பினான் சுந்தரேசன்.

இல்லை அண்ணா நானும் உங்களுடன் வருகிறேன் என்று கிளம்பியவளை சமாதானம் செய்து அங்கேயே பத்திரமாக இருக்கச் சொல்லிவிட்டு தான்மட்டுமாய் கோயிலை நோக்கிக் நடக்க ஆரம்பித்தான்.

கோயிலில் விதி இவனுக்காகக் காத்திருப்பது தெரியாமல் விரைவாய் நடந்தான் சுந்தரேசன்.பாவம் அவன்.

கொஞ்சம் வேகம் கூட்டி நடந்ததால் கல்லும் முள்ளும் அவன் கால்களைப் பதம் பார்த்தன.

ஒரு வழியாய்க் கோயிலை அடைந்த சுந்தரேசனுக்கு அவ்விடத்தின் நிசப்தம் கொஞ்சம் பீதியைக் கொடுத்தது.

கோயிலின் உள்ளே யாரும் இல்லாதது போலவே வெளியிலிருந்து தோன்றியது.ஒரு வித அமானுஷ்ய சூழ்னிலையாய்த் தோன்றியது.கொஞ்சம் அச்சத்துடனேயே கோயிலின் உள்ளே கால்வைத்தான் சுந்தரேசன்.

உள்ளே நுழந்தவனின் பார்வையில் படு பயங்கரமாய் நிற்கும் உக்கிர காளியின் சிலை பட்டபோது உண்மையில் கொஞ்சம் பயந்தேதான் போனான் அவன்.சட்டென அவனின் பார்வை காளியின் சிலையிலிருந்து விலகி தரையில் கழுத்து வெட்டுண்டு முண்டமாய்க் கிடக்கும் உடலில் பதிந்தது.ஆறு போல் ஓடியிருந்த ஊறைந்து போன ரத்தம் பார்த்து பீதியில் ஐயோ என்று அலறினான் சுந்தரேசன்.முண்டம் தலைகுப்புரக் கிடந்ததால் வெட்டுண்டு கிடப்பவன் யார் என்பதை அவனால் அனுமானிக்க முடியவில்லை.

சட்டென அவன் பார்வை முண்டத்தின் ஆடைமீது பதிய ஐயோ இது குணசேகரன் அணிந்திருந்த ஆடையல்லவா?அப்படியானால்..அப்படியானால்..இது..இது..குணசேகரனின் உடலா..?என்ற ஐயத்துடன் முணடத்தை நோக்கி ஓடினான்.அவனின் ஐயம் உணமைதான் என அவன் கண்களும் மனமும் சொல்லஐயோ....என கத்தினான் சுந்தரேசன்.

அவன் பார்வையில் கொஞ்சதூரத்தில் உருண்டு கிடந்த குணசேகரனின் அறுபட்டத் தலையும் பட தலையில் அடித்திக்கொண்டு கதறியழ ஆரம்பித்தான். ஐயோ இதென்ன கொடுமை..இக்கொடுமையைப் புரிந்தது யார்? கடவுளைத் தரிசிக்க வந்த இடத்தில் இப்படியும் நேருமா?உன் கணவன் கொலையுண்டு இறந்தான் என என் தங்கையிடம் எவ்வாறு கூறுவேன்?மணமாகி இன்னும்ஞ்சள் கயிறு கூட காயாத நிலையில் நீ கணவனை இழந்தாய் என எப்படி அவளிடம் சொல்லுவேன்.என் தாய் தந்தைக்கு எப்படி எடுத்துச் சொல்லி சமாதானம் செய்வேன்?குணசேகரா..குணசேகரா..உனக்கு இப்படியொரு தீங்கு செய்தது யார்?எனக் கத்திய படியே குப்புறக் கிடந்த குணசேகரனின் உடலைப் புரட்டி  மல்லாத்தி அவன் உடல் மீது விழுந்து அழுதான் சுந்தரேசன்.அப்படி அவன் குணசேகரனின் உடல் மீது தலைவைத்து அழும் வேளையில் கதவின் பின்னால் ஒளிந்திருந்த கொலைகாரன் பூனை போல் மெள்ள நடந்து வந்தான்.ஏற்கனவே குணசேகரனை வெட்டியதால் ரத்தக்கறையாகியிருந்த கத்தியை  சுந்தரேசனின் பின் கழுத்தில் வேகமாய் இறக்கினான்.வெட்டிய வேகத்தில் அறுபட்ட தலையை கத்தியின் நுனியாலேயே கெந்தி கொஞ்ச தூரமாய் எறிந்தான்.கத்தியை அங்கேயே வீசிவிட்டு மெள்ள நடந்து கோயிலை விட்டு வெளியேறினான்.

இப்போது சுந்தரேசனின் முண்டத்திலிருந்து வெளியேறிய ரத்தம் குணசேகரனின் முண்டத்தை நனைத்தது.

விதி மிகவும் சந்தோஷப் பட்டது. சந்தோஷம் போதாது என நினைத்ததோ என்னவோ அடுத்த நிகழ்வுக்காக மேலும் காத்திருந்தது.

ஆதவன் மேற்கில் விழ ஆரம்பித்தான்.இருள் சூழ இன்னும் கொஞ்ச நேரமே இருக்க கணவனை அழைத்து வருவதாகச் சொல்லிச் சென்ற அண்ணனும் திரும்பி வராமல் போகவே பயம் பற்றியது பாவையின் நெஞ்சில்.பதைபதைத்தது மனம்.இனி க்ஷணமும் தாமதித்தல் கூடாது என்று எண்ணியவளாக கோயிலை நோக்கி ஓட ஆரம்பித்தாள் ஹேமாவதி.கல்லும் முள்ளும் அவளின் மிருதுவான கால்களைப் பதம் பார்த்தன.ரத்தம் கசிந்தது.பாவம் அவள். இதயத்தில் ரத்தம் கசியப்போகும் அளவுக்கு கோயிலில் அவளுக்காக நிகழ்வுகள் காத்திருப்பது தெரியாமல் ஓடியவள் கோயிலின் வாசலில் போய் நின்றாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.