(Reading time: 20 - 39 minutes)

தவைத்திறந்து அமைதியாக நாற்காலியில் வந்து அமர்ந்த கேசவனின் அருகில் வந்து அமர்ந்த வைஜெயந்தி, “எதுக்கு இப்படி அமைதியா இருக்குறீங்க?...” என கேட்டார்…

“எதுவுமில்லைம்மா…” என அவர் பதிலளிக்க,

“ருணதி சொன்னதையே யோசிச்சிட்டிருக்கீங்களா?...” என்ற கேள்வியில் நிமிர்ந்தவர், அங்கு அவள் பேசினதை நினைவுக்கு கொண்டு வந்தார்….

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்...

ராசுவின் "ஒரு கூட்டுக் கிளிகள்"... - குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்...

“நீ நம்ம வீட்டுக்கு வரணும்… வாம்மா… போகலாம்…” என்றதும்,

சில நிமிடத்திற்குப் பின், “உங்க பேரனை நீங்க எப்பவேணாலும் உங்க வீட்டுக்கு நீங்க கூட்டிட்டு போகலாம்…” என்றவளை விநோதமாக பார்த்தவர்,

“நான் அவனை மட்டும் கூப்பிடலைம்மா… உன்னையும் தான் கூப்பிடுறேன்… அது மட்டும் இல்லாம அது என் வீடில்லை… இனி அது நம்ம வீடு…”

“நீங்க இப்படி பேசுறதை பார்க்கும்போது சந்தோஷமா இருக்கு… நீங்க தானா இப்படி பேசுறது என்ற ஆச்சரியமும் வருது… ஆனாலும் என் பதில் இதுதான் உங்க பேரனை நீங்க அழைச்சிட்டு போகலாம்…”

“என்னம்மா இன்னும் நான் பேசினதையே மனசில வச்சிட்டிருக்கீயா?... மன்னிச்சிடும்மா… உன் மனசுல எவ்வளவு வலி இருக்கும்னு என்னால புரிஞ்சிக்க முடியது… அன்னைக்கு நான் பேசினதுக்கு இப்போ உங்கிட்ட மன்னிப்பு கேட்டுக்குறேன்…” என்றவர் இருகைகளையும் கூப்பி அவளைப் பார்க்க,

“முதலில் கையை கீழே இறக்குங்க… நீங்க பேசினதுல ஒரு துளி கூட நியாயம் இல்லன்னு நீங்க எப்போ புரிஞ்சிக்கிட்டீங்களோ, அப்பவே நீங்க மனசளவுல மாறிட்டீங்க… அப்புறம் எதுக்கு இப்படி அதை வெளிக்காட்டவும் செய்யுறீங்க மன்னிப்பென்ற பெயரில… உங்க பேரன் தான் துருவன் என்று நீங்க உணர்ந்திட்டதே போதும்… ஆனாலும் ஒரே ஒரு வேண்டுகோள்… இனியும் அப்படி வார்த்தைகளை சிதற விட்டிடாதீங்க… அது மட்டும் நான் வேண்டி கேட்டுக்குறேன்…” என அவள் தாழ்ந்த குரலில் சொல்ல, அவருக்கு என்னவோ போல் ஆயிற்று…

“ஹேய்… உனக்கென்ன லூசாடி பிடிச்சிருக்கு… செஞ்ச்தெல்லாம் தப்புன்னு அவ்வளவு பெரிய மனுஷன் உங்கிட்ட வந்து மன்னிப்பு கேட்டு வீட்டுக்கு வான்னு பெருந்தன்மையா கூப்பிடுறார்… நீ என்னடான்னா திமிரு தனமா பேசிட்டிருக்குற… பேசாம கிளம்புற வழியை பாரு….” என கோகிலவாணி ருணதியை வசைபாட,

“நீ என்ன வேணாலும் சொல்லிக்கோ… எனக்கு எந்த கவலையும் இல்ல பாட்டி….” என நிதானமாக சொன்னவளை முறைத்தவர்,

“எதுக்குடி இப்படி பேசுற நீ?... உனக்கு புத்தி பேதலிச்சு போச்சா என்ன?... துருவனுக்கு கிடைக்கப்போற நல்ல வாழ்க்கையை, எதிர்காலத்தை கெடுத்துடாதடீ பாவி…”

“கண்டிப்பா துருவனுக்கு கிடைக்கப்போற வாழ்க்கையை நான் கெடுக்க மாட்டேன்… அதுல பங்கு போட்டுக்கவும் நினைக்க மாட்டேன்….” என அழுத்தம் திருத்தமாக சொன்னவளை முறைத்த கோகிலவாணி,

“நீ பேசினதுக்கு என்ன அர்த்தம்?... சொல்லுடீ?...”

“ஏன் உனக்கு தெரியலையா?.. ஒரே ஒரு அர்த்தம் தான்… அது எனக்கு அந்த வீட்டுக்குப் போக விருப்பம் இல்ல… அவ்வளவு தான்…” என அவள் சொல்லி முடித்ததும்,

“என் மேல உனக்கு இன்னும் கோபம் போகலையாம்மா?... அப்போ நீ, ஜித், துருவன் மூணு பேரும் வேற வீடு பார்த்து குடிபோங்கம்மா… நாங்க இரண்டு நாளைக்கு வந்து உங்களையும், எங்க பேரனையும் பார்த்துக்குறோம்மா… நீ அந்த வீட்டிற்கு வரமறுக்குற காரணம் எனக்கும் புரியுதும்மா…” என கேசவன் சொல்ல, வெடித்தார் கோகிலவாணி…

“சும்மா இருங்க மாப்பிள்ளை… அவ தான் பைத்தியம் மாதிரி ஏதேதோ உளறிட்டிருக்குறா… அது புரியாம நீங்க ஏன் அவகிட்ட இப்படி தன்மையா பேசிட்டிருக்கீங்க?...” என மருமகனிடம் கேட்டவர், அவளிடம், “இப்ப என்னதான்டீ முடிவா சொல்லுற?... ஜித்தை கல்யாணம் பண்ணிகிட்டு துருவனோட அவரோட சேர்ந்து வாழ போறீயா இல்லையா?...” என சட்டென கேட்டதும்,

“பாட்டி……………………………….!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!” என கத்தியவள்,

“உனக்கு அன்னைக்கே சொல்லிட்டேன்… என்னை மறுபடி மறுபடி பேச வைக்காத… எனக்கு கல்யாணமும் வேண்டாம்… ஒன்னும் வேண்டாம்…” என ஆத்திரமாக சொன்னவளிடம்,

“அப்போ உன் தங்கைக்கு செய்து கொடுத்த சத்தியம் என்ன ஆச்சு?... அவ்வளவு தானா?....” என எகத்தாளமாக கோகிலவாணி கேட்டார்…

“என் தங்கைக்கு அவ பையனை அம்மாவ இருந்து வளர்ப்பேன்னு தான் நான் சத்தியம் செய்து கொடுத்தேன்…. ஜித்தை கல்யாணம் பண்ணி அவ பையனை வளர்ப்பேன்னு நான் சத்தியம் செய்து கொடுக்கலை…” என்றதும், ஆடிப்போய் விட்டார் கோகிலவாணி…

தடுமாறி நின்றவர், மீண்டும் சில நிமிடங்களில் சுதாரித்துக்கொண்டு, “நான் கேட்டேனே… ஜித்தை நீ கல்யாணம் பண்ணி, துருவனோட சந்தோஷமா வாழணும்னு… உங்கிட்ட தட்சணையா கேட்டேனே… நினைவு இல்லையா உனக்கு?.. சொல்லுடீ… நினைவில்லையா?...” என்று கேட்க,

“உனக்கும் நான் அதற்கு அப்படி ஒரு சம்பவம் நடந்தா அது என் பிணத்தோட தான் நடக்கும்னு சொன்னதா நினைவிருக்கு… அங்க எப்படியோ?...” என கேட்க, அப்படியே சிலையாகி விட்டார் கோகிலவாணி….

என் பிணத்தோடு தான் நடக்கும் என்ற ருணதியின் வார்த்தையை கேட்டதும், கேசவனும் வைஜெயந்தியும் அங்கிருந்து அமைதியாக எதுவும் சொல்லாமல் விஜய்யை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு கிளம்பிவிட்டனர்…

“அவ சொன்னதையே நினைச்சிட்டிருக்கீங்களா?... விடுங்க… நமக்கு அவ நம்ம வீட்டு மருமகளா வர குடுத்து வைக்கலை… அதே நேரத்துல அவளை இப்படியே தனிமரமா நிற்க வைக்கவும் என் மனசு ஒத்துக்கலை…” என்ற வைஜெயந்தியிடம்,

“நாம ஏன் அவளுக்கு ஒரு நல்ல பையனா பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கக்கூடாது?... துருவன் அவ கூட இருந்தா கண்டிப்பா, அவ வேற ஒருத்தரை கல்யாணம் பண்ணிக்க மாட்டா… அதனால நாம துருவனை அவகிட்ட இருந்து வாங்கிடலாம்… துருவனை நாமளே வளர்த்துக்கலாம்…” என அவர் சொல்லிக்கூட முடிக்கவில்லை,

“ரொம்ப நல்லா இருக்குப்பா… நீங்க பேசுறது…” என்றபடி கோபமாக வந்தான் ஜித்…

“இல்லடா… நான் என்ன சொல்லுறேன்னா?...”

“என்ன சொல்லப்போறீங்க?.. அவளை கல்யாணம் பண்ணி வைக்க மாட்டேன்னு சொல்லுறதுக்கு இப்போ இந்த நல்லவர் வேஷமா?... போங்கப்பா…. நான் எல்லாம் பார்த்தாச்சு…” என்று நக்கலாக பதில் சொன்னவனின் அருகே சென்ற வைஜெயந்தி,

“அப்பாகிட்ட பேசுறேன்னு உனக்கு புரியலையா?... இப்படி கொஞ்சம் கூட மரியாதை இல்லாம பேசுற?... எப்படிடா உனக்கு இவ்வளவு தைரியம் வந்துச்சு அப்பாவை இப்படி பேச?..” என்று ஆத்திரத்துடன் அவனிடம் கேட்க,

அவன் அவரை அலட்சியம் செய்துவிட்டு, “எனக்கு ருணதி வேணும்… அவ்வளவு தான்… உங்களால இனி முடியாதுன்னு தெரிஞ்ச பின்னாடி, நானே பார்த்துக்குறேன் என் வாழ்க்கையை…” என்றான் அவன்…

“என்னடா பார்த்துப்ப?... அவ தான் உன்னை கல்யாணம் செய்துக்க மாட்டேன்னு சொல்லுறாளே… பின்ன எதுக்குடா இந்த பிடிவாதம் பிடிக்குற?...”

“பிடிவாதமா?... ஆமா அப்படியே வச்சிக்கோங்க… எனக்கு ருணதி வேணும்… முதலில் உங்க புருஷன் வேண்டாம்னு சொன்னார்… இப்போ அவ சொல்லுறா… எல்லாத்தையும் கேட்டுட்டு ஆமா போட நான் என்ன லூசா?... இதுக்குத்தான் நான் என்…..” என சொல்லவந்தவன், கண் மூடி அமைதியாகிவிட்டு,

“அவளை நான் அடைஞ்சே தீருவேன்… அது ஒன்னு தான் நான் பட்ட வலிக்கு மருந்து… எனக்கு அவ வேணும்… அதை எப்படி செய்யணும்னு எனக்கு தெரியும்… இனி உங்க யாரோட உதவியும் எனக்கு தேவை இல்ல…” என அவன் குரோதத்துடன் சொல்ல,

அவனை ஓங்கி அறைந்தார் கேசவன்…

“என்னையே அடிச்சிட்டீங்களா?...” என ஆத்திரத்தில் அவரின் சட்டையை அவன் பிடிக்க போக தந்தையை விலக்கி விட்டு, அவனின் சட்டையை கொத்தாக பிடித்தான் விஜய்…

“யார் மேலடா கை வைக்குற?... அவர் உன்னையும் என்னையும் பெற்ற தகப்பன்… அதை மறந்துட்டு இன்னைக்கு சீ… இவ்வளவு கேவலமானவா நீ?...” என விஜய் அவன் சட்டையை இறுக்க, பதிலுக்கு ஜித்தும் அவன் சட்டையை பிடித்து சண்டைக்கு தயாராக, வைஜெயந்தியும் கேசவனும் கஷ்டப்பட்டு அவர்களை பிரித்துவிட,

“என் மேலயே கை வைச்சுட்டல்ல… உன்னை இனி என்ன பண்ணுறேன் பாருடா…” என விஜய்யை தள்ளிவிட்டு விட்டு அங்கிருந்து கோபமாக வெளியேறினான் ஜித்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.