(Reading time: 12 - 23 minutes)

ப்படியோ ஒரு மாதம் ஓடிவிட்டது உடம்பு சரியாகி அந்த கடையை அவள் பார்த்துக் கொண்டாள், இவர்களும் வந்தவுடன் நிறைய பேர் வந்து சாப்பிட்டார்கள் கொஞ்சம் ஐடம்கள் அதிகப் படுத்தினர் அந்த ஏரியாவில் அந்த டிபன் கடை ரொம்ப பிரபலமாகியது, அன்று காலையில் அவள் காபி சாப்பிட எடுத்துக் கொண்டு போனாள், உடனே வாந்தி வந்தது ஓடிப் போய் எடுத்தாள், 'என்ன ஆச்சு,' என்று உள்ளேயிருந்து, அவள் அம்மாவும், மீனாட்சியும் வந்தார்கள், வாந்தி எடுப்பதை பார்த்தவுடன், கவிதாதான் அவளருகில் போய் அவளை உள்ளே கூட்டிக் கொண்டு போனாள், 'என்ன சாப்பிட்டாய்,' என்று கேட்டாள்

'நீங்களெல்லாம் என்ன சாப்பிட்டீர்களோ அதான்,' என்று கூறினாள்,

'சரி வா, டாக்டரிடம் போய் மருந்து வாங்கலாம் நீ போய் கடையில் உட்காரனும்,' என்றாள் அம்மா

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்...

மனோவின் "பூ மகளின் தேடல்..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்... 

'சரி,' என்று அவளும் கிளம்பிப் போனாள், அவள் தினமும் இரவில் ருத்ராவை நினைத்து அழுவாள் காலையில் வேலை மும்முறத்தில், கொஞ்சம் அதை தள்ளிப் போடுவாள், அம்மாவிடம் பேசினாள்,' நாம் சென்னைக்கே போகலாமே,' என்று

'உனக்கு சுரேந்தரைப் பத்தி தெரியாது, அவன் நம் வீடு மட்டுமில்லை, உன் ஆபிஸ் எல்லாம், நீ போகுமிடமெல்லாம் கண் வைத்திருக்கிறான், அதனால் நம்மால் யாருக்கும் உன் சிநேகிதிகள், உனக்கு வேலை வாங்கி கொடுத்தவங்க, என்று யாருக்கும் ஒரு தீங்கும் ஆகக் கூடாது, அதான், இந்த ஊருக்கு வந்து, அதுவும் அவன் கண்டு பிடிக்கக் கூடாதுன்னு, வேறு ஊரிலிருந்து பஸ் பிடிச்சு வந்தேன், '

'அவங்க யாரும்மா,'

'அவங்க தான் உன் அத்தை, மாமா, அவங்க பையன் சுரேந்தர், அவங்க அந்த காலத்திலிருந்தே ஊர்ல அப்படித்தான் இருந்துக் கொண்டிருக்காங்க, அதான் நானும் அப்பாவும் ஊருவிட்டு ஓடி வந்துவிட்டோம், ஆனால் அப்பாவுக்கு வைத்தியம் பார்க்க பணம் இல்லாததினால் நான்தான் அவர்களிடம் பணம் வாங்கிண்டேன் அப்போது எழுதி வாங்கிட்டாங்க, இந்தப் பணத்துக்கு நான் அவங்க பையனுக்கு உன்னைக் கல்யாணம் பண்ணித்தறேன்னு, அப்போதைக்கு எனக்கு வேறு வழி தெரியலை, அதான் எழுதிக் கொடுத்தேன் அப்போ நீ சின்னப் பெண் அதனால் நான் அதைப் பத்தி கவலைப் பட வில்லை, நீ பெரியவளான பிறகு, நீ வேலைக்கு போக ஆரம்பித்த பிறகு ஒரு நாள் அவர்கள் நம் வீட்டுக்கு வந்தார்கள், நான் பயந்து போயிட்டேன், அக்கம்பக்கமெல்லாம் பயந்தார்கள், நான் கொஞ்சம் டைம் கொடுங்கள் நான் இன்னும் சித்ராவிடம் பேசவில்லை, பேசியவுடன் உங்களுக்கு சொல்லி அனுப்பறேன்னு, சொன்னேன், அதைப் பற்றி நான் மறந்தே போய்விட்டேன், பிறகு உன்னிடம் சொல்லவும் மனசில்லை, அவனுக்கு கட்டிக் கொடுக்கவும் மனசில்லை, அவர்கள் இரண்டு முறை வந்து என்னை நச்சரித்தார்கள், இரண்டாம் முறை வரும்போதே, அவர்கள் என்னிடம் சொன்னார்கள் அடுத்தமுறை வரும்போது இரண்டு பேரும் எங்களோடு வருவதற்கு தயாரா இருக்கணும், தயாரா இல்லைன்னாலும் நான் இழுத்துக் கொண்டு போய்விடுவேன், என்றான், அப்போதுதான் எனக்கு அட்டாக் வந்துவிட்டது, உன்னிடம் சொல்லவே முடியவில்லை

'சரிம்மா இதையெல்லாம் ஏன் என்னிடம் சொல்லவில்லை, அதுவும் நமக்கு உறவுக்காரங்க இருக்காங்கன்னு ஏன் சொல்லலே,'

'எப்படி சொல்லுவேன், இவர்கள் மனுஷர்களா இருந்தால் சொல்லலாம் நமக்கு நல்ல உறவுகள் இருக்கு என்று, இவர்கள் வேண்டாமென்றுதானே, நானும், உன் அப்பாவும் ஓடி வந்து விட்டோம், எப்படி சொல்லுவோம்,' என்று வருத்தத்துடன் சொன்னாள்,

இப்போ டாக்டரிடம் போனார்கள், டாக்டரிடம், விஷயத்தை சொன்னாள் சித்ராவின் அம்மா,

'என்ன சாப்பிட்டாய்,' என்று கேட்டு, அவளின் நாடியை செக் செய்தாள், 'இந்த மாதம், மாத விடாய் வந்துதா,' என்று செக் பண்ணிக் கொண்டே கேட்டார் டாக்டர் , அவளுக்கு தூக்கி வாரி போட்டது, இதை ஏன் நினைத்துப் பார்க்க வில்லை, என்று நினைத்துக் கொண்டே, டாக்டரைப் பார்த்தாள்,' எஸ், யு ஆர் ப்ரெக்னன்ட்,' அவளுக்கு சந்தோசம் ஒரு புறம், பயம் ஒரு புறம், அவள் அம்மா அப்படியே மயங்கி விழுந்து விட்டாள், டாக்டர், அவள் அம்மாவின் நாடியை பார்த்தாள், பிறகு அவளுக்கு முதலுதவி கொடுத்தாள், 'என்னம்மா உங்கம்மா ஹர்ட் பேஷண்டா,'

'ஆமாம்,' என்றாள் சித்ரா

'இதை ஏன் முன்னாடியே சொல்லலே, உனக்கு திருமணம் ஆகலியா,' என்று கேட்டார்

'இல்லை திருமணம் ஆகிவிட்டது, ஆனால் என் புருஷனுடன் நான் இல்லை, அவ்வளவுதான்,'

சிறிது நேரத்தில் அவள் அம்மா சரியாகி விடுவாள் என்று நினைத்தாள், ஆனால் திடீரென்று இழுத்துக்கொண்டு மூச்சிரைக்க 'குழந்தை,' என்று அவளிடம் சொன்னாள், 'நீ சென்னைக்கு போகாதே,' என்று சொன்னாள், அவ்வளவுதான் உயிர் பிரிந்து விட்டது,

இவள் அம்மா தன்னை பிரிந்ததுக்கு அழுவதா, இல்லை தன் பிள்ளை தன் ருத்ராவுடைய ரத்தம் தன் வயிற்றில், அதை நினைத்து சந்தோஷப் படுவதா என்று தெரியாமல் விழித்துக் கொண்டு நின்றாள், அவளை நினைத்து வருந்தினாள் அந்த டாக்டர்,' ஐ ஆம் சாரி,' என்று வருத்தப் பட்டாள்,

அங்கிருந்து ஒரு ஆட்டோவில் அவளை வைத்து கூட்டிப் போனாள் வீட்டுக்கு, மீனக்க்ஷிக்கு ஒன்றும் புரியவில்லை, இவளை டாக்டரிடம் கூட்டி போனாள், கவிதாவை தூக்கி வருகிறார்களே என்று ஓடிப் போய் 'என்னாச்சு,' என்று கேட்டாள்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.