(Reading time: 21 - 41 minutes)

ம்பிக்கு கெடுதல் செய்துவிட்டோம்….நம்மாலதான் அவனுக்கு அம்மா இல்லாமபோய்ட்டாங்க…. என உள்ளே அறுத்துக் கொண்டிருந்த அவள் மனதிற்கு மனோ பயோசி சி இ ஓ என பேச்சை துவக்கவுமே வந்த காட்சி இதுதான்….மித்ரன் குடும்பத்தோட இங்க தங்குவான் என்பதுதான்…. அதை எப்படி இவள் கெடுக்க இப்போது…?

என்ன ஹனிமூன் போய்ட்டு வந்து சந்தோஷமா இங்க தங்குவாங்க என இவள் நினைத்திருக்க….இப்டி மனோ மட்டுமாக என்றதும் வருத்தமாக இருக்கிறது இவளுக்கு….இருந்தாலும் எப்டியும் ஸ்விஸ்ல இருந்து மித்ரன் வரவும் எல்லாம் சரி ஆகிடும் என நினைத்துக் கொண்டாள் அவள்.

களஞ்சியம் மனநிலையும் கிட்டதட்ட இதேபோல் தான் இருந்தது என மனோவிடம் பின்னர் ஒரு நாள்  பேசிய போது தெளிவாகவே தெரிந்தது.

ஆக யாருக்கும் விருப்பம் இல்லாத ஒன்றை எல்லோரும் ஒவ்வொரு காரணத்துக்காக அமைதியாகவே ஏற்றுக் கொண்டனர். கர்டசி நம்ம மனுப்பொண்ணு….

மனோ அங்கு தங்குவது என முடிவானதும் கேம்பஸிலிருந்த எட்டு வீடுகளில் ஒன்றை உடனடியாக இவர்களுக்கு ஒதுக்கிக் கொடுத்தார் களஞ்சியம். 

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

RRன் "மலரே ஒரு வார்த்தை பேசு.... இப்படிக்கு பூங்காற்று...!" - மனம் மயக்கும் மெல்லிய காதல் கலந்த குடும்ப கதை...

படிக்க தவறாதீர்கள்...

மனோகரியும் மித்ரனும் மட்டுமாக அந்த வீட்டிற்கு சென்றனர்…. அவர்களுக்கு தனிமை கொடுக்கும் பொருட்டு இன்பா கூட உடன் வரவில்லை….

சற்றே இருட்ட ஆரம்பித்திருக்க….அந்த மூன்று தள வீட்டை தன் கண்களால் ஆராய்ந்தபடி…. மனதின்  இறுக்கத்தையும், பிரிவை எண்ணிய பெருந்த தவிப்பையும் வெளிக்காட்டமலிருக்க… ஒரு சலனமற்ற முகபாவத்தையும், சம்மதமற்ற மௌனத்தையும் அணிந்தபடி….மித்ரனுடன் அந்த வீட்டு வாசலை அடைந்தாள் மனோ….

உடன் வந்து கொண்டிருந்த மனைவியை, சட்டென தன் கைகளில் அள்ளினான் மித்ரன்.

அவனுக்கும் இதயத்தில் ஆயிரம் பாரம்தான்….. எப்படி இங்க சமாளிக்க போறா இவனோட மனுன்றதுல இருந்து….. இவனே உரிமையை உணராத ஒரு இடத்தில் இவன் மீது மட்டுமே உரிமையுள்ளவளை எப்படி விட்டுப் போக என்பது வரை ஆயிரமாயிரம் உண்டுதான் அவனுள்….

ஆனாலும் அவளை எப்படி இப்படி இறுகிய முகத்தோடு விட்டுப் போவதாம்….?

சீண்டினான் அவளை கைகளில் அள்ளி….மறுப்பாக துள்ளி திமிரினாள் அவள். “விடுங்க மனு…. என்ன வேலை இது….யாராவது பார்க்கப் போறாங்க…”

“அதுக்குதான் மனு தூக்றதே…..பார்க்கிறவங்க உன்னை தப்பா நினைக்க கூடாதுல்ல…” அப்பாவி போல் முகத்தை வைத்துக் கொண்டு சொன்னவன்

 “ இப்டி தன் வீட்டுக்குள்ள போறப்ப கல்யாணப் பொண்ண ஏன் தூக்றாங்க தெரியுமா?” என்ற போது குறும்புக்கு குடி போய் இருந்தான்.

“ம்…ஏன்னு என்னை கீழ இறக்கிவிட்டுட்டு சொல்லுங்க போதும்….” இறங்குவதிலேயே குறியாக இருந்தாள் அவள்…..

இன்னும் வீட்டிற்குள் நுழையாமலே அவளை வாசலிலேயே இறக்கிவிட்டான் மித்ரன்.

“ஃபர்ஸ்ட் நைட்டுக்கு பொண்னுக்கு பெருசா எந்த ஆர்வமும் இல்ல…… அவளா உள்ள வரகூட தயாரா இல்லன்னு காமிக்றதுக்குத்தான் இந்த ட்ரெடிஷனாம்…” கண்சிமிட்டினான் அவன்…

ஹான்…. எனப் பார்த்தாள் மனோ…

“இப்ப நான் என்னனு எடுத்துகிறதாம்…..தூக்கவா……இல்ல பொண்ணுக்கு ரொம்ப இஷ்டம்னா?” கண்கள் சிரிக்க… கீழ் உதடை சின்னதாய் கடித்தபடி கோடி குறும்பும் சில டன் சீண்டலுமாய் அவன் இவளைப் பார்க்க…

கோபம் போல் காமிக்க முயன்றாலும் அவன் சிரிப்பில் போய் அதுவாக நிற்கிறது இவளது நயனம். அவன் பல் வரிசையில் இடப் பக்கம் ஒரு பல் மற்றும் சற்றே சற்று திரும்பி அடுத்த பல்லின் மீது நெருங்கிப் போய் அத்தனை அழகாய் அமைந்திருக்கும்….அதுதான் தருகிறதா இத்தனை ஈர்ப்பை அவனது சிரிப்பிற்கு……? அல்லது எப்போது இவளை சீண்டினாலும் அடி உதடை அரை மில்லி மீட்டர் அளவு கடித்துக் கொள்ளும் அவனது அந்த செயலா?

குறும்புதான் என குறிப்பிட்டு சொல்ல முடிந்தாலும் அவன் முகபாவத்தை….அதில் எங்கென்று சொல்ல முடியாமல் சிறிதே சிறிதாய் சிந்தி இருக்கிறதோ வெட்கம்….அதுதான் அடித்து சாய்க்கிறதா இவளை?

எப்பொழுதும் சற்று ஈரமாகவே இருக்கும் அவன் உதடுகள்….பேசும் போது அவை போய் வரும் விதத்தில் சென்று சிதறும் இவள் பார்வை ….அதுதானா கொள்ளச் செய்வதும் கொட்டச் செய்வதும் இவள் பெண்மை ப்ராவகத்தை…?

அவன் தன் இரு புருவங்களையும் ஏத்தி இறக்கி என்ன என்பது போல் கேட்க…

அசையாமல் அவனைப் பார்த்துக் கொண்டிருப்பதை அப்பொழுதுதான் உணர்ந்தவள் இழுத்துப் பிடித்து இமைகளை இறக்க…..

“உன் மனுவ பிடிச்சிறுக்கா மனுப்பொண்ணு?” இவள் முகத்திற்கு நேராக குனிந்து அவன் கேட்ட குரல்…..இவள் சுக நரம்புகளை தொடாமல் தொடுக்க….இவளுக்குள் துடித்து வெடிக்கிறது சுந்தர கலவரம் ஒன்று சுயம் உள்ளே…. …

நெருங்கி நின்றவனுடன் நேர்ப் பார்வை நெய்ய இயலாமல் இவள் நோக…. இப்பொழுது சின்ன சிரிப்புடன் மீண்டுமாய் அவளை கைகளில் அள்ளிக் கொள்கிறான் அவன்…... ஏனோ தன்னவனை தடுக்க இயலாமல் தன் கண்களை மட்டுமாய் இறுக மூடிக் கொண்டாள் இவள்….

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.