(Reading time: 21 - 41 minutes)

ம்மா வந்து உங்க மேரேஜுக்கு முன்ன அவ்ளவு பேசுன பிறகும் நீ இங்க வந்திருக்க….. அப்டின்னாலே அம்மாவையும் என்னையும் புரிஞ்சுக்கிற ஏத்துகிறன்னு தானே அர்த்தம்…..கண்டிப்பா நீ கூப்டுட்டு வராமல்லாம் மித்ரன் இங்க வந்திருக்கவே மாட்டான்….. உனக்கு உறவுகுளை பிரிச்சு ரணமாக்குற புத்திலாம் கிடையவே கிடையாது…… அப்ப இந்த  விஷயத்துல நான் உன்னை ஏன் நம்ப கூடாது……?”  

‘உண்மையில் இப்போ இவளை பிடிச்சுவச்சுட்டு மித்ரனை மிரட்டினா இவ என்ன செய்ய முடியுமாம்…. திக் என மனோவுக்குள் குதித்து ஓடுகிறது  கொள்ளிவாய் கேள்வி ஒன்று. சே….அப்டின்னா இப்ப உட்கார்ந்து இப்டிலாம் விஷயம் இருக்குன்னே அண்ணி இவட்ட சொல்லனும்னு அவசியம் இல்லையே…. தன்னைத்தானே சமனமும் செய்தாள்….

ஆனாலும் இப்படி ஒரு ஃபேமிலி ஃபேக்ரவ்ண்ட்ல வந்த மித்ரன் ஒவ்வொரு நொடியும் அலர்ட்டா இருக்றதும் ஆபத்துல மாட்டிக்க கூடாதுன்னு நினைக்கிறதும் எந்த தப்பும் இல்ல….. என்று கணவனுக்கு வக்காலத்து வாங்குகிறது உள்ளே மனம் ஒன்று….. அதுக்கு போய் அவனை என்னமா காய்ச்சாச்சு?

நினைவு அவனிடமே நிமிடத்திற்கு ஒரு முறை மீண்டுமாய் போய் நிற்கிறது… மிஸ்யூ டா…

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

தங்கமணி சுவாமினாதனின் "கொஞ்சம் பெரிய குழந்தைகளுக்கான கதை இது..." - பெரியவர்களுக்கான மந்திர, மாயாஜாலக் கதை...

படிக்க தவறாதீர்கள்...

“மித்ரன்ட்ட தான் எல்லாம் இருக்குன்னு இப்போ தெரியவும் வர்ஷன் வந்துடுவான்னு தான் நினைக்கேன்…..மித்ரன் என்ன முடிவு எடுத்தாலும் சரின்றது தான் எனக்கு…. கடனை அடைக்க தேவை டைம்தான்…..மித்ரன் அப்டில்லாம் டைம் தராம எல்லாத்தையும் பிடுங்கிகிட்டு கழுத்தை பிடிச்சு துரத்தல்லாம் மாட்டான்தான்…… அவனுக்கு அப்பா சொத்துல பங்கு இல்லைனு சொன்னப்பவே கோர்ட் கேஃஸ்னு போகாம அப்டியே அமைதியா விலகிப் போனவன் அவன்….

ஆனா அப்டியே அவன் எங்களை துரத்திவிட்டாலும் தப்பு இல்ல…..இந்த பணத்துக்காகதான அவனை அம்மா அப்பா இருந்தும் அனாதையா ஆக்கிட்டாங்க எங்க பாட்டி…” இன்பா குரலில் இதை சொல்லும் போது அத்தனை ஆதங்கம்…..குற்ற உணர்வு….

மனோவின் வயிற்றிலோ உருளுகிறது ஒருவித பந்து….. ‘பணத்துக்காக எல்லோரும் மித்ரனை பந்தாடினாங்க…..இவ எதுக்காக அவனை படுத்றா….? இவளை காப்பாற்றியதற்கா????......’ வறண்டு போனாள்.

‘அதோடு இன்பாவுக்கு மித்ரன் விஷயத்தில இப்படி ஒரு குற்ற மனப்பான்மை இரக்கம் எல்லாம் இருக்குது…அப்படி இருக்க….இவள் மித்ரனை விலக்கி நிறுத்துறான்னு இப்ப கொஞ்சமாவது இன்பாவுக்கு தோணி இருக்கும்ல…. ஆனால் இவட்ட ஒரு வார்த்தை அதைப் பற்றி குறை சொல்லாம…ஏன் என்ன ஆச்சுன்னு கூட விசாரிக்காம…..’ இவள் மனம் இப்படி எண்ணிக் கொண்டிருக்கும் போதே….

“விஜிலா அண்ணிட்ட எப்பவுமே அவங்களுக்கும் வர்ஷனுக்கும் இடையில் உள்ள விஷயத்தை பேச மாட்டேன் நான்…. என்ன இருந்தாலும் ஹஃஸ்பண்ட் அன்ட் வைஃப்க்கு இடையில நாம போய் பேசக் கூடாதுல்ல “ என்றாள் இவள் நினைவுக்கு பதில் போல்….

‘ஓ…அதான் இவட்டயும் இன்பா அண்ணி மித்ரன் கூட ஏன் போகலைன்ற மாதிரி கேட்கலையா….’

“ஆனா விஜி அண்ணி குழந்தையோட வீட்டை விட்டு போய்ட்டாங்க….உங்க வீட்ல இருக்காங்கன்னு தெரியவும் எனக்கு அவங்களைப் பார்த்து பேசியே ஆகனும்னு தோணுச்சு….எதுனாலும் நம்ம வீட்ல வந்து இருங்க…எந்த முடிவுனாலும் வர்ஷன் வந்த பிறகு எடுங்கன்னாவது சொல்லனும்னு நினச்சேன்….ஆனா மித்ரன்தான்….அண்ணி ரொம்ப டவ்ண்…..நீ வேற எதையாவது சொல்லி அவங்க இங்க இருந்தும் போய்டாம….வர்ஷன் வர்ற வரைக்கும் அவங்க மனு வீட்லயே இருக்கட்டும்…..சீக்கிரம் வர்ஷனை வர வைப்போம்னு சொல்லிட்டான்….அதான் அம்மாவும் நானும் அண்ணிட்ட ப்ரச்சனை பத்தி எதுவுமே பேசலை….” இன்பா இப்படி தொடர

அடுத்து எதுவும் பேசும் முன் களஞ்சியத்திடமிருந்து அழைப்பு….

“என் வீட்லயே அடஞ்சு கிடக்கீங்க…..அப்டியே தோட்டம் பக்கம் ஒரு வாக் வரலாமில்ல…..ஈவ்னிங் ஆகிட்டே” என.

இவர்கள் கிளம்பி அங்கு போய் சேரும் போது ஏற்கனவே வந்து காத்திருந்தார் களஞ்சியம்…. இவளிடம் இயல்பாக நலம் விசாரித்தவர் “என்னமா அவன் ரீச் ஆனதும் பேசிட்டான்தானே” என்று மித்ரனைப் பத்தி ஆரம்பித்தார்.

உடனே இன்பாவிடம்….”காலைல இருந்து இங்கயே இருக்க பாட்டி உன்ன தேடுறாங்க போய் கொஞ்ச நேரம் அவங்கட்ட பேசிட்டு வா” என சொல்லி அவளை அனுப்பி வைத்தார்.

இவளிடம் எதையோ தனியாக அவர் பேச விரும்புகிறார் என இவளுக்கும் புரிந்தது. இன்பாவுக்கும் புரிந்திருக்கும்….. அவள் கிளம்பிச் செல்ல….

இவளிடம் “அவன்….” என எதையோ சொல்ல ஆரம்பித்த களஞ்சியத்தின் பார்வை தூரத்தில் கேம்பஸின் மெயின் கேட் திறக்கப்பட உள்ளே நுழைந்த காரில் சென்று நின்றது…. அவரது முக பாவத்தில் மாற்றம்.

அந்த கறுப்பு நிற கேடிலாக் வழுக்கிக் கொண்டு வந்து இவர்களுக்கு சற்று அருகில் நிற்க…அதிலிருந்து இறங்கியவளை பார்க்கவும் ஏனோ யாரும் அறிமுகபடுத்தும் முன்னும் இது தார்க்கிகாவாக இருக்கும்  என தோன்றுகிறது மனோவுக்கு…. ஆடிட்டர் மாசிரன் மகள்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.