(Reading time: 13 - 25 minutes)

ன்மா. .நான் இங்கே உள்ள நிலவரம் எல்லாம் அண்ணிகிட்ட சொன்னேனே.. அவள் சொல்லியிருப்பாளே”

“ஏன் அண்ணிகிட்ட சொன்னத அம்மா கிட்டயோ, இல்ல என் வீட்டுக்கரருக்கோ நேரா சொல்லியிருக்கலாம் லே.. “ என மேலும் ஏதோ சொல்ல வரவும்

எரிச்சலான ஆதி “இப்போ நீ ஸ்ட்ரெயின் பண்ணாத.. அம்மா கிட்ட கொடு” என அழுத்தி சொல்ல, அவள் தன் அன்னையிடம் கொடுத்தாள்.

“என்னம்மா.. பேரன் என்ன சொல்றான்..” என்று தன்மையாகவே ஆரம்பித்தான்..

அவரும் வித்யா கேட்டதையே கேட்கவும்,

“அம்மா.. கொஞ்சம் நிறுத்தறீங்களா ... நான் தான் சொல்றேன் லே.. இங்கே இப்போதான் நிலைமை கொஞ்சம் கொஞ்சமா சரியாயிட்டு இருக்கு... ப்ரயுவிற்கு நான் பேசினது எதச்சையா நடந்ததுதான்.. இத போய் பெரிசு பண்ணிக்கிட்டு..” என்றான்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

தங்கமணி சுவாமினாதனின் "கொஞ்சம் பெரிய குழந்தைகளுக்கான கதை இது..." - பெரியவர்களுக்கான மந்திர, மாயாஜாலக் கதை...

படிக்க தவறாதீர்கள்...

“சரி.. மாப்பிள்ளை கிட்ட பேசினியா? “

“இல்ல.. உங்ககிட்ட பேசிட்டுதான் பேசணும் “

“ஏன்.. இப்படி பண்ற ? அவர் கிட்ட பேசணும்னு தெரியாதா ?”

“முதல்லே நீங்க முக்கியம்.. அதான் உங்களுக்கு பண்ணேன்.. இப்போ அவருக்குதான் பண்ண போறேன்.. ஏன் அவ்ளோ பேசற நீங்க உங்க மாப்பிள்ளை கிட்ட சொல்ல வேண்டியது தானே.. நான் எவ்ளோ பெரிய ப்ரோப்லேம் லே இருக்கேன்.. அவர் போன் பண்ணி என்கிட்டே விசாரிச்சு அப்படியே பையன் பொறந்ததும் சொல்ல வேண்டியதுதானே.. “

“போடா.. அவர் மாப்பிள்ளை.. நாம்தான் விட்டு கொடுக்கணும் “

“என்னமோ சொல்லுங்க.. சரி நான் ப்ரயு கிட்ட பேசணும் கொடுங்க “

“இரு இரு.. இப்போ கான்செல் செய்த டிக்கெட்க்கு வேற தேதிலே புக் பண்ணிட்டியா ? “

“இல்லை மா.. இங்கே இன்னும் ஒன்னும் கிளியர் ஆகல.. ரெண்டு மூணு நாள் ஆகும்.”

“நல்ல வேளை .. நீ இப்போ வர வேண்டாம்.. நான் சொல்லும் போது வா போதும்..”

“என்னமா சொல்றீங்க ? “

“ஆமாம் டா.. கல்யாணமும் முடிஞ்சுது.. வித்யா டெலிவரியும் முடிஞ்சுது.. நீ வந்து என்ன பண்ண போறே.. ? அதனாலே நாங்க சொல்லும்போது வா “ என்று உத்தரவு போட்டு விட்டு , ப்ரயு கையில் கொடுத்து விட்டு போய் விட்டார்,

“ஹலோ “ என,

“ப்ரயு... நான் இப்போ பேசற மூட்லே இல்ல.. ரெண்டு நாள் கழிச்சு பேசறேன்..” என்று வைத்து விட்டான்.

மீண்டும் தன் அம்மாவிடம் பேச்சு வாங்க பிடிக்காமல், வித்யா கணவருக்கு அழைத்தான்.

அவரிடம் குழந்தை, வித்யா பற்றி விசாரித்து விட்டு,

“ஏன்.. மாப்பிள்ளை.. கடைசியில் யார் துணையும் இல்லாம, ப்ரயு, எங்க அம்மாவே சமாளிச்சுட்டாங்க போல .. “ என்று நக்கலடித்து விட்டு தான் வைத்தான்.. இதற்காக தன்னை என்ன பேச்சு பேசினார் என்று.. அந்த கோபம் கொஞ்சம்  வடிந்தது.

இங்கே பிரயுவின் மாமியாரோ

“காலையில் போனவ, ராத்திரிதான் வர.. வயசான நான் எவ்ளோ நேரம் இப்படியே உக்காந்துக்க முடியும்”

“ஏன்.. வித்யா மாமியார் வரேன்னு சொல்லிருந்தாங்களே “

“அவங்களுக்கு என்ன தலைஎழுத்து.. நம்ம பொண்ணுக்குத் நாமதான் பார்க்கணும்.. சரி. .சரி. பகல் பூரா நான் பார்த்துகிட்டேன். நைட் நீ முழிச்சு பார்த்துக்கோ “ என்று விட்டு படுத்து விட்டார்.

பிரயுவிற்கு அசதியாக இருந்தது.. ஒன்றும் சொல்ல முடியாமல் இருந்தாள். இரவு ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை குழந்தை அழ, எடுத்து வித்யாவிடம் விட்டு வாங்கி தொட்டிலில் போடுவதே சரியாக இருந்தது..

இதே நிலை hospitalil இருந்த மீதி இரண்டு நாட்களும் தொடர்ந்தது. ப்ரத்யா போன வாரம் லீவ் எடுத்து இருந்ததால், வித்யா discharge ஆகவும் அவளை வேலையில் சேர சொல்லி விட்டனர்.

ப்ரயு வீட்டில் வேலை, ஆபீஸ், வித்யாவை பார்த்துக் கொள்ளல்  என்று பறக்க ஆரம்பித்திருந்தாள்.

தொடரும்

Episode # 13

Episode # 15

{kunena_discuss:948}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.