(Reading time: 10 - 19 minutes)

னதிற்கு பிரியமானவனின் மனதிற்கு இனி வேதனைகள் ஏதும் நிகழாது என்பதில் உறுதிக்கொண்டாள்.

"வித்யாம்மா!அனுவை பார்த்தீங்களா?"

"காலையில கோவிலுக்கு போச்சு தம்பி!இன்னும் வரலை!"-குழம்பி போனவன் அவளுக்கு அழைப்பு விடுத்தான்.

தொடர்பு நிலையில் இல்லை என்பது கைப்பேசியின் பதிலாக அமைந்தது.

எங்கே சென்றிருப்பாள்???

மணி மதியம் இரண்டு!!!அவள் இன்னும் வரவில்லை.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

ராசுவின் "பேசும் தெய்வம்" - அன்பென்றாலே அம்மா...

படிக்க தவறாதீர்கள்...

ராகுலுக்கு தொடர்பு கொண்டான்.

"ராகுல் கௌதம் பேசுறேன்!"

"சொல்லுங்க கௌதம்!"

"அனு..அனு அங்கே வந்திருக்காளா?"

"இல்லையே!ஏன்?என்னாச்சு??"

"இல்லை ஒண்ணுமில்லை...கடைக்கு போனா!ஒரு மணி நேரத்துக்கு மேலே ஆச்சு அதான்!"-பொய் கூறினான்.

"என்ன கௌதம் நீங்க?ஒரு மணி நேரம் தானே ஆச்சு!லேடிஸ்லாம் எப்படி மூணு,நாலு மணி நேரம் இழுப்பாங்க!வந்துடுவா பயப்படாதீங்க!"

"ம்..தேங்க்ஸ்!"-என்று இணைப்பைத் துண்டித்தான்.

மேலும் இரண்டு மணி நேரம் ஓடியது அவள் வரவில்லை.

பதற்றத்தோடு அவளை தேடி கிளம்பினான்.

அந்த இடம் இருள் சூழ்ந்திருந்தது!!இதற்கு முன் அவ்விடத்திற்கு அவள் வந்ததில்லை!!அவள் கைகள் கட்டப்பட்டிருந்தன!!தலையில் பலமாக வலித்தது...

கோவிலுக்கு சென்றவள் கடத்தப்பட்டு இருந்தாள்.

"எங்கே இருக்கா அவ?"-குரோதம் நிறைந்த பெண்ணின் குரல் கேட்டது.

கண்விழித்து பார்த்தாள்.

"ஹலோ!அனு சரண்!"என்றாள் அக்ஷயா!

"நான் யாருன்னு உனக்கு தெரியாது!நான் கௌதமோட லவ்வர் அக்ஷயா!"அவள் திடுக்கிட்டாள்.

அனுவின் கேசத்தை பற்றியவள்,

"எந்த தைரியத்துல என் வாழ்க்கையில குறுக்க வந்த நீ!?"

"............."

"எவ்வளவு பெரிய தப்பு பண்ணிருக்க நீ தெரியுமா??கௌதம் என் ஒருத்திக்கு மட்டும் தான் சொந்தம்!"

".............."

"மரியாதையா அவனை விட்டு போயிடு!உனக்கு ஒரு வாய்ப்பு தரேன்!"

கௌதமின் விழிகளில் கண்ணீர் திரளாக இருந்தது.

எங்கே சென்றாள் அவள்??

மணி இரவு ஒன்பது!!!

இறைவா!எங்கு சென்றாள் அவள்??என்னவளை திரும்ப என்னிடத்தில் சேர்த்துவிடு!!!

என்று வேண்டியவனின் கைப்பேசி அலறியது!!!!

"ஹலோ!"

"அக்ஷயாடா!"-அவள் பெயரை கேட்டதும் காரை நிறுத்தினான்.

"எந்த தைரியத்துலடா என்னைவிட்டு இன்னொருத்தியை கல்யாணம் பண்ண?"

".............."

"எந்த விதத்துல என்னைவிட அவ உனக்கு பெட்டர்னு தோணுச்சு?"

"அனு எங்கே?"

"கொன்னுட்டேன்!"என்று இணைப்பை துண்டித்தாள் அவள்.

அவனது கைப்பேசி அப்படியே கீழே விழுந்தது.சில நிமிடங்கள் என்ன செய்வதென்றே விளங்கவில்லை அவனுக்கு!!மனம் ஒடிந்து போனான்.

ஜெகத்தினில் விதியை வென்றவர் தான் யார்??

"எங்கேம்மா கிளம்பிட்ட??"

"எல்லாரும் ஊருக்கு கிளம்புறோம்!"

"எதுக்கு?"

"தாத்தா கொஞ்ச நாள் வர சொல்லிருக்காருடா!"

"நான்?"

"உன் அப்பா தான் கேஸ் விஷயமா உன் உதவி வேணும்னு சொல்லிட்டாரே!"

"ம்...அவங்களும் இங்கே இருக்க மாட்டாங்க!அவுட் ஹவுஸ் போயிடுவாங்க!அப்போ நான் மட்டும் தனியா எப்படி இருப்பேனாம்?பையன் மேலே அக்கறை இருக்கா உனக்கு?"

"ரொம்ப கத்தாதே!உன் சதி உன் கூட தான் இருக்க போறா!"-அவன் திடுக்கிட்டான்.

"என்ன?"

"தீக்ஷா இங்கே தான் இருக்க போறா!"

"தனியாவா?"

"டேய்!என்னடா கேள்வி இது?"

"வேணாம் நீ போகாதே!"

"நான் போகாம இருந்தா,ஆர்யா படிப்பான்னு நம்புறீயா?இன்னும் மூணு மாசத்துல அடுத்த எக்ஸாம் இருக்குல்ல!"

"............."-அவன் முகம் வாடியது.

"ராகுல்!அதான் தீக்ஷா இருக்காளே!என் இடத்துல அவ உன்னை கவனிப்பா!"-அதன் பொருள் விளங்கவில்லை என்றாலும் தலையசைத்தான் அவன் சிறு தயக்கத்தோடு!!!!!

தொடரும்

Episode # 18

Episode # 20

{kunena_discuss:877}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.