(Reading time: 14 - 28 minutes)

18. சதி என்று சரணடைந்தேன் - சகி

காதல் குறித்த தமது எண்ணம் யாது??காதல் என்பது எப்படி இருத்தல் அவசியம்??காதலிக்க தகுதி இருக்கிறதா??காதல் உண்மையா??இது காதலை குறித்த கேள்விகளுள் சில...!!

இதற்கான விடைகளை சிந்தித்து பாருங்கள்...!!!

கண்களில் தொடங்கி,இதயத்தில் நுழைந்து ஆத்மாவோடு ஐக்கியமாவதே காதல்!!எனில்,பார்வையற்றோர் எவ்வாறு காதலிப்பர்??வழி இருக்கிறது...!!!

Sathi endru saranadainthen

உலகை அடையாளம் காட்டும் உறுப்பை கண்கள் என்கிறோம் நாம்!!மனதை அடையாளம் காட்டும் உணர்வை கண்கள் என்கின்றனர் அவர்கள்..!!அவ்வளவு தான் நமக்கும் அவர்களுக்குமான வித்தியாசம்.காதல் என்பது பெரிய கம்ப சூத்திரம் அல்ல அதன் அடையாளத்தை காண...!!!ரசனையில் இருந்து காதல் பிறக்கிறது!!உங்கள் துணையின் சிறு வெகுளித்தனத்தையும் ரசித்து பாருங்கள் காதலை காதலித்துப் பாருங்கள்...!!காதல் எப்படி இருக்க வேண்டும் என்று தாமே அறிவீர்கள்!!!காதலிக்க தகுதி நிச்சயம் உண்டு!!என்ன அது?பணமா?அந்தஸ்தா?இல்லை..நிர்மூலமான மனது!!காதலிக்க நிர்மூலமான மனது அவசியம்!!சிறு தவறுகளை பொறுக்கும் பெரும் மனப்பான்மை அவசியம்!!

மனதில் பதிந்தவரின் நம்பிக்கையை காக்கும் துணிவு அவசியம்!!இதெல்லாம் உடையவருக்கு காதல் உண்மை!!இல்லையெல் காதல் ஒரு மாயை...!!!!!

திங்கள் (மாதம்)நான்கு ஓடிவிட்டன.

அன்று...

பொழுதுபோகவில்லை கௌதமுக்கு!!

புத்தக அலமாரியில் ஏதோ துழாவி கொண்டிருந்தவனின் கண்களில் சிக்கியது அப்புத்தகம்..!!

அது அவன் எழுதிய புத்தகம்!!!

ஆனால் அதை அவன் வாங்கவில்லை.

மீண்டும் துழாவ,அவன் எழுதிய வேறு புத்தகம் மாட்டியது.

"நீங்களும் புக்ஸ் படிப்பீங்களா?"

-அனுவின் குரல் கேட்டு திரும்பினான்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

ஸ்ரீயின் "என்னுள் நிறைந்தவனே" - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்...

"இது??"

"என் புக்ஸ் தான்!"

"நீ எழுதினதா?"

"என்ன கிண்டலா?அதில் தான் எழுதினவர் பெயர் போட்டு இருக்குல்ல?"

-அவன் அப்போது தான் அதை புதியதாய் பார்ப்பதை போல பார்த்தான்.

"யார் இது?"

"எனக்கு எப்படி தெரியும்?நான் அவரோட ரொம்ப பெரிய ஃபேன்!அவர் ரைட்டிங்க்ஸ் எல்லாம் அந்த அளவு பிடிக்கும்!"

"ஏன்?"

"பிடிக்கும்!அதனால பிடிக்கும்!"

"ம்.."

"நீங்க கூட படிங்க!உங்களுக்கும் பிடிக்கும்!"

"நானேவா?"

"ஆமா!"

"சரி...இந்த கௌதமை பற்றி எதாவது தெரியுமா?"

"தெரியாது!"

"சரி தான்...இந்தா உன் புக்ஸ்!"-அவளிடமே நீட்டினான்.அவள் அதை வாங்கி அலமாரியில் வைத்தாள்.

"என்னோட பிரப்பஷன் என்னன்னு தெரியுமா?"

"தெரியாது!"

"எது?தெரியாதா?"

"தெரியாது!"

"என்ன நீ எதுக்கு எடுத்தாலும் இதையே சொல்ற?"

"தெரியாதுன்னா தெரியாதுன்னு தானே சொல்ல முடியும்?அதுக்கு ஏன் கோபப்படுறீங்க?"

"குறுக்க பேசாதே!!"

"ம்...."

"இனிமே என்கிட்ட தெரியாதுன்னு சொல்லுவியா?"-அவள் பேசாமல் நின்றாள்.

"என்ன?"

"நீங்க தானே குறுக்க பேசாதேன்னு சொன்னீங்க?"-அவன் சத்தியமாய் கடுப்பாகி போனான்.

ஏதும் பேச முடியாமல் அங்கிருந்து நகர்ந்தான்.

"இப்போ நான் என்ன சொல்லிட்டேன்னு இப்படி கோபப்படுறார்?"-என்று எண்ணியவளுக்கு அவன் கோபத்தின் காரணம் தெரியவில்லை.

மாடிக்கு சென்று நின்றவன் அதுவரை அடக்கிய சிரிப்பை நகைத்து தள்ளினான்.

அவன் வாழ்க்கை எப்படி எல்லாமோ போக வேண்டி இருந்தது.ஆனால்,இன்று???

உண்மையில் அவன் மனம் தன்னையே நொந்து கொண்டது...

"ஏன்?இவளை நான் முதலில் சந்திக்கவில்லை?காலம் தாதமானாலும்,ஏன் இவள் மேல் என்றோ உருவான காதலை மறைக்கின்றேன்?"-மனம் முழுதும் வியாபித்த அக்ஷயா என்ற பிரமையை அடியோடு அழித்திருந்தாள் அனு.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.