(Reading time: 14 - 28 minutes)

"தெரியலை...!!சீக்கிரமே வருவேன்!"

"சரி...ஜாக்கிரதை!"

"ம்..."-உண்மையில் அவர் கிளம்பும் காரணம் வேறு!!

என்ன கூறுவார்??எந்த பந்தத்தை அறுத்து அவ்விடத்தில் தன் ஆட்சியை நிகழ்த்தினாரோ!அது பல வருடங்களுக்கு பின்,மீண்டும் உயிரோட்டம் பெற்றது போல,தன் புத்திரன் மூலமாய் நிகழ்வதை!!!

உண்மையில்,தீக்ஷாவை பிடிக்காததே அவர் ஊர் திரும்ப காரணமாய் ஆனது.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

ராசுவின் "பேசும் தெய்வம்" - அன்பென்றாலே அம்மா...

படிக்க தவறாதீர்கள்...

மனிதர்கள் சிலர காண்கையில் சர்வ யோக்கியமானவராய் தோன்றுவர்.நாமும் அவர்கள் மீது நம்பிக்கை கொள்வோம்!!

ஆனால்,நாம் எதிர்ப்பார்த்திருக்காத ஒன்று அவர்கள் நம் வாழ்வை சிதைக்கும் நிகழ்வு!!!

அப்படி யாரேனும் தம்முடைய வாழ்வில் இருந்தால் கவலை கொள்ளாதீர்கள்.ஆற்றிய தர்மத்திற்கு நிச்சயம் அவரவருக்கு கூலியானது கிட்டும்!சிலருக்கு அது தாமதமாகலாம்!!தவிர்க்கப்படாது!!அவர்,எவ்வளவு தானங்களை அளித்து இறைவனை வணங்கட்டும்.ஆனால்,அவன் யோகி!!கணநேர ஆனந்தத்தை அவன் என்றும் ஸ்வீகரிக்க மாட்டான்.தீயவர் ஒருவரின் தானங்களை காட்டிலும்,நல்லவர் ஒருவரின் துளி கண்ணீரே இறைவனை விரைந்து அடையும் என்பது உறுதி!!இறைவன் அனைத்தையும் வேடிக்கை பார்ப்பான்.ஆனால்,எப்போதும் அப்பணியை மட்டும் செய்து கொண்டிருக்க மாட்டான்.

"அம்மா!நான் கொல்கத்தா போறேன்!"-கௌதம்.

"என்னடா?எதுக்கு?"

"எனக்காக ஒரு புரோகிராம்!ரொம்ப ரிக்வஸ்ட் பண்ணாங்க!"

"எப்போ?"

"2 மாசத்துல!"

"சரி...அனுவையும் கூட்டிட்டு போ!"-அனுவை திரும்பி பார்த்தவன்,

'அனுவா?சான்சே இல்லை!"என்றான் அவளை பார்த்தப்படி!அவளோ ஒரு தீக்ஷண பார்வையை தந்துவிட்டு அமைதி காத்தாள்.

"ஏன்டா?கல்யாணத்துக்கு அப்பறம் நீங்க தான் ஹனிமூன் கூட போகலையே!"-அவள் பார்வை குழப்பமானது.

"ஹனிமூன் போனா என்ன?போகலைன்னா என்ன?"-அவன் கூறவும் அவள் பார்வை இன்னும் கூர்மையானது.

"எந்த அர்த்தத்தில் கூறுகிறான் இவன்?"

"டேய்!போதும்!நான் உன் அம்மாடா!உங்க ரொமான்ஸ் எல்லாம் என் முன்னாடி வேணாம்டா!"

"மா!வயசு பசங்க எல்லாம் அப்படி இப்படி தான் இருப்பாங்க!விடேன்மா!"

"கடவுளே!"-அவர் தலையில் அடித்துக்கொண்டு சென்றுவிட்டார்.அவன் திரும்பி அனுவை பார்த்து புன்னகைத்தான்.

"ஒரு கேம் விளையாடலாமா?"

"என்ன கேம்?"

"செஸ் கேம்!விளையாடி ரொம்ப நாளாச்சு!"-என்று செஸ் போர்டை எடுத்து வைத்தான்.

"உங்களுக்கு வேற வேலையே இல்லையா?எனக்கு சமையல் வேலை இருக்கு!"-அவள் எழ அவளது கரத்தை பற்றினான் கௌதம்.

"ஒழுங்கா வந்து விளையாடு!"-என்று அமர வைத்தான்.

"சாதாரணமா கேம் விளையாடினா நல்லா இருக்காது!ஒரு பெட் வைக்கலாம்!இந்த கேம்ல நீ ஜெயித்தால் நீ என்ன சொல்றீயோ நான் கேட்பேன்!நான் ஜெயித்தால்...நான் கேட்கிறதை நீ தரணும்!"

"என்ன கேட்க போறீங்க?

"அப்போ நான் தான் வின் பண்ண போறேன்னு கன்பார்ம் பண்ணிட்டியா?"

"அதெல்லாம் உங்களை வின் பண்ண விட மாட்டேன்!"

"அதையும் பார்ப்போம்!"-இருவரும் ஆட்டத்தை ஆரம்பித்தனர்.புத்திசாலித்தனமான அசைவுகள் இருவரிடமிருந்தும் வெளிப்பட்டன.

அனுவின் கவனம் விளையாட்டில் இருந்திருக்கலாம்!ஆனால்,அவள் பதியின் கவனம் தன் சதி மீதே இருந்தது.இறுதியில்,கவனம் சிதறி இருந்த போதும்,வாகை சூடியது அவனே!!!

"செக் மேட்!"-கடுப்பாகி போனவள் விளையாட்டை கலைத்தாள்.

"நான் ஒத்துக்க மாட்டேன்!"

"பரவாயில்லை...நான் தான் வின் பண்ணேன்!நீ அவுட்!"-முகத்தை குழந்தைப்போல வைத்து கொண்டவள்,

"சரி...என்ன செய்யணும்?"என்றாள் எங்கோ வெறித்தப்படி!!!

நீண்ட நேரமாய் அவளையே பார்த்தான் கௌதம்.

"என்ன சொல்லுங்க!"

-தொண்டை வரை வந்த இச்சைகள் நாவிற்கு வர மறுத்தன.

"நான் நேரம் வரும்போது கேட்கிறேன்!"

"ஆண்டவா!அதுக்குள்ள மறந்துவிடணும்!"

"அதெல்லாம் மறக்கிற காரியம் இல்லை!பேராசைப்படாதே!"-அவள் அவனை முறைத்தப்படி சமையலறைக்குள் புகுந்தாள்.

கௌதமின் இதழின் ஓரம் ஒருவித புன்னகை எடடிப்பார்த்தது.

தொடரும்

Episode # 17

Episode # 19

{kunena_discuss:877}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.